Monday, October 24, 2016

ரெண்டு மோதிரம் என்பதன் சுருக் ரெ மோ?

1

ஆன்மிகத் தலைவர்கள் வாக்கு சேகரிப்பது தேர்தல் விதிமீறலா?: உச்ச நீதிமன்றம் கேள்வி # தார்மீக முறைப்படி தவறு,ஆனா சட்டப்படி  சரி==============

மேக்அப் கலைந்த மனைவியைப்பார்த்து கணவன் விவாகரத்து கோரிக்கை # சட்டப்படி சாத்யமில்ல.ரிப்பனை கட் பண்ணி இப்போ ஒப்பனை சாக்கு செல்லாது

================


3 உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியை தொடர்வதே நல்லது: ராகுலிடம் இளங்கோவன் வலியுறுத்தல்.# நமக்கு வேற கதி இல்ல


=============4 ஹிலாரி மோசமான பெண்: நேரடி விவாதத்தில் டிரம்ப் ஆவேசம். # இவரு பெரிய கலி யுக ராமரு
============5 முன்னாள் காதல் ரகசியங்களை வருங்கால கணவரிடம் சொன்ன சமந்தா # ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம் ,2 குடம் தண்ணி ஊத்தி 2 பூ பூத்ததாம்
================6 பிச்சைஎடுப்பது தவறில்லை -மத்திய அரசு # அம்மா தாயே எங்க கட்சிக்கே ஓட்டுப்போடுங்க டைப் பிச்சையா?=============7 விவசாயிகள் போராட்டத்தில், காங். தொண்டர்கள் அதிகளவு பங்கேற்காதது, வருத்தம்-evks# தொண்டர்கள் இருந்திருந்தா பங்கேற்றிருப்பாங்க,அதான் இல்லையே?==============8 உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், கர்நாடக அரசு செயல்படுகிறது; -நாராயணசாமி # உங்க தலைவர் ராகுல் கிட்டே சொல்லி மதிக்கச்சொல்லலாமில்ல?=============9 3 தொகுதிகளுக்கான தேர்தல் நிலைப்பாடு குறித்து, மநகூ தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.-ஜி.ராமகிருஷ்ணன்:# அங்கேயும் 3 பேர்தான்=================10 நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் மோடியின் செயல்கள், என்னை கவர்ந்துள்ளன.-ரீட்டா பகுகுணா:# க”ரீட்டா பகு”மானா சொல்றீங்க போங்கோ
=================11 காவிரி நீர் - அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டுமென கூற திமுகவுக்கு தார்மீக உரிமை கிடையாது.- தமிழிசை # அதைச்சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கா?

=============
12 இடைத்தேர்தல் முறையாக நடந்தால்,3தொகுதிகளிலும்,திமுக., சிறப்பான வெற்றியைப் பெறும்-ஸ்டாலின் # அப்போ தோத்தா பழி போடுவோம்,ஜெயிச்சா பலி கொடுப்பொம்=================13 தி.மு.க.,வில் தற்போது இல்லாத யாரையும் நினைத்து ஏங்கி நிற்பது, கட்சியின் பயணத்திற்கு தடையாகி விடும்.-கலைஞர் # குஷ்பூவைச்சொல்றாரா? அழகிரி?==================14 காங்., 50 ஆண்டுகளாக, தமிழகத்தில் ஆளும் கட்சியாக வர மற்ற கட்சிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம். -தங்கபாலு # பல்லக்குத்தூக்கிகள்
=================15 ரூ.2,500 கட்டணத்தில் ஒரு மணிநேர விமான சேவை திட்டம் # கள்ளக்காதலர்களுக்கு, தெய்வீகக்காதலர்களுக்கு ரொம்ப சவுகர்யமான திட்டம்==============16 தமிழகத்தை ஆளும் கட்சி நாங்கதான்... மு.க.ஸ்டாலின்# தமிழகத்தில் அதிகம் சம்பாதித்த கட்சி ன்னு வேணா சொல்லிக்கோங்க
================17 3 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்-வைகோ # பரீட்சைல பெயில் ஆவோம்னு தெரியும்.அதான் எக்சாம் ஹாலுக்கே போகலை.எப்பூடி ் ?===============18 இனி மாண்புமிகு ஆளுநர் என்றே அழைக்க வேண்டும்.. வித்யாசாகர் ராவ் உத்தரவு # மேய்க்கறது எருமை இதுல என்ன பெருமை?


==============

19 அம்மா’வின் ஆசைப்படி... போனிலேயே குழந்தைக்கு ‘வைபவி’ எனப் பெயர் வைத்த மோடி # வைபை ன்னு வைக்கலை.நல்ல வேளை


=================

20 ரெமோ படத்துக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு… # ரெண்டு மோதிரம் என்பதன் சுருக் ரெ மோ என சமாளி

=============

0 comments: