Tuesday, October 07, 2014

நீதிபதி குன்ஹா தீர்ப்பு: 10 முக்கியக் குறிப்புகள்!

ஜெயலலிதா வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த 1,232 பக்க முழு தீர்ப்பையும் பெற்றுள்ள ‘தி இந்து’, அதன் முக்கியமான 10 அம்சங்களை இங்கே சுருக்கி அளிக்கிறது. 


 
1. பூதமாக வளர்ந்த சொத்துகள்!
ஜெயலலிதா தனது முதல்வர் பதவிக்காலத்தை (1991-1996) தொடங்கும்போது அவரது சொத்து மதிப்பு ரூ. 2.18 கோடி. இதில் அவர் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் சொத்துகளும் அடங்கும். பதவிக்காலத்தில் அவருடைய சட்டப்பூர்வமான வருமானம் ரூ.9.91 கோடி. ஆனால், பதவிக்காலத்தின் முடிவில் அவருடைய சொத்து மதிப்பு ரூ.53. 60 கோடி. இந்த மதிப்பு 1991-96-ல் இந்த வழக்கின் எதிரிகள் என்ன விலைக்கு வாங்கினார்களோ அந்த மதிப்புக்குத்தான் கணக்கிடப்பட்டுள்ளது


.
2. கணக்கு காட்ட முடியவில்லை!
முதல்வராகப் பதவியேற்ற முதல் 27 மாதங்களில் மாதம் வெறும் ஒரு ரூபாய் மட்டும் அடையாள வருமானமாக ஜெயலலிதா பெற்றிருக்கிறார். நடிகை என்ற வகையில் அவர் சொத்து சேர்த்திருக்க முடியும் என்றாலும், அவர் பெயரிலான சொத்துகளுக்கு விளக்கம் தர அது போதுமானதாக இல்லை. அவருடன் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்ட இதர 3 எதிரிகளும் எந்த வேலைக்கும் செல்லவில்லை, அவர்களுக்கென்று ஊதியமும் இல்லை. 3. நம்ப முடியவில்லை மூவரின் நடவடிக்கைகள்!
சொத்துகளை வாங்குவதற்கான பணம் ஏனைய மூன்று பேரிடமிருந்துதான் வந்தது, ஜெயலலிதாவுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று ஜெயலலிதா தரப்பில் வாதாடப்பட்டது. முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்குத் தனது வீட்டிலேயே வசிக்கும் மூன்று பேருடைய நடவடிக்கைகள் தெரியாது என்பதை நம்ப முடியவில்லை. அந்த மூன்று பேருக்கும் வருமானம் ஏதும் கிடையாது என்னும்போது அது ஜெயலலிதாவுடைய பணம்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. 


4. மூன்று பேரின் பங்கு!
சுதாகரனும் இளவரசியும் 1991 முதல் 1996 வரையில் ஆறு நிறுவனங்களில் இயக்குநர்களாகச் சேர்ந்துள்ளனர். 1991 முதலே இந்த நிறுவனங்கள் இருந்தாலும் எதிரிகள் இதில் சேர்ந்த பிறகுதான் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதே காலத்தில் ஏற்பட்ட 18 நிறுவனங்களில் குறிப்பிடத் தக்க வரவு-செலவு நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை. ஆனால், பெரிய அளவில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதற்கான பணம் ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து தரப்பட்டிருக்கிறது. 5. பணம் அள்ளிவிடப்பட்ட ஆடம்பரத் திருமணம்!
திருமணத்துக்கு முன்னதாக சுதாகரனை வளர்ப்பு மகன் என்று ஜெயலலிதாவே அறிவித்திருக்கிறார். திருமணத்துக்காகப் பந்தல் அமைத்தது முதல் திருமணச் சடங்குகளை நடத்தியது, திருமணத்துக்கான பொருட்களை வாங்கியது என்று எல்லாவற்றுக்கும் ஜெயலலிதாதான் செலவிட்டிருக்கிறார். பெண்ணின் தகப்பனார் 14 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார். திருமணத்துக்கு நான் செலவிடவில்லை என்று ஜெயலலிதா கூறியிருந்தாலும், 1996-97-ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கில் திருமணத்துக்காக ரூ.29.92 லட்சம் செலவிட்டதாகக் கணக்கு காட்டியிருக்கிறார். எல்லா மூல ஆவணங்களும் ரசீதுகளும் காசோலைகளும் ஜெயலலிதாவின் தணிக்கையாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றிலிருந்தே முழுச் செலவையும் அவர்தான் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. திருமணத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, விருந்து சாப்பிட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், திருமணச் செலவு ரூ.6.45 கோடியைக்கூடத் தாண்டியிருக்கும் என்றாலும், ஜெயலலிதாவின் பங்குக்குச் செய்யப்பட்ட செலவு எப்படியும் ரூ.3 கோடி இருக்கும். 6. செருப்பு, புடவைகள் கணக்கு என்ன?
ஜெயலலிதாவின் வீட்டில் 386 ஜோடி செருப்புகள், 914 பட்டுப்புடவைகள், 6,195 இதர புடவைகள், 2,140 பழைய புடவைகள், இதர ஆடைகள் ஆகியவை தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்குநரகம் அளித்த கணக்கு தள்ளுபடிசெய்யப்படுகிறது. இவையெல்லாம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் வாங்கினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அதேவேளையில், மொத்தமிருந்த 27.588 கிலோ தங்க நகைகளில் சுமார் 20 கிலோ வருவாய்க்குப் பொருந்தாதவை. 7. கருணைக்கு வழி இல்லை!
இந்த வழக்கு அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது என்றும் 18 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றும் இந்தக் காலகட்டத்தில் மன உளைச்சலும் வேதனையும் அடைந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடரப்பட்ட பிறகு, ஜெயலலிதா 11 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்துவருவதாகவும் இப்போது அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லையென்றும் வாதிட்டுள்ளனர். மேலும், உடல்நலக்குறைவு காரணமாகக் கருணை காட்டுமாறும் கோரியுள்ளனர். இந்தக் காரணங்கள் எதுவும் கருணை காட்டுவதற்கு ஏற்றவை அல்ல. இந்த வழக்கு 18 ஆண்டுகளாகத் தாமதமானதற்கு யார் காரணம் என்று இப்போது ஆராய வேண்டியதில்லை. நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால்தான், வழக்கு விசாரணை பெங்களூருக்கு மாற்றப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு வழக்குக்குத் தடை இருந்ததிலும் சந்தேகம் இல்லை. ஆனால், அதன் பிறகும் குற்றவாளிகள் சட்ட நடைமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கணிசமான நேரத்தை வீணடித்தனர். குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட நேரத்தையும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நேரத்தையும் தவிர, பிற நாட்களில் குற்றவாளிகள் ஆஜராகவில்லை. எனவே, வழக்கு நிலுவையில் இருந்ததால் தாங்கள் மனவேதனை அடைந்ததாக அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. 
8. கனிவுக்கு வழியில்லை!
ஊழல் செய்த அரசு ஊழியருக்கு ஓராண்டுக்குக் குறையாமலும், 7 ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(2)வது பிரிவு வகை செய்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. மிக உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு ஜெயலலிதா இந்தச் செயலில் ஈடுபட்டதுதான் குற்றத்தின் தன்மையை அதிகரிக்கிறது. ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி’ என்று பழமொழியுள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களின் தவறுகள் மீது கனிவோ இரக்கமோ காட்டினால், அது ஒட்டுமொத்த சமூக வாழ்க்கைக்கும் கேடாக முடியும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, இந்த வழக்கில் கனிவுக்கோ அனுதாபத்துக்கோ இடமில்லை. 
9. தண்டனையின் அளவுகோல்!
குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் மதிப்பு, அவை பெறப்பட்ட முறை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையைத் தீர்மானிக்க முடியும். அப்படிப் பார்க்கும்போது, இது கடுமையான தண்டனைக்குரியது. சட்டம் வழங்கியுள்ள அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டுகள்) பாதிக்குமேல் விதித்தால்தான் நீதி நிலைநாட்டப்படும் என்பதால், நான்கு ஆண்டுகள் விதிக்கப்படுகிறது. 10. ஊழலை எப்படி அளவிடுவது?
ஊழலை அளவின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. ஊழல்தான் ஒழுங்கீனத்தின் தாய். அது சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது, தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது, மனசாட்சியைக் கொல்கிறது, மனித நாகரிகத்தையே குலைக்கிறது!
தொகுப்பு- ஜூரி thanx -the  hindu


 • annamalai  
  உடல்நலக்குறைவு காரணமாகக் கருணை காட்டுமாறும் கோரியுள்ளனர். இந்தக் காரணங்கள் எதுவும் கருணை காட்டுவதற்கு ஏற்றவை அல்ல ,இவர்கள் திருடவேயில்லை என்றால் ஏன் கருணை காட்ட சொல்லுகின்றர்கள்
  about 3 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
  sathyajith  Up Voted
 • wilson  
  சூப்பர் நீதிபதி குன்ஹா
  about 6 hours ago ·   (10) ·   (1) ·  reply (0) · 
  sathyajith  Up Voted
 • Sankar  
  பாயிண்ட் 9ல் குறிப்பிடப்பட்டுள்ள 7 ஆண்டுகள் தண்டனையை முழுமையாக விதித்தால்மட்டும் நீதி நிலைநாட்டப்படாதா என்ன?!!! {9 சட்டம் வழங்கியுள்ள அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டுகள்) பாதிக்குமேல் விதித்தால்தான் நீதி நிலைநாட்டப்படும் என்பதால், நான்கு ஆண்டுகள் விதிக்கப்படுகிறது}
  about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • sathyajith  
  நம்ம "தி இந்து " வுக்கு பெரிய விசில் அடிங்க... நம்ம தல"" குன்ஹா"" வுக்கு பெரிய விசில் அடிங்க. .. நம்ம போராட்ட அடிமைகளுக்கு பட்ட நாமம் அடிங்க. ...
  Points
  7945
  about 10 hours ago ·   (7) ·   (1) ·  reply (0) · 
 • sathyajith  
  தமிழக மக்களின் இன்றைய உண்மையான கதாநாயகனாக மாண்புமிகு நீதியரசர் " ஜான் மைக்கேல் டி குன்கா" அவர்கள் மட்டுமே.
  Points
  7945
  about 10 hours ago ·   (8) ·   (1) ·  reply (0) · 
 • உவைசுல் கர்ணி  
  சத்தியமாக இந்தியாவில்நீதி இருக்கு என்றால் ...ஸ்பெக்ட்ரம் ராஜா..கனி மொழி விசயத்திலும் மற்றும் குஜராத் கொலையாளிகளின் மீதும் ஏன் பாயவில்லை ..முடியாது முடியாது..தான் எல்லாம் நேரம் காலம் சேவைக்கு அவனவனுக்கு வந்தால் தான் நீதியின் அரும்மை புரியும் நிதியியன் வலிமை தெரியும் ...
  about 11 hours ago ·   (5) ·   (22) ·  reply (0) · 
  Ragu  Up Voted
  sathyajith · T-V  Down Voted
 • உவைசுல் கர்ணி  
  இதே தீர்ப்பு ஸ்பெக்ட்ரம் கனி மொழி ராசா மற்றும் குஜராத் கொலையாலிகள் மீதும் வரும் என்றால் நீதி இன்னும் வாழ்கிறது என்று சத்தியம் இட்டு சொல்லும் இந்த மனித இனம் ....
  about 11 hours ago ·   (8) ·   (12) ·  reply (0) · 
  kuttan · Ragu · Ragu  Up Voted
  T-V  Down Voted
 •  
  Well done Kunha, well done. U have become the saviour of TN people.
  Points
  2140
  about 11 hours ago ·   (23) ·   (3) ·  reply (0) · 
  sathyajith  Up Voted
 • YA.JABBAR  
  நியாயம் ,உண்மை,ஆதாரங்கள் இவைகளை சரியான முறையில் நிரூபித்து, நிரபராதி என நீதியின்முன் நிலைநாட்டி, அம்மாவை அஷைத்து வர முயற்சி செய்யுங்கள் . அதை விடுத்து போராட்டங்களை செய்யாதீர்கள்.
  about 11 hours ago ·   (21) ·   (3) ·  reply (0) · 
  kuttan · Ragu · Ragu  Up Voted
 • mahalingam  
  மக்களுக்கு தேவையான குறிப்பகள்
  about 11 hours ago ·   (11) ·   (2) ·  reply (0) · 
  sathyajith  Up Voted
 • karthikeyan  
  Whoever YOU are, LAW is there ABOVE you!!!!
  about 12 hours ago ·   (19) ·   (3) ·  reply (0) · 
  kuttan · sathyajith  Up Voted
  Ragu · Ragu · Ragu  Down Voted
 • juju  
  இவா வெளிய வரவே கூடாது அப்படி வன்த தமிழ் நாடு இறுக்க அத்தன பெரும் முட்டாள் ஆய்டுவோம் அந்த கட்சி ல இறுக்க
  Points
  265
  about 12 hours ago ·   (24) ·   (7) ·  reply (0) · 
  sathyajith · T-V  Up Voted
 • பாலாஜி.ஜெ.எல்  
  நன்றாக. உள்ளது. நன்றி
  about 12 hours ago ·   (11) ·   (0) ·  reply (0) · 
  sathyajith  Up Voted
 • tamilan thambiraja  
  சட்டம் தன kadamaiyai sariyaga செய்துள்ளது ஆல் ததே பெஸ்ட் my loveble இந்தியன் லா and குட் லக்.
  about 12 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
 • Sundaram  
  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிருபிக்க பட்டீருக்குமாயின், அந்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்ய படவேண்டும். வீனா காலம் தாழ்த்தி அரசுக்கு ஏற்படுத்திய தேவயில்லாத செல்வுதொகையை குற்றவளியிடமிருந்து வசூல் செய்யவேண்டும். இவரது மனச்சி படி இவர் குற்றம் புரிந்து இருப்பின், இவர் பொது வாழ்கைஇலிருந்து ஒதுங்கி கொள்ளவேண்டும் .மனசாட்சிபடி இவர் குற்றம் புரிய வில்லை எனில் அப்பிள் போக வேண்டும். இப்படி பட்ட குற்றசாட்டிற்கு ஆளானாவர்கள் தொடர்ந்து பொது வாழ்கையில் ஈடுபடுவது சரியானது தானா என்பதை பொதுமக்கள் தீர்மானித்து நிராகரிக்க வேண்டும். ஜெயலலிதா வின் குற்றங்கள், வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்து கருது வேறுபாடுகள் இருபது இயற்கையே. அண்மைய காலங்களில் தமிழ், தமிழர் நலன், தமிழர் உரிமைகல் குறித்து அம்மாவின் திடமான தீர்க்கமான நிலைபாடுகளை இனி எவராலும் ஒருபோதும் இவரைபோல் முன் எடுத்து செல்ல திராணி உள்ள தமிழன் எவரும் இல்லை என்கிறபொழுது, தமிழன் வேதனை பட வேண்டியுள்ளது.-சுந்தரம்
  Points
  5090
  about 13 hours ago ·   (7) ·   (3) ·  reply (0) · 
 • RAMU  
  காலம் கடந்த தீர்ப்பு தண்டனைக்கு சமம். எல்லா அதிகாரமும் உள்ள நீதி மன்றத்தால் ஏன் கால தாமதமின்றி முடிக்க முடியவில்லை ... வழக்கில் இருப்பவர்கள் தப்பிக்க நினைப்பது இயல்புதான். ஆனால் அதிகாரத்தை பயன்படுத்தாத நீதிமன்றம் பதினெட்டு வருடம் என்ன செய்துகொண்டிருந்தது.
  about 13 hours ago ·   (11) ·   (5) ·  reply (0) · 
  Ragu · Ragu  Up Voted
 • sriguru  
  இந்த தகவல் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காத பாமர மக்களுக்கும் தெரிவித்தால் வீண் போராட்டங்கள் தவிர்க்கலாம் இவை அரசியல் ஆதாயத்திற்காக நடக்கும் நாடகம் என்று தெரியும்.
  about 13 hours ago ·   (11) ·   (1) ·  reply (0) · 
 • PADMANABHAN  
  நீதியை எதிர்க்கும் போக்கு மக்களை திசை திருப்பும் இது தவறான ஊதரனமகிவிடும். வளரும் தலைமுறை சரியான பாதை தேர்ந்தெடுக்க தடுமாறுவர். எனவே எதிர்ப்புகளை புறக்கணிக்க வேண்டும்.
  about 14 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
 • Apt Ayyavu Managing Director at APTSO export corporation 
  தொடரட்டும் இம்மாதிரியான தீர்ப்புகள் ,நிமிர்ந்து எழட்டும் நமது தாய் நாடு!
  about 14 hours ago ·   (18) ·   (0) ·  reply (0) · 
  sathyajith  Up Voted
 • anbumani  
  வி ஆர் waiting for mr கருணாநிதி & family ...
  about 14 hours ago ·   (11) ·   (2) ·  reply (0) · 
  sathyajith  Down Voted
 • karvannan  
  super
  about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • P.Padmanabhan  
  1. நாளை இந்த நேரம் வெங்கலூருவில் கடநாடக உயர நீதிமன்றத்தின் நீதிமன்ற அறை எண் 28-இல் மாண்புமிகு நீதியரசர் திருமிகு. எ.வி. சந்திரசேகரா அமர்வின் முன்பு பட்டியல் வழக்கு வரிசை எண்கள் 73 முதல் 76 வரை கொடுக்கப்பட்டு வர உள்ள குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகள் .( CRL.A 835/2014, CRLA 836/2014, CRLA 837/2014 and CRL.A 8382014 ) தீர்மானிக்கபட்டிருக்கும் அவரது தகுதி குறிப்புகள்:" Born on 30th May 1954. Enrolled as an Advocate on 25.01.1984 and practiced on Civil and Criminal side. Appointed as directly recruited District and Session Judge during May 1996 and served as Additional District and Session Judge, at Bangalore and Mangalore and as Prl. District and Sessions Judge, in Udupi, Kolar, Bangalore Rural and Mandya Districts of Karnataka State; worked as Member-Secretary, Karnataka State Legal Services Authority and Director of Karnataka Judicial Academy and Bangalore Mediation Centre. Sworn in as an Additional Judge of the High Court of Karnataka on 24.10.2013.
  Points
  13560
  about 14 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • P.Padmanabhan  
  2.மாவட்ட அமர்வளவில் மட்டும் விசாரணை நீதிபதியாக ( trial judge of District & Sessions Court) 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார். நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளபடி சிறப்பு பொது குற்ற வழக்கு நடத்துனர் (Special Public Prosecutor) திரு பவானி சிங் அவர்கள் 01-10-2214 ஆம் தேதி புதன் கிழமை தாக்கல் செய்துள்ள எதிர்வழக்குரையில் (counter statement பிணை விடுப்பு குறித்து ஒரு முக்கிய இணக்கத்தை (consession) எழுத்துமூலமாகவே அளித்துள்ளார. அதாவது: .குற்றவியல் நடைமுறை தொகுப்பின் 389-ஆம் பிரிவு நீதிமன்றத்திற்கு தண்டனையை தடை செய்யும் அதிகாரத்தை அளிக்கவில்லை . ஆனால் நீதிமன்றத்திற்கு தண்டனை நிறைவேற்றத்தை தள்ளிவைக்கவும் குற்றவாளியை பிணையில் விடுக்கவும் அதிகாரம் கொடுக்க பட்டுள்ளது! ("While opposing the plea of Ms. Jayalalithaa for staying her conviction, it has been contended in the objection that Section 389 of the Code of Criminal Procedure does not give powers to courts to stay the conviction, but power is vested with the courts to suspend execution of sentence and
  Points
  13560
  about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • P.Padmanabhan  
  3. release of convict on bail.:.") எனவே பிணையில் விடுக்க கூடாது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும் அதற்கும் ஒரு வலுவற்ற கணதுடைப்பு காரணத்தை முன்வைத்துதான் உள்ளார்: " "“Ms. Jayalalithaa is a very influential person,” and it may not be possible to secure her for serving sentence once she was released from the prison on bail." (செல்வி செயலலிதா மிக செல்வாக்குள்ளவர. ஒருமுறை விடுவிக்கபட்டுவிட்டால் அவரை மீண்டும் தண்டனையை அனுபவிக்க கொண்டுவருவது முடியாமல் போகலாம் !"இது எளிதில் பாதுகாப்பு தரப்பால் (Defence) தரப்பால வெல்லப்படும் !
  Points
  13560
  about 14 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • anbumani  
  நல்ல தீர்ப்பு. ஊழல் வாதிகள் எந்த கட்சியாக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும்.
  about 14 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
 • surya  
  சிறந்த மனிதர். நிதிபதி கும்கா. ஊழல் வாதிகள் இனி அரசியல் ஆசையை வரகூடாது அடுத்து 2g செப்க்ற்றம்
  about 14 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
 • Shan Shan  
  தீர்ப்புகள் திருத்தபடலாம் மேல் முறையீட்டில் !பொய் வழக்கா இல்லையா என இனிவரும் நாட்களில் எதிர்பார்க்கலாம் !
  Points
  35325
  about 15 hours ago ·   (7) ·   (6) ·  reply (0) · 
  Ragu · Ragu · Ragu · Ragu · Ragu · Ragu  Up Voted
  sathyajith · T-V  Down Voted
 • Jey  
  இன்னும் நல்லா புரியும் படியாக சொல்லுங்கள்.. இன்னும் இங்க சில மரமண்டைகள் போராட்டம் என்று அனைவருக்கும் இடைஞ்சல் செய்கிறார்கள்.
  Points
  100
  about 15 hours ago ·   (18) ·   (0) ·  reply (0) · 
  sathyajith · Sankar · Sankar · Sankar · Sankar  Up Voted
 • Sankarappan Radhakrishnan Sr. Manager at Indian Bank 
  உங்கள் விளக்கத்துக்கு நன்றி. மேல்முறையீட்டில் , அம்மா தண்டைனைகளில் ஏதேனும் மாற்றம் உண்டா அல்லது தண்டைனகள் கூடவோ , வெளியில் வரவோ வைப்புகள் எப்படி இருக்கும்? மற்றாமானால் யாரை குறை கூறுவது ? சட்டம் ஒன்றே! தனிப்பட்ட அதிகாரிகளால் தீர்மானங்கள் மாறுவது எதனால்.?
  about 15 hours ago ·   (10) ·   (0) ·  reply (0) · 
  Sankar · Sankar · Sankar · Ragu · Ragu · Ragu · Ragu · Ragu · Ragu  Up Voted
 •  
  ஜெயா தப்பிப்பதை மற்ற அரசியல் வாசிகள் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர் வாய்தா போல் இதிலும் தமக்கு வழிகாட்டியாய் இருப்பார் என்ற நம்பிக்கையில். 

0 comments: