Saturday, October 15, 2016

எதிரியிடம் இருந்து ரசம் கிடைச்சாலும் அது விசம் தான்

உண்மை நிலையை, ஜெ வே
விளக்கம் கொடுத்து விட்டால், வதந்திகளுக்கு, முற்றுப்புள்ளி .- விஜயகாந்த் # மயக்கத்தில் இருக்கும்போது பேச்சு வராதுங்கோ

=============

2 வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு # நிஜமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் இது தான்

=============
3  காவிரி பிரச்னையில், மோடி, சோனியா இருவரும் தலையிட வேண்டும் - கலைஞர் # உங்க கூட்டணி ஆள் தானே? நட்பு முறைல  கேட்டுப்  பாருங்க


=================


பதவி , வசதி கிடைக்கும்  என்பதால்     ஆளுங்கட்சிக்கு  அல்லவா செல்ல வேண்டும்! , எதிர்க்கட்சியான, தி.மு.க.,வுக்கு ஏன் வருகின்றனர்?-ஸ்டாலின் #  ஏன்னா  வலை போடறவருக்குத்தானே மீன் மாட்டும்?-

====================

5  மக்களை பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி, தி.மு.க., மட்டுமே-ஸ்டாலின்  #  அதாவது எதிர்க்கட்சியா இருக்கும்போது மட்டும்  மக்களை பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி


===================


தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை -ஸ்டாலின் # சினிமா பார்க்கனும்னு தியேட்டர் போகல.

==============

7 செல்போன், டுவிட்டர், பேஸ்புக் கால் மக்கள் சோம்பேறிகளாகி விட்டனர்-நடிகை ஐஸ்வர்யாராய் ட்விஸ்ட் என்னான்னா இதை சொன்னதே ஒரு ட்வீட் மூலமா

===========

8 சமூக வலைத்தளங்களில் சசிகலா புஷ்பா அவதூறு செய்தி படங்கள் வெளியிட தடை டெல்லி கோர்ட்டு அதிரடி.# உலகமே பார்த்த படத்துக்கு இனி சென்சார் எதுக்கு

================


9 பொதுமக்களுக்கு ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஏன் விளக்கம் அளிக்கவில்லை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி # தேவையற்ற கலவரம் குழப்பம் தவிர்க்க

=================


10 உள்ளாட்சி தேர்தல் ரத்து உத்தரவு; தீர்ப்புக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு # பரீட்சைதேதி தள்ளிப்போனா லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்சுக்கு கொண்டாட்டம்


=================


11 லண்டன் டாக்டர் நாடு திரும்பினார்: ஜெ உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அப்பல்லோஅறிக்கை # அவர் நாடு திரும்பினா இவர் உடல்நிலை எப்டி முன்னேறும்?


=================

12 இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” தன் மீது மை வீசியவரை வாழ்த்திய அரவிந்த் கெஜ்ரிவால் # கட்சி அடியாளுங்களுக்கு ஏதோ ஹின்ட்ஸ் கொடுக்கறார் போல


=================

13 வீடியோ ரிலீஸ்.நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா? முதலில் உங்கள் உடலை பாருங்கள்- ராதிகா ஆப்தே # ஏம்மா.பிட் ல நடிச்சது நீங்க


=================


14 சுழல் விளக்கு இல்லாத காரில் கோட்டைக்கு வந்த அமைச்சர்கள் # கட்சிக்கு ஒளிவிளக்கே ஆஃப் மோடில் இருக்குன்னு தானோ?


====================


15   ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சியில் வேட்பாளர்கள்:இதுவரை செலவு செய்த ரூ.50 லட்சம், 'அம்போ? #  ஜெயிச்சு   அம்பானி ஆகலாம்னு எதிர்பார்த்தவங்க அம்போ னீ  ஆகிட்டாக

======================

 16   தாம் தெரிவிக்காத தகவல்கள் எல்லாம் ஊடங்களில் வருகிறது"
அழகிரி குற்றச்சாட்டு # இது யார் தெரிவிச்ச ஸ்டேட்மெண்ட்டோ?


===============
17    மக்களே உஷார்.. சென்னை ஏடிஎம் எந்திரத்தில் கள்ள நோட்டுகள்.. # கள்ளக்காதலர்கள், கள்ள ஓட்டு , கள்ள நோட்டு பெருகிடுச்சு

=================

18 பாகிஸ்தானிலிருந்து சிமென்ட் இறக்குமதிக்கு தடை! # எதிரியிடம்  இருந்து ரசம்  கிடைச்சாலும் அது விசம் தான்


==================
19 அவரவர் வேலையைப் பாருங்க... தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு # என்ன வேலை?ன்னும் சொல்லிக்குடுக்கவும்

==============

20 பேசும் நிலையில் ஜெ இல்லை.. தா.பாண்டியன் தகவல் #,என்னது?நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது காந்தியா?எப்டி தெரியும்?


====================

0 comments: