Monday, October 24, 2016

எதிர் வீட்டு பிகர் பேர் தெரியாதவன் ஏஞ்சலீனாஜூலி படம் பார்க்கக்கூடாதா?

டைரக்டர் = கொஞ்சம் இரக்கம் காட்டுங்க மேடம்


சாரி சார்.லோஹிப் சேலை நோ
கொஞ்சம் இறக்கம் காட்டுங்க


==============

2 அனுஷ்கா,நயன் தாரா என்ன வித்யாசம்?


பேருக்குள்ளயும் சுகர் இருக்கும் அஸ்கா பிகர் அனுஷ்கா,பேருக்கேத்தபடி 9வது லவ்வை நோக்கி நெடிய பயணம் நயன்


============

3 சார்.ஆன் லைன் விமர்சகர்களுக்குன்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கேன்


ஓ.சுமாரா எத்தனை பேர்?
எல்லாருமே சுமார் தான்


=============

4 சார்.ஒரு கவிதை எழுதி முடிச்சதும் அந்த பேப்பர் மேல எதுக்கு செண்ட் தெளிக்கறீங்க?


என்.எழுத்தோட வாசம் நுகர ஒரு கூட்டம்=================

5 டியர்.ஐஸ்வர்யா.ராய்100 சேலை டிசைன்ஸ் வந்திருக்காம்.எனக்கும் 100 ம்.வேணும்


அபிஷேக் பச்சனே 1,தான் வாங்கினாராம்===============

6 சார்.அனுஷ்கா ,நயன் 2,பேர்ல யாருக்கு அழகு ஜாஸ்தி?


அது தெரியல.ஆனா நயனுக்குதான் டேலண்ட் ஜாஸ்தி.
எப்டி?
அசராம ,,.


================

7 சார் ,  வன் தொடர்தல் அப்டின்னா என்ன?

 FB  ல , ட்விட்டர்ல என்னை  ஃபாலோ பண்ணாதேன்னு ஃபிகர் சொன்ன பின்னும்  வலியனா அதையே செய்வது

======================

டியர், நீ வேப்ப மரம் மாதிரி 

 புரியல

 நம்ம வீட்லயே யாருக்கு வயசு அதிகம்? யோசிச்சுப்பாரு


===================


 எங்க ஹோட்டல்ல எல்லா சர்வர்களும் லேடீஸ் தான்

 அடடா, எதுனா ஆர்டர் பண்ணா கொண்டு வர ;லேட் ஆகி சர்வர் எரர் காட்டுமே?

=====================


10  டைரக்டர் சார்.படத்துல கதை சம்பந்தமே இல்லாம காஷ்மீர் பார்டரை தாண்டிப்போகுதே?ஏன்?


விமர்சனத்துல "படம் பார்டர் தாண்டிடுச்சு"ன்னு வர

==============

11 டாக்டர்.பெரும்பாலான கற்பனைக்காட்சிகளின் முடிவில் கண்கலங்கிடறேன்.


மிஸ்.இனி தண்ணி தொட்டிக்குள்ள முகத்தை முக்கிக்குங்க


==================


12 ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா திருப்பாச்சி ரேஞ்ச்க்கு படம் ஹிட் ஆகிடும் போல
மகிழ்ச்சி.படமே திருப்பாச்சியா இருந்துடப்போகுது

===============


13 டாக்டர்.என் காதலியும் நானும் ஒரே பிளட் க்ரூப்.இது நல்லதா?
ஒரே ரத்தம் னு அண்ணன் தங்கை சொந்தம் சொல்லி பிரிச்சிடுவாக

===============

14 பரதன் ஒரு ஆக்டிங் கிங் னு எப்டி சொல்றே?
ராமர் வர்ற வரை அவர் சார்பா அவர்தானே ராஜா?

=============


15 நடுநிலையாளர் ஏன் திமுகவை ஆதரிக்கிறார்கள்?
சார் .ஒரு நிமிசம்.திமுக ,அதிமுக 2 கட்சில எதை யார் ஆதரிச்சாலும் அது எப்டி நடுநிலை ஆகும்?

================


16 டாக்டர்.2 நாளா இடது கண்ணு மட்டும் தனியா துடிக்கிது
இந்த டேப்லட்டை சாப்பிடுங்க.வலதும் சேர்ந்துக்கும்.ஜோடியா துடிக்கும்

===============

17
காலை 10 மணிக்குப்பின் உங்க சூழல் சந்தோஷமயமாகிடும்
எப்டி ஜோசியரே?
ஆபீசுக்குப்போய்டுவீங்க.வீட்ல இருந்தாதானே பிரச்ன?


=================

18 ஏரியா கவுன்சிலர் பேரு தெரியாதவங்க அமெரிக்கா அரசியல் பேசலாமா?

எதிர் வீட்டு பிகர் பேர் தெரியாதவன் ஏஞ்சலீனாஜூலி படம் பார்க்கக்கூடாதா?

=====================

19 சார்.உங்க கவனம் இப்போ இலக்கியப்பக்கம் திரும்பிடுச்சே ஏன்?

இத்தனை நாளா இலக்கியா பக்கம் இருந்தேன்.அன் லக்கி யா பீல்


=====================

20 சார்.உங்க பட டைட்டிலை "பணத்தாலயே அடி"ன்னு ஏன் மாத்தீட்டீங்க?
CASHMAARO (காஷ்மோரா)ன்னு வெச்சா வரிவிலக்கு கிடைக்காதாம்


==================


0 comments: