Monday, October 10, 2016

திருவள்ளுவரும் ,அகத்திய முனிவரும் கூட விஜய் ரசிகர் தானா?எப்டி?

ராதா வுக்கு இரு ஷாப்பிங் மால் அப்டின்னு ஹேண்டில் வெச்சிருக்கீங்களே மேடம்?


கீதாவுக்கு இருமல் னு எல்லாம் வைக்கறாங்க.இப்டி வெச்சா என்ன?


==============

2 ஸார்.உங்க புதுப்பட கெட்டப் ரஜினி கெட்டப்ல இருந்து சுட்டதுன்னு சொல்றாங்களே?


இருக்கட்டும். ரஜினி பட டைட்டிலையே சுடறாங்க============

3 உங்க காபிக்கடைல டிகிரி ஹோல்டர் ,டிப்ளமோஹோல்டர்னு படிச்சவங்களா வேலைக்கு வெச்சிருக்கீங்களே?
டிகிரி காபி டிப்ளமோ காபி னு பல வெரைட்டி தரனுமில்ல?

=============

4 டியர்.தீபாவளிக்குள்ள என் கழுத்துல ஒரு தாலிக்கொடி கட்டுவீங்களா?


தியேட்டருக்குக்கூட்டிட்டுப்போய்"கொடி"படம் வேணா காட்றேன்=============

5 ஜோசியரே! ஜாதகப்படி கொடி என்ன ஆகும்?


கொடி பறக்குது
அன்னக்கொடியும்கொடி வீரனும்
இந்த 2 கொடிக்கும் என்ன ஆச்சோ அதே தான்


ஓஹோ, அப்போ வெற்றிக்கொடி கட்டு ம்?

====================

6 டைவர்ஸ் ஆன அன்னக்கொடி ,வாழா வெட்டி பூங்கொடி 2 பேருக்கும் ஹீரோவாழ்க்கை தர்றாரு.


ஓ.டைட்டில்?
கொடி காத்த குமரன்

===========

7 காதலி சிம்பு ரசிகைன்னு தெரியாம வர்ணிச்சு வாங்கிக்கட்டிக்கிட்டேன்


அப்டி என்ன வர்ணிச்சே?
கொடி இடையாள் னேன்================

8 மிஸ்!ஐ லவ் யூ.


சாரி.யூ ஆர் இன் வெய்ட்டிங் லிஸ்ட்
அய்யோ அப்போ ஓக்கே சொன்னாக்கூட சைடு லோயர் பர்த் தான் கிடைக்குமா?


==============


9 இன்னைக்கு சேலரி நைட்.


சேலரி டே ன்னு தானே சொல்வாங்க?
அது பகல்ல க்ரெடிட் ஆனா.எங்களுக்கு நைட் 7க்கு தான் க்ரெடிட் ஆகும்


==============


10 இன்னிக்கு சந்திராஷ்டமம் கொஞ்சம் அமைதியா இருந்தா நல்லது.


ஜோசியரே! அதுக்கு சந்திரா மட்டும் அமைதியா இருந்தா போதாதா?================

11 டியர்.என் புது மாடல் மணி பர்ஸ் கொண்டை எப்டி இருக்கு?


நல்லாதான் இருக்கு?கொண்டைக்குள்ள காசு , பணம் இருக்குமா?================

12 திருவள்ளுவரும் ,அகத்திய முனிவரும் கூட விஜய் ரசிகர் தானா?எப்டி?


துப்பார்க்குத்துப்பாய "துப்பாக்கி" குறள் ,அ"கத்தி"யர்


===========

13 வரலாறு மிஸ் வனஜா =கொடி நாள் எப்போ கொண்டாடுவாங்க?


மாரி = தீபாவளிக்கு டீச்சர்
என்னடா உளர்றே?
அப்டேட் ஆகுங்க.கொடி தீபாவளி ரிலீஸ்


============

14 சார்.4 நாள் ல 155 ரூ செலவுல பாஸ்போர்ட் ரெடி ஆகும்னீங்க?


யா.ரெடி ஆகிடுச்சு.உங்க கைக்கு வரனும்னா 4000ரூபா தரனும்==============

15 நவாஸ் -நாங்க நினைச்சா இந்தியாவுக்குள்ளே புகுந்து குண்டு போட முடியும்


மோடி =கொஞ்சம் பின்னால திரும்பி பாரு கண்ணா.ஆல்ரெடி நாங்க செஞ்சாச்


==============

16 டாக்டர்.ஹஸ்பிடல் முன்னால யாகம் நடத்தினா எங்க தலைவி குணம் ஆகிடுவாங்களா?


லூசாய்யா நீ?புகை பரவுனா எல்லா பேசண்ட்டுக்கும் ஆபத்து,தலைவி உட்பட

=============

17 டாக்டர்.கண் ல பூ விழுந்திடுச்சு.என்ன பண்ணலாம்?


மலர் விழி ன்னு பேரை மாத்திக்குங்க


==============

18 ஜட்ஜ் = தவறான வதந்தி /தகவல் பகிர்ந்தது சட்டப்படி தப்பு


கைதி =யுவர் ஆனர்.அப்போ டாக்டர்தான் குற்றவாளி.நலம் னாரே?


===========

19 டாக்டர்.சாதா காய்ச்சல்னீங்க.லண்டன் ல இருந்து ஸ்பெஷலிஸ்ட் எதுக்கு வந்திருக்காங்க?
அது வந்து,ஆங்.அது சாதாவானு செக்


============

20 தலைவரே!உங்க எதிரியைப்பார்க்க ஹாஸ்பிடல் வர்றீங்களே.நீங்க அவ்ளோ நல்லவரா?

ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஒரு அடி எடுத்துவைக்கமாட்டான்


==================

0 comments: