Sunday, October 09, 2016

மேடம்.இப்பவெல்லாம் ஜிலேபிக்கொண்டை போடறதில்லையே ஏன்?

 1 மிஸ்! நீங்க ராமராஜன் ,சிவகார்த்திகேயன் 2 பேருக்கும் தீவிர ரசிகையா?

ஆ!எப்டி தெரியும்?

COW சி.கா (கவுசிகா) பேரை பார்த்து கேட்டேன்


==============

2 வீட்டு வேலை அப்பப்ப பார்த்துட்டு கேப் கிடைக்கும்போது ட்விட்டர் வருவேன்
ஓ.வீட்டு வேலைன்னா?
பேஸ்புக் ல என்னைக்கவர்ந்த வீடுகள் ஆல்பம் அப்டேட்


==============

3 என் படைப்புகள் எல்லாம் என் கேரக்டரை அடையாளப்படுத்துதா?என்னை அறிமுகப்படுத்துதா?

மிஸ்! படுத்துது

============

4 நடிகை =,கேரக்டருக்காக ஜாக்கெட் போடாம நடிச்சேன்

மேடம்.அப்போ ஜாக்"கெட்லாஸ்ட்" கேரக்டர்னு சொல்லுங்க


=============

5 பிரபல ட்வீட்டர் லாரிக்காரன் சாருக்கு பிடிச்ச அமெரிக்க வேட்பாளர் யார்?

ஹி"லாரி" க்ளிண்ட்டன்


=============

6 ரொமாண்டிக் விஷயத்துல தன் காதலன் ரொம்ப மோசம் என்பதை சிவ கார்த்திகேயன் ரசிகை எப்டி சொல்லும்?

என் ஆளு ரொம்ப "ரெமோ"சம்

==============

7 ரோஜாப்பூக்களை மிக்ஸி ல போட்டு அரைச்சு க்யூட் புஷ்பா மேல தெளிச்சா என்ன ஆகும்?

க்யூட் புஷ்பா பன்னீர் புஷ்பா வா ஆகிடும்


==============

8 கார்மேகக்குழலி யா ஆகனும்.எந்த பியூட்டி பார்லர் போக?

மிஸ்.எதுக்கு சவுரி ,சலூன்னு அலைச்சல்.கெஜட் ல பேரை மாத்திட்டா ஈசி


=================

9 ட்விட்டர் ல இன்னைக்கு மட்டும் ஆரோ 3 டி எபக்ட் ல இருக்குமா?ஏன்?

யாரோ ஆராதனாவாம்.பர்த்டேவாம்.ஜாக் கொண்டாட்டமாம்


=============

10 ஜோசியரே! நம்ம தலைவருக்கு உடல் நிலை எப்டி இருக்கு?ஜாதகம் பார்த்து சொல்லுங்க.

சொல்லிடுவேன்.எனக்கு கட்டம் சரி இல்லை.அதான் யோசிக்கேன்

============

11 தலைவரே! காவேரி பிரச்னை ,உள்ளாட்சித்தேர்தல் ,சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்டி சமாளிப்பீக?

உடம்பு சரி இல்ல.ஒரே கல்.3 மாங்கா

========

12 சார்.பட விளம்பரத்துல."ஸ்லீப்பர் ஹிட்"னு போட்டிருக்கீங்ளே ,அப்டின்னா?

படம் பார்க்கும் ஆடியன்ஸ் தூங்கி வழிஞ்சாலும் ஹிட் ஆகிடுச்னு அர்த்தம்

=========

13 மேடம். உங்க PET நேம் என்ன?

pet name,bed name 2 ம் 1 தான்.ஏய்.

ரொம்ப BAD நேமா இருக்கே?

==============

14 சார்.உங்க மேல ஒரு பொண்ணு சிங்கப்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்காமே?

ஜெய"மோக"ன் = என்ன இப்போ?ரைட்டர் இனி ராங்கர்.அதானே?


==============

15 மேடம்.உங்க புருசன் பேரு ஆத்மா வா?

எனக்கு இன்னும் மேரேஜே ஆகலையே?

ஆத்ம திருப்திக்காகத்தான் நடிக்கறேன் னு பயோ ல போட்டிருக்கீங்களே?

==========


16 ஸார்.நீங்க பெண் எழுத்தாளர்களை தாக்கறீங்களாமே?

எல்லாம் சர்வைவல் தான்.யாரையாவது தாக்கனும்.அப்போதான் நம்ம பேர் பிரபலம் ஆகும்

================

17  ரஜினி முருகன் ஹிட் ஹீரோயினை புக் பண்ணி இருக்கோம்.அப்போ எங்க படமும் ஹிட் தானே?

சதையை நம்பாதே கதையை நம்பு

===========

18 டாக்டர்.என் உடம்புக்கு என்ன?

சாதா காய்ச்சல் தான்

அய்யய்யோ.அப்போ அப்போல்ல அட்மிட் ஆகனுமா டாக்டர்?

=============

19 ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன் ,இசைக்கு சந்தோஷ்நாராயணன்.அப்போ ஆடியன்சுக்கு சந்தோஷம் வரும் தானே?

தெரில.புரொடியூசருக்கு தோஷம் வராம இருந்தா சரி

===========

20 மேடம்.இப்பவெல்லாம் ஜிலேபிக்கொண்டை போடறதில்லையே ஏன்?

சுகர் வந்ததால ஸ்வீட்ஸ் அவாய்டிங்


===============

0 comments: