Sunday, October 16, 2016

காஷ்மோரா டைட்டிலுக்கு ஏன் தடை?

1  டாக்டர். ரொம்பநாளா வாக்கிங் போனும்னு நினச்சிட்டே இருந்தே ன்.ஆனா போக முடியல


உங்களை மாதிரிதான் ஊருல கொள்ளைப்பயலுக இருக்காங்க===================

2 DR,நான் தூங்கும்போது ஏகப்பட்ட ட்வீட்ஸ் தோணுது.விழிச்சா மறந்துடுது.என்ன செய்ய?


கைல செல்போனை வெச்சுக்கிட்டே தூங்குங்க


==================

3 எங்க கட்சி ஜெயிச்சா நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்.


எங்கே? ஆல்ரெடி ஓடிட்டிருக்கும் ஒரு காவிரி ஆற்றைக் கூட இங்கே ஓட வைக்க முடியல?


==============

4 டாக்டர்,மேகி சாப்டலாமா கூடாதா??

--
மேகி சாப்ட்டா எங்களுக்கு நல்லது ,தவிர்த்தா உங்களுக்கு நல்லது


=============

5 டியர்.நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி


யோவ்
என்னை ஏன் ரதி போல் நினைக்கறே?என்னை என்னையாவே நினை.டோன்ட் கம்ப்பேர்

=================

6 இன்ஸ்பெக்டர்.ட்யூட்டி டைம் ல நெட் ல வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்களே?ஏன்?


சார்.அந்த 50பேரை கண்காணிச்ட்டு இருக்கோம்===============

7 ஜட்ஜ்- பூங்கொடி,மலர்க்கொடி ,அன்னக்கொடி 3 பேரை கரெக்ட் பண்ணி இருக்கே.
கைதி.= கூல்.யுவர் ஆனர்.கொடி .தனுஷ் ரெப்ரன்ஸ்


==============


8 சார்.நீங்க அடிக்கற மொக்கை ஜோக்குக்கு கண்டிப்பா சிரிக்கனுமா?


நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசரா?சிரிக்கும்போதுகூட கண்டிப்பாதான்?=================

9 நான் எப்போ எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் ஒருத்தர் லைக்ஸ் போடறாரு.என்ன அர்த்தம்?


அந்த ஆளுக்கு வேலை வெட்டி எதும் இல்லனு தெரியுது மிஸ்================

10 டாக்டர்.ஆபரேஷனை தள்ளிப்போடனும்


ஏன்?
இது என் மீது தொடுக்கப்படும் சர்ஜிக்கல் அட்டாக்கோனு டவுட்====================


11 பெண்கள் ஜாக்கெட்டுக்குள் பர்ஸ் வைப்பது வழக்கொழிந்து போய்விட்டதாமே?அது ஏன்?


பர்ஸ் ல செல் இருக்கு.அடிக்கடி ரிங் அடிக்கும்.எடுக்கனும்ல


=================

12 விஜய்சேதுபதி -,சிம்பு என்ன வித்யாசம்?


4 வாரத்துக்கு ஒரு படம் ரிலீஸ் ஆனா அது வி சே
4 வருசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் ஆனா அது சிம்பு

===============

13 சார்.ஹிந்திப்படம் பார்க்கற மாதிரி ஒரு உணர்வு


அவ்ளோ பிரம்மாண்டமா இருக்கா?நன்றி
நாசமாப்போச்சு.படம் கதை வசனம் புரியல


===============

14 DR,பொதுவா சிகரெட் /வெத்தல பார்ட்டிக்குத்தானே நுரையீரல் அடைக்கும்?
ஆமா, கூடவே பீடா பார்ட்டி ,சரக்கு பார்ட்டிங்களையும் லிஸ்ட்ல சேர்க்கவும்


=================


15 கடவுளே! பொதுவா ஆண்கள் பெண்களை விட உயரமா இருக்காங்களே?ஏன்?


ஒவ்வொரு டைம் கிஸ் தரும்போதும் பணிவா குனிஞ்சு அடங்கி நடக்கத்தான்

===================


16 நான் FB விட்டே போறன்.

திரும்பி வரும்போது
பார்க்கலாம் ப்ரண்ட்ஸ்
மிஸ், திரும்பி வரும்போது ரிவர்ஸ்ல எப்டி பார்ப்பீங்க?


===============

17 சார்.உங்க விமர்சனத்துக்குப்பதிலா இனிமே மிஸ்டர் ப்ராங்க் தான் விமர்சிக்கப்போறாரா?

ஏன்?
இனிமே FRANK REVIEW தான்னு சொன்னீங்களே?

=============

18 DR,சாப்பிடும்போது புரை ஏறினா, யாரோ நம்மை நினைக்கிறாங்கனு அர்த்தமா?திட்டறாங்கன்னா?

பொறுமையா சாப்பிடாம அவசரப்படறீங்கனு அர்த்தம்

===============

19 சார்.இன்று முதல் அதிக தியேட்டர்களில் னு ADVT வந்தா ஹிட்டா?
ஓவர் ரேட் டால் ஒதுங்கினவங்களை கூப்ட்டு ரேட் குறைச்சுக்குடுத்திருப்பாக

============

20 சார்.பட டைட்டிலுக்கு ஏன் தடை?

காஷ்மீரா?ன்னு வெச்சா? கலவரம் வரும்ல?
அய்யோ ஊர்மிளா.அது காஷ்மோரா ங்க

==============

0 comments: