Sunday, October 16, 2016

தள்ளுபடி பண்ணும் கடனில் பேங்க் மேனேஜருக்கு 1% கிடைக்கும்?


1 ஜெ. உடல்நலம்: தமிழகத்திற்குத் தற்காலிக CMஅறிவிக்கத் தேவையில்லை- ஹைகோர்ட் # நிர்வாகம் ஸ்தம்பித்தாலோ ,கலவரம் நிகழ்ந்தாலோ தான் அதன் தேவை


===============

2 மருத்துவர்களின் கண்காணிப்பில் முதலமைச்சர் குணமடைந்து வருகிறார், வதந்திகளை நம்பவேண்டாம் - சீமான்.# குணமடைந்துவர்றார் என்பதே வதந்திதானோ?

=============

3 அவரவர் வேலையைப் பாருங்க... தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு # என்ன வேலை?ன்னும் சொல்லிக்குடுக்கவும்

===========

4 பேசும் நிலையில் ஜெ இல்லை.. தா.பாண்டியன் தகவல் #,என்னது?நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது காந்தியா?எப்டி தெரியும்?

==============

5 கார் திடீரென ‘பஞ்சர்’ ஆனதால் தொண்டரின் காரில் ஏறி விமான நிலையம் சென்ற மு.க.ஸ்டாலின் # ஸ்டெப்னி வெச்சுக்கறதில்ல போல இப்பவெல்லாம்


===============

6 சீன பட்டாசுகளை தயவு செய்து யாரும் வாங்க வேண்டாம் நடிகர் விவேக் வேண்டுகோள் # ஆமா.எதிரி நாடு என்பதால் உதா"சீன"ப்"படுத்துவோம்"=============


7 இரட்டை வேடங்களில் “அரசியல் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது”;- தனுஷ் # அரசியல்வாதின்னாலே ரெட்டை வேஷம் தானே

============

8 ஒபாமாவுடன் செல்பிக்கள் எடுப்பது இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்க உதவாது-ராகுல் # குடிசை வீடுகளில் போய் கஞ்சி குடிச்சா மட்டும் தீர்ந்திடுமா?


=================

9 காங்கிரஸ் ஆட்சியில்

4 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
நடந்தது ஆனால் நாங்கள்
-சரத்பவார் # தவளை,தவளை , அதான் இப்போ வெளிக்காட்டியாச்சே?
வெளிக்காட்டவில்லை

==================1010   : தமிழகத்தில் தேர்தல் என்பது, மரபுகளை மீறி, நியாயமான முறையில் நடக்காத தேர்தலாகவே அமைந்து வருகிறது-விஜயகாந்த் # இதை சாக்கா வெச்சு

உள்ளாட்சித்தேர்தல்ல போட்டி இடலைன்னு சொல்லிடுவாரோ?


==================


11  காவிரி பிரச்னையில், தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது, தி.மு.க. தஞ்சாவூரில், விவசாயிகளுக்காக, ஸ்டாலின் நடத்தவுள்ள போராட்டம், நாடகமே-எச்.ராஜா # கர்”நாடகம்” என்பதாலா?


====================

12 . தொழில் நிறுவனங்களின் கண்ணுக்கு வெண்ணெய், விவசாயிகளின் கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற வங்கிகளின் அணுகுமுறை ஆபத்தானது.-ராமதாஸ் # தள்ளுபடி பண்ணும் கடனில் பேங்க் மேனேஜருக்கு  1% கிடைக்கும் போல-   

====================


===========

13 அ.தி.மு.க.,வுக்கு 2 நாள் கெடு: உண்ணாவிரதத்தில் ஸ்டாலின் அறிவிப்பு # கெடு முடிந்த பின் மேலும்  2 நாள் கெடு  விதிக்கப்படும், இப்டியே ....
-- 

=================


14 உள்ளாட்சி தேர்தல் ரத்து சரியான நடவடிக்கை : பா.ஜ., மாநில தலைவர் கருத்து #  எப்போ எக்சாம் தள்ளிப்போனாலும் லாஸ்ட்பெஞ்ச்  மாணவன் துள்ளிக்குதிப்பானாம் 

===============

15 மதுரை போலீசாரின் 160 கேள்விகளுக்கு ஐந்தரை மணி நேரம் சசிகலா புஷ்பா பதில் #  IAS  எக்சாம்ல கூட இம்புட்டு   சிரமம் இல்லை போல================


16  அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை சந்தித்தார் ராகுல் # மோடி , கலைஞர் ,ஸ்டாலின்   கவனத்துக்கு, ராகுல் முந்
திக்கிட்டாரு, 


===================


17 பெற்றோரிடமிருந்து பிரிக்க நினைத்தால் மனைவியை விவாகரத்து செய்யலாம் - சுப்ரீம் கோர்ட் # எல்லா ஆண்களும் சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணிட்டா துணை?


==============18 ஜெ. உடல்நிலையில் முன்னேற்றம்... இடைக்கால முதல்வர் தேவையே இல்லை: பொன்னையன் மேல இவருக்கு என்ன கடுப்போ ?==============19 ஜெ.வை பார்க்க மோடி நாளை சென்னை வருகை அப்பல்லோவில் பலத்த பாதுகாப்பு! # டாக்டர் ,பேஷண்ட்களை விட போலீஸ் தான் ஜாஸ்தி இருக்கும்==============20 உடனடியாக பொறுப்பு முதல்வர் /புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் - ஸ்டாலின்# தார்மீக முறைப்படி சரி.ஆனா சட்டப்படி அவசியம் இல்லை


===========

0 comments: