Friday, October 17, 2014

sonali cable -சினிமா விமர்சனம் ( hindi )

தினமலர் விமர்சனம்
 
சிப்பி பிரதர்ஸ் தயாரிப்பில், சாருதத் ஆச்சார்யா இயக்கத்தில், ரேகா சக்ராபார்த்தி, அலி பசல், அனுபம் கெர், ராகவ் ஜூயல், ஸ்மிதா ஜெயகர் உள்ளிட்ட பலரது நடிப்பில், திரையில் வெளியாகி இருக்கும் படம் ''சோனாலி கேபிள்''. இந்தப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...!

சோனாலி(ரேகா) மும்பையில், லோக்கல் எம்.எல்.ஏ. உடன் கூட்டு சேர்ந்து கேபிள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கேபிளில் பணியாற்றுபவர்கள் இன்டர்நெட்டில் பலே கில்லாடிகள். சோனாலியின் கேபிள் சேவையால் அவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் சேருகின்றனர். கேபிள் தொழில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கையில், சைனிங் கார்பரேஷன் நிறுவனம் தனது இன்டர்நெட் சேவையை மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதனால் சோனாலி கேபிள் நிறுவனத்திற்கு சிக்கல் உருவாகிறது. தனித்து விடப்படும் சோனாலி , தனது குழந்தை பருவத்து நண்பரும், காதலருமான ரகு(அலி பசல்) உடன் இணைந்து எப்படி தனது கேபிள் நிறுவனத்தை முன்னேற்றம் அடைய செய்கிறார் என்பதே படத்தின் கதை.
ஹீரோயின் ரேகா சக்ராபார்தி, பாலிவுட்டிற்கு புதிய வரவு. ஆனால் அவரது நடிப்பு புதுமுகம் போன்றே தெரியவில்லை. ரொம்ப கூலாக நடித்துள்ளார். படத்தின் மொத்த கதையையும் அவர் தான் தூக்கி சுமந்துள்ளார். குறிப்பாக மகாராஷ்டிரா பெண்ணாக நடிக்க அவர் மிகவும் சிரமப்பட்டு இருப்பது அவரது நடிப்பிலேயே தெரிகிறது.

சைனிங் இன்டர்நெட் நிறுவனத்தின் உரிமையாளராக நடித்துள்ள அனுபம் கெர், வழக்கம்போலவே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவருகிறார். அவரைப்போலவே அலி பசலும் சிறப்பாக நடித்துள்ளார்.

சோனாலி கேபிள் படத்தின் பலமே இசை தான், அருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவும் ஓ.கே. ஆனால் படத்தின் படத்தொகுப்பு மிகவும் மோசம். இதேப்போல் படத்தின் திரைக்கதையும் சரியாக இல்லை. இயக்குநர் சாருதத் ஆச்சார்யா ஒரு நல்ல கதையை சொல்ல வந்து அதை ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்க தவறிவிட்டார். இருந்தாலும் சோனாலி கேபிள் படத்தை ஒரு முறை வேண்டுமானால் பார்க்கலாம்.

''சோனாலி கேபிள்'' - நல்ல கதை தான், ஆனால் அதை எடுத்த விதம் தான் சரியில்லை.
 
 thanx  - dinamalar 

- See more at: http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1556&ta=I#sthash.NWwfvjkW.dpuf

0 comments: