Sunday, October 09, 2016

"மஞ்சப்பை"ரவா

ராஜ்கிரண் விஜய் படத்துல ஒரு கேரக்டர்ல நடிக்கிறாராம்


ஓஹோ.அப்போ டைட்டில்"மஞ்சப்பை"ரவா?"


==========

2 அஜித் படத்தில் அப்புக்குட்டி நடிச்சா என்ன டைட்டில் வைப்பாங்க?


அழகர்சாமியின் ரேஸ் குதிரை நெ 1==========

3 மீனம்மா கயலுக்கு லோ சுகர் வந்தா என்ன ஆகும்?


????
மீன லோ சீனி ஆகிடும்==============

4 பெண் எழுத்தாளர்களில் உங்களுக்கு பிடித்தவர்களை சொல்லுங்க


எல்லாரையும் எனக்குப்பிடிக்கும்ங்க.ஆனா அவங்களுக்கு என்னைப்பிடிக்கனுமில்ல?


===========

5 சார்.முன்பை விட கருத்துட்டீங்க?கேரளா தண்ணீர் செட் ஆகலையோ?


ஆமாங்க.நமக்கு தண்ணி ராசி கன்னி ராசி 2 ம் இல்லை==============

6 கல்வியா?செல்வமா? வீரமா?


அஜித் ரசிகன் =,வீரம்


=========

7 மாப்ளை.பொண்ணு பார்க்கக்கிளம்பும்போதே பொண்ணு ஒல்லியா தான் இருக்கும்னு எப்டி சொல்றீங்க?


நந்தினி ன்னா ஒல்லி
எப்டி?
NAN"THIN"I


============

8 சரண்யா ன்ன உடனே உங்க மைன்ட்ல டக்குனு என்ன தோணும் ? சொல்லுங்க.


நல்லா ரன் எடுப்பாங்கன்னு SA"RUN"YA.=============


9 எடைக்கு எடை லட்டு கொடுத்தா கல்யாண தோஷம் நீங்குமா?


அப்டி சொல்லி உனக்கு யாரோ அல்வா கொடுத்திருக்காங்க===========

10 டாக்டர்.கல்யாணம் ஆகாத பொண்ணுங்க கீரை சாப்ட்டா நீளமான கூந்தல் அமையுமாமே?எப்டி?


கரிசLONGகன்னி க்கீரை ஆச்சே?


===========

11 முள்ளங்கிச்சா(ற்)றை தலையில் வாரம் ஒரு முறை தேய்ச்சுக்குளிச்சா கூந்தல் வ(ள)ரும்


டாக்டர்.டெய்லி அப்டி செஞ்சா?
காய்ச்சல் வரும்============

12 யோகா செய்யும்போது ஏன் வீல் வீல்னு கத்தறே?


இது சக்கராசனம்.அதான் WHEEL wheel னு கத்துனேன்.மேட்சுக்கு மேட்ச்=========

13 எதிரி துரத்தும்போது ஜிக் ஜாக் மெத்தேட் ல ஓடினா தப்பிக்கலாம்


குருவே.எதிரியும் அதே முறையில் துரத்திப்பிடிச்ட்டா?==============

14 டாக்டர்.அகத்திப்பூ பொறியல் சாப்பிட்டா வயிற்றுப்புண் குணமாகும்னீங்க


யா
அப்போ சாராயம் குடிக்கறப்ப சைடு டிஷ் சா சாப்டலாமா?============

15 டெய்லி கருணைக்கிழங்கு சாப்பிடுங்க.இந்த பழக்கத்தை பாலோ பண்ணினா நார்ச்சத்து கிடைக்கும்


டாக்டர்.கருணை மலரை பாலோ பண்றேன்.என்ன பலன் கிட்டும்?============

16 ஆதிரை பாரீன் போனா வீட்ல என்ன சொல்வாங்க?


ஆ"திரை" கடல் ஓடியும் திரவியம் தேடு


============

17 dr, ஆவாரம்பூ வை அரைச்சு முகம் பூரா பூசினா கோல்டன் கலர்  ஃபேஸ் ஆகிடுமாமே?\\

 அப்போ செம்பருத்திப்பூ வை அரைச்சுப்பூசினா செக்கச்செவேல்னு ஆகிடுமா?===================

18 படத்துக்கு கொடி ன்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க?

இங்க்லீஷ்ல KODI னு எழுதும்போது கோடின்னு சொல்லி திருப்திப்பட்டுக்கலாம்

==================

19 சார்.படத்துல டூயல் ரோல்.ஜோடி யாரு?

தாடி வெச்ச கேரக்டருக்கு வில்லனோட சம்சாரம் ஜோடி.இன்னொரு கேரக்டருக்கு எதிர் வீட்டுக்காரன் சம்சாரம்

================

20 தமிழ் மிஸ் தன்யா = செந்தமிழ் -பிரித்து எழுதுக

சிம்பு ரசிகன் சில்வண்டு =ஸாரி டீச்சர்,ஒரு குடும்பத்தையோ மொழியையோ பிரிச்சு பழக்கம் இல்ல

===============

0 comments: