Thursday, October 20, 2016

நல்லவேளை.மோடிக்கு தமிழ் தெரியாது.தெரிஞ்சா

1  பிரதமர் மோடி, முதல்வர் ஜெ வை, இதுவரை வந்து பார்க்காதது ஏன்?-
தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் # உள்ளூர்ல இருக்கும்   உங்களைப்போன்ற ஆட்களே    இன்னும் பார்க்கலை

=================

 தன் அரசியல் நோக்கத்திற்காக, தமிழகத்தின் நலனை காவிரியிலும், கச்சத்தீவிலும் விட்டுக் கொடுத்தவர் கருணாநிதி.-அன்வர் ராஜா # விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போனதில்லை ஃபார்முலா?

===================

3   ,கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை விட குறைவான ஓட்டுகளைத் தான், விஜயகாந்தின், தே.மு.தி.க., பெற்றது. மக்களால் நிராகரிக்கப்பட்ட, தே.மு.தி.க.,வை, கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என்ற அவசியம், பா.ஜ.,வுக்கு இல்லை.- இல.கணேசன் # மைனஸ்  இண்ட் மைனஸ் பிளஸ்  ஃபார்முலா  ட்ரை பண்ணிப்பார்க்கலாமே?


===================


4   தயாரித்து : ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை # தீர்ப்பு சொன்ன ஜட்ஜ்  பாலசுப்ரமணியம். ராமரை தண்டித்த முருகர்னு கிளம்புவாங்களே?


==================


5   அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் சிறை தண்டனை  # அதிக விலைக்கு தண்ணீர் விற்றா தண்ணி காட்டிடுவாங்க

=============

 6  போலீசார் ஊழலுக்கு இரையாகக் கூடாது: பினராயி விஜயன் # ஊழலின் ஊற்றுக்கண்னே போலீஸ் தானே?

===================

7  கேரளாவில், விதிமுறையை மீறி, உறவினர்களுக்கு அரசு பணி வழங்கி 
சர்ச்சையில் சிக்கிய, கேரள அமைச்சர் ஜெயராஜன், 66, பதவியை,  ராஜினாமா # உறவுக்கு கை கொடுப்போம் என்பதை பதவி கொடுப்போம்னு புரிஞ்சிக்கிட்டாரு போல

==================


8  ஜெ  உடல் நலம் குறித்து சசிகலாவிடம் விசாரித்த ராஜாத்தி கருணாநிதி # சாணக்கியர் பட்டம் சும்மா எல்லாருக்கும் வந்துடாது


=================


9  ஏ தில் ஹை முஷ்கில்' ஐஸ்வர்யாராய்-ரன்பீர் படுக்கை அறை காட்சிகளை வெட்டி யுஏ சான்றிதழ் # அபிசேக் பச்சன் ஜீவன் முஷ்கில்'

===============

10 தீபாவளி பண்டிகையையொட்டி 21 ஆயிரம் சிறப்பு பஸ்கள் # டபுள் மடங்கு கட்டணம் வசூலிப்பதுதானே சிறப்பு பஸ்கள்?


================


11 தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! # கர்நாடகா தராட்டி என்ன?காலதேவன் .வருணபகவான் நம்ம பக்கம்

=============


12 கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கினால் மட்டுமே அமைதியாக இருப்பார்.. பண்ருட்டி ராமச்சந்திரன் #,ஆனா அழகிரி ஆர்ப்பாட்டம் பண்ணுவாரே?==============13 மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை #,1999ல போட்ட கேஸ் க்கு17 வருசம் கழிச்சு தீர்ப்பு.டூ லேட்
==============14 அமெரிக்க வேலையை உதறி "டீ" கடையை திறந்த ஐஐடி மாணவர்கள்!!

# மோடி தான் இவர்கள் முன்னோடி
நாடு விட்டு நாடு தாண்டிப்போக வேணும் நிதம் ஓடோடி


===============

15 குழந்தைகளுக்கு மோடி பெயரை வைக்க வேண்டும் -தமிழிசை
# அய்யய்யோ.வீடும் தங்காது.நாடும் தங்காது.பெற்றோர் மனசு தாங்காது!

=============

16 இந்தியாவும், ரஷ்யாவும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி- மோடி# நாளைக்குக்கிடைக்கும் பலாக்காய் எதுக்கு.இன்னைக்கு கிடைக்கும் கிலாக்காய் ?

================

17 வாரணாசியில்் பாபா ஜெய் குருதேவின் சபா நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி!# சாமியாரைப்பார்க்கப்போனா சாமியையே பார்த்துடலாம் போல

==============

18 ஜெ உடல் நிலைக் குறித்து பேசுவதற்காக வழக்குப் பதிவு செய்வது சிறு பிள்ளைத் தனம்: ராமதாஸ் # பேசுவது வேறு.அவதூறு பரப்புவது வேறு

=============

19 ஜெ.சிகிச்சை பெறும் வார்டுக்கு போகவில்லை.-தமிழக பொறுப்பு ஆளுநர் # எல்லாரும் இதையேதான் சொல்றாக

================

20 மோடியை விமர்சித்து ஃபேஸ்புக் பதிவு:
உ.பி.யில் பள்ளி முதல்வர் கைது .# நல்லவேளை.மோடிக்கு தமிழ் தெரியாது.தெரிஞ்சா

===============

0 comments: