Wednesday, October 19, 2016

நாம திண்ணைல படுத்தா ஊர்ல எல்லாரும் அப்டியே படுக்கனும்னா எப்டி?

என்னிடம் எம்எல்ஏ,எம்பிக்கள் எல்லோரும் தொடர்பில் உள்ளனர்.-சசிகலா புஷ்பா# இப்டி தான் கேரளாவில்.சரிதா நாயர் சொல்லிட்டு இருந்தது


=============2 மருத்துவர்களிடம் ஜெ பேசி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

- புதுவை துணை நிலை ஆளுநர் # பேசுன ஆடியோ/வீடியோ லிங்க் இருக்கா?

================


3 ஜெ உடல்நிலை குறித்து தவறாக வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை -இருவர் கைது.# அப்போலோ டாக்டர்கள் உஷார்


============

4 நாட்டிலேயே அதிக ஜாதிச்சண்டை நடக்கும் 2வது மாநிலமா தமிழகம் #,ஜாதிக்கட்சிகளுக்கு தடைவிதிச்சாலே 60%ஜாதிச்சண்டைகள் குறைஞ்சிடும்


============5 திமுக மக்களுக்காக போராடும் உண்மையான கட்சி - ஸ்டாலின்

# எதிர்க்கட்சியா இருக்கும்போது மட்டும் போராடுவது போல் காட்டிக்கும் கட்சினு சொல்லுங்க

==============

6 ஜெ ் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு; ஆளுநர் மாளிகை அறிவிப்பு # இவ்ளவ் தான் மேட்டர் ஓவர்.கலைஞர் கனவெல்லாம் கானல்

==============

7 இந்தியாவில் கண்ணாடி மேற்கூரைகளுடனான ரெயில் பெட்டிகள் அறிமுகம்; இந்திய ரெயில்வே பட பஸ் ரெப்ரன்ஸ்

===========

8 சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் பெண்களுடன் கும்மாளமிடும் புகைப்படம் YSR காங்கிரஸ் வெளியிட்டது# "கை"யாலாகாத கட்சினு இனி யாரும்சொல்லிடமுடியாது

=============

9 மதப் பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை தேவையா?-வீரமணி
# லீவ் தான் பிரச்னையா?ப்ளீஸ் லீவ் திஸ் மேட்டர்.ஜாலியா எஞ்சாய் பண்ண விடுங்க

==============

10 தி.மு.க., -- காங்., இடையே, எந்தப் பிரச்னையும் இல்லை.-தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் # பொண்ணுங்களும் அரசியல்வாதிகளும் இல்லைன்னா இருக்குன்னு அர்த்தம்==================11  முடங்கி கிடக்கும் அரசு செயல்பட கவர்னர்நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கலைஞர் # மனசுக்குள் அடங்கிக்கிடக்கும் ஆசையை வெளியே சொல்லமுடியாம தவிக்கறாரு
=================
12 மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிக்கிறது- வை,கோ  # ஆள்பவர்  ஒரு பெண் என்பதால் “வஞ்சி”க்கிற்து போல

====================
13   வாஜ்பாய் எந்தப் பாதையில் பயணம் செய்தாரோ, அதே பாதையில் தான் மோடியும் பயணம் செய்கிறார் -இல.கணேசன் # இல்லையே, 2 பேர்  டூர் மேப்பையும் நல்லாப்பாருங்க
=====================
14 நான் 18 மணி நேரம் நடிக்கிறேன் - சிவகார்த்திக்கேயன் # வாரம் ஒரு படம் ரிலீஸ் பண்ண மைக் மோகனே டெய்லி 6மணி நேரம்தான் நடிச்சாராம்=============

15
பெண்களிடம் மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் மீது பகிரங்க புகார் # க்ளீன் போல்டு ஆகிடுவார் தேர்தல்ல===============16 வாய்ப்பு கொடுத்தால் ஜெ க்கு நான் சிகிச்சை அளிக்கத்தயார்-தமிழிசை# விட்டா DR ராம்தாஸ் ,டாக்டர் கலைஞர்னு எல்லாரையும் கூட்டிட்டுப்போய்டுவார் போல==============
17 ராகுல் சொல்வதில், குண்டூசி அளவுக்குக் கூட மாறாமல் நான் நடப்பேன்.-தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் #பார்த்து. நடக்கும் பாதையில் குண்டூசி கிடக்கப்போகுது==================

18 பண்டிகைக்கு ரூ.500 கோடி: டாஸ்மாக் இலக்கு-செய்தி # தமிழக அரசின் இலக்கு  தமிழக குடி மக்களின் லக்கு

=================
19  கர்நாடகாவில் தேர்தல் வர உள்ளதால், அங்கு, பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தமிழகத்தையே, மோடி அரசு புறக்கணிக்கிறது.-
முத்தரசன் #  ஓட்டுக்காக நமக்கு வெச்சுட்டாங்க   வேட்டு

===================

20  

உள்ளாட்சி தேர்தலில், அனைத்து கட்சிகளும், தனித்து போட்டியிட வேண்டும் -பொன் ராதா #  நாம திண்ணைல படுத்தா ஊர்ல எல்லாரும் அப்டியே படுக்கனும்னா எப்டி?


==================

0 comments: