Friday, October 21, 2016

தமிழகத்தில் ஒரு கட்சியா இருக்கவே அதுக்குத் தகுதி கிடையாதே?

1  திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பாஜக பங்கேற்காது- தமிழிசை # அப்போ பாஜக ஒரு கட்சியே கிடையாதுங்கறீங்களா?


====================

2 காவிரிக்காக உண்ணாவிரதம் இருக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை-தமிழிசை# தமிழகத்தில் ஒரு கட்சியா இருக்கவே அதுக்குத் தகுதி கிடையாதே?

==================

3 உ.பி., சட்டசபை தேர்தலுக்கு பின்னரே, யார் முதல்வர் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.-முலாயம் சிங் யாதவ்: # நல்லா முலாம் போட்டு சமாளிக்கறீங்க

=================

4  : பீஹார் முன்னாள் முதல்வர், ஜிதன்ராம் மன்ஜியின் பேரன் விக்கி மன்ஜி, மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக கைது # எல்லா எக்ஸ் சி எம் பேரன்களும் ஜாக்கிரதையா இருந்துக்குங்க

=================

5  காவிரியில் கர்நாடகா தண்ணீர் தந்தாக வேண்டும்; அதற்காக, நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்-பொன்.ராதா # கோர்ட் உத்தரவு கொடுத்தே அவங்க தண்ணீர் தரல

========================6  OPS  ACTING CM தொடர்பான ஆணையில், ஜெ கையெழுத்திட்டாரா ?- கருணாநிதி #  சட்டப்படி தேவை     இல்லை, 2 டைம் இது போல் அவரே முன் மொழிந்திருக்காரு

=============

7    சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில், தண்ணீர் லாரிகள் கட்டுப்பாடற்று இயக்கப்படுவதே, விபத்துகளுக்கு காரணம் -ஸ்டாலின்  # எல்லா லாரிகளுக்கும் வேகக்கட்டுப்பாடு வைக்கனும்

===============


8   திருநாவுக்சரசர் தலைமையில் தமிழக, காங்., அரசியலில் உயர்ந்த இடத்திற்கு வரும்-கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா # கட்சி ஆஃபீசை 15 வது மாடில வைப்பாரோ?

===================

9  தமிழகத்திலுள்ள அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்த,ஸ்டாலினும், ஒரு இரும்பு மனிதர் தான் - துரைமுருகன் # ஆனா அழகிரி மட்டும் இவரை துரும்பா  மதிப்பது ஏனோ?

==================


10 புதியவர்களை விட பழைய நண்பர்களே மேல் -மோடி: # என்னதான் காலேஜ், ஆஃபீசில்  நண்பர்கள் அமைந்தாலும் அது  ஸ்கூல் ஃபிரன்ட்ஸ் போல் வருமா?


==================

11  அரிவாள் கலாச்சாரம் மாறி துப்பாக்கி கலாச்சாரம் ஆபத்து - தமிழிசை # நீங்க அஜித் ரசிகையா?"துப்பாக்கி"க்கு எதிர்ப்பா பேசறீங்க?

===================

12 ஏசுவோடு 2முறை பேசிஉள்ளேன்-உமாசங்கர்# நீங்க 20 டைம் கூட பேசி இருக்கலாம்.ஒரு டைமாவது அவர் உங்க கிட்டே பேசுனாரா?அதான் ட்விஸ்ட்

==============

13 இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் -இல கணேசன்
# சும்மா இதையே சொல்லி ஜல்லி அடிக்காதீங்க

================

14 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கடைசி படியில் இருக்கிறோம்:- ப.சி # மேலிருந்து கீழ் கடைசியிலா?கீழிருந்து மேல் கடைசியா?


=================

15 சிவகார்த்திகேயனை அடுத்து விழா மேடையில் அழுத நடிகை பூர்ணா # இனி மேடை ல அழுவதை ஒரு நிகழ்ச்சி நிரலாவே ஆக்கிடுவாங்க போல

============

16 சென்னையில் விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு # 2 பேரும் "அக்னி பார்வை" க்கு புகழ் பெற்றவர்கள் ஆச்சே.உள்ளாட்சி கூட்டணியா?


===============

17 தமிழகம் முழுவதும் 2 நாள் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அனைத்து கட்சி தலைவர்கள் ஆதரவு # கார்ல  போறவங்களுக்குத்தெரியுமா?ரயில்ல போகிறவர்களின்  பிரச்சனை?

=================

18 போதை மருந்து சோதனைக்கு தயாரா?-

ஹிலாரி கிளிண்டன் மீது டிரம்ப் அதிரடி தாக்கு# நம்ம ஊர் கலைஞர் மாதிரி கலக்கறாரே?=================

19   வீட்டை விட்டு விரட்டப்பட்ட கணவருக்கு, மாதா மாதம் உதவி தொகை வழங்க வேண்டும்: மனைவிக்கு கோர்ட்டு உத்தரவு # பிரமாதம், இப்போதான் ஆண்களுக்கு ஒரு விடிவு காலமே வந்திருக்கு

==============


20 ரூ.200 கோடி வசூல்: எம்.எஸ். தோனி - சொல்லப்படாத கதை திரைப்படம் புதிய சாதனை # டோனியின் படமும் டபுள் செஞ்சுரி! அடடே!

0 comments: