Saturday, October 15, 2016

சசிகலா VS சசிகலா புஷ்பா

நாட்டு மக்களை ஏமாத்தி ஏய்ப்பவன் அரசியல்ல இறங்கறான்
பொண்ணுங்களை கரெக்ட் பண்றவன் கவிதை எழுதறான்

=============

2 சாமியார் என்னிடம்

என்ன"வரம்"வேண்டுமென்றார்🙏
மனிதனால் வெட்ட முடியாத தா"வரம்" வேண்டுமென்றேன்.
ஆசிரமத்தில் கலவரம் தான் இப்போதைய நிலவரம்==============

3 ஜெ வின் ஆடியோ உரை என பரவும் வாட்சப் தகவல் போலி

===========

4 சசிகலா

சசிகலா புஷ்பா
2 பேராலும் வீட்டுக்கு ,நாட்டுக்கு ,போயஸ் தோட்டத்துக்கு கேடு


============

5 ஒரு முதல்வருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?உடல்நிலைக்கு என்னாஆச்சு?என மக்களுக்கு தெரிவிக்க கோர்ட் அறிவுறுத்தலாம்.உத்தரவிட முடியாது


==============

6 டிராபிக்ராமசாமி தொடர்ந்த பொதுநல வழக்கு மக்கள் நலன் சார்ந்ததே.அதே சமயம் தன் உடல் நிலை குறித்த தகவலை சொல்லா உரிமை தனி நபருக்கு உண்டு


=

=============

7 உள்ளாட்சித்தேர்தல் ரத்து செய்யப்பட்டது சரியே!ஆளுங்கட்சிக்கு சாதகமான அனுதாப அலை வாக்காக மாறாமல் தடுத்த சாணக்கியர் கலைஞருக்கு வாழ்த்து

=============

8 உயர் பதவியில் உள்ளவர் (pm,cm) உடல் நிலை சரி இல்லாத போது தன் பதவியை ராஜினாமா செய்ய தேவை இல்லை.சட்டப்படி சரியாக அரசு இயங்கினால் போதும்

=============

9 உள்ளாட்சித்தேர்தலில் தன் ஆட்களுக்கு சீட் தரவில்லை என்ற கோபத்தில் சசிகலாவே ஜெ க்கு எதுனா செய்வினை செஞ்சிருப்பாரோனு ஒரு டவுட்=================10 ரெமோ ஹிட் ஆகுமா?ஆகாதா?என்ற எதிர்பார்ப்பு இப்போ சி.கா வைவிட அதிகம்


விஜய் க்கும்
விஜய் ரசிகர்களுக்கும்


================


11 இப்பவெல்லாம் ஸ்டோரிடிஸ்கஷனுக்கு உட்காரும்போதே முன்னணிஹீரோக்கள் ரெப்ரன்ஸ்.சீன் எங்கே எப்டி வைக்கலாம்னு யோசிச்சிடறாங்க=================12 நாட்டுக்காக வாழும் ந மோ வாக இருப்பதை விட

பலருடனும் கடலை போடும் "ரெமோ "வாக இருந்தால் "றெக்க" கட்டிக்கொண்டு "தேவி" உன்னைத்தேடி வருவாள்


===============

13 அன்பு என்பது உனக்கான ஒருவருக்காக மட்டும் உள்ளுக்குள் ஊறி வருவது.ஊருக்கே ஊறுகாய் ஆவது அல்ல

================

14 நீ நடந்து செல்லும்போது அதோ அவர் போல்வாழ வேண்டும் என ஊரே கை காட்டி உதாரணம் சொல்ல வேண்டும்.கை கொட்டி சிரிக்கக்கூடாது


================

15 என் எஸ் கிருஷ்ணன் ,தனுஷ் 2,பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.புரிஞ்சவங்க மட்டும் சைலண்ட் மோடில் சிரிச்சுக்கவும்
================

16 உங்கள் படைப்புகளை உங்கள் வாரிசு படிக்கும் வாய்ப்பு இருந்தால் உங்கள் படைப்புக்கான சுய சென்சார் ஆபீசர் ஆக வாய்ப்பு


=================

17 தன் துணைக்கு துரோகம் செய்பவர் தன் துணைக்கும் இதே போல் ஒரு துரோகம் செய்ய வாய்ப்பு உண்டு என்பதை கற்பனை செய்து பார்த்தால் துரோகங்கள் குறையும்

===============

18 பெண் குழந்தை உள்ளவர்க்கு இந்த உலகில் மற்றவரை விட சுய ஒழுக்கமும் ,கட்டுப்பாடும் ,குடும்ப கவுரவமும் அதிகம் தேவை

==============

19 சிவகார்த்திகேயனின் திறமைக்காக ரெமோ ஹிட் ஆக வேண்டும் எனவும் ,படத்தின் ஓவர் பில்டப்புக்காக அது பிளாப் ஆக வேண்டும் எனவும் நினைக்கிறேன்


===========

20 கேரளாவில் மோகன் லால் படமும் ,மம்முட்டி படமும் நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரே நாளில் இன்று ரிலீஸ்.கூடவே ரெமோ,றெக்க ,தேவி #5 படங்கள்


=============

0 comments: