Monday, October 17, 2016

2 சசிகலாவையும் துரத்த எதுனா வழி உண்டா?

ஜெ.உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்-இனி செயற்கை சுவாசம் இல்லை: மாலினி பார்த்தசாரதி ட்வீட் # ஒருத்தரும் இது பத்தி மூச்சு விடலையே ஏன்?


===========2 காவிரி: தமிழகத்துக்கு மோடி பச்சைத் துரோகம்– சீமான் # ரீசன் சிம்ப்பிள்.கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கு.இங்கே இல்ல===========3 கருணாநிதி ஆணையிட்டதால் அப்பல்லோ வந்தேன் - ஸ்டாலின் # அண்ணன் அழகிரி கிட்டே அனுசரிச்சுப்போகச்சொன்னாரே?அது?===============4 ஜெ வை சந்திக்க முடியவில்லை.. அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் !# கவர்னாராலேயே முடியல.இதை புகாரா சொல்லவே போய் இருப்பார் போல===============5 தமிழக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி கோரும் சு.சுவாமி # சட்டப்படி அதுக்கு வாய்ப்பே இல்லை.கட்சி உடையலை
=============6 காவிரி பிரச்சினையில் பாஜக அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது - ராமதாஸ் # தேர்தல் வரட்டும்.4% ட்டை 0 % ஆக்கி பாடம் புகட்டுவோம்
================7சுப்பிரமணியன் சாமி குறித்தெல்லாம் என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்-இல.கணேசன்: # ஆர்  பாண்டியராஜன் ஆக்ட் பண்ண பழைய படம் பத்தி ஏன் உங்க கிட்டே கேட்டாங்க?-- 


=================

அஜீத் ஒரு ஜென்டில்மேன் -காஜல்அகர்வால் # அப்போ கே டி குஞ்சுமோகன் , அர்ஜூன் , இவங்க எல்லாம் யாரு?

=================


தனிக்குடித்தனத்திற்கு கட்டாயப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட் # இது தெரிஞ்சா சம்சாரம்ங்க வீட்டையே 2 பண்ணிடுவாங்க.ஒரு வீட்ல சம்சாரம்,21 வது வீட்ல அம்மா,அப்பா


======================
10 10   : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத மத்திய அரசை கண்டித்து, திருச்சியில், 15ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்-திருநாவுக்கரசர் # எவ்ளோ மணி வரை?


================


11  தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டிருப்பது, தற்போது, கர்நாடக, காங்., அரசு தான்-தமிழிசை # எந்த ஏரியா போனாலும்  காங்    தமிழர்க்கு துரோகம் தான் செய்யுது

==============

12  ,  தமிழகம் காவிரியில் இருந்து தண்ணீர் கேட்டு நிற்பதைவிட, கடலில் இருந்து குடிநீர் உருவாக்கி,மக்களுக்கு வழங்க வேண்டும்-சுசாமி:# எப்பவோ கிடைக்கப்போகும் பலாக்காயை விட இப்போ கிடைக்கும் கிலாக்காய் மேல்

================

13  முதல்வர் உடல்நிலையை பயன்படுத்தி, தமிழகத்தில், ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர, பா.ஜ., முயற்சிக்கிறது.-திருமாவளவன் # போதிய பெரும்பான்மை இருப்பதால் ச்ட்டப்படி  பாஜக கனவு பலிக்காது

===================

14    மத்திய அரசு கன்னடர்களையும், தமிழர்களையும் சம தட்டில் வைத்து பார்ப்பதில்லை-பெ.மணியரசன் #  ஏன்னா தமிழகத்தில் பிஜேபிக்கு ஓட்டு வங்கி இல்லையே? 

====================


15    அரசியல் லாபத்திற்காக, பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகள், கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றன- ஜி.கே.வாசன் # வியாபாரம்னா லாபம் பார்ப்பது சகஜம் தானே?

==================

16 அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சசிகலாவை துரத்த அதிமுகவினருக்கு சசிகலா புஷ்பா அழைப்பு #,2 சசிகலாவையும் துரத்த எதுனா வழி உண்டா?


===============

17 இன்னும் 4 ஆண்டுகளில் மன அழுத்தத்தால் பலர் உயிர் இழப்பர்: டாக்டர் திடுக் தகவல் # இப்பதான் பிரசர் ஜாஸ்தி ஆகுது

=============

18 திமுகவுடனான காங். கூட்டணி ஆயுட்காலத்துக்குமானது அல்ல இல்லை: திருநாவுக்கரசர் # ஆயுள்.தண்டனையே.14,வருசம் தானே?


================

19 தீவிர கண்காணிப்பில் உள்ள ஜெ வை தொந்தரவு செய்வது சரியல்ல... கிரண் பேடி # உண்மை நிலவரம் எப்டி தெரிஞ்சுக்க?

===============
குடியரசுத் தலைவர் சம்பளத்தை 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்- செய்தி# நமக்கெல்லாம் 20% கூட ஏத்தறதில்லை20

=====================

0 comments: