Wednesday, October 12, 2016

மோகன்லால் ன் புலி முருகன் மீடியமாதான் ஓடுமா?ஏன்?

Image result for rekka tamil film heroine1  கவர்னரை பார்க்கனும்

 ம்எதுக்கு?

 முதல்வரை அவர்  பார்த்தாராமே? நலம் விசாரிச்சதைப்பத்தி விசாரிக்கனும்

ஓ.சாரி, இப்ப முடியாது


================

2  கருணை மலர் கறுப்பு தான்


இல்ல மாநிறம் தான்
2பேர் சொல்வதும் தப்பு .சிவப்பு தான்
எப்டி சொல்றே?
க (ருணை ம)லர் -பேருக்குள்ளயே கலர் இருக்கே?

============

3 சார்.லண்டன் டாக்டரை ஒரு பேட்டி எடுக்கனும்


சாரி.முடியாது
ஏன்?
உனக்கு இங்க்லீஷ் தெரியாது.அவருக்கு தமிழ் தெரியாது


================

4 சார்.அந்த ஹீரோ உங்க பையன் தான் னு புதுசா புரளி கிளப்பறீங்களே?எதுனா ஆதாரம் இருக்கா?


நானும் 4,டைவர்ஸ் க்கு காரணி


================


5 தலைவரே!,ஒரே நாளில் உண்ணா விரதத்தை முடிச்ட்டீங்களே?ஏன்?


2 மணி நேரத்தில் சிலர் முடிச்சடறாங்க.நான் 8மணி நேரம் இருந்திருக்கேன்=============


6 சார்.கன்னித்தீவு கதைல சிந்துபாத் இதுவரை தீவுக்குப்போகவே இல்லையே?


யாருமே இது வரை தொடாததால்தான் /ரீச் ஆகாததால்தான் அது கன்னித்தீவு


============

7 சார்.கன்னித்தீவு கதை பெரும்பாலும் கடல் பயணத்துலயே சுத்திட்டு இருக்கே?


இவ்ளவ்தானே? "கடல் கன்னி"த்தீவு னு நினைச்சுக்குங்க
===============

8 யுவர் ஆனர்.காலேஜ் மாணவியை படிப்பறிவே இல்லாத வர் ரேப் பண்ணி இருக்க வாய்ப்பு இல்லையா?எப்டி?


கற்றாரை கற்றாரே காமுறுவர் கான்செப்ட்


================


9 நெ 1 ஊ வா ,நெ 2 ஊழல்வாதி என்ன வித்யாசம்?


நெ1,க்கு நோய் வந்தா மாசாமாசம் லண்டன் போய் ட்ரீட்மெண்ட் ,நெ 2, வீட்டுக்கே லண்டன் டாக்டர் வருவார்===============

10 ரொம்ப முக்கிய நபர் என்னை பாலோ பண்றார்.பீலிங் ப்ரவுட்


மேடம்.அப்போ உங்களை பாலோ பண்ணும் மீதி 25867 பேரும் ஆரோக்ய நபரா?


====================

11 படத்துல ,நடனம்,சண்டை காட்சிகள் ஆகிய 3ம் மற்ற படங்களை விட,2 மடங்கு அதிகமாக இருக்கும்

அப்போ தெலுங்கு டப்பிங் படம் போல்னு சொல்லுங்க==================


12 மொபைல் தண்ணில விழுந்தா உடனே போனை அரிசி மூட்டைக்குள் போடனும்.சரி ஆகிடும்


போட்டேன்.சார்ஜ் ஹோல் வழியா அரிசி உள்ளே போய்டுச்

==============13 எதுக்காக அவரை கெட்ட வார்த்தைல திட்றீங்க?


ஹீரோ -நீங்க தானே பட டைரக்டரைப்பற்றி 4 வார்த்தை பேசுங்கன்னீங்க


===============

14 ஆண்களை விட பெண்கள் செய்வது தான் எப்பவும் சரியா இருக்கும்

அப்டியா?எப்டி?
சினிமா தியேட்டர்ல லேடீஸ் பாத்ரூம் "ரைட்"சைடுதான் இருக்கும்


=================

15 நீ தூங்கும்போது உனக்கு தீ வெச்சு கொலை பண்ண முயற்சி செஞ்சது உன் கள்ளக்காதலியா?எப்டி ?
தீ தீ தித்திக்கும் தீ ன்னு பாடினா.அதான் டவுட்


=================

16 சார்.நீங்க எழுதறது எல்லாம் ஜோக் னு நினைச்ட்டு இருக்கீங்க.

நோ நோ.நான் அப்டி நினைப்பதா நீங்க தப்பா நினைக்கறீங்க


=================

17 தலைவரே!உங்க கட்சி வேட்பாளர் லிஸ்ட் ல செத்துப்போனவர் பேர் எல்லாம் வருதே?

ஓ.ஐ திங்க் உயிரைக்கொடுத்து சீட் வாங்கி இருப்பார்


==================

18 ஜோசியரே!,என்னை ஒரு கிரகம் தினம் சுத்தி வருது.என்ன பண்ண?

மிஸ்.அவனையே மேரேஜ் பண்ணிக்குங்க.வாழ்நாள் கிரகம் அவனுக்கு


====================

19 சார்.அரசாங்கத்தை எதிர்த்து என்னை மாதிரி தில்லா ட்வீட் போடுங்க பார்ப்போம்.

ம்.இப்போ நீங்க எங்கே?

அமெரிக்கால

அதான் தில்லா

=============

20 மோகன்லால் ன் புலி முருகன் மீடியமாதான் ஓடுமா?ஏன்?


புலி அட்டர் பிளாப்.ரஜினி முருகன் செம ஹிட்.அப்போ புலி முருகன் மீடியம்

=================

0 comments: