Friday, October 07, 2016

லட்சுமி அன் பாலோ பண்ணினா என்ன ஆகும்~?

மேடம்.சாப்பிடும்போது ஏன் அந்த பக்கமா திரும்பி உக்காந்துட்டீக?

கண்ணு பட்ரக்கூடாதில்ல?
ஓஹோ.அப்போ உங்க முதுகு மேல கண்ணு பட்டா பரவால்லியா?

================

2 தலைவர் =மகிழ்ச்சியான தருணத்தில் தான் நான் இறப்பேன்

கபாலி = மகிழ்ச்சி


=============

3 டிடிஆர் = டிக்கெட்

இந்தாங்க
ஐடி?
இந்தாங்க ஆதார் அட்டை
ஆதாரம்? புரியல
ஆதார் அட்டைல இருப்பது நீங்கதான் என்பதற்கு ஆதாரம்?

==============

4 சார்.உங்க அடுத்த படம் என்ன?

கொடி
எப்டி இருக்கும் குவாலிட்டிவைஸ்?
கடி வசூல் ரீதியா?
அடி


================

5 டாக்டர்.இந்த பேலியோ மாத்திரையை சாப்பிடறதுக்கு முன்னாடி சாப்பிடறதா அல்லது சாப்பிட்ட பின்னாடியா?

சாப்பாட்டுக்குப்ப்பதிலா


============

6 ரஜினி நடிச்ச கொடி பறக்குது டைட்டிலை சுட்டுட்டோம்

ஓஹோ.ஆனா கொடி மட்டும் தானே டைட்டில்?
யா.பறக்குது பறந்துடுச்சு


==============

7 சார்.நீங்க கொடுத்த செக் பவுன்ஸ் ஆனதுக்கு ஒரு பெண் ட்வீட்டர் தான் காரணமா?

ஆமா.லட்சுமி அன் பாலோ பண்ணிடுச்சு.எப்டி என் கிட்டே பணம் இருக்கும்?

===============

8 Thodari ! படம் பாருங்கள் விடுமுறையை கொண்டாடுங்கள் !

சார்.முன்னுக்குப்பின் முரணாப்பேசாதீங்க

============

9 டெங்கு வைரஸ் கிருமிகளை கொண்ட கொசு நம்மைக்கடிக்காம பாத்துக்கனும்

டாக்டர்.நாம தூங்கிட்டு இருக்கும்போது வந்து கடிச்சிடுது.எப்டி பார்த்துக்க?


===============

10 வெளிர் நிற ஆடைகள் ஆகியனவற்றை அணிவது கொசுக்கடியினைத் தவிர்க்க உதவும்.

டாக்டர்.வெள்ளை பேன்ட் வெள்ளை கோட் போட்ட உங்களையே கொசு கடிக்குதே?

===============

11 மிஸ்டர்.பியூட்டி பார்லர் வந்து என்ன தேடறே?இது லேடீஸ்க்கு

சரி சரி.சலூன் தானே?பேப்பர் படிக்கலாம்னு வந்தேன்


============

12 டாக்டர்.பிரிஸ்கிரிப்சன் சீட் ல வயித்தால போகுது ராசி நீ அப்டி னு எழுதி இருக்கே?

யோவ்.நல்லா படிய்யா.அது லிவிதா ரோஷிணி.என் சிக்னேச்சர்.

=============
13 பகவத் கீதை ல உங்களுக்குப்பிடிச்ச வரி எது?

பகவதி ல விஜய் ஓப்பனிங் பஞ்ச் ,(புதிய)கீதைல ஒவ்வொரு ரீலுக்கும் வரும் ஒரு பஞ்ச்


===============

14 இறந்து போன ஒரு ஆத்மா சாந்தி அடைய 30 நாள் ஆகும்
ஓஹோ.அப்போ சாந்தி ஒரு மாசம் வெய்ட் பண்ணனுமா?


===============

15 நீ பாரீன் போய்டு.ஆவி கடல் தாண்டாது.
மனுசனுக்கே பாஸ்போர்ட்.விசா கிடைக்கறதில்ல.ஆவிக்கு மட்டும் கிடைச்சிடுமா என்ன?


===============

16 மிஸ்! மாப்ளையை எப்டி பிடிச்சுது?
அவரும் என்னை மாதிரியே வடுமாங்காப்பைத்தியம்
ஏம்மா.ஊருக்கு 100 பேரு அப்டி பைத்தியமா இருப்பாங்க

=================

17 டாக்டர்.மீண்டும் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க சிகிச்சை இருக்கா? அதெப்படி முடியும்?
காய்ச்சல் குணமானபின்னும் ஏன் டிஸ்சார்ஜ் ஆகலைனு கேட்கறாக


==============

18 டியர்.வாழ்க்கைல செட்டில் ஆன பின் தான் மேரேஜ்
அது நடக்காது.வேணா ஷெட்டில் கார்க் விளையாடறேன்.வீட்ல எதுனா சொல்லி சமாளி


=================

19 டாக்டர்.நல்ல ஆத்மா ,கெட்ட ஆத்மா எப்டி வித்யாசம் கண்டுபிடிக்க?
ஆஸ்த்மா பத்தி கேட்டா சொல்வேன்


=================

20 முதல் அமைச்சர் உடல் நிலை சீராக உள்ளது
அப்டியா?டெய்லி இதே தான் சொல்றீங்க.ஒரு வீடியோ உரை அப்லோடு பண்ணுங்க பார்ப்போம்


==============
0 comments: