Tuesday, October 07, 2014

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ - பாப்பியா பாப்பியா இனிமே விஜய் டிவி பாப்பியா..?

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே என்று நடிகர் ப்ருத்விராஜ் (பப்லு) தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருந்தார் சிம்பு. அப்போட்டியில் பப்லுவின் நடனம் சரியில்லை என்று கூறவே, நான் நன்றாகதான் ஆடினேன் என்று பப்லு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில் சிம்பு பேசும்போது "எனக்கு நடிக்கத் தெரியாது" என்று அழுதுவிட்டார்.
அந்தச் சமயத்தில் சிம்பு - பப்லு இருவருமே பெரும் சர்ச்சையில் சிக்கினார்கள். ஆனால், அது குறித்து தொடர்ச்சியாக பேச இருவருமே மறுத்து விட்டார்கள்.
இந்நிலையில், அப்போது கேமராவுக்கு பின்னால் நடந்த சம்பவம் குறித்து முதன்முறையாக பேசியிருக்கிறார் பப்லு. இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில், "என்னால் தூக்கி வளர்க்கப்பட்டவர் சிம்பு. ஒரு மாசம் அவர் வீட்டுக்கு எல்லாம் சென்று ப்ரேக் டான்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கேன். டி.வி, சினிமா பொறுத்தவரையில் எதுவுமே உண்மையில்லை.
மக்களிடையே ஏதாவது பண்ணி, நம்மள பத்தி பேச வைக்கணும். டி.ஆர்.பி.யை ஏற்றணும் என்ற ஒரே நோக்கத்தில்தான் செய்யப்பட்டது. ரியாலிட்டி என்பது டி.வி.யில் கிடையவே கிடையாது. 13 கேமரா சுற்றி இருக்கும்போது எப்படி ரியாலிட்டினு சொல்ல முடியும். ஏம்ப்பா.. நீ இப்படி கேளு. நான் இப்படி பேசுறேன் என்று பேசி வைத்து சண்டை போட்டதுதான் அது" என்று கூறியுள்ளார் 


 • navis  
  பாப்பியா பாப்பியா இனிமே விஜய் டிவி பாப்பியா...
  Points
  1125
  about 3 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • விகடகவி  
  சிறந்த ரியாலிட்டி ஷோ காண அவார்ட் விஜய் டிவி கே..
  about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • Parasakthi  
  இது எல்லாம் ஒரு பிழைப்பு
  about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • Harish Krishna  
  விஜய் டிவி'ல எல்லாமே இப்டித்தான் frds ....நம்பாதிங்க விஜய் அவார்ட்ஸ்'உம் அப்டித்தான்....
  about 11 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • Lgp Palani Ex. Officer at canbank 
  விஜய் டிவி மட்டுமல்ல. எல்லா டிவியுமே அப்படித்தான். இல்லத்தரசிகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் சீரியலை பார்க்காமல் இருக்க மாட்டார்கள். டைரக்டர்களுக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. பேய் படம் நல்லா ஓடினால் உடனே அதே மாதிரி சீனை தங்களது மெகா சீரியலில் புகுத்திவிடுவார்கள். சரி ரியாலிடி ஷோவை பார்க்கலாம்னா அதிலேயும் இந்தமாதிரி தில்லுமுல்லு.
  Points
  2370
  about 11 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  navis · RBALAKRISHNAN · CLUTCH  Up Voted
 • Vinoth Kumar Proprietor at SVK Computers 
  அடமானங்கெட்டவங்களே........
  about 11 hours ago ·   (10) ·   (0) ·  reply (0) · 
  navis  Up Voted
 • suresh  
  அடமானங்கெட்டவங்களே!
  about 12 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
  Vinoth-Kumar  Down Voted
 • Saravanan madras  
  இதை நீங்களே அப்பொழுதே சொல்லியிருக்கலாமே ? குறைந்தபட்சம் உங்கள் மேலாவது ஒரு மரியாதை இருந்திருக்குமே , இப்பொழுது தானும் கெட்டு வானத்தையும் கேடுதா கதையாகி விட்டதே ?
  Points
  145
  about 12 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
 • Vaduvooraan  
  எப்போதுமே இந்த சிம்பு பண்றது பெரிய வம்பு. ரசிகர்கள் அவரை அடிக்க தூக்கிட்டு வரபோறது ஒரு கம்பு! இந்த சினிமாகாரங்க எல்லோருக்குமே நினைக்கிறது அவிங்க பெரிய கொம்பு!
  Points
  2865
  about 13 hours ago ·   (9) ·   (1) ·  reply (0) · 
  navis · RBALAKRISHNAN · Lgp-Palani  Up Voted
 • anbumani  
  இது தெரிந்த நாடகம் தான்...
  about 14 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • rajesh  
  இப்பியாவுது உண்மையா சொன்னிங்களே
  about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • Ubaya grizzle  
  Unmaiku nanri
  about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • SRINIVASAN.P  
  இது எல்லாம் ஒரு பிழைப்பு
  Points
  120
  about 15 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • SRINIVASAN.P  
  விஜய் டிவி க்கு மிக பெரிய அளவில் அவமானம்
  Points
  120
  about 15 hours ago ·   (11) ·   (0) ·  reply (0) · 
  navis  Up Voted
 • kandan  
  உங்க டி.ஆர்.பி.யை ஏத்திகிறதுக்கு நாங்கதான் கெடைச்சோமா ??
  about 15 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  CLUTCH  Up Voted
 • selvaraj  
  எதுக்கு இந்த மாதிரி எல்லாம் சீன போடுறிங்க......
  about 15 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
 • veeru  
  cinemakaranum arasiyalvaathiyum naattaivittu poyiranum, ille mathavainga ellam naattaivittu kilambidanum.
  about 16 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
 • jaga  
  ஒழிக
  about 16 hours ago ·   (8) ·   (0) ·  reply (0) · 
  SRINIVASANP · SRINIVASANP · CLUTCH  Up Voted
 • T. siva  
  'சிம்பு' விடம் எதற்கு 'வம்பு ' என பப்லு முடிவு செய்துவிட்டாரா ?!
  Points
  18055
  about 16 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
 • லட்சியம் நிச்சயம்  
  சினிமாவில் நடிப்பு போதாதா? நிஜத்திலுமா நடிக்கவேண்டும் ? அய்யோ கடவுளே !!!
  about 16 hours ago ·   (8) ·   (5) ·  reply (0) · 
 • bali  
  விஜய் t v மேல iruntha நல்ல எண்ணம் எல்லாத்தையும் விஜய் t v டீமே கேடுதுக்றாங்க. இதுக்கு நீங்க வேற வேலை பாக்கலாம் விஜய் t v டீம்ஸ்.......
  about 17 hours ago ·   (42) ·   (0) ·  reply (0) · 
  navis · SRINIVASANP · SRINIVASANP  Up Voted
 • bali  
  எதுக்கு இந்த கேவலமா பொலப்பு உங்களுக்கு? திறமை காட்ட வேண்டிய இடத்துல இப்டி நடிக்ரிங்க்லே இத உண்மைன்னு நம்பி பாக்ர எல்லாரையும் கோமாளி ஆக்ரதுல உங்களுக்கு என்ன லாபம்.
  about 17 hours ago ·   (17) ·   (0) ·  reply (0) · 
  CLUTCH  Up Voted
 • vettupuliveeran  
  இது தெரிந்த நாடகம் தான்.இப்பொழுது ஒப்புக்கொண்டது கூட பேசி வைத்துக்கொண்டு நடத்திய நாடகமா அல்லது பேசிய பணம் கிடைக்காததால் நடத்தும் நாடகமா?
  Points
  3655
  about 17 hours ago ·   (25) ·   (4) ·  reply (0) · 
 • RAJA Mani  
  Vijay TV is showing to much of reality shows and cheating the people. common people should aware of it.
  Points
  835
  about 17 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
  navis · CLUTCH  Up Voted
 • saravanan  
  தகவலுக்கு நன்றி. இதை படித்த பின் சிலராவது உண்மை அறிவார்கள் என நம்புகிறேன். பெரும்பாலானபேர் எப்போதும் போல காண்பிக்கப்படும் அனைத்தும் உண்மை என நம்பும்.
  Points
  2625
  about 18 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
 • தினேஷ்  
  சிம்பு பேசும்போது "எனக்கு நடிக்கத் தெரியாது" என்று அழுதுவிட்டார். உங்களுக்கு நடிக்க தெரியாதுன்னு தான் ஊருக்கே தெரியுமே... உங்கள் நடிப்பை பார்த்து நாங்கள் தான் அழுகின்றோம் 'ஜி'ம்பு...
  Points
  135
  about 18 hours ago ·   (49) ·   (0) ·  reply (0) · 
  Karthi  Up Voted
 • suseelkumar  
  neengalum unga nadakamum. trying to fool others
  about 18 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) · 
  CLUTCH  Up Voted
 • murugesan.mp  
  Yempa,neenga kooda arasiyal panna aarampichacha?
  about 18 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
  CLUTCH  Up Voted
 • alagar  
  அப்ப நேயகர்ல்தான் முட்டாள்
  about 18 hours ago ·   (15) ·   (1) ·  reply (1) · 
 • CLUTCH  
  அய்யா , சரவணன் மீனாட்சி கல்யாணமாவது உண்மையா ? பொய்யா ?

0 comments: