Wednesday, October 12, 2016

DEVI(L) - சினிமா விமர்சனம்

Image result for devi tamil movie 2016

ஹீரோவோட பாட்டி சீரியஸ். உடனடியா ஹீரோவை கிராமத்துக்கு வர வெச்சு ஒரு கட்டுப்பொட்டி கவிதாவை கட்டி வெச்சுடறாங்க, கோபுரங்கள் சாய்வதில்லை , சின்ன வீடு படங்களில் இருந்து உல்டா அடிச்சு முதல் 2 ரீல்.இங்க தான் ஒரு ட்விஸ்ட். தம்பதிகள் குடி போன வீட்ல ஒரு பேய். இது சினிமால ஆக்ட் பண்ண ஆசைப்பட்டு அது பலிக்காம விரக்தில தற்கொலை செஞ்சது. இது ஹீரோயின் உடம்புல புகுந்துக்குது


சினிமா வில் ஆக்ட் பண்ணும் பேய் பின் என்ன ஆச்சு? என்பதே கதை


ஹீரோவா பிரபுதேவா, லாங்க் கேப், இருந்தாலும் கலக்கறார், சல்மான் பாடல் காட்சியில் டான்சில் பின்னிப்பெடல் எடுக்கறார்,காமெடி ஆக்டிங் குட்

ஹீரோயினா லெமனா ஒரு காலத்தில் இருந்த தமனா. ஏன் இப்டி சொங்கிப்போய் இருக்காரோ? சைனிங்க் எல்லாம் போச்சு. ஆனா டான்சில் அதகளம் பண்றார். இது போல் டான்சில் கலக்கியது தமனாவுக்கு இதுவே முதல் முறை


வில்லனாக சோனு. தமிழ் சினிமா வில் கண்ணன் வேலைகள் செய்த அர்ஜூன், கார்த்திக் ( அலைகள் ஓய்வதில்லை), ஹீரோக்களின் கேரக்டரில் வாழ்ந்து இருக்கார்


திரைக்கதை கன கச்சிதம்


பாடல்கள் 2 செம ஹிட் ஆகி இருக்கு.


பலே பாண்டியா


1 இது வரை வந்த பேய்ப்படங்களில் ரத்தம் , பயமுறுத்தல் , அகோரம் எல்லாம் இருக்க, பழி வாங்கல் மெயின், இவை எதுவும் இல்லாமல் அது பாட்டுக்கு வந்து அதன் ஆசையை பூர்த்தி செஞ்சுட்டுப்போய்டுது


2 வெறும் 124 மினிட்ஸ் தான், ஆனா சுவராஸ்யம்

3  கடைசி வரை  பேய் தன் முகத்தை காட்டாதது  பிளஸ்

4   ஹீரோயின் ட்ரான்ஸ்பர்மேசன்  சீன்


லாஜிக் எரர்


1 மனைவி மாசமா இருப்பதை  கணவன் சொல்வது போல்  ஒரு சீன். என்னதான்   பேய் பிடிச்சிருந்
தாலும் அப்பப்போ  பேய் விலகும்போது 3  மாசத்துல ஒரு டைம் கூடவா தான் கர்ப்பம் என்பது ஒரு  பெண்ணுக்குத்தெரியாமல் இருக்கும்?

2   சில காட்சிகளில்  பேய்  தமனா உடலில் புகுந்த பின்  திரையில் வில்லனைப்பார்த்து புளகாங்கிதப்படுவது  சினிமா ஆசையாலா? வில்லன் மேல் உள்ள ஆசையாலா?ன்னு டவுட் வருது


3   மனைவி  அரைகுறை உடையில்  சினிமா வில்  வர  மாட்டார்  என ஆரம்பத்தில் 1008  கண்டிசன் போடும்  ஹீரோ பின் அதை அம்போ என விட்டு விடுவது எப்டி?


தியேட்டடிக்கல் அப்டேட்டட் ட்வீட்


காதலன் படத்துக்குப்பின் பிரமாதமான டான்ஸ் ஸ்டெப்களுடன் பிரபுதேவாWIN சொந்தப்படம் தேவி ஓப்பனிங் டான்ஸ் கலக்கல்.இசையும்


==========2 ராஜூ சுந்தரம் -சிம்ரன் -கமல் ரெப்ரன்ஸ்


============

முதல் 2,ரீல் சின்ன வீடு கே பாக்யராஜ் -கல்பனா ரெப்ரன்ஸ்.


=============

4  தமனா டான்ஸ் ஸ்டெப்சில் கலக்குது.ட்ரான்ஸ்பர்மேசன் சீன் எல்லாம்நடிக்குது.அட!
பல்லினு கிண்டல் பண்ண பசங்க எல்லாம் இனி கில்லினு பாராட்டுவாக#DEVI

=============

5நச் டயலாக்ஸ்
1 இது வரை.27 பொண்ணுங்க கிட்டே ஐ லவ் யூ சொல்லி 30 தடவை ரிஜக்ட் ஆகிடுச்சுஅதெப்டி?
3 பேர் கிட்டே.2 டைம் சொன்னேன்.ஹிஹி


மாடர்ன் பிகர்ட்ட அப்டி என்ன தான் இருக்கு?


இங்க்லீஷ் பேசுவா அதும் கிராமர் மிஸ்டேக் இல்லாம.இது 1 போதாதா?ச்சே,ஸ்டுப்பிட் வில்லெஜ் பியூப்பிள்


கண்ணா.நீயும் இதே ஊர் தானே?
ஆங்.அது வந்து,,.இன்னும் 48 மணி நேரத்துல ஒரு பொண்ணைப்பார்த்து கல்யாணம் பண்ணனும்னு அப்பா சொல்லிட்டார்


உங்கப்பா பிளிப்கார்ட் ல ஒர்க் பண்றாரா?என்னடா பிகர் இது?நடராஜ் பென்சில் மாதிரி இருக்கு? ( எஸ் வி சேகர் டிராமா டயலாக் வண்ணகோலங்கள் டி வி தொடர் ல இருந்து சுட்ட டயலாக்)


6 மாட்டுப்பொண்ணு மாட்டுப்பொண்ணு னு சொல்லிக்கேள்விப்பட்டிருக்கேன்.நிஜமாவே மாடு மேய்க்கும் பொண்ணு போல ( மவுலி யின் டிராமா டயலாக் உல்டா)


7 குடி,பீடி,லேடி அதுதான் இந்த தாடி.எனக்கு உன் லைப் தாம்மா முக்கியம் (சுயஎள்ளல் போல் தோணவெச்சு தன்னடக்கத்துக்கு தண்ணி காட்டிங்)


8 குடிக்கறவனுக்கு குடல் வேணா கெட்டுப்போய் இருக்கலாம்.ஆனா மனசு கோல்டு மெடல்


9  நான் முன்னால போறேன்.நீ 10அடி கேப் விட்டு பாலோ.


ஏன்?
மும்பைல அப்டித்தான்.புருசன் பொண்டாட்டி ஜோடியா போக மாட்டாங்க


10  ஆல்சோ ஐ லைக் டூ ஆக்ட் வித் சூப்பர் ஸ்டார்ஸ் ஒன்லி (நயன் ரெப்ரன்ஸ்)


11 பொண்டாட்டிக்கு பேய் பிடிச்சிருக்கா? இல்ல.பொண்டாட்டியே ஒரு பேயா? தெளிவா சொல்பா.


12 ஒரு பொண்ணுக்கு அழகு இருந்தா வீட்டை ஆளலாம் ,அறிவு இருந்தா நாட்டை ஆளலாம்.அழகும் ,அறிவும் இருந்தா இந்த உலகையே ஆளலாம்

13 நாம.என்ன.வேணா ஆக ஆசைப்படலாம்.ஆனா நம்ம விதிப்படி தான் எல்லாம் நடக்கும்.ஆண்டவன் எழுதி வெச்சுட்டான்


14  ஏன் எல்லாரும் சினிமா ல நடிக்க ஆசைப்படறாங்க தெரியுமா? பேரு ,புகழ் , கைதட்டல் ,பணம் எல்லாம் கிடைக்கும்


15 நீ அம்மா ஆகப்போறே ன்னு பொண்டாட்டிகிட்டே தகவல் சொல்லும் புருசன் உலகிலேயேநான் ஒருத்தனாத்தான் இருப்பேன்


16 வண்டி என்னுது .ஓட்றது நீ


17 என்னைத்தவிர எல்லாருக்கும் என் ஒயிபை பிடிச்சிருக்கு.என்ன கொடுமை இது


18 தெரிஞ்சு பண்ணியா? தெரியாம பண்ணியா? எனக்குத்தெரியல.ஆனா எனக்கு நல்லது செஞ்சிருக்கே


அய்யய்யோ.சாரி.தெரியாம செஞ்சுட்டேன்.19 உன்னைக்கட்டிக்கப்போறவன் கொடுத்துவெச்சவன்.ஆனா உன்னைக்கட்டினதுக்கப்புறம் மூடிப்பாதுகாக்கனும்


20  பேய்-இது என் வீடு.என்னைக்கேட்காம உள்ளே வந்துட்டே.ஆனா நான் நினைச்சாதான் நீ வெளில போக முடியும்


21  இந்த மாதிரி ஒரு வீடு மும்பைல எங்கே தேடினாலும் கிடைக்காது.


எப்டி கிடைக்கும் ?அதே ஒளிஞ்சு கிடக்கு ஒரு சந்துக்குக்குள்ளே22 பேய்க்கதை பேய்க்கதைன்னு ஆளாளுக்கு சொல்வாங்க.அதெல்லாம் வெறும் கதை


23  DO YOU KNOW THE ABCD OF DANCE ? # DEVI (சலங்கை ஒலி கமல் ரெப்ரன்ஸ்)

24 ரீல் லைf ,ரியல்லைf 2 க்கும் சின்ன வித்யாசம் தான் இருக்கு


சி.பி கமெண்ட் - தேவி - யாரையும் பழி வாங்காத வித்யாசமான சைவப்பேய்க்கதை.ஆல் சென்ட்டர் ஹிட் .பிரபுதேவா ,தமனா ராக்ஸ் ,விகடன் -43 .ரேட்டிங் =3 /5

0 comments: