Friday, October 03, 2014

BANG BANG -சினிமா விமர்சனம் ( HINDI)

தினமலர் விமர்சனம்

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவந்தž நைட் அண்ட் டே எனும் ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் தான் இந்தியில், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் ''பேங் பேங்'' ஆக வெளிவந்துள்ளது.

ஷிம்லாவில் உள்ள வங்கி ஒன்றில் ரிசப்சனிஸ்டாக பணிபுரிகிறார் ஹர்லீன். தனது பாட்டியுடன் வசித்து வரும் ஹர்லீன், மிகவும் சலிப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இணையதளம் மூலம் அறிமுகமாகும் ராஜ்வீர் என்பருடன் அவளுக்கு காதல் ஏற்படுகிறது. அழகாகவும், இனிமையாகவும் பழகும், அதே சமயம் உணர்ச்சி வசப்படும் தன்மை கொண்ட ராஜ்வீரை அவள் நேரில் சந்திக்க நினைக்கிறாள்.

ஹர்லீன், ராஜ்வீரை சந்திக்க செல்லும் போது மக்கள் அவனை துரத்தி தாக்கி கொண்டுள்ளனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ஹர்லீன் வீட்டிற்கு திரும்ப நினைக்கிறாள். ஆனால், அங்குள்ள மக்கள் அவளையும் சர்வதேச குற்றவாளி என முடிவு செய்து துரத்துகின்றனர். அப்போது தான், தான் காதலிக்கும் ராஜ்வீர் லண்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை திருடி வந்துள்ளான் என்பது தெரிய வருகிறது. இந்திய போலீஸ் ஒருபுறமும், சர்வதேச போலீஸ் ஒருபுறமும், பயங்கரவாதிகளான உமரின் கும்பல் ஒருபுறமும் துரத்துகிறது. ஹலீனும் ராஜ்வீரும் காதலில் வெற்றி பெறுகிறார்களா? தங்களை துரத்தும் கும்பலிடம் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? என்பது தான் பேங் பேங் படத்தின் கதை.

ஹர்லீனாக கத்ரினா கைப்பும், ராஜ்வீராக ஹிருத்திக்கும், பயங்கரவாதி உமராக டேன்னியும் நடித்துள்ளனர். பேங் பேங் படத்தில் டைரக்டர் சித்தார்த் ஆனந்த், தனது இயக்கத்தின் வலிமையை நிரூபிக்க தவறி உள்ளார் என்றே கூற வேண்டும். அதே சமயம் தற்கால ரசிகர்களை கவரும் அம்சங்களான கார் சேஸிங், துப்பாக்கி சண்டை, அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சிகள் என பல வித அம்சங்களை புகுத்தி உள்ளார். குறிப்பாக அபுதாபி சாலையில் எஃப் 1 கார் பந்தய காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. முதல் பாதி கொஞ்சம் போர் அடிப்பது போல் இருந்தாலும், இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு நிறைந்ததாக உள்ளது.

ஹிருத்திக்-கத்ரினா இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. விஷால் ஷேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் படம் வெளிவருவதற்கு முன்னரே ஹிட்டாகி விட்டன. ஹிருத்திக் வழக்கம் போல் மிக சர்வ சாதாரணமாக தனது ரோலை சிறப்பாக செய்துள்ளார். தூம் 2ல் இருந்ததை விட தனது இமேஜை அதிகப்படுத்தும் விதமாக ராஜ்வீர் கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தி உள்ளார். ஹர்லீனாக வரும் கத்ரீனாவின் அப்பாவி தனமான அழகான தோற்றம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. டன்னியும், ஜாவீத் ஜாஃப்பரியும் நடிப்பில் மிரட்டி உள்ளனர். அரசு ஏஜென்ட்டாக வரும் பவன் மல்கோத்ரா, மீண்டும் தனது நடிப்பு திறமையை நிலைநிறுத்தி உள்ளார்.

ஒரு படத்திற்கு வேண்டிய அம்சங்கள் கொண்டதாக உள்ளது என்ற மனநிறைவை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தும்.

மொத்தத்தில் பேங் பேங் - ஆக்ஷன் நிறைந்த ரசிக்க வைக்கும் படம்.

ரேட்டிங் - 3/5
 
 
 
thanx - dinamalar
 


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S 
 
 
 
1 ஹீரோயின் ஓப்பனிங் சீன் ல பாத்ரூம் ல குளிச்ட்டு இருக்கு.இது ஆக்சன் படமா/ ? கில்மா படமா? # BANG BANG
 
 
 
பேங்க் ரிசப்ஷனிஸ்ட்டான ஹீரோயினுக்கு வைரத்திருடனான ஹீரோவைப்பிடிக்கலை.் ஹீரோ சட்டை கழட்டும்போது 6பேக் பார்த்து மயங்கிடறா.ஜிம் முனு 1 காதல்


3 வெண்ணெய்க்கன்ன அழகு தேவதை கேத்ரீனா கைப் க்கு க்ளோஸப் ஷாட் வைக்காம ஹீரோவுக்கு அடிக்கடி வைக்கறாங்க.விளங்கிடும் # BANG BANG



4
கே ஆர் பேக்ஸ் பேக்கரில 8 ரூபாக்கு விற்கும் வெஜ் பப்ஸை மனசாட்சியே இல்லாம 25 ரூபாக்கு விற்கறாங்க # ஈரோடு தேவி அபிராமி



5 லிப் கிஸ் சீன் ல பூரா பயலும் அமைதியா இருக்காக.ஒரு சேட்டு வீட்டு லட்டு பிகரு ஹூய் னு சவுன்ட் குடுக்குது.அந்த கேரக்டராவே மாறிடுச்சு போல







 மனம் கவர்ந்த வசனங்கள்
1
உன் கிட்டே பில் கட்ட பணம் இருக்கா? நோ பேங்க் ரிசப்சனிஸ்ட்ன்னே? அப்போ ஹாஸ்பிடல் ல ஒர்க் பண்ணா மருந்து இருக்குமா? என் கிட்டே? # B B


2  கேத்ரீனா = என்னைப்பாத்தா செக்சியா இல்லையா? யா.சோ வாட்? ஏன் என்னை எதுவும் செய்யலை? #BB 




சி பி கமெண்ட்
BANG BANG = TIME PASS MOVIE.OK.NOT BAD.KATRINA FOR GLAD - RATING = 2.5 / 5 , 100 CRORE COLL CONFIRM
 
a







a




a


 a






a







a




a





 

0 comments: