Saturday, October 29, 2016

.காஷ்மோரா- சினிமா விமர்சனம்

பட டைட்டிலுக்கு மக்கள் குழம்பிடக்கூடாதுன்னு ஓப்பனிங்க்லயே ஹீரோவை விட்டே விளக்கம் கொடுத்துடறாங்க.தீய சக்திகளான ஆவியோட பேசும் ஆவி அமுதா டைப் ஆட்கள் தான் காஷ்மோரா.ஹீரோ ஒரு டுபாக்கூர் பார்ட்டி , கிட்டத்தட்ட சதுரங்க வேட்டை ஹீரோ போல. மக்களோட பேய் நம்பிக்கையை பயன் படுத்தி ஆவியை அடக்கறேன் விரட்றேன்னு உதார் விட்டு அது மூலமா காசு பறிக்கறாரு.இவர் ப\ண்ற காமெடிக்கூத்துகள் தான் படத்தோட முன் பாதி


பின் பாதில தான் ஃபிளாஸ் பேக், சந்திரமுகி , பாகுபலியை மிக்சில போட்டு கஷ்டப்பட்டு செயற்கையான ஒரு கதை ரெடி பண்ணி இருக்காங்க. ஒரு நாட்டோட தளபதி பொம்பளை பொறுக்கி.தன் சாதுர்யத்தால எதிரி நாட்டை கைப்பற்றும்போதே  அந்த அந்தப்புர அழகிகளையும் கரெக்ட் ப்ண்ணிடறாரு


அந்த நாட்டு இளவரசி வே|ற ஒருத்தனை லவ்வினாலும் அவனையும் கொலை பண்ணி இளவரசியை அடையத்துடிக்கும்போது இளவரசி தளபதியை கொலை பண்ணிடறார். அடங்கா ஆசை கொண்ட ஆவி எப்டி ப்ழி வாங்கத்துடிக்குது என்பது தான் க்ளைமேக்ஸ்


 ஹீரோவா கார்த்தி. இடைவேளை வரை இவர்  செய்யும் பித்தலாட்டங்கள் தியேட்டரில் சி செண்ட்டர் ஆடியன்சை சிரிக்க வைக்குது. பொதுவா பேய்ப்படங்களில் வரும் காமெடின்னாலே ஒரு ஆடியன்ஸ் ரசிக்க உருவாகிடுது, ஆனா பருத்தி வீரன் மாதிரி பிரம்மா\ண்டமான படம் பன்னிட்டு இன்னும் குண்டுச்சட்டில குதிரையை ஓட்டிட்டு இருந்தா எப்டி பாஸ்?

ஹீரோயினா நயன் தாரா. ரெ\ண்டே முக்கால் ம\ணி நேர படத்துல 30 நிமிஷம் தான் வர்றார். ஆனாலும் நடிப்பு ஓக்கே ரகம்

 பின் பாதி சரித்திரக்கதையில் ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல்கள்

Image result for காஷ்மோரா


ஸ்ரீ திவ்யா வை சரியா பயன்படுத்தலை
ஒளிப்பதிவு ஓக்கே ஆனால் இசை ரொம்பவே சுமார். பிஜிஎம் எல்லாம் எல் கேஜி லெவல்
Image result for காஷ்மோரா

லாஜிக் மிஸ்டேக்ஸ்\


1  பெண் வாரிசு உள்ள ஒரு மன்னர்  பெண் பித்தனான தளபதியை கூடவே வெச்சிருப்பாரா?

2  பெண் பித்தரான தளபதி ஒரு பெண்ணை கல்யாணம் ப|ண்ண ஆசைப்படுவாரா? பொதுவா பொம்பளைப்பொறுக்கிங்க அப்டி செய்ய மாட்டாங்களே?


3 நயன் தாராவை அடைய நினைக்கும்  தளபதி ஒரு மயக்க மருந்து கொடுத்து ஈசியா ரேப் பண்ணாம சும்மா டயலாக் பேசிட்டு இருப்பது ஏனோ?

4 தான் அடைய நினைக்கும் பெண் கண் முன்னாலேயே எந்த மாங்கா மடையனாவது  பெண்ணின் அப்பாவை, தம்பியைக்கொல்வானா\\\\?


5 அப்டி கொலை செய்த பின்னும் அந்தப்பெ\ண் எந்த வஞ்சகமும் இல்லாமல் தனக்கு படியும் என நம்புவானா?


Image result for காஷ்மோரா

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  காஷ்மோரா.=164 நிமிசங்கள்

2 4 லயன் காமிக்ஸ் ,முத்து காமிக்ஸ் ,ராணி காமிக்ஸ் வாசகர்கள் ,விஜய் ரசிகர்கள் தரப்பினரை குஷிப்படுத்தும் திரைக்கதை.காஷ்மோரா இடைவேளை


நச் டயலாக்ஸ்

1 உச்சி வெய்யில்ல நம் நிழலே நமக்குத்தெரியாது #காஷ்மோரா2 தீய காற்று தூய தீபத்தை அவ்வளவு சீக்கிரம் அணைத்து விட முடியாது3  எந்த வில்லுக்கும் பொருத்தமான அம்பு வேண்டும்#காஷ்மோரா.வில்லு விஜய் ரெப்ரன்ஸ்


4 எப்போ கோயிலுக்குள்ளே கேமராவும் எலக்ட்ரிக் ட்ரம்மும் வந்துச்சோ அப்பவே சாமி கோயிலை விட்டுகிளம்பிப்போய்டுச்சு

5 ஒரு ஆட்டக்காரனை இன்னொரு ஆட்டக்காரன் பாராட்டனும்னு கரகாட்டக்காரன்ல சொல்லி இருக்காங்க

6 57 ஃபிகருங்க, எல்லாரையும் தனித்தனியே அனுப்பட்டுமா? வானத்தில் உள்ள நடத்திரங்களை மொத்தமாப்பார்த்த்தான் அழகு, ஒட்டுக்கா அனுப்பு #காஷ்மோரா

7 தளபதி, அவங்க பணிப்பெண்கள்.... பணிப்பெண்கள் என்றாலும் அவங்களும் பெண் தானே, அனுப்பு #காஷ்மோரா

8 வார்த்தையையும், வாளையும் கவனமா கையாளனும்

9 இந்தப்பிறவின்னு இல்லை, எந்தப்பிறவின்னாலும், எத்தனை பிறவின்னாலும் உன் முற்றுப்புள்ளி நான் தான், உன்னை முடிக்கப்போறதும் நாந்தான்
சி.பி கமெ\ண்ட்- காஷ்மோரா -முன் பாதி போலி பேய் ஓட்டும் சாமியாரின் சதுரங்கவேட்டை காமெடி, பின் பாதி ஃபேண்டசி கதை,கொஞ்சம் இழுவை, விகடன்=40 , ரேட்டிங் -2.5 / 5

1 comments:

விஸ்வநாத் said...

1st foto, that red shirt, sun glass, doesn't look like Karthi; Is he another hero in that film ?