Tuesday, October 18, 2016

மாடர்ன் பிகர்கள் மல்ட்டி டேலண்ட்!! எப்டி?

எளிமையானவனின் முதல் வெற்றி எல்லோராலும் கொண்டாடப்படும்.அவனது தொடர் வெற்றி பொறாமைக்கண்ணோட்டத்துடன் நோக்கப்படும்


===============2 உன்னை சந்திக்கலாமா?வேண்டாமா?என்ற சந்தேகக்கேள்வியுடன் சகுனம் பார்க்க வெளியே வந்த போது நல்ல சகுனம்.வாசலில் நீ!===============3 வெற்றி தேவதையை அடிக்கடி சந்திப்பவன் இறுமாப்புக்கொள்வான்.மரண தேவனை ஒருமுறை அருகில் கண்டு மீண்டவன் அடியோடு மாறிவிடுவான்
=================

4 தன் அபிமானத்தை எல்லோருக்கும் வெளியே சொல்லிக்கொண்டிருக்கத்தேவை இல்லை.நேர்மையானவனுக்கு தன்னிலை விளக்கம் தரத்தேவை இல்லை


============5 உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத சாப்பாடு என்ன ?அதிர்ஷ்ட லட்சுமியை பழிப்பவனுக்கு உழைப்பு கை கொடுக்கும்.அன்ன லட்சுமியைப்பழித்தால்..===============

6 உங்கள் அபிமானம் குறித்து சந்தேகப்படும் சூழலில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை இறைக்காதீர்.மவுனம் தான் இக்கட்டான சூழலுக்கெல்லாம் உறுதுணை=============7 தன்னையும் அறியாமல் தவறான பாதையில் செல்பவர் ஒரு முறை இடறி விழுந்துஎழுந்து திரும்புகையில்தான் " அபாயம் போகாதே"எச்சரிக்கை போர்டை பார்ப்பார்=============8 புண்ணிய ஸ்தலங்களில் குடி இருப்போர்க்கு அதன் மகத்துவம் தெரியாதது போல் தான் அருகாமைப்புதையல் அறியாமல் தொலைதூரப்பாலைவனக்கானல் நீர் ஏமாற்றம்
===============9 கே பாக்யராஜ் ரசிகர் மன்றத்தலைவி வீட்டில் சாதா பூஜை நிகழ்ந்தாலே அது சி ஆர் சரஸ்வதி பூஜை என்றுதான் உலகம் சொல்லும்
===============10 மீனராசி.அன்பர்களே! கொடுத்த கடன் வசூல் ஆகும்.எதிரிகள் தேடி வந்து பேசுவார்கள்.இது தான் சாக்குன்னு டிஎம் கூட்டிட்டுப்போலாம்==============11 அக்கறை உள்ளவர்கள் வெளியில் சொல்வதில்லை.அன்பு கொண்டவர்கள் அதை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதில்லை================12 நல்ல காலம் பிறக்குது நிகழ்ச்சியைப்பார்த்து உன் புரோக்ராமை நிர்ணயிக்காதே.செயல்பட துடித்தால் எல்லா காலமும் நல்ல காலமே=============13 சன் டிவி யில் சித்த.வைத்தியம் சொல்லும் சித்ராங்கிக்கு

உங்க கை விரல்கள் மருதாணி சிவப்பை கவனிக்கும்போது பித்தம் உள்ளதா தெரியுது


================

14 என்னதான் பரிசளித்த "கணையாழி" உன்னை அலங்கரித்திருந்தாலும் நமக்கிடையேயான பிரிவு "மய்யம்"கொண்டிருக்கும்வரை நம் காதல் "காட்சிப்பிழை"தான்

=============

15 உதயநிதிஸ்டாலின் மைண்ட் வாய்ஸ் =அட லூசுங்களா .ஒரு கல் ஒரு கண்ணாடி ,மனிதன் இந்த 2 ம் தமிழ் வார்த்தை இல்லை.ஆனா ரெமோ தமிழ்ச்சொல்லா?

=============

16 அம்மணி பட ப்ரமோ ரொம்ப மோசம்.படத்துக்கு வர இருக்கும் கொஞ்ச நஞ்ச கூட்டமும் ஓடிடும் போல.மார்க்கெட்டிங் டெக்னிக்கை மாத்துங்கப்பா


===============

17 தனிமையில் அழுபவரை நம்பு
கூட்டத்தில் எல்லோர்முன் அழுபவரை நம்பாதே!

=============

18 உன்னை எப்பொதும் மனதில் நினைத்துக்கொண்டிருப்பவர் தொடர்பு எல்லைக்குள் எப்போதும் இருக்கத்தேவை இல்லை.


====================

19 கவிதைக்குப்பொய் அழகாய் இருக்கலாம்.ஆனால் காதலுக்கு உண்மை,நம்பகத்தன்மை தான் அழகு.


===============

20 ஒன்றுக்கு மேற்பட்டோருடன் பழகுவதை /பேசுவதை சில மாடர்ன் பிகர்கள் மல்ட்டி டேலண்ட் என மடத்தனமாய் நினைத்துக்கொள்கிறார்கள்

0 comments: