Showing posts with label TASMAC. Show all posts
Showing posts with label TASMAC. Show all posts

Thursday, August 02, 2012

மதுபானக்கடை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv9OUgDYnhJAT9mlfZ9F8XV2CSmK41mmQnL8yqzmrUftZldYIfKdmZ-7X1mmqyoaqDgxtuJsGfS6NsXHeh5G5rnZu0SJcgXW0itZDadclxGdeJwjuY6XWoZvocI3G11z1fOCsgfDjo-JjF/s1600/Madhubaanakadai.jpgஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள  பெத்தாம்பாளையம் தான் கதைக்களன்.. ஈரோடு கமலக்கண்ணன் தான் இயக்குநர்.. முழு படமும் ஒரே ஒரு டாஸ்மாக்கில் நடக்கும் சம்பவக்கோர்வைகள் தான் .. வித்தியாசமான முயற்சிதான்.. ஆனாலும் இன்னும் மெனெக்கெட்டிருக்கலாம்.. பெண்கள் பார்க்கவே முடியாது என்பது பெரும் குறை. அதை இயக்குநரும் உணர்ந்தே இருக்கிறார்.. 

 படத்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னே  தமிழ் இலக்கியத்துல கேரக்டர்ஸ்  புத்தகம் பற்றி பார்ப்போம்.. ஆரம்பத்துல நாவல் தான் தமிழனை இலக்கிய உலகில்  புக வெச்சுது.. ( பிரதாப முதலியார் சரித்திரம்) அப்புறம் சிறுகதை.. பயணக்கட்டுரை.. கவிதை என அதன் எல்லைகள் விரிஞ்சுக்கிட்டே போனாலும் கேரக்டரஸ்க்கு மக்கள் ஆதரவு கம்மிதான்.. அமரர் சாவி எழுதுன கேரக்டர்ஸ் தொடர்  சுவராஸ்யமா இருந்தாலும் அது புத்தகமா வந்தும் கூட பெரிய வரவேற்பு பெறலை.. http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/05_2012/2805-mbk-p-l.jpg1. டாஸ்மாக் பார் ஓனர் - கள்ளச்சாராயம், போலி மது இவற்றை அப்பப்ப கலந்து கட்டி சேல்ஸ் பண்றவர்.. எந்த பிரச்சனையும் வராம பாரை நடத்தனுமேன்னு எச்சரிக்கை உணர்வோட எல்லார் கிட்டேயும் கண்டிஷனா நடப்பவர்


2. பார்ல வேலை செய்யும் சப்ளையர் நெம்பர் 1... இவன் எப்போ பாரு செல்ஃபோனும் கையுமா பேசிட்டே இருப்பான்.. யார் கிட்டே?டாஸ்மாக் பார் ஓனர் பொண்ணு கிட்டே.. செம கடலை... பாலைவனத்துல இளநீர் குடிச்ச மாதிரி ஒரே  சரக்கும் சலம்பலுமா போகும் திரைக்கதையில் இவர் போர்ஷன் தான் கொஞ்சம் ஆறுதல்.. 

3. பார்ல வேலை செய்யும் சப்ளையர் நெம்பர் 2.. ஓனர் பொண்ணு கிட்டே காதல் வெச்சுக்கிட்டா அபாயம்னு எச்சரிப்பவன். அதுக்காக கைகலப்பு வரை போனாலும் சக பணியாளருக்கு ஓனரால் ஆபத்து எனும்போது கை கொடுத்து கை தட்டலை அள்ளிக்கொள்ளூபவர்


4.ஓனர் பொண்ணு.. மாநிறத்து மல்கோவா மா.. ஊர்ல எத்தனையோ பசங்க இருந்தும் போயும் போயும் தாடியும் , அழுக்கும் உள்ள ஆ:ளை லவ் பண்ணுவது முரண்பாடு என்றாலும் காதலே  முரண் உள்ள இரு துருவங்களிடையே தோன்றவும் வாய்ப்பு உள்ளதுதானே.. இவர் ஹீரோவுடன் நெருக்கமாக உரசும் கட்டங்கள் , லிப் கிஸ் என செம கிளு கிளு.. வரம்பு மீறாமல்.. 


5. எங்க ஊரு பாட்டுக்காரன் மாதிரி.. ஓ சி சரக்கு வாங்க பாட்டு பாடி கஸ்டமர்ஸை கரெக்ட் பண்ணி கவர் பண்றவர்,, இவர் மாதிரி கேரக்டர் ஊருக்கு 2 பேராவது இருப்பாங்க.. 


6. போலீஸ், பார் ஓனர் உட்பட அனைவரும் பார்த்து மிரளும்  பெட்டிஷன் மணி.. குடிச்சே சலமபல் பண்ணும் ஆள்.. ஆன்னா ஊன்னா எல்லார் கால்லயும் விழும் ஆள்.. தன் அப்பாவிடம் இவர் சரக்கடித்து புலம்பும் காட்சிகள் இன்னும் கண்ணுக்குள் நிக்குது


7. காதல் தோல்வியால் முதன் முதலாக சரக்கு அடிக்க வரும் இளைஞன் பெண்களை பற்றி கோபமாக பேசும் காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்கிறது.. எல்லாரும் பயந்து நடுங்கும் அறுவை பெட்டிஷன் மணியே இவனை பார்த்து பயந்து போவது காமெடி. 


8. இங்கிலீஷ்ல “ சார்.. பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன் 35 ரூபா வேணும் என கவுரவ பிச்சை எடுத்து அதில் சரக்கு அடிக்கும் கேரக்டர்.. 


9. ராமன் - அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுக்கும் நபர்கள் அங்கே வந்து சரக்கு அடிப்பதும் பேசும்  வாழ்க்கைத்தத்துவங்கள்.. 


10. மகிழ்ச்சியைக்கொண்டாட அல்லது சோகத்தை மறைக்க குடிப்பவர் மத்தியில் செய்யும் வேலையில் வரும் நாற்றத்தை மறைக்க, மறக்க குடிக்கும் சாக்கடைத்தொழிலாளர்கள்.. அவர்கள் பேசும் வசனத்தில் பொறி பறக்கிறது.. அபாரம்.,. 

11. திருநங்கைகள்


12. பார் வாசலில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்


13. இந்த கேவலமான பிழைப்பான டாஸ்மாக் பாரில் கூட வந்து கேவலமாக பிச்சை எடுக்கும் ஐ மீன் லஞ்சம் வாங்கும் போலீஸ் கான்ஸ்டபிள்.. http://tamil.cinesnacks.net/photos/movies/Madhubaanakadai/madhubaanakadai-movie-stills-002.jpg


மேலே சொன்ன கேரக்டர்கள் போக சின்ன சின்ன கேரக்டர்களும் உண்டு.. எல்லாரும் வாழ்க்கையில் நாம் தினம் சந்திக்கும் நபர்களே.. 


நடிப்புல முதல் இடம் பார்  ஓனர்க்கு.. அடுத்து அந்த ஹீரோயினுக்கு.. செம அழகு.,. கிராமத்துக்குயில்.. மேக்கப்பே இல்லாத அழகு முகம்,.,. அல்லது மேக்கப் போட்டிருப்பதே தெரியாத இயற்கை முகம்.. 


பெட்டிஷன் மணிக்கு க்ளோசப் காட்சிகள் அதிகம்.. தவிர்த்திருக்கலாம்.. குமட்டுது.. பாட்டுப்பாடும் கேரக்டர் கலக்கி விட்டார் மனிதர்

 4 பாடல்களில் 2 பாடல்கள் சூப்பர் ஹிட்..

1. மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே என்னுடைய தேவதை செம கலக்கு கலக்குது.. 

2. கள்ளம் இல்லாத 

3. சமரசம் உலாவும் இடம்


பாடல்களில் டச்சிங்க் வரிகள்-


குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
சாவுக்கு பயமில்லை, சாத்திரங்கள் ஏதுமில்லை
இன்றிருப்போர் நாளையில்லை என்றே குடிக்கிறோம்


“கள்ளுக் குளம் வெட்டி ராமன் குளிச்சதும்
ஆதிக் குடியில தான்.
அப்பனும் மவனும் கோயிலில் சாமியும் சேர்ந்து குடிச்சோமடா
ஒழுக்கங்கெட்டவன்னு நம்மாளச் சொன்னது மேட்டுக் குடிகளடா
 http://moviegalleri.net/wp-content/gallery/madhubaanakadai-shooting-spot-stills/madhubaanakadai_movie_shooting_spot_stills_2234.jpg மனம் கவர்ந்த வசனங்கள்

1.  போய்யா..  தகராறு பண்ணாம கிளம்பு.. உள்ளிருப்புப்போராட்டம் நடத்தப்படும்


2. டைம் ஆச்சு.. கடை சாத்தனும், கிள்மபலை?

ஏன்? அவன் மட்டும் இருக்கான்?

 அவன் ஒரு லூசுப்பையன்.. நீயுமா? கிளம்புடா.


3. டெயிலி இப்டி கழநீர்த்தண்ணி டீ வாங்கிட்டு வற்றியே, ஒரு நாளாவது ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வந்தா என்ன? 


நாளைக்கு சாகப்போற. உனக்கு  ஹார்லிக்ஸ் கேட்குதா?4. ஹீரோயின் - யார் நீ?

 உன்னை வெச்சு குடும்பம் நடத்தப்போறவன்


 அதை நீ முடிவு பண்ண வேணாம். பண்னவும் கூடாது, எங்கப்பா....


5. இன்னுமா கடை திறக்கலை?


ஆறு மணி ஆக வேணாமா? 


 ஈசியா சொல்லிட்டே. நாங்க எல்லாம் குடிச்சு பழக்கப்பட்ட ஆள்ங்க, டைம்க்கு குடிச்சே ஆகனும்..6. குடிகாரன்னா உனக்கு எளக்காரமா? 5 ஆந்தேதி வர வேண்டிய சம்பளம்  7 தேதி ஆகியும் வர்லைன்னா விதிர் விதிர்த்துப்போகமாட்டே?10 மணிக்கு ஏன் சரியா டாஸ்மாக் திறக்கலைன்னு கேட்க எங்களுக்கும் உரிமை உண்டு.. 7. ஸ்கூல் வாத்தியார் - ஏண்டா.. குடிக்கறதே  தப்பு... அதிலும் நான் குடிக்கற அதே டாஸ்மாக்ல தான் நீங்களும் குடிக்க வரனுமா?8. சார், நான் தெரியாமத்தான் கேட்கறேன்.. பாடம் நடத்தற நீங்க சரக்கு அடிச்சுட்டு போய் பாடம் நடத்தும்போது பாடம் படிக்கும் அவங்க சரக்கு அடிச்சுட்டு க்ளாஸ் போனா என்ன தப்பு?


9. நீ வேணா பாரு  மண்ணோட மண் ஆகப்போறே.. 

 நீ மட்டும் என்ன இளையராஜாவா ஆகப்போறே?10. அக்டோபர் 1 - நல்ல வேளை நீ இன்னைக்கு பொறந்தே.. நாளை பிறந்திருந்தா கடை லீவ்.. http://mimg.sulekha.com/tamil/madhubaanakadai/stills/madhubaanakadai-tamil-movie-pictures-015.jpg


11 ஹாய்.. நான் எம் ஏ  டிபார்ட்மெண்ட்.. நீங்க?

 நான் கெமிக்கல் டிபார்ட்மெண்ட்.. 


 எல்லாரும் குடிகார டிபார்ட்மெண்ட்.. தானே.. 


12. சார்.. குடிகாரர்களை பற்றி குறைச்சு எடை போட்டுடாதீங்க.. எது ஒரிஜினல்? எது போலி ( டூப்ளிகெட்)? ன்னு இப்ப இருக்கற குடிகாரங்க எல்லாம் ஈசியா கண்டு பிடிச்சுடறாங்க.. 


13. ஒரு குவாட்டர் பாட்டில் ஒரிஜினல் விலை 10 ரூபா தான்.. ஆனா நீங்க 80 ரூபாவுக்கு விக்கறீங்க.. பிராண்ட் நேம் சொல்லி வாங்குன காலம் எல்லாம் போச்சு.. 80 ரூபா சரக்கு.. 100 ரூபா சரக்குன்னு விக்கறீங்க.. கம்ப்பெனி நேமே சொல்றதில்லை14.  குடிகாரங்க எல்லாரும் குழந்தை மாதிரிடா.. 15. ஹீரோயின் - என்னை வாயாடிப்பொண்ணுன்னு தெரியாம பழகிட்டே.. 

 வாயாடியா ? பார்த்தா அப்டி  தெரியலையே?  ( பார்த்தா எப்டி தம்பி தெரியும்? கொஞ்சம் பேச்சுக்குடுத்து பாரு )16. நீ என்ன வெள்ளைகாரனுக்கா பிறந்தே? தமிழ்ல பேசுடா.. இங்க்லீஷ்ல சைலண்ட்டா கெட்டவார்த்தை பேசுனா  நீ பெரிய ஆளா? 


17.  பொண்ணுங்களையே நம்பக்கூடாது,.,. இளிச்சு இளிச்சு பேசுவாளுங்க, உருகி உருகி காதலிப்பாளுங்க, கடைசில் கழட்டி விட்டுருவாளுங்க


18. இறந்து விடு என்று சொல்.. மீண்டும் பிறந்து வருவேன், ஆனால் மறந்து விடு என்று சொல்லாதே இறந்து விடுவேன்.. 


19. ஆஞ்சநேயா! ஒரே ஒரு வரம் வேணும்

 ஆஞ்சநேயர் வேடம் பூண்டவர் - யா

கண்ட கண்ட கருமாந்திரம்  புடிச்ச நாய்ங்களூக்கு எல்லம் நல்ல ஃபிகர் செட் ஆகுது.. வாழ்க்கைல இப்படி சும்மா கட்டிப்பிடிக்கவாவது ஒரு பொண்ணு வேணும்// 20. கஞ்சிக்கே வழி இல்லாதப்ப குவாட்டர் குடுக்குமாம்.. அதான் கடவுள்http://www.kollytalk.com/wp-content/gallery/madhubaanakadai-movie-stills/madhubaanakadai-movie-stills-15.jpg


21. நயன் தாராவையும், கேத்ரினா கைஃபையும் மிக்சில போட்டு அரைச்ச மாதிரி ஒரு ஷேப் ,கலர்.. அந்த ஃபிகரு22. நாங்க எல்லாம் வேலைக்குப்போனாத்தான் சோறு, இல்லைன்னா குடும்பமே பட்டினிதான்


23. யோவ் ஆஞ்ச நேயா! உன் வாலை சுருட்டிக்கிட்டு உக்காருய்யா 


நாசமா நீ போ!


24. உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா? சந்தேகப்படறதுக்குன்னே பிறந்திருக்கும் ஆள் ஆச்சே நீ ( ராமர் வேஷம் பூண்டவர் )


25. நீங்க எல்லாம் சரக்கு அடிக்கறதை வீடியோ எடுத்து யூ டியூப்ல போட்டு உங்கப்பாவை பார்க்க வைக்கனும்.. அப்போதாண்டா புத்தி வரும்.. 26. குடிப்பது தனி மனித உரிமை அல்ல .. அது  ஒரு சமூகம்.. அசைச்சுக்க முடியாது


27. ஆலயமணி அடிச்சா சத்தம், ஆல்ஹஹால் மணி குடிச்சா யுத்தம்


28. நாம தள்லாடி நிக்கறவரை இந்த கவர்மெண்ட் ஸ்டடியா நிக்கும்.. நாம ஸ்டடியா நிக்க ஆரம்பிச்சுட்டா இந்த கவர்மெண்ட் தள்ளாடிடும்


29. டாஸ்மாக் வருமானம் தான் இந்த அரசுக்கு பெரிய ஆதாயம், அது மட்டும் இல்லைன்னா ஆட்டம் கண்டுடும்.. 


30. போலீஸ் மாமாவை - குடுத்து வெச்ச ஆள் மாதிரி கேட்கறான் பாரு.. கந்து வட்டியா வாங்கறே? எச்ச சோத்துக்கு பிச்சைஎடுக்கும் நாயே.. ( தியேட்டரில் அப்ளாஸ்)


31.  போலீஸ் - எப்படி போகுது வியாபாரம்?

வர்றவனுங்க எல்லாம் புடுங்கறதுலயே இருக்கானுங்க கடன்காரப்பசங்க32. சாராயம்கறது எங்க குல சாமி.. ஆனா அதை விட்டு விலக வெச்சுட்டீங்க.. இந்த சரக்குக்கு எங்களை பழக வெச்சுட்டீங்க.. நீங்க எல்லாம் சந்தோஷத்தை கொண்டாட, துக்கத்தை மறக்க குடிக்கறீங்க.. ஆனா நாங்க வேலைக்காக குடிக்கறோம்.. அந்த நாற்றத்தை சகிச்சுக்க குடிக்கறோம்


http://haihoi.com/Channels/cine_gallery/madhubaanakadai_movie_shooting_spot_stills_0311_S_144.jpg


  இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஒரு சீனில் கூட மது குடிப்பது தவறு குடிக்காதிங்க என்ற பிரச்சார நெடி இல்லை. ஆனா குடிக்காத ஒரு ஆள் இந்தபப்டத்தை பார்த்தா  குடி மேல வெறுப்பு வர்ற மாதிரி எடுத்து இருக்காரு.. இன்னொரு விஷயம் இவரோட நோக்கம் டாஸ்மாக் சம்பவங்களை பதிவு செய்வதே


2.  டிஜிட்டல் படமாக எடுக்கப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை விட இந்தப்படத்தில் மேக்கிங்க், அவுட் புட் நல்லாருக்கு.. கேனான்  செவன் டி யில் எடுக்கபப்ட்ட படமாம்.. சபாஷ்


3. படத்தில் வாய்ப்பு இருந்தும் டூயட்டை சேர்த்தாது, காதல் காட்சிகளை தேவை இன்றி புகுத்தாது.. ஹீரோயின் வருவதே 4 காட்சிகள் தான் 16 நிமிடங்கள் தான்


4. அனைவர் நடிப்பும் கலக்கல்.. இயற்கையாக இருக்கு.. குறிப்பா அந்த பொண்ணு, பாட்டுக்காரர், பெட்டிஷன் மணி


5. இசை.. பாடல்கள் படத்துக்கு பெரிய பிளஸ்.. 


6. டைட்டில் போடும்போதே இப்படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று நக்கல் அடித்தது


7. டாஸ்மாக்கில் வேலை செய்தாலும் ஹீரோவும் , நண்பரும் குடிப்பது போல் காட்சிகள் வைக்காதது ( மேலே உள்ல ஸ்டில்லில் அப்படி ஒரு காட்சி இருந்தாலும் படத்தில் அது இல்லை )


http://123tamilforum.com/imgcache2/2012/01/MadhubaanakadaiTamilMovieStills2300x233-1.jpg இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பார் ஓனருக்கு தன் மகளை  ஒரு சப்ளையர் லவ் பண்றது தெரிஞ்சுடுது..  அவர் சத்தம் இல்லாம அவனை தனியா ஒரு இடத்துக்கு வர வெச்சு அடியாளுங்க மூலமா போட்டுத்தள்ளாம  டாஸ்மாக் பார்லயே அதை செய்ய நினைப்பது எப்படி?அடிக்கடி டாஸ்மாக்ல யாராவது தகறாரு பண்றப்போ “ எந்த பிரச்சனையா இருந்தாலும் வெளீல போய் அடிச்சுக்குங்க. கடையை மூட விட்டுடாதீங்க என எச்சரிக்கையாக இருப்பவர் தன் சொந்தப்பிரச்சனை வரும்போது அதே எச்சரிக்கயை ஏன் ஃபாலோ பண்ணலை?


2. பிளான் பண்ணி கொலை பண்றது வேற கேட்டகிரி.. தன் பொண்ணை வேலைக்காரன் லவ்வறான்னு தெரிஞ்ச உடனே கோபத்துல அப்பவே போடுவாங்களா? ஆற அமர யோசிச்சு அவ்ளவ் டைம் எடுத்துக்குவாங்களா?


3. பொதுவா குடும்பப்பொண்ணுங்க டாஸ்மாக் பக்கமே வர மாட்டாங்க.. ஏதாவது வேணும்னா ஃபோன்ல சொன்னா வேலை முடிஞ்சது..  ஆனா பார் ஓனர் தன் மக பாருக்கு வர்றதை எப்படி அலோ பண்றாரு?


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41


 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


சி.பி, கமெண்ட் - சரக்கு அடிக்கும்சங்கர லிங்கங்கள் பார்க்கலாம்..


ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் படம் பார்த்தேன்


டிஸ்கி - மிரட்டல் - சந்தானம் காமெடிக்காக - விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

 

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 

http://www.cineulagam.com/photos/full/movies/madhupana_kadai_001.jpg

Thursday, March 03, 2011

ஈரோடு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் ஊழல்கள் + வேரோடு களையப்படவேண்டிய மோசடிகள்


http://dilipnaidu.files.wordpress.com/2010/09/tasmac-semester-1-ovbe-1.jpg 
தன்னைப்பற்றியும், தன் குடும்பத்தைப்பற்றியும் எப்போதும் சிந்திக்காமல் இப்பொழுதும், அப்பொழுதும்,எப்பொழுதும்,முப்பொழுதும் தமிழக மக்களின் நலனைப்பற்றியே சிந்திக்கும் முத்தமிழ் வித்தவர் சாரி வித்தகர் டாக்டர் கலைஞர்  மது விலக்கு சாத்தியம் இல்லை என தனது நிரந்தரக்கூட்டாளியும்,பச்சோந்தி போல் மாறும் அரசியல்வாதிகளுக்கு நடுவே மாறாத குணமும்,தனது கட்சியில் தனது குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலோ. வாரிசுகளுக்கு பதவி கொடுக்கபட்டாலோ நடு வீதியில் என்னை செருப்பால் அடியுங்கள் என டயலாக் பேசி வன்னியர்களின் ஓட்டைக்கவர்ந்தவருமாகிய 2011-ன் சிறந்த தியாகி டாக்டர் ராம்தாஸ் அவர்களிடம் கூறியபோது நான் கூட அதை உண்மை என்றும் வேறு வழி இல்லை போல என்றும் நம்பி இருந்தேன்.

ஈரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் எனது நண்பன் டாஸ்மாக் ஊழியனாகப்பணி புரிந்து வருகிறான்.டிகிரி முடித்தவன்.ரொம்ப நாளுக்குப்பிறகு நேற்று அவனை சந்தித்தேன்.

வாப்பா.. எப்படி போயிட்டிருக்கு வேலை.. எல்லாம்?

ம் ,ம் ,நல்லா போயிட்டிருக்கு.

எவ்வளவு சம்பளம்?

பிடித்தம் போக ரூ 3000 வருது..

ரொம்ப கம்மியா இருக்கே.. எப்படி குடும்பத்தை சமாளிக்கறே,...

சம்பளம் கம்மியா இருந்தா என்ன? கிம்பளம் கிடைக்கும் அல்ல?

ஆமா... நீ என்ன ஆ ராசாவா?டெண்ட்டர்ல கையெழுத்தைப்போட உனக்கு தேடி வந்து மொய் வைக்க...?

ஆஃப் குவாட்டர் சிஸ்டம் இருக்க பயம் ஏன்?

புரியலையே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_q4lWGcoI_l8GCrU0aPt0hs1lU68-L1M3HpzjIp99l0lhjoBkV2m04gsagqL1nykCrxcL8RwkrPNL51WswL6AWADrS5Mq8aTkW8sr69jqmTutp5xhCRBo2FSSjkg3BFkJDqSGcgNiE2M/s400/8.jpg
தம்பி...மானிட்டர்,ஷிவா,கோல்கொண்டா,மெக் டவல்,ஓல்டுமங்க் உட்பட கிட்டத்தட்ட 45 வெரைட்டி ஐட்டம் இருக்கு.ஒவ்வொரு ஐட்டம் ஃபுல் பாட்டில்ல சீல் உடைச்சு ஒரு ஆஃப் குவாட்டரை எடுத்து ஒரு குவாட்டர் பாட்டில்ல ஊத்திக்க வேண்டியது.அப்புறம் அந்த ஃபுல் பாட்டில்ல புனல் வெச்சு தண்ணி ஊத்திட வேண்டியது.பழையபடி சீல் ஒட்டிட வேண்டியது.அவ்வளவுதான் ,மேட்டர் ஓவர்.....

அடேங்கப்பா.. குடிக்கற ஆளுங்களுக்கு தண்ணீர் கலந்திருக்கற விஷயம் தெரியாதா?

ரெகுலரா குடிக்கறவங்களுக்கு நாக்கு மரத்துடும். இது எப்படின்னா ஒரு மைசூர்பாக்கை நீ வாரம் ஒரு தடவை சாப்பிட்டா ஸ்வீட்டா இருக்கும்.தொடர்ந்து கேப் விடாம சாப்பிட்டு பாரு,நாக்கு மரத்துடும், நாக்கின் சுவை அரும்பு மொட்டூக்கள் உணர்வு சக்தியை இழந்திடும்.

சரி.. அதையும் மீறி நம்ம ராம்சாமி அண்ணன் மாதிரி மதி நுட்பமும், துல்லியமான டேஸ்ட் கண்டு பிடிப்புத்திறனும் உள்ளவங்க வந்து கண்டு பிடிச்சுட்டா என்ன பண்ணுவே..?

அந்த மாதிரி ஆளுங்களுக்கு நல்ல சரக்கா(!!!) குடுப்பேன்.

சரி.. இதுல உனக்கு என்ன வந்துடப்போவுது..?ஒரு 500 ரூபா..?

தம்பி.. நீ இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..கிட்டத்தட்ட ரூ 3000 டூ ரூ 3500 தேறும்.

http://photo.outlookindia.com/images/gallery/20100804/wine_shop_chennai_20100816.jpg
கலைஞர் நல்லாட்சி நடத்தறார்னு சொல்லி இருந்தாக்கூட அப்படி அதிர்ச்சி அடைஞ்சிருக்கமாட்டேன்..எனக்கு தலை சுத்துச்சு...அப்போ இவனோட மாத வருமானம் மாவட்டக்கலெக்ட்டர் வாங்கற சம்பளத்தை விட டபுள் மடங்கு ஆச்சே...

சரி.. நீ எப்படி கால்குலேட் பண்ணி பணம் எடுப்பே..?குழப்பம் வராது.?

ஹா ஹா .. அப்பப்ப எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்.. உதாரணமா ஒரு ஆஃப் குவாட்டர் தண்ணி கலந்தது விற்கறேன்னா அதுக்குண்டான அமவுண்ட் ரூ 30 அல்லது ரூ 25  எடுத்து பாக்கெட்;ல போட்டுக்குவேன்.டியூட்டி முடிஞ்சு போறப்ப அந்த சில்லரைகளை(!!) எல்லாம் கல்லாவுல போட்டுட்டு 500 ரூபா நோட்டா எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்..

சரி.. உனக்கு வருத்தம்னு ஒண்ணு ஏற்படவே ஏற்படாதா?

ம்.. 31 நாளும் நாமளே டியூட்டி பார்க்கனும்னு நினைப்பேன். ஆனா ஆள் மாத்தி விட்டுடுவாங்க.. 15 நாள் தான்.

அட.. பாவி.. அதை நான் கேட்கலை.. இப்படி எல்லாம் அடிக்கறமே... மனசாட்சி உன்னைக்கேள்வி கேட்காதா?


அடப்போடா.. இவனே.. நாட்ல எவன் யோக்கியனா இருக்கான்?ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள்  அப்பாவி டி வி எஸ் 50 காரன் சிக்குனா ரூ 300 தேத்திடறாரு.கவர்மெண்ட் ஊழியர்கள் எல்லாரும் அவங்கவங்கவேலைல எந்த அளவு சுருட்ட முடியுமோ அதை சுருட்டீட்டுதான் இருக்காங்க.. நான் மட்டும் யோக்கியமா நடக்க நான் என்ன இளிச்சவயனா?
http://m3chennai.com/wp-content/uploads/2010/11/Lekha-Washington-hot-2.jpg
அவனை விட்டு நான் ஆஃபீஸ் போனேன்.. மேலும் சில டாஸ்மாக் கடைகளுக்கு ஃபோன் போட்டு விசாரித்தேன்.சிலர் ஒத்துக்கொள்ளவில்லை.. சிலர் யாருங்க நீங்க என கேட்டார்கள்.

நான் அனைவரிடமும் எனது நண்பனின் தங்கைக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. மாப்பிள்ளை டாஸ்மாக் ஊழியன். சம்பளம் கம்மியா இருக்கேன்னு நாங்க யோசிச்சப்ப மாப்பிள்ளை சம்பளம் கம்மியா இருந்தா என்ன? சைடு வருமானம் வருதுன்னு ஒரு பெரிய தொகையை சொல்றாரு.. இது உண்மையா? என கேட்டபோது சிலர் மென்று முழுங்குனாங்க.சிலர் என்னை வம்புல மாட்டி விடாதீங்க என்றார்கள். சிலர் ஆமாங்க ஓரளவு வருமானம் இதுல இருக்கு என ஒத்துக்கொண்டார்கள்.

ஒரு கடை நிலை ஊழியனுக்கே டாஸ்மாக் கடையில் வேலை கிடைச்சா இவ்வளவு சம்பாதிக்க முடியும்னா அந்த கடையை நடத்தற கவர்மெண்ட்டுக்கு லீகலா. இல்லீகலா எவ்வளவு வருமானம் கிடைக்கும்.?

பொதுவா ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க ஏதாவது சாக்கு சொல்லி லீவ் கேட்பாங்க.. ஆனா இந்த டாஸ்மாக் வேலைல இருக்கறவங்க மட்டும் லீவே எடுக்கமாட்டாங்களாம்.எடுத்தா ரூ 3000 அல்லது ரூ 4000 வருமானம் போச்ச
Delete
டிஸ்கி 1 - எனவே குடி மக்கள் பீர், ஒயின் மட்டும் குடித்து உங்கள் உடம்பை மட்டும் கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.அல்லது அடிச்சா ஒரு ஃபுல் குவாட்டர் இல்லைன்னா இன்னைக்கு நோ மேட்டர் என கொள்கை ரீதியான முடிவுக்கு வரவும்.

டிஸ்கி 2 - சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத உனக்கு எதுக்கு இந்த சரக்கு பற்றிய ஆராய்ச்சி என கேட்பவர்களுக்கு ... நமக்கு ஊழல் பண்ணிக்கூடத்தான் பழக்கம் இல்ல ,ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஆராய்ச்சி பண்றதில்லையா? அதைப்பற்றி பேசறது இல்லையா?

டிஸ்கி 3 - கட்சிகள் தங்கள் கொள்கைல இருந்து மாறி கூட்டணி அமைத்துக்கொண்டாலும் அட்ரா சக்க இணைய தளம் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து சமூக விழிப்புணர்வுப்பதிவில் கூட வ குவாட்டர் கட்டிங்க் பட நடிகை ஸ்டில் போட்டு ஆற்றிய மக்கள் தொண்டை மெச்சிக்கொள்கிறது # கலைஞர் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கறமாதிரி.. ஹி ஹி

டிஸ்கி 4 -Blogger Thirumalai Kandasami said...குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி. http://tasmac.tn.gov.in ,,இங்கு விலை பட்டியல்(புட்டியல்) ,சரக்கு நிலவரம் அனைத்தும் கிடைக்கும். TASAMC அரசு வருமானம் Just a simple calculation of Tamilnadu Government - TASMAC sale per day,based on following URL. http://new.vikatan.com/news.php?nid=467 Daily Beer usage - 73,800 case So total Beer Bottles - 73800 * 12 - 885600 Approx cost ,70 Rs per bottle - 885600 * 70 - 6,19,92,000 Beer sales (per day)- 6 Crore and 19 Lakhs and 92 Thousands - 20 % of Whole sale So Approx Total sales(per day) - 30,99,60,000 Approx total - 31 Crores per day !!! Total sales in USD per day - 6866002.2148 $