Monday, October 20, 2014

செங்கமலம் சிரிக்குது - இதுக்கு இங்க்லீஷ்ல என்ன? ஐ கண்டுபிடிச்சுட்டேன்

1
குழம்பிய குட்டையில் ஓட்டு மீன் பிடிக்கலாம் என்ற பிஜேபியின் கனவு பலிக்காது.


===========


2
இங்கே எவ்ளவ் பிரச்னை ஓடிட்டிருக்கு.FBல ஒரு பொண்ணு " என் கணவர் பூ வாங்கி டேபிள் ல வெச்ட்டார்.என் தலைல வைக்கலை"னு ஊடல் ஸ்டேட்டஸ்


===============


3 எம் ஜி ஆர் ,கலைஞர் எல்லாரும் சம்பாதிச்சாங்க.ஆனா அதை பட்டவர்த்தமா யாரும் ஜெ போல் காட்டிக்கலை.அதான் மாட்டிக்கலை


================


4 நம்மை மாதிரி நடுத்தர மக்களுக்கு என்ன திருப்தின்னா சம்பாத்யம் கம்மியா இருந்தாலும் குடும்பத்தோட சொந்த ஊர்ல இருக்கோம்


=================

5 பெங்களூர் பிகரே! உங்க ஊர்க்காரங்களுக்கு எதையும் கொடுத்தே பழக்கம் இல்லையா? காவேரி நீர் ,ஜாமீன் ,முத்தம்


================


6
இன்று( 8  10 14) சந்திரகிரஹணம் இரவு 7 மணி வரை இருப்பதால் தம்பதிகள் மட்டும் இரவு 7 30 க்கு (ஒன்றாகவோ ,தனித்தனியாகவோ) குளிக்கவும் - கொல்லிமலை சித்தர்


===============

7 அஜித் =

நாம சந்திச்சதை FB ல அப்டேட் பண்ணிக்குங்க.

விவேக்- உங்களுக்குதான் விளம்பரமே பிடிக்காதே?

அஜித்- உங்க ரி என்ட்ரி க்கு உதவியா இருக்கும்

==================


8
தீபாவளி போனஸ் எவ்வளவு வரும்?னு சம்சாரம் கேட்டா உஷாரா கைக்கு வந்தா தான் தெரியும் னு சமாளிச்சடனும்


================


9
ஒரு லேடி போன் ல புருசன் கிட்டே சீம்பால் காய்ச்சுவது பற்றி விளக்கிட்டு இருக்கு.டவர் கிடைக்கலை.கிச்சனை விட்டு ஹால் வாங்கங்குது.பொங்கிடும்


================

10

விகடன் தீபாவளி மலர் அட்டைப்படத்துல எப்பவும் அந்த வருசம் யார் டாப் ல் இருக்காங்களோ அவர் போட்டோ வரும்


===============

11
குழந்தைகள் கேட்கும் பல கேள்விகளுக்கு அப்பா வின் பதில் "அம்மா கிட்டே கேட்டுக்கோ" என்பதாகத்தான் இருக்கும்.


================


12 
துப்பாக்கி ரிலீஸ் ஆன தீபாவளி மலரில் விஜய் படம் போட்ட விகடன் கத்தி ரிலீஸ்் தீபாவளி க்கு முறைப்படி விஜய் படம் தான் அட்டையில் போட்டிருக்கனும்


==================


13
மக்களின் ஏகோபித்த ஆதரவு ,அனுதாபம் ஆகியவற்றை சம்பாதித்தவர் என்பதற்காக அவர் முன்பு முறைகேடாக சம்பாதித்தவர் என்பதை சட்டம் மறந்துவிடமுடியாது


==================

14
KEEP SMILING =சின்ன வீடு சிரிக்கிறது #,சபாஷ் துபாஷ்


===================


15
அசோகப்பேரரசு மேப் போல் பரந்து விரிந்திருக்கும் உன் முதுகு இடையில் தேமுதிக வாக்கு வங்கி போல் குன்றி விடுகிறது


==================

16  அஜித் 55 -
கவுதம் பட ஸ்டில்களில்் ஸ்டைலிஷ் நியூ லுக் கில் மிளிர்ந்தாலும் அது ஆரம்பம் கெட்டப் போல் அப்ளாஸ் அள்ளுமா என்பது கேமரா கோணங்களைப்பொறுத்தது

====================


17
மனைவி/காதலி தவிர பிற பெண்களிடம் குழைந்து பேசாமல் இயல்பாக இருப்பதே ஆணின் கம்பீரம்


===============


18
அஜித் ,விஜய் ,விக்ரம் மூவரின் புதுப்பட கெட்டப் ் ஸ்டைலிஷ் லுக் ் 1 விஜய் 2 அஜித் 3,விக்ரம் .ஆனால் அதற்காக மெனக்கெடல் அப்டியே ரிவர்ஸ்


================


19 

பிகரின் முகம் வழக்கத்துக்கு மாறாக இயல்புக்கு மீறிய மினுமினுப்பு தென் பட்டால் தேங்காய் எண்ணெய் தடவி இருக்கிறது என அறிக.


================


20 
நோ டி எம் ப்ளீஸ் னு ஒரு பொண்ணு தன் பயோ ல போட்டிருந்தா டி எம் போய் ஏன் அப்டி போட்டிருக்கீங்க?னு கேட்பான் தமிழன்

===================

0 comments: