Saturday, October 22, 2016

பாஸ் மார்க் கண்டேயர் VS பெயில் மார்க் கண்டேயர்

1  ஜப்பானில் குடித்து விட்டு வந்தால் அலாரம் அடிக்கும் மிஷின் கண்டுபிடிப்பு. #,நல்லவேளை.ஜப்பான்ல குடிச்சாதான் கண்டுபிடிக்கும் போல

==================

2  கடந்த, 2007 முதல், 2013 வரை, மத்திய அரசு, காவிரி நீருக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மோடி அரசை குறை கூறுவது வேதனை அளிக்கிறது. -தமிழிசை # அவங்க சரி இல்லைன்னுதானே உங்களை தேர்ந்தெடுத்தோம்?

=====================


3   மேற்கு வங்க மாநிலத்தில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பறிமுதல் .# அப்போ நல்ல பாம்பு காஸ்ட்லியான பாம்பு போல

================

4  தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது: பொன்னையன்  # மத்தவங்க  நம்மைப்பாராட்னாத்தான் மதிப்பு,  நம்மை நாமே பாராட்டிக்கிட்டா?

====================


5  கோவை பா.ஜ., நிர்வாகிகள் சிலருக்கு, ஆப்கானிஸ்தானில் இருந்து, மர்ம'மிஸ்டு கால் # ஆர்வக்கோளாறுல அவங்களைக்கட்சில சேர்த்து       டாதீங்கய்யா

================


6  காங்கிரஸ் பிரமுகரை அடித்துக்கொன்ற மனைவி கைது பங்கு வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரம # இதே லாபம் வந்திருந்தா பாராட்டி இருக்கும்
==========7 மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை விற்பனைக்கு தடை நீடிப்பு - கோர்ட்டு # இயற்கைக்கு எதிரா யார் திரும்பினாலும் அவங்களுக்கு எதிரான.விளைவு
==============8 நெல்லை-மதுபோதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் வெட்டிக்கொன்ற மனைவி # சரக்கு அடிச்ட்டு சம்சாரத்துட்ட சலம்பல் பண்ணற.சங்கரலிங்கங்கள் உஷார்
=============9 வை-பை பயன்பாட்டில் பாட்னா ரெயில் நிலையம் முதலிடம்; ஆபாச இணையதளங்களே அதிகம் பார்க்கப்பட்டு உள்ளது.# பகவத் கீதையா பார்க்கப்போறாங்க?=============10 கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் காதலி யார்? பள்ளி தேர்வு தாளில் கேள்வி # இனி ஸ்டூடண்ட்ஸ்.வாரமலர் துணுக்கு மூட்டையும் படிக்கனும் போல=============11 ‘1996–ம் ஆண்டில் கிரிக்கெட் சூதாட்டம் அதிகமாக இருந்தது’ அக்தர் # அப்போ வெளில தெரிஞ்சுது.இப்போ தெரியல.அவ்ளோதான் வித்யாசம்================12 மார்க்கண்டேய கட்ஜு நேரில் ஆஜராக கோர்ட்டு ‘சம்மன்’ தீர்ப்பை விமர்சித்ததால் நடவடிக்கை # பாஸ் மார்க் கண்டேயரை பெயில் மார்க் கண்டேயர் ஆக்க ட்ரை
================13 தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு முறையிடுவேன் - மார்கண்டேய கட்ஜூ # கலைஞருக்கு களிப்பு ,ஆனால் சட்டப்படி நிகழாது பலிப்பு
==============14 தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் BJP போட்டியிடும் -தமிழிசை # 3 ம் நாமம் தான்
==============15 தீபாவளிக்கு ரூ.500 கோடி இலக்கு: மக்களை சீரழிக்கும் டாஸ்மாக் ‘சரக்கு # காரைக்குடி,தூத்துக்குடி மட்டுமல்ல ,தமிழகமே பரமக்குடி ஆகப்போகுது==============

16 பெண்ணை மானபங்கம் செய்ததாக ஈஷா மையத்தின் முறைகேடுகளுக்கு எதிராக போராடியவர் கைது#குற்றவாளியை விட்டுடுவாங்க.புகார் கொடுப்பவனை தாளிப்பாங்க


==============17 3தொகுதிகளின் இடைத்தேர்தல் நியாயமாக நடக்குமா-ராமதாஸ் கேள்வி #,எப்டி நடந்தாலும் நாம ஜெயிக்கப்போறதில்லை.எதுக்கு கவலை?============18 இந்தியா வருவதற்காக அமெரிக்கர்கள் விசாக்காக லைனில் காத்திருக்கின்றனர்

-மோடி # வந்து லோன் வாங்கிட்டு மல்லய்யா மாதிரி ரிட்டன் போகும் க்ரூப்போ?

=============

19 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது; அரசுக்கு மட்டுமே அதிகாரம்- அரசு வாதம் # பரிந்துரைத்தா கேட்கனும்.

===============

20 3 தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தல் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை ஓட்டே அள்ளிக்கும்.எதுக்கு காசு?

==================

0 comments: