Tuesday, October 18, 2016

உங்க ஹோட்டல்ல வெப்சைட் டீ கிடைக்கும்னு போர்டு இருக்கே?

சார்

பஸ்ஸிலே பயணம் செய்தால்கூட போனை"பிளைட்மோடில்"
வைத்துவிடுறீங்க.ஏன்?
பக் சீட் பிகர் போனைப்பார்த்தா நான் பிளைட்ல போறேன்னு நம்பிடுமில்ல?


==============
2 டாக்டர்.சாப்பிடாம, தண்ணீர் குடிக்காம 68 நாள் வரைக்கும் இருக்க முடியுமா?


இறக்க முடியும்


=============

3 சார்.மாமனார் வீட்ல மட்டும் சுடுதண்ணி தான் குடிக்கறீங்க.ஏன்?


உங்க வீட்ல பச்சைத்தண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொல்லீட்டேன்


==================


4 நித்யானந்தா பின்னாடி கூடற கூட்டம் அவர் எதுவும் தப்பு பண்ணலைனு நம்பறாங்களா?


ஆசிரமம் போய்ட்டா நாமும் ஜோதில ஐக்கியம் ஆகிடலாம்னு


===========

5 புலி எப்பவாவது தன் உள்ளங்காலை கழுவி இருக்கா?


இல்லை.ஏன்னா ஆல்ரெடி டெய்லி 10 பேரு "புலி"யைக்கழுவி கழுவி ஊத்திட்டு இருக்காங்களே?

===============

6 என்னைக்கொலை பண்ணப்போறதா.2,வது முறையா மிரட்டல் வந்திருக்கு.


இதெல்லாம் அட்டென்சன் சீக்கிங் அலட்டல்னு சொல்றாங்களே?


==============
7 உங்க படத்துக்கு" பறக்கத்தெரியாத பருந்து"ன்னுவிமர்சனம் வந்திருக்கே?


அட.டைட்டில் நல்லாருக்கே.அடுத்த படத்துக்கு யூஸ்


===============

8 மஞ்சள் தேய்ச்சுக்குளிச்சா முகம் அழகு பெறுமா?


மாநிற மாலா கூட மயக்கும் மஞ்சுளா ஆகிடுவா.முகம் நாளடைவில் மாறிடும் மஞ்சளா

================

9 டீச்சர்.குணத்துக்கு 2 சுழி ன வருமா?3,சுழி ண வா?


நல்ல குணம் எனில் 3 சுழி


====================

10 காஷ்மோரா ன்னா பூத வித்தை ன்னு அர்த்தம்


ஓஹோ.அப்போ எல்லார்க்கும் புரியற மாதிரி பூத வித்தைன்னே வெச்சிருக்கலாமே?=================

11 DR,நோய் வந்தவன் தான் செலக்ட் பண்ணி சாப்பிடுவான்னு சொல்றாங்களே?நிஜமா?


இலக்கை தேர்ந்தெடுத்து பயணிப்பவன் என்றும் வாழ்வில் தோற்றதில்லை=================

12 மிஸ்!ட்வீட் போடும்போது கூந்தலை ஒரு கையால கோதிவிட்டுக்கிட்டே ட்வீட்டறீங்களே?ஏன்?


அது தான் என் ஸ்டைல் ஆப் ரைட்டிங்


==============

13 MBA படிப்பது கஷ்டமா ?ME படிப்பது கஷ்டமா?


MBA
எப்டி?
அது 3 எழுத்து.இது 2எழுத்துத்தானே?டக்னு ஈசியா படிச்சிடலாம்===============


14 டேய்.ஸ்கூலுக்கு ஏண்டா வர்லை?

3 வாரமா அம்மா க்கு உடம்பு சரி இல்லை.
நம்ப மாட்டேன்
என்ன.சார்?டாக்டர் அறிக்கை காட்டவா?

================

15 டியர்.வெண்டைக்காய் அரியும்போது விரலை வெட்டிக்கிட்டேன்

ஓஹோஅப்போ அது லேடீஸ் FINGER சிப்ஸ்னு சொல்லு


=================

16 தமிழ் மிஸ் தன்யா=சா வில் ஆரம்பிக்கும் ஒரு தமிழ்ச்சொல் சொல்

சாராயம் டீச்சர். சா வில் ஆரம்பிச்சு சாவில் கொண்டு போய் விட்டுடும்


==============

17 ஹிலாரி க்ளின்ட்டன் கிட்டே அஜித் ரெப்ரன்ஸ் இருக்குதா?எப்டி?

ஹேர் ஸ்டைல் பாரு.

=============

18 ல / ள வேறுபாடு தெர்ல. எப்டி ஈஸியா நினைவு வெச்சுக்க?

முழு நீலப்படம் கிளர்ச்சி
முழுநீளப்படம் அயர்ச்சி


==================

19 உங்க ஹோட்டல்ல வெப்சைட் டீ கிடைக்கும்னு போர்டு இருக்கே?

எத்தனை நாளுக்குதான் "பிளாக்"டீ ன்னு சொல்ல?


================

20 டேய்.திருப்பதி ழட்டு ன்னு தப்பா எழுதறியே?

டீச்சர்.மத்த ஊர் லட்டை விட திருப்பதி லட்டு சிறந்தது.அதான் சிறப்பு ழகரம்

==============

0 comments: