Wednesday, October 19, 2016

விஜய்காந்த்தா இருப்பதை விட சிம்பு வா இருந்தா வாழ்வில் முன்னேறலாம் ,எப்டி?

டியர்.சமையல்ல ரொம்ப ஈசியான ஸ்வீட்.எது? நோகாம நோம்பி கும்பிடனும்


ரவா கேசரி தான்=================

2 காலம் பொன் போன்றது


ஓஹோ.coloumn பொன் போன்றதுன்னா ROW பிளாட்டினம் போன்றதா?==============

3 நான் ரொம்ப bc டா.


மிஸ்.உங்க சர்ட்டிபிகேட்ல FC .ன்னு ஜாதி போட்டிருக்கு?
அய்யோ.பிசி ங்கறதை அப்டி சொன்னேன்===============


4 ஒரு சீன் நடிச்சுக்காட்டுன்னா ஏன் வாசலுக்கு வெளில போறே?


அவுட்ஸ்டேண்டிங் பர்பார்மென்ஸ் னு பேர் எடுக்க


===============

5 நாய் வாலை நிமிர்த்த முடியாது.


யோவ்.லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் னு தானே சொல்லி இருக்காங்க?எதுக்கு வாலை நிமிர்த்திட்டு இருக்கே?==============

6 ஆபீஸ் ல மேனேஜர் இல்லைன்னா எல்லார்க்கும் குளிர் விட்டுப்போய்டுது


எப்டி?
ஏ சி யை ஆப் பண்ணிட்டுப்போய்டறார்


==============

7 சார்.உங்களை வக்கிரவாதி னு சிலர் சொல்றாங்களே?


மீன ராசி சுக்கிரனோட பார்வைல.அதனால சுக்கிர வாதினு வேணா சொல்லலாம்=================

8 சார்.பொண்ணுங்களை கரெக்ட் பண்ணவே சிலர் கவிதை எழுதறாங்களே?நீங்க ஏன் எழுதலை?


முதல்ல என்னை நான் கரெக்ட் பண்ணிக்கறேன்==============

9 டியர்.கணையாழியின் கடைசிப்பக்கங்கள் படிச்சிருக்கீங்களா?


இல்லை.முதல் பக்கம் படிச்சப்பவே தூங்கிட்டேன்

=============

10 படத்துல வர்ற ரூபி பேய் கேரக்டர் எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணலை.யாரையும் பழி வாங்கல.அது ஏன்?


ஏன்னா அது சாந்த சொ"ரூபி"================

11 டியர்.சன் டி வி ல செய்தி பார்க்காதே


ஏன்?
அந்தப்பொண்ணு போட்டிருக்கும் நெக்லஸ் மாதிரி வேணும்னு அடம் பிடிப்பே


=================


12 நீண்ட , ரொம்ப நீண்ட இடைவெளிக்குப்பின் இன்னைக்குதான் வேட்டி கட்றேன்


சார்.போன மாசம்தானே மேரேஜ் ஆச்சு.அப்போ கட்டினது?


===============

13 மிஸ்.உங்க FB பக்கம் ஓப்பன் பண்ணா ஒரு கவிதை புக்கைப்புரட்டுன உணர்வு


நான் FB வரும்போதே கையோட கவிதை புக் கும் கொண்டாந்துடுவேன்


=============

14 சார்.உங்களால கஜல் கவிதை எழுத முடியுமா?

அது முடியாது.வேணும்னா காஜல் அகர்வால்,கஜோல் இவங்களை வர்ணிச்சு கவிதை எழுதறேன்


===================

15 கால்சியம் சத்து இல்லைனு FB ல ஸ்டேட்டஸ் போட்டதுக்கு உங்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?ஏன்?

call cm ,சத்து இல்லை-னு படிச்ட்டாங்களாம்

=============

16 ஸார்.உங்க பட விளம்பரத்துல ரெட்டை தீபாவளி னு வாசகம் வருதே?

எனக்கு டபுள்ஸ் னா ரொம்ப பிடிக்கும்.குறியீடு

=============

17 டியர்.தங்கம் வாங்குனா வெள்ளி இலவசமாமே?

சனி நம் வசம்


============

18 தலைவரே! என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?

பொறுப்பில்லாத முதல்வர்னு இனி கிண்டல் பண்ணலாமில்ல? பொறுப்புகள் கை மாறிடுச்சில்ல?


==================

19 விஜய்காந்த்தா இருப்பதை விட சிம்பு வா இருந்தா வாழ்வில் முன்னேறலாம்

புரியல
நல்லவன் ஆக இருப்பதை விட வல்லவன் ஆக இருப்பதே நல்லது

=============

20 எப்போது வேண்டுமானாலும் தொலைந்து போவேன்,

மிஸ்! வாரம் ஒரு டைம் இந்த ட்வீட்டைமட்டும் மிஸ் பண்ணாம போட்டுடறீங்களே .எதுக்கு?


===============

0 comments: