Saturday, October 04, 2014

பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா?- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை

"ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை..."
இப்படி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய பாடலைப் பாடிய ஜேசுதாஸ்தான் தற்போது பெண்கள் உடை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
பெண்கள் ஜீன்ஸ் உடை அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என பாடகர் ஜேசுதாஸ் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கேரள மாநிலத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியபோது ஜேசுதாஸ் இவ்வாறு பேசியுள்ளார்.
ஜேசுதாஸ் அதோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பெண்கள் அவருக்கு எதிராக கொதித்தெழுந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவரது முழுப் பேச்சையும் இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது.
விழாவில் ஜேசுதாஸ் பேசியதாவது: "பெண்கள் ஆண்களைப் போல் இருக்க முயற்சிக்கக் கூடாது. பெண்களின் அழகு அவர்கள் எளிமையில் இருக்கிறது. ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து மற்றவருக்கு பெண்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. எதை மறைக்க வேண்டுமோ அதை மறைப்பது அவசியம். பெண்கள், தங்கள் உடையலங்காரத்தால் ஆண்களை தேவையில்லாத செய்கைகளில் ஈடுபடத் தூண்டக் கூடாது. ஆண்களை ஈர்க்கும் வகையில் உடைகளை அணியக் கூடாது. ஜீன்ஸ் அணியும் பெண்ணைப் பார்க்கும் ஓர் ஆண் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணின் அங்கங்களையும் பார்க்கத் தூண்டப்படுகிறான். ஜீன்ஸ் - இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான உடை" என்றார்.
திருவனந்தபுரத்தில் உள்ள இசைக்கல்லூரியில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனோர் இளம் பெண்கள். சுத்தமான கேரளம், சுந்தர கேரளம் என்ற திட்டத்தை துவக்கி வைத்தபோது ஜேசுதாஸ் இப்படிப் பேசியுள்ளார்.
ஜேசுதாஸின் கருத்துக்குகு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெண்கள் காங்கிரஸார், திருவனந்தபுரத்தில் கண்டனப் பேரணியும் நடத்தியுள்ளனர். இது குறித்து கேரள மகளிர் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்: "ஜேசுதாஸின் பேச்சு பெண்களின் சுதந்திரத்தை அத்துமீறுவதாகும். ஒரு மிகப் பெரிய இசைக் கலைஞரான ஜேசுதாஸ் இவ்வாறு பேசியிருப்பது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.
"சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்.
தூரத்து தேசத்தில் பாரதப் பெண்மையின் பாடல் கேட்க வேண்டும்.
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடம் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே.
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்"
என்ற வரிகளை உருகி உருகிப் பாடிய ஜேசுதாஸ், பெண்களுக்கு எதிரான அவரது பாலின கருத்தை திரும்பப்பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


thanx  - the hindu


 • LUTCH  
  K.J Yesudas - Killing. Jeans. யேசுதாஸ். இவருக்கு மூன்றும் ஆண் பிள்ளைகள் அதுதான் இந்த பேச்சு .
  Points
  8185
  about 17 hours ago ·   (4) ·   (10) ·  reply (0) · 
     
  Subramanyam · Shan-Shan  Up Voted
 • Subramanyam  
  தங்கள் துறையில் மிகப் பிரபலமாக இருப்பவர்கள், தங்களது சொந்தக் கருத்தை வெளியிடும் போது கவனம் தேவை. பெண்கள் ஆடை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இவரது கருத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது அவரது சொந்தக் கருத்து. ஆனால், ஒரு பெண்ணின் ஆடை, அலங்காரங்களைப் பற்றி ஆணாகிய நான் ஏன் பொது மேடையில் பேச வேண்டும் என்கின்ற நினைப்பு அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஆண்கள்தான் கலாச்சாரத்தின் அளவுகோலை நிர்ணயிப்பவர்கள், கலாச்சாரத்தின் சீர்கேடு பெண்களின் உடையினால் நிகழ்கின்றது போன்ற எண்ணங்களை வலுவூட்டும் விதமாகவே இவரது தேவையில்லாத இந்தப் பேச்சு அமைந்துள்ளது. ஆண் ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு தான் இது.
  Points
  16390
  about 18 hours ago ·   (16) ·   (7) ·  reply (0) · 
  Pratip · nnarmatha · nnarmatha · nnarmatha · nnarmatha · samy  Up Voted
 • saleem  
  ஜேசுதாஸ் சரியாக சொன்னார்
  about 18 hours ago ·   (23) ·   (14) ·  reply (0) · 
  Kuttan · Kuttan · Sorb · விக்னேஷ்  Up Voted
  Subramanyam · Pratip · Anbu · CLUTCH  Down Voted
 • Muthusamy Krishnan at Government 
  திரு ஜேசுதாசின் கருத்துக்கள்,வரவேர்க்கபடவேண்டிய ஒன்று.பெண்கள் எபடிவேண்டுமானால் உடை அணிந்து கொள்ளலாம் என்பது 'சுதந்திரம் அல்ல' சுதந்திரம் என்பது எப்படி வேண்டுமானாலும்,உடல் தெரிய என்பத்பது எல்லோருக்கும் சபலத்தை உருவாக்கும்.2/3 வயது குழந்தைகளே பாலியல் கொடுமை நடக்கும் மிக கண்ணியமான நாடு ,அதிமிக கண்ணியமான ஆண்கல் உள்ள நாடு.இது.இந்தியா காந்தி கண்ட 'ராமராஜ்யம் 'இன்னும் உருவாக 1000ஆண்டுகல் ஆனாலும் கூட நிறைவேறுவது கடினம்.ஒரு தவறு நடக்கும் பொது இப்பொது கூக்கருரல் இடும் 'மாதர் அமைப்புகள் ' வருமா?தவறு நடந்த பிறகு வந்தால் என்ன,வராவிட்டால் என்ன?
  Points
  1545
  about 19 hours ago ·   (19) ·   (6) ·  reply (0) · 
  Kuttan · Kuttan · Sorb · விக்னேஷ்  Up Voted
  Subramanyam · Anbu  Down Voted
 • tree  
  Out of sight, out ஒப் mind," என்கிறது பழமொழி. எனவே, பொது இடங்களில் எல்லோரும் எதற்காக வருகிறோமோ அந்த குறிகோளை பெண்ணின் ஆடை சிதறடிக்குமேயானால் அது தவிர்க்கப்பட வேண்டும்.
  Points
  5530
  about 20 hours ago ·   (22) ·   (4) ·  reply (0) · 
  gan · gan · gan · Kuttan  Up Voted
  Subramanyam · Pratip  Down Voted
 • khaleel  
  அருமையான கருத்து பாராட்டுக்கள்
  Points
  1350
  about 20 hours ago ·   (21) ·   (7) ·  reply (0) · 
  gan · Kuttan · Kuttan · Sorb · விக்னேஷ் · khaleel  Up Voted
  Subramanyam · Pratip  Down Voted
 • humanbeing  
  உலகம் முழுவதும் இன்று ஒரு இந்திய பெண்மணியை உருவகிக்க வேண்டுமென்றால் புடவையில்தான் காட்டுகிறார்கள். அத்ல்தான் இந்திய கலாசாரம் அடங்கி இருக்கிறது. இன்று சுசமா சுவராஜ் கூட அமெரிக்க வரை புடவையில்தான் செல்கிறார். ஜீன்ஸ் ஆல் எந்த தரங்கெட்ட ஆடையும் பெண்கள் மட்ட்ரவர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் அணிவதை தவிர்க்க வேண்டும். மூடி வைத்த பண்டதைதான் எல்லோரும் சாப்பிடுவார்கள் , திறந்து கிடந்து ஈ மொய்த்ததை அல்ல. உடனே பெண் உரிமை என்று கூப்பாடு. கேவலமாக உடுத்துவேன் என்பது பெண்களின் உரிமை என்ற மாயை உறவாகியது மேற்கத்திய கலாசாரம். அது நமதல்ல. நாம் உலகுக்கு எடுத்துகாட்டு. பெண்களை சரியாக நடத்துவோம் , திறந்து போட்டல்ல.
  Points
  7125
  about 20 hours ago ·   (24) ·   (7) ·  reply (0) · 
  Subramanyam · Anbu  Down Voted
 • இசைத்தேனி  
  //பெண்களுக்கு எதிரான அவரது பாலின கருத்தை திரும்பப்பெறுவாரா?// இது செய்திக் கட்டுரைக்குத் தேவையில்லாத கூற்று. அவர் பெண்களுக்கு எதிராகவும் ஒன்றும் கூறவில்லை, பாலின கருத்தும் கூறவில்லை. ஜீன்ஸ் இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்று தான் சொல்லியிருக்கிறார். யேசுதாஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இதனை சட்டமாக்கினால் பெண்கள் கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் அவர் ஒரு பெரியவர், நாடறிந்த பாடகர். நல்ல கருத்துள்ள எத்தனையோ பாடல்களைப் பாடியிருக்கிறார். அவரது அநுபவத்தில் தான் புரிந்துகொண்ட சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பேசாமல் விட்டு விட வேண்டியதுதானே. எனக்கு வயது 70. பிந்து கிருஷ்ணன் என்ற பெயரை இன்று தான் கேள்விப்படுகிறேன். ஒருவேளை இதற்காகத் தான் ஆர்ப்பாட்டமோ!
  Points
  980
  about 20 hours ago ·   (21) ·   (5) ·  reply (0) · 
  Kuttan · Sorb  Up Voted
 • Shan Shan  
  பெண்களின் ஆடைகள் பற்றி பேசுவதே சிலருக்கு கவர்ச்சி கரமான விசயமாகிவிட்டது
  Points
  34240
  about 21 hours ago ·   (6) ·   (20) ·  reply (1) · 
  Subramanyam · Subramanyam  Up Voted
  SRIPATHI · Sorb · விக்னேஷ்  Down Voted
 • vetriveeran  
  தனது தனிப்பாட்ட கருத்தை சொல்கிறார் . அவருக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். பெண்மைக்கான சிறப்பு அந்தஸ்தை தக்கவைக்க ஒரு தகப்பனாக சகோதரனாக சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டும் மாற்றுக் கருத்தை கோபபடாமல் அழகியமுறையில் சொல்லலாம். சகோதரிகள் கோபப்படுவது நியாயமற்றது. பெண்ணியம் பேசுபவர்கள் குடும்ப அமைப்பிலிருந்து விலகி பரிதாபமாக பாதுகாப்பின்றி அழுவதை நான் பல சந்தர்பங்களில் பார்த்துள்ளேன். சகோதரிகள் நிதானமாக அறிவுத்திறன் கொண்டு இந்த அறிவுரையை சிந்திக்கவேண்டுகிறேன்.
  Points
  3165
  about 21 hours ago ·   (30) ·   (6) ·  reply (0) · 
  bala-G · Kuttan · Sorb · விக்னேஷ்  Up Voted
  Subramanyam  Down Voted
 • Sorb  
  பெண்கள் ஜீன்ஸ் அணிய கூடாது
  Points
  1085
  about 21 hours ago ·   (14) ·   (8) ·  reply (0) · 
  bala-G · bala-G · Sorb · விக்னேஷ்  Up Voted
 • SRIPATHI  
  ஒரு மூத்த பாடகர் ,சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் உள்ளவர் ,அவர் ஒரு கருத்து கூற உரிமை இல்லையா ?இப்படி ஒரு சட்டம் இயற்றி ஜீன்சே போடா கூடாது என்றா சொன்னார் ???கருத்து கூறுவது அவர் அவர் உரிமை ,நடந்து கொள்வது அவர் அவர் உரிமை .இதில் கண்டனம் எங்கே வந்தது ?ஆனால் அவர் சொல்வதில் உண்மை எள்ளளவும் இல்லை என்பதை போராட்டகாரர்களால்{{ஜீன்ஸ் போட்ட பெண்கள் }} நிரூபிக்க முடியுமா ?
  Points
  8110
  about 21 hours ago ·   (28) ·   (3) ·  reply (0) · 
  bala-G · Sorb · விக்னேஷ்  Up Voted
 • sutha  
  Avar pesiathil thavaru ontrum இல்லை
  about 21 hours ago ·   (14) ·   (5) ·  reply (0) · 
  bala-G · Sorb · Sorb · Sorb · விக்னேஷ் · khaleel  Up Voted
  Subramanyam · Subramanyam · Subramanyam  Down Voted
 • Sadha Sadhanandavel  
  கண்களை உறுத்தாத உடை அணிய வேண்டும் என்பதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான கடமை உண்டு. மேலும் கீழும் உள்ளாடைகள் தெரியுமாறு மெலிதான உடையை ஒரு ஆண் அணிந்து வந்தால், பெண்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஆனால் ஜீன்ஸ் என்பதாலேயே அது தவறு என்பதை ஏற்க முடியாது. நம் கலாசார உடையான புடைவையை கூட சரியாக கட்டாவிட்டால், கவர்ச்சியாகவோ அல்லது அசிங்கமாகவோதான் இருக்கும். ஆளை பொறுத்ததே உடை. அசின் ஜீன்ஸ் போட்டால் அசிங்கமாக இருக்காது. அதே, நமீதா போட்டால் எப்படி இருக்கும்?
  Points
  425
  about 22 hours ago ·   (17) ·   (4) ·  reply (0) · 
  PAnand · Pratip · Pratip · Karthik · Karthik · விக்னேஷ்  Up Voted
 • tree  
  இதை பொதுவாக "கலாசார சீரழிவு" என்று சொல்வதுதான் சரி. இது மேற்க்கத்திய கலாசாரம். ஆனால், மேற்க்கத்திய பெண்களும் முன்பு பேன்ட், அதற்க்கு முன் அரைப் பாவாடை, அதற்க்கும் முன் முழுப் பாவாடை அணிந்திருந்தார்கள்.
  Points
  5530
  about 22 hours ago ·   (9) ·   (3) ·  reply (0) · 
  Karthik · Karthik · Sorb · விக்னேஷ்  Up Voted
 • Rajan  
  சார் ஜீன்ஸ் போடுற நாலா என்ன கலாசார seer அழிவை கண்டீர்கள் ?? ப்ளீஸ் கொஞ்சம் விருவாக சொல்லுங்கள். நீங்கள் பாவாடை தாவணி போட்டு அதை உன்னிப்பாக பாருங்கள் , அது எந்த அளவுக்கு காமத்தை குடுக்கும் என்று. ஜீன்ஸ் போடுவதால் ஒன்றும் இல்லை சார் , உங்கள் பார்வை இல் தான் தவறு இருக்கிறது. நீங்கள் எப்படி கூறலாம் '' நீங்கள் கண்ணியமாக'' உடை அணியுங்கள் என்று.
  Points
  160
  about 22 hours ago ·   (14) ·   (19) ·  reply (0) · 
  Subramanyam · Subramanyam · Pratip · Pratip · Rajan  Up Voted
  Sorb · விக்னேஷ்  Down Voted
 • விக்னேஷ்  
  பிரச்சனை பெண்களின் உடைகளில் இல்லை ஆண்களின் கண்களே என்பவர்களுக்கு,,, உங்கள் கண்ணில் மிளகாய்த்தூள்'ஐ துவிட்டு பிரச்சனை உங்கள் கண்களில் தான் மிளகாயில் இல்லை என்றல் எற்பிர்களா,,,???
  Points
  195
  about 22 hours ago ·   (14) ·   (9) ·  reply (1) · 
  Sorb  Down Voted
  • gan  
   நல்லா உதாரணம் ....
   about 18 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
 • selvam  
  Dont retreat dossji
  about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • uday  
  அதானே நல்லது சொன்னாலும் எதிர்பா? என்ன உலகம் டா சாமி ....

0 comments: