Wednesday, October 08, 2014

ஜெயலலிதாவுக்கு அவ்வளவு எளிதாக ஜாமின் கிடைத்து விடாது -சுப்பிரமணியன் சாமி சிறப்பு பேட்டி:

''ஜெயலலிதாவுக்கு அவ்வளவு எளிதாக ஜாமின் கிடைத்து விடாது; சட்டத்தின் ஆழம் புரியாமல், ஜெயலலிதா தரப்பினர் கோர்ட்டை எதிர் கொண்டு வருவது பரிதாபமாக உள்ளது,'' என, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடியானதும், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கருத்து கூறினார்.
ஊழல்வாதி :இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: ஜெயலலிதாவை கடவுளாக நினைத்து, அவர் கட்சியினர் இன்னமும் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றனர். அவர் ஊழல் வழக்கில் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கும் ஒரு ஊழல்வாதி என்பதை, அக்கட்சியினர் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அப்படி ஒரு எண்ணம் வந்தால் தான், அவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்வர். கடவுளுக்கே மனிதன் தண்டனை வழங்கலாமா என்று போஸ்டர் அடிப்பதை எல்லாம் விடுவர். கடவுளுக்கு மனிதன் தண்டனை வழங்குவது தவறென்றால், அ.தி.மு.க.,வினர் தங்கள் கடவுளாக நினைக்கும் ஜெயலலிதா ஏன் ஊழல் புரிய வேண்டும்?அவர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சொத்து சேர்த்தார் என்பதை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டது.அப்படி இருக்கும்போது, ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் மற்றவர்களுக்கும் அவ்வளவு எளிதாக, ஜாமின் கிடைத்து விடாது. சட்டம், நீதிமன்ற தீர்ப்பின் ஆழம் புரியாமல் ஜெயலலிதாவும், அவர் தரப்பினரும் கோர்ட்டை எதிர் கொள்கின்றனர். பதினெட்டு ஆண்டு காலம் இழு இழு என இழுத்து நடத்தி வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு, ஒரே வாரத்தில் ஜாமின் பெற்று வெளியே சென்று விட ஜெயலலிதா துடிக்கிறார். சட்டம், அவர் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பலவீனமாக இல்லை என்பதை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி 

சந்திசேகரா, ஜாமினை மறுத்து, தெளிவாக சொல்லிஇருக்கிறார். குற்றவாளிகளுக்கு கேட்டதும் ஜாமின் கொடுக்க வேண்டும் என்பது, குற்ற வழக்கில் அடிப்படை உரிமை அல்ல என்பதை, இப்பவாவது ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.
சீரியசாக...:லாலு பிரசாத் யாதவ், சுக்ராம், மதுகோடா, ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றவர்களின் ஊழல் வழக்கில், எலலாருக்கும் அவ்வளவு எளிதாக ஜாமின் கிடைத்து விடவில்லை. ஊழல் வழக்கை இப்படித்தான்,ரொம்பவும் சீரியஸாகவே கோர்ட் பார்க்கிறது. இதையெல்லாம், சந்திரசேகரா, தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அறிகிறேன். கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள் என, பலரும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அதனால் தான், ஆரம்பத்தில் இருந்தே ஜெ., ஜாமின் அவ்வளவு எளிதல்ல என, நான் சொல்லி வந்தேன்.நீதிபதி குன்ஹா, தெளிவான ஒரு தீர்ப்பை கொடுத்த பின்னாலும், அதை கருத்தில் கொள்ளாமல் ஜெ.,வுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தால், நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு பிடிப்பில்லாமல் போயிருக்கும்.தமிழகத்தில், ஜெ., விடுதலையை வலியுறுத்தி, அக்கட்சியினர், சினிமாத்தனமாக, தொடர்ந்து மக்களை பிரச்னைகளுக்கு ஆளாக்கி வருவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவரும், தமிழக சட்டம் - ஒழுங்கை காப்பதில், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
சினிமாத்தனம்:அதனால், தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் பாசாங்குக்கு, ஆங்காங்கே செய்யும் வன்முறை காட்சிகளும், போராட்டங்களும் மெல்ல குறைந்து வருகின்றன. இருந்தாலும், பள்ளி, கல்லுாரிகள
மூடுவது, பஸ்களை ஓடவிடாமல் செய்து வருவது என்று, தங்கள் சினிமாத்தனத்தை காட்டி வருகின்றனர்.அரசை கலைக்க கோருேவன்அது தொடரக்கூடாது; தொடர்ந்தால்,அதை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வேன். தமிழகத்தில் 356 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, அ.தி.மு.க., அரசை கலைக்கக் கோருவேன். கவர்னர் ஆட்சி கொஞ்ச காலத்துக்கு இருக்கட்டும். இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைப்பது, என் எண்ணம் அல்ல.அதற்காக அந்த அரசு, மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல், தொடர்ந்து ஒரு குற்றவாளியின் விடுதலைக்காக, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்தால், அதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது.எனக்கு, தமிழக மக்களும், அவர்கள் நலனும்தான் முக்கியம். அதற்காக, எந்த அளவிலும் நான் போராடத் தயாராக இருக்கிறேன். புரையோடிக் கொண்டிருக்கும் ஊழலால், இந்திய பொருளாதாரம் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடுவதும் தான், என் வாழ்நாள் கடமை. அதை இறுதி வரையில் தொடர்ந்து செய்வேன். ஊழல்வாதிகள் யாரையும், எப்பவும் விடமாட்டேன்.இவ்வாறு, அவர் பேட்டிஅளித்தார்.

- நமது நிருபர் -


thanx - dinamalar

0 comments: