Wednesday, October 05, 2016

சார்.என் புருசன் கிட்டே இருந்து டைவர்ஸ் வேணும்.எந்த லாயரைப்பார்க்க?

தாய் வீட்டுக்கு வந்த மனைவியோட தங்கையை ஹீரோ கரெக்ட் பண்ணிடறாரு.இதான் கதை.


என்ன டைட்டில்?
மச்சினியைக்கண்டேன்


===============

2 சார், உங்க சொந்த வீட்டில் வசித்த நாட்கள் பற்றி சொல்லுங்க


அவை அழகான நாட்கள்
மாமியார் வீட்ல ஒரு வருசம் இருந்தது?
“சவுந்தர்ய”மான நாட்கள்


=============

3 ஜோசியரே! என் ஜாதகம் ரொம்ப விவகாரமான ஜாதகமா?


விவாகரத்து ஜாதகம்
புரியல
அண்ணி , மச்சினி அப்டினு வரிசையா டைவர்ஸ் ஆகுதே


===============

4 டீச்சர், ஒல்லி பெண்பால்னா ஆண்பால் என்ன?


ஒல்லன்
அப்போ ஒல்லன்கள் எல்லாம் வில்லன்கள்னு சொல்லுங்க===============

5 இன்ஸ்பெக்டர்,  அந்த நாய் என்னை கட்டிப்பிடிச்ட்டான்


 விடம்மா, கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் ஷூட்டிங் ல கட்டிப்பிடிக்குது=================


யுவர் ஆனர், எனக்கு டைவர்ஸ் ஆனது கூட வருத்தம் இல்லை, அடிக்கடி “வெச்சு செஞ்சிடுவேன்”ன்னு பட பஞ்ச் டயலாக் என் லைஃபையே பஞ்சர் ஆக்கிடுச்சே


==================


மாப்ளை பணிவாத்தானே இருக்காரு, ஏன் பொண்ணு தர யோசிக்கறீங்க?

பணிவா இருக்கற மாதிரி நடிக்கறவங்க என்னைக்கும் ஆபத்தானவங்க தரகரே


-===============

சார்.நீங்க இங்க்லீஷ் ல ட்வீட்டும்போது சில எலுத்துப்பிளை வறுது


அப்டியா?முதல்ல தாய்மொழி தமிழ் ல பிழை இல்லாம எழுதப்பழகுங்க

=============

9 தனுஷ் =சார்.நம்ம அடுத்த படத்துக்கு இந்த புது பிகரை புக் பண்ணிடுங்க.நம்ம கண்ல இத்தனை நாளா சிக்கல


ஹும்
சகிக்கல.சார்.அது ரெமோ சி கா


============

10 சார்.குருதிப்புனல் ரீமேக்கறோம்.ஆபரேசன் தனுஷ் னு டைட்டில் வைப்போமா?


கமல்- வேணாம்.இப்போ அதுக்கு அர்த்தமே வேற============

11 யுவராணி தன் காதலனுக்கு லவ் லெட்டர் எழுதுனா பினிசிங் டச் எப்டி தரும்?


யுவர்ஸ் லவிங்லி
யுவராணி
யுவர் ராணி

==============

12 உங்க குழந்தைக்கு என்னோட விஷஸ் சொல்லிடுங்க


ஓகே மிஸ்.ஆனா அது 2 வயசு குழந்தை.சொன்னா புரிஞ்சுக்குமா?தெரில====================

13 சார்.நீங்க செந்தூரப்பூவே படம் பார்க்கலையா?


யா.எப்டி தெரியும்
தமிழில் வரும் முதல் ரயில் படம் னு தொடரி க்கு ADVT


===============
14 காலங்காத்தால எதுக்கு டாஸ்மாக் போய்  ஒரு ஃபுல்லும் , ஒரு ஆஃப்ஃபும் வாங்கினே?

 டியர், ஹேவ் எ ஒண்ட்ர ஃபுல் -னு சொன்னியே?

யோவ், அது ஒண்டர்ஃபுல்


=====================

15 

 இணையத்தமிழன் - பரணி நட்சத்திரம் - என்ன பேர் வைக்கலாம் ?

இ தமிழச்சி - பரணின்னே வைக்கலாமே


அபாரம்ங்க. எப்டிங்க இப்டி? ரொம்ப தாங்க்ஸ்ங்க


================

16 டேய்.ராஸ்கல்.10,ரூபா பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்துட்டு தியேட்டருக்குள்ளே எப்டி வந்தே?

விளம்பரத்தில் இது ஒரு ரயில் அனுபவம்னாங்க.

==================

17 சார்.தொடரி படம் பார்க்காமயே படம் சூப்பர் னு விமர்சனம் பண்றீங்களே ஏன்?
ரஜினி = இல்லைன்னா இதை சாக்கா வெச்சு வீட்டுக்கு வந்துடுவாரு.ஆதரவு கேட்க

================

18 பாகுபலி படத்தோட கதாசிரியர் தான் நம்ம படத்துக்கும் கதை எழுதறார்

சும்மா கதை விடாதீங்க.நம்ம படத்துலதான் எப்பவும் கதை இருக்காதே?


=================

19 டாக்டர்.வேலைக்குப்போகனும்னு நினைச்சாலே தூக்கம் வருது.

இனி தூக்கமாத்திரைக்குப்பதிலா வேலைக்குபோகனும்னு நினை னு பிரிஸ்கிரிப்சன்ல எழுதலாமோ?


=================

20 சார்.என் புருசன் கிட்டே இருந்து டைவர்ஸ் வேணும்.எந்த லாயரைப்பார்க்க?

ஏம்மா காசு செலவு பண்ணிட்டு?தனுஷ் சாரைப்போய்ப்பாரு.


==============

0 comments: