Saturday, October 08, 2016

ஒரு தொழில் ரகசியம் (.ராம்ராஜ் வேட்டி,MCR வேட்டி)

சித்ரம் ட்வீட்ஸ் ,கருணை மலர் 2 பேரும் ஹாஸ்டல்ல இருப்பாங்க போல.சன்டேன்னாலும் கடையைச்சாத்தாத ஜடைகளில் முன்னிலை


===============

2 ஜெ குணம் அடைந்து வீடு திரும்பும்வரை ஆட்சிப்பொறுப்பை நான் கவனிக்கிறேன்.அவர் திரும்ப வந்ததும் அவரிடமே ஒப்படைப்பேன்னு தலைவர் அறிக்கை விடல?


=============

3 மில்க் பிக்கீஸ் பிரிட்டானியா ் 100 கிராம் 10 ரூ இருந்துச்சு.புத்திசாலித்தனமா பண்றதா நினைச்ட்டு ரேட்டை ஏத்தாம 15 கிராம் குறைச்சு பேக்கிங்


============

4 1998 குமுதம் விலை ரூ 6 ,ஜோக் சன்மானம் ரூ 50
2016 குமுதம் விலை ரூ 20 .ஜோக் சன்மானம் அதே.ரூ 50
முறைப்படி 3 1/4,மடங்கு அதிகம் தரனும் இல்ல?

============

5 கேட்கறவன் கேனயனா இருந்தா திண்டுக்கல் ஐ லியோனி க்கும் சன்னி லியோன் க்கும் ஒரே ராசி ன்னு சொல்வாக போல


=============

6 நாம ஏன் நல்லவனா இருக்கனும்?நாம நல்லவனா இருந்தா நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் ,நமக்கும் நல்லதே நடக்கும்


==============

7  உள்ளாட்சித்தேர்தல் ,சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு ,ஜெ உடல்நிலை பற்றிய அறிவிப்பு எதுனா லிங்க் இருக்குமோ? ஓட்டு அரசியல்


===========

8 மழைக்காதலன் யார் கிட்டயோ ஒட்டி உறவாடிட்டு ஏகப்பட்ட செலவு ஆகிடுச்சு போல.புலம்பிட்டு இருக்காப்டி


==============

9 அக்சிதா வை அக்கா ன்னு கூப்ட்ரக்கூடாது.தங்கமணியை தங்கைனு சொல்லிடக்கூடாது# செல்ல சுருக் ஆபத்துகள்


================

10 ஒரு தொழில் ரகசியம்.ராம்ராஜ் வேட்டி,MCR வேட்டி இரு கம்பெனிகளும் சொந்தத்தயாரிப்பு என விளம்பரம் செய்தாலும் உண்மையில் பர்ச்சேஸ் &சேல் தான்

============


11 மயில் தோகை போல் நீளமான கூந்தல் கொண்ட இரட்டை ஜடை பிகருக்கு சுடிதார் அணிகையில் துப்பட்டாவின் அவசியம் இருக்காது


===============

12 மார்க்கெட்டிங் டெக்னிக் ல பொண்ணுங்க செம டேலண்ட்டா இருக்காங்க.நாம வெள்ளந்தியாவே இருந்து ஏமாந்துடறோம்


================


13 பெட்ரோல் பங்க் ல.1000 ரூ க்கு 1 ரூ காய்னா வாங்கி டவுன் பஸ்ல ஏறி இருக்கேன்.தக்காளி சில்லறை இல்லைனு மட்டும் கண்டக்டர் யார்ட்டயாவது சொல்லட்டும்


================

14 Z தமிழ் டி வி சீரியல் பார்த்து ஒரு போட்டில கலந்துக்கிட்டதுக்கு 3000 ரூ மதிப்புள்ள பட்டுப்புடவை பரிசு.வந்திருக்கு.சொந்த.சம்சாரம் ஹேப்பி


=================
15 16 வயசு டூ 19 வயசு உள்ள சில ட்வீட்டர்கள் டேய் னு என்னை மென்சன் பண்ணி திட்டும்போது நாம இவ்ளோ யூத் தா தெரியறமா?னு பெருமையா இருக்கு\\

=================


16 இலங்கைத்தமிழர் க்கு உதவினால் ஆபத்து ,முஸ்லீம் எனில் தீவிரவாதி எனும் கருத்துகளை சினிமா க்களில் சொல்வது சமூக நலனுக்கு கேடு\\\=======

17 ரயில்வே ரிசர்வேசன் க்யூ ல ஒரு போலீஸ் லேடி ( 36 வயசு) ஒரு சேர் தள்ளி உக்காருது.நாம அவ்ளோ ஆபத்தான ஆளா?


==============

18 இணையத்தில் பலராலும் சிலாகிக்கப்பட்ட ஆண்டவன் கட்டளை பி ,சி செண்ட்டர்களில் சுமாராக்கூட போகலை.கழுவி ஊற்றப்பட்ட தொடரி மீடியமா ஓடுது.என்ன ஜனம்!

================

1 9 சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை.முதல்வர் உடல் நிலை குறித்த தவறான வதந்தி ,ஜோக் ,காமெடி ட்வீட்கள் போடுவதை தவிர்க்கவும்

=============

20 தேநீர் = தேயிலை+ நீர் = டீ
தேனீர் =தேன் +நீர்
இது தெரியாம நிறைய பொண்ணுங்க தேனீர் ட்வீட்டா போட்டுத்தள்ளுறாங்க

================

0 comments: