Saturday, October 22, 2016

ஒன் சைடு லவ் ஆகாம இருக்க ஒரு செம ஐடியா

மருதாணி வெச்சுட்டு ஸ்கூல் வந்த குழந்தைக்கு அபராதம் விதிச்சீங்களாமே?


நோ யுவர் ஆனர்.நோட் ல FINE னு பாராட்டா எழுதுனேன்


===============

2 தலைவரே! உங்களை அரசியல் டார்ஜான்னு சொல்றாங்க


அவ்ளோ வீரம்னா?
அடிக்கடி வேற கட்சிக்கு தாவிடுவீங்களாம்


=================

3 டேய்.யார்றா நீ?


உங்க பொண்ணோட பாலோயர்ங்க
எதுக்கு வாசல் பக்கம் வராம கொல்லைப்பக்கமா வந்தே?
வழக்கமா டிஎம்ல தான் பேசுவோம்


================

4 சார்.இதுவரை ஒரு பொண்ணுகூட கூட படம் பார்த்ததில்லனு சொல்றீங்களே.எப்டி?


தியேட்டருக்கு பொண்ணோட போறவன் படம் பார்க்கமாட்டான்=================
5 உங்க படம் பெண்களைக்கவரும்னு எப்டி உறுதியா சொல்றீங்க?


காஷ்மாரோ - டைட்டில்லயே CASH இருக்கு.எந்தப்பெண்ணுக்குதான் பிடிக்காது?


============


6 DPல கஜோல் போட்டோ வெச்சிருந்தா அந்தப்பொண்ணுக்கு 40 வயசு னு அர்த்தம்


யோவ்.அப்போ பேபி சாரா போட்டோ வெச்சா 10 வயசுனு அர்த்தமா?


=================

7 மேடைல விஜய் யைப்பார்த்ததும் தியாகராஜன் னு எதுக்கு கத்துனே?


மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு ன்னு சொன்னாங்க.ஜஸ்ட் டெஸ்ட்


============

8 யுவர் ஆனர்.வதந்தி பரப்புனதால இவரை தண்டிக்கனும்


ஓ.
யுவர் ஆனர்.அது வதந்தி ன்னு முதல்ல ப்ரூப் ்பண்ணச்சொல்லுங்க


=============
9 தேவா குணமாகி டாக்டருக்கு நன்றி சொன்னாராம்.

யாரு?தேவா சொன்னாரா?
நோ.தேவா சொன்னதா டாக்டர்.சொன்னார்

============

10 சார்.அஷ்டமி ,நவமி இதெல்லாம் பாலோ பண்ற பழக்கம் உண்டா?


இல்ல சார்.கவுதமியை வேணா பாலோ பன்றேன்.ஆனா என்னை பிளாக்டு


================
11 பிரபல பெண் ட்வீட்டர் மீனம்மா கயல் செல்பி போட்டோ என் கிட்டே இருக்கு.ஆனா தர மாட்டேன்

அடப்பாவி.சரியான செல்"FISH"டா நீ!


================

12 உங்க இலக்கிய ரசனை டெஸ்ட் ஒரு கேள்வி.பொன்னியின் செல்வன் நாயகன் யார்?

ரவி கிருஷ்ணா டீச்சர்


=============

13 2011 கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றோர் - 80.33%.

வாரிசுகள் யாரும் படிக்கலயா?பேரண்ட்ஸ் ஒன்லி?


===============


14 தலைவரே! ரயில் மறியலால பொதுமக்களுக்கு என்ன பயன்?

அதுவா முக்கியம்?நாம பரபரப்பா பேசப்படனும்.பேப்பர்ல நம்ம பேர் டெய்லி வரனும்


===============
15 ஏண்டா ஃபெயில்?

டாடி,FAIL ='first Attempt In Learning', கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பு'

டேய்.ஒழுங்காப்படிக்காம வியாக்கியானம் மட்டும் நல்லா குடு


===========


16 விஜய் ரசிகர் =குருவி சேர்க்கற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேமிக்கறேன்

அஜித் ரசிகர்.= அது ஓகே."குருவி" எப்போ சொத்துசேர்த்தது? அழிச்சது தானே?


==========

17 மேடம்.டெய்லி சீரக ரசம் குடிச்சா நல்லது

DR
நான் ஹை க்ளாஸ்.பி ரக ,சி ரக ரசம் நோ.ஒன்லி ஏ ரக ரசம்


===============

18 டாக்டர்.ஊசி போடும்போது வலிக்குது.

பல்லைக்கடிச்ட்டு பொறுத்துக்குங்க
அது முடியாது .ஆல்ரெடி எனக்கு பல் வலியும் இருக்கே?

================

19 மாமா.நீங்க ரெயில்வே டிபார்ட்மென்ட் ஆபீசர்.உங்க பொண்ணு?

ட்விட்டர்ல டெய்லி காலை வணக்கம் .ரயில் விட்டுட்டு இருப்பா


==============

20 டியர்.ஐ லவ் யூ ன்னு என் முன் ,என் பின் , என் வலது ,என் இடது ன்னு 4 சைடுல நின்னு 4 டைம் சொல்றீங்க்ளே.ஏன்?

ஒன் சைடு லவ் ஆகிடக்கூடாது

==============

0 comments: