Tuesday, January 28, 2014

எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு

1. முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய் # இரட்டை இலைக்கு மேட்ச் க்கு மேட்ச்?=====================


2 காங்கிரசை யாரும் தனிமைப்படுத்த முடியாது: ஞானதேசிகன்"#,சிங்கம் தான் சிங்கிளா இருக்கும்.காங்கிரஸ் கோஷ்டியோட கூட்டமாத்தான் இருக்கும்======================3 எப்படி ஏளனம் செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் -ராமதாஸ்.# .என்ன ஓட்டு வேணாலும் ஓட்டிக்குங்க.ஆனா ஓட்டு மட்டும் போட்டுடுங்கங்கறாரா?=====================4கும்பகோணத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை கட்டி போட்டு நகை கொள்ளை.# செலவுக்குப்பணம் கேட்டு சம்சாரம் தர்லைனா ஆளை வெச்சு இப்டி புடுங்கிக்கனும்==========================


5  சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளவேணாம்-மத்ய அரசு # கட்டுன பணத்தை எல்லாம் ஜில்லா வாரியா திருப்பிக்கொடுத்துடற மாதிரி


======================


6 பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராகுல் காந்தி # வாக்கு சேகரிக்க மட்டும் கறிவேப்பிலையா பயன்படுத்திக்குவீங்க?======================7 பிறந்தநாள் வரை அமைதி காக்க தொண்டர்களுக்கு மு.க.அழகிரி வேண்டுகோள்..# அதுக்குப்பின் பொங்கல் வைக்கப்போறாரா?===========================8 என்னை நீக்கியதால் நஷ்டம் பூராவும் திமுகவுக்குத்தான்.-் மு.க.அழகிரி # லாபம் பூரா எனக்குத்தான் - ஜெ=====================9 இயற்கை உணவுகளால் 25 கிலோவைக் குறைத்து சிக்கென்று மாறிய நமீதா! # மெகா சைஸ் அப்பளமா இருந்தவர் மிளகாய் வத்தலா சுருங்கிட்டா எவன் பாப்பான்?


======================
10 பாரீஸ்: 80 முறை கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது # ஒரு தடவை யே சரியா எந்த வேலையையும் இந்த பொம்பளைங்க செய்யமாட்டாங்க போல=======================11 ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம்ஸ்ட்ரைக் # ஏன்? நீங்க சத்தம் இல்லாம ரீமேக்கி காசு பாக்கனுமா?


====================12 பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாரா–சிம்பு திருமண காட்சி # நல்ல வேளை எஸ் ஜே சூர்யா இயக்கலை======================13 இந்தியாவுடன் நெருக்கம் : ஜப்பான் விருப்பம் # ஏற்கனவே இந்தியா ஒரு தீபகற்ப நாடு என்பதை நினைவில் கொள்ளவும் , ஜப்பான், நிப்பான், தப்பான்========================14 பிப்ரவரியில் ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா திருமணம் # என்ன . இந்த வருசம் நடிகைங்க மேரேஜ் ஸ்பெஷலா? ஆளாளுக்கு தாலி கட்டிக்கறாங்க ?================15 தனிமையில் வாழவே விரும்புகிறேன் : சல்மான்கான் # பகல் ல தானே?


==================16  விருது எனக்கு இன்னும் சமூகப் பொறுப்பை கொடுக்கிறது: வைரமுத்து பேட்டி # அடடா, அப்போ இனி கில்மாப்பாட்டு எழுத மாட்டீங்களா?====================


17 நேபாளத்தில் சுஷில் கொய்லாரா புதிய பிரதமராகிறார்...# மணீஷா கொய்ராலா பரம்பரையோ?


=================18  வருகிற பாராளுமன்ற தேர்தலில் 👉இந்தியாவுக்கு காங்கிரசிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும்🎆 -எடியூரப்பா"#சரி.உங்களுக்கு என்ன கிடைக்கும்?


===================
19  ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு # சிம்பு ,ஆர்யா யுவர் அட்டென்சன் ப்ளீஸ்===================20 எனக்கு பதவி ஆசை இல்லை: ராகுல்  #  பெண்ணாசை , மண்ணாசை , பொன்னாசை எல்லாம் துறந்த துறவியே! அதிசயப்பிறவியே!ஓடாத புரவியே!


================================

0 comments: