Friday, October 21, 2016

உன் கண்ணீர் மதிக்கப்பட வேண்டும் எனில்

சன் டிவில செய்தி வாசிக்கும் செண்பகம் டார்க் க்ரீன் சேலைக்கு வாடாமல்லி ஜாக்கெட் போட்டிருக்கு.இந்த மாதிரி மேட்சிங்கே இல்லாம வந்தா எப்டி? என்னம்மா இப்டிப்பண்றீங்களேம்மா!


===========2 அந்தக்கால விமர்சகர்கள் படத்தோட தரத்தை மட்டும் அலசி ஆராய்ஞ்சாங்க.இப்போ பட வசூல் பத்தியும் கணிக்க வேண்டியதா இருக்கு
===============3 கடந்த 13 வருடங்களில் ரெமோ போல் ஆனந்த விகடனால் கலாய்க்கப்பட்ட படம் வேறில்லை.கடைசியா பாய்ஸ்.இப்போ ரெமோ.மார்க் 36=================
4 நடுநிலை தவறிய விகடனின் காட்டமான ரெமோ விமர்சனத்தால் அந்தப்படத்துக்கு பெரிய பாதிப்பு வராது.ஆனால் பத்திரிக்கையின் பெயருக்கு களங்கமே==========5 சிவ கார்த்திகேயன் ரசிகர்களை சிவ சேனை ஆட்கள் னு சொல்லிட முடியாது
===========

6 நம்மைப்பார்த்து இப்படி ஒரு சந்தேகக்கேள்வி கேட்டுவிட்டார்களே என கூனிக்குறுகி வெட்கப்படவேண்டிய சூழலில் கூட பெருமையாய் நினைப்பது அறியாமை


==============


உங்களிடம் மட்டுமே உள்ளம் கவர் கள்வனாக உரையாடுகிறார் என உளமாற எவரையும் நம்பாதீர்


=============8 SUN tv சீரியல் ல 5 லட்சம் ரூ செக் தந்த ஆள் A/Cல 4.75 ல தான் இருக்குனு செக் பவுன்சாம்.மீதி 25,000நாமே கட்டி பாஸ் பண்ண வைக்கலாமே
=============9 ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு இன்னிக்கு ஆஷாசரத் நடிச்ச நல்ல மலையாளப்படம் பார்க்கும் உள்ளங்களுக்கு வாழ்த்து
============10 இயக்குநர் விஜய் டைரியிலிருந்து சுட்டதுபழகப்பழக அமலா பாலும் புளிக்கும் (பி கு.டைவர்சுக்கு முன்பே கணித்து எழுதியது)


=============

11 கிசுகிசு - ரெமோ வும் சிரிக்கும்போது 8 போட்டது போல் சிரிக்கும் நாயகியும் பாரீனில் மரியாதை நிமித்தமான சந்திப்பு

==============

12 தேடி வந்து பறித்தால்தான் பூவுக்கு மரியாதை===============13 ஆம்பள அழக்கூடாதுன்னு சொல்றாங்களே.நிஜமா?கண்ணீர் ,தண்ணீர் இருபாலருக்கும் பொது.இதில் ஒரு பாலருக்கு மட்டும் கட்டுப்பாடு ஏது?

=============

14 ஆண்ட்ராய்டில் வைரஸ் ஏறாது
ஆண்ட்ரியா மனசு மாறாது


==================

15 சுயநலத்துக்காக மதம் மாறுபவர்கள் அடிக்கடி மனம் மாறுபவர்களாகவும் இருப்பார்கள்


===============

16 அன்புக்கு உரியவரை வசீகரிக்க எதுவும் மெனக்கெட்டு செய்யத்தேவை இல்லை.அவரவர் இயல்பாய் இருத்தலே வசீகரம்


================

17 வசதி படைத்த வனிதைகள் எனினும் அழகியல் ரசனை உள்ளவர்கள் உதிரிப்பூக்கள் தான் வாங்குவார்கள்.கைப்பட கட்டுவதும் ஒரு கலை


==============

18 பச்சப்பயிரு வேகவச்சுட்டு கடையறதுக்கு மத்து இல்ல என கவலைப்படேல்.சாம்பார் கரண்டியின் குவிப்படலத்தை மத்தாய் பயன்படுத்துக!


==============


19 உன் கண்ணீர் மதிக்கப்பட வேண்டும் எனில் மற்றவருக்காக நீ அழவேண்டும்

================

20 மகிழ்ச்சியான வாழ்க்கையை விரும்புபவரை விட நிம்மதியான வாழ்வை விரும்புபவர் தான் விரும்பத்தக்கவர்

===============

0 comments: