Saturday, January 18, 2014

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா மர்ம மரணம் -குற்றம் நடந்தது என்ன?

 


தரூர் மனைவி உடல் பரிசோதனை முடிந்தது : டாக்டர்கள் அறிக்கையில் குழப்பம்

புதுடில்லி : மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் சசிதரூர் மனைவி மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் என்றும், இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டதாலும் இந்த இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என பல யூகங்கள் நிலவுகிறது.

மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் தங்களின் அறிக்கையில் உறுதியான முடிவை எதுவும் அறிவிக்க மறுத்து விட்டனர். இந்த மரணம் எதிர்பாராத விதமாக நடந்திருக்கிறது. இது இயற்கை மரணத்திற்கு எதிரானதாகவே இருக்கிறது. என்று தெரிவித்துள்ளனர்.


மரணம் இயற்கைக்கு எதிரானது: மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் தரப்பில் கூறியிருப்பதாவது; சுனந்தா மரணம் எதிர்பாராத வகையில் திடீரென நடந்திருக்கிறது. இது இயற்கைக்கு எதிரானதாக உள்ளது. இவரது உடலில் சில காயங்கள் உள்ளன. இந்த காயங்கள் இறப்புக்கு காரணமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகளும் இல்லை. சில மாதிரிகள் பயோலாஜிக்கல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. எனவே 2 அல்லது 3 நாட்கள் பொறுத்திருந்து தான் முழு விவரத்தை தெரிவிக்க முடியும். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.


உடல் பரிசோதனை முடிந்ததும் சுனந்தா உடல் அமைச்சர் சசிதரூரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அந்த உடலுடன் டில்லியில் அவரது வீட்டுக்கு கொண்டு சென்றார். வேனில் இருந்த போது அமைச்சர் மிக கவலையுடன் கன்னத்தில் கை வைத்தபடி இருந்தார்.

மனைவி சுனந்தா புஷ்கர் திடீரென மரணம் அடைந்ததால், துக்கம் தாளாமல் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் இன்று சுனந்தாவின் உடல் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என தெரிகிறது. இதன் பின்னரே அவரது சாவின் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
 
ஏற்கனவே 2 மனைவிகளை விவாகரத்து செய்து கொண்ட சசிதரூர் தொழில் அதிபரான கணவனை இழந்த சுனந்தா புஷ்கரை காதல் திருமணம் செய்து கொண்டார். தரூருக்கு பாகிஸ்தான் பெண் நிருபருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா சந்தேகமுற்றார். சசி தரூர் உண்மையற்றவராக இருந்து வருகிறார் என டுவிட்டரில் 2 நாட்களுக்கு முன்தான் சுன்நதா விமர்சித்திருந்தார். இந்நிலையில் டில்லி நட்சத்திர ஓட்டலில் அவர் மர்ம முறையில் இறந்து கிடந்தார்.


போலீஸ் விசாரணை:

இந்த மரணம் குறித்து போலீசாருக்கு எவ்வித முழு தகவலும் கிடைக்கவில்லை. இவரது உடலில் காயங்கள் எதுவுமில்லை. இவர் தற்கொலையா அல்லது கொலையா என்றும் சந்தேகம் நீடிக்கிறது. இவரது உடலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சுன்நதா தங்கியிருந்து ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த ரகசிய காமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் பரிசோதித்து வருகின்றனர்.

இந்த பரிசோதனை வீடியோ மூலம் படமெடுக்கப்பட்டு வருகிறது. இவரது உடல் பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகும்.

சசிதரூர் ஆஸ்பத்திரியில் அனுமதி : இதற்கிடையில் சசிதரூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இவரது இதயத்துடிப்பும் நிலை இல்லாமல் மாறி, மாறி இருந்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.


ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்:

சுனந்தா மரணம் குறித்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளனர், இவர்கள் வெளியிட்டுளள இரங்கல் செய்தியில், இந்த துயரமான நேரத்தில் அமைச்சர் சசி தரூருக்கு ஏற்பட்டுள்ள துக்கத்தில் நாங்கள் பங்கெடுத்து கொள்வதாகவும், அவருக்கு இறைவன் வலிமையான இதயத்தை கொடுக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

பாக்., பெண் நிருபர் அதிர்ச்சி: சுனந்தா மரணம் குறித்து பாக்.,பெண் நிருபர் மெகர் தரர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவரது கருத்தில், நான் காலையில் எழுந்தவுடன் இந்த துயர செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியுற்றேன். இந்த கவலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பெரும் துயரத்தில் நான் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. சுனந்தா ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். ஓ மை காட் ! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுனந்தாவுக்கு நோய் பாதிப்பா?

இதற்கிடையில் சுனந்தாவுக்கு குடலில் கேன்சர் தொற்று நோய் இருந்ததாகவும், இது தொடர்பாக கடந்த சில நாட்களாக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நோய் காரணமாக அவர் உணவு எதுவும் எடுத்து கொள்ள முடியாத நிலையில் இருந்தார். இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாமோ என்றும் கூறப்படுகிறது.அதிக டோஸ் மாத்திரை: இவரது உடல் நலம் தொடர்பாக மருத்துவ வட்டாரம் கூறுகையில்: வழக்கமாக எடுக்கும் மாத்திரை அளவை அதிகம் எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவர் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சசி தரூர் இன்று காலை 11 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


readers  views 


1. சுனந்தா அவர்கள் கோடி கணக்கில் பணம் படைத்தவர், IPL அணியின் சொந்தகாரர், முதல் இரு கணவர்களை விவாகரத்து செய்து மூன்றாவது திருமணம் செய்து கொண்ட மனஉறுதி படைத்தவர்... அப்படிப்பட்டவர் மன உளைச்சலுக்கு ஆளானார், கேன்சர் தொற்றால் அவதி பட்டார், அதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும்படியாக இல்லை...நோயால் பாதிக்கப்பட்டவர் கோடிகணக்கில் செலவு செய்ய வசதி இருந்தும் மத்திய அமைச்சரின் மனைவி என்ற அந்தஸ்து இருந்தும் மருத்துவமனையில் சேராமல் நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார் என்பது அவர் சாவிற்கு நோயோ, மன அழுத்தமோ காரணம் அல்ல...நடந்ததோ வேறு... அதை மூடி மறைக்க மிகபெரிய அளவில் சதி நடக்கிறது என்றே எண்ண தோன்றுகிறது... 2. சாதாரண மனிதனின் மனைவி இறந்தி்ருந்தால் கணவன் உள்ளே ஆனால் மந்தி்ரி மனைவி இறந்தால் பிரதமர் இரங்கல் தெரிவிப்பார் இது கொலைகாரர்கள் கொள்ளையர்கள் ஆட்ச்சியப்பா கண்ணை மூடிக்கொள்ளுங்கள் கனவு காணுங்கள் இந்தி்யாவில் பெண்ணின் நிலையை எண்ணி மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் .....ம் 


3. இவரை திருமணம் செய்வதற்குமுன் சுனந்தா அரபுநாடுகளில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். திருமணத்துக்கு பின் இவர்மீது IPL கிரிகெட் போட்டியில் 50 கோடி ரூபா அளவில் ஒரு அணியை விலைக்கு வாங்கிய வகையில் ஊழல் புகாரில் சிக்கி மீண்டார். இதைதான் காஸ்ட்லியான பெண் நண்பர் என்று மோடி கூறியதற்கு பெரிய எதிர்ப்பு. இப்போது அது உண்மையாகி விட்டது. 2 + 1 =3 இப்போ அடுத்தது ரெடி. 56 வயது வாலிபர் துள்ளி விளையாடுகிறார். கடைசி துபாய் இப்போது நடப்பு பாகிஸ்தான். காங்கிரஸ் இப்போது என்ன செய்யும்? பெண்ணை வேவுபார்த்ததாக மோடிமேல் நடவடிக்கை பெண்கள் விடுதலை அமைப்புகள் என்ற பெயரில் புகார் பெறப்பட்டு நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கச்சொல்லி மாநில அரசை வற்புறுத்தி வருகிறது. இப்போது இந்த சசி தரூர் அரேபிய வியாபாரியை துணைவி என்ற மனைவி இவருக்கு பாகிஸ்தானிய பெண் (உளவுக்காரியாக இருக்கலாம்) தொடர்பு உள்ளது என்று கூப்பாடு போட்டு அவர் மறுநாளே இறந்தது பற்றி வாய்மூடி மெளனமாக உள்ளது ஏன். மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்ற மாற்றந்தாய் மனபோக்கை என்னவென்று சொல்லுவது ? 4 ஒரு வேளை இந்த தற்கொலைக்கும் இவருக்கும் சம்மந்தமே இல்லையென்றாலும் இவர் ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டது சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது....அதோடு தற்கொலைக்கு இவர் காரணமாக இருப்பது போன்ற சூழ்நிலை உள்ளதால் இவருக்கு சட்ட பயம் வந்திருக்கலாம்... தற்கொலைக்கு கண்டிப்பாக தூண்டுதல் இருந்திருக்க வேண்டும்...அது என்ன என்பதை பொறுத்தே மற்றவை அமையும்...ஆனால் இதில் சில உண்மைகள் அவரோடு சேர்ந்தே மறைந்து விட்டது தான் வேதனை தரும் செய்தி... 5 கல்யாணம் ஆகி 7 வருடத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்டால் கணவன் கைது செய்ய படுவார் என்பது சட்டம். அதனால் தான் இப்பொழுது சுனந்தா தரூர் அவர்களுக்கு கடுமையான நோய் இருந்ததாக மீடியாக்கள் சொல்கின்றன. நேற்று காலை 4 மணிக்கு சில மீடியாக்களுக்கு (NDTV - Dutt, Headlines Today - Rahul Kanwal, CNN - Sagarika) IPL தொடர்பான சில முக்கிய விசயங்களை சொல்வதாக பேட்டி கொடுப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் இவர்கள் யாரும் அவரை பேட்டி எடுக்க செல்லவில்லை. எப்படியும் இதை இயற்கை மரணம் என்று முடித்து விடுவார்கள்.... 

 

6 சுனந்தா இறப்பதற்கு முன்பு சசிதரூர் பற்றி கூறிய வார்த்தைகளை -( பாகிஸ்தான் பெண் நிருபர் தொடர்பு மற்றும் ISI தொடர்பு ) மரண வாக்குமூலமாக கருத வேண்டும். அவர் மரணத்தில் மறைந்து இருக்கின்ற நம் நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். சுனந்தா பற்றி கூறுபவர்கள் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையான பெண் அல்ல என்றே கூறுகின்றனர், சசிதருரின் மருத்துவமனை அனுமதி மேலும் பல சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. இது மிகப்பெரிய நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் விசயமாக இருக்கும் என்று தோன்றுகிறது... பிரதமர் இதற்கும் கவலை தெரிவித்துவிட்டு மௌன சாமியாக சும்மா உக்கார்ந்து இருக்காமல் முழு அளவிலான புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 


7 மர்மமான மரணம் .....இந்த பெண் இறப்பதற்கு முதல் நாள் Twitter இனைய தளதில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் பெண்ணை பற்றி குறிப்பிட்டு இருந்தார் என்று செய்தி படித்தேன். ஆனால் அடுத்த நாளே இறந்துள்ளார் ....கண்டிப்பாக உளவுத்துறை விசாரணை தேவை. தேவைப்பட்டால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்க கூடாது. இது போன்றவை நாட்டுக்கு நல்லதல8 தாமரை ஒரு மத்திய அமைச்சராக உள்ளவர் ஏற்கெனவே சில பல பெண்களை மணந்து விவாகரத்து செய்தவர்.இப்போது பாகிஸ்தானின் சந்தேகத்துக்கு உரிய பெண் ஒருவரிடம் தொடர்புள்ளவர்.இப்படி இந்த நாட்டிற்கே கேடு விளைவிக்கக் கூடிய எதிரி நாட்டின் பெண்ணுடன் நட்புள்ளவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்கும் இந்த அரசாங்கம் இந்த நாட்டை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பது சாதாரணப் பாமரனுக்கும் கூடத் தெரியும். பாகிஸ்தானின் சர்ச்சைக்குள்ள பெண்ணுடன் தொடர்புள்ளவராகக் கருதப் பட்டவரை அமைச்சராக இந்தக் காங்கிரஸ் அரசு வைத்துள்ளதிலிருந்தே இவர் காங்கிரசின் உள் வட்டத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளவரென்பது தெரியும். இவரை மீறி போஸ்ட் மார்டம் அறிக்கை உண்மைத் தன்மையுடன் வெளி வருமா? இவருக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் இருப்பது எந்த அளவுக்கு உண்மை.அரசியல்வாதிகளின் மற்றும் ஊழல் அதிகாரிகளின் நெஞ்சு வலி தான் உலகப் பிரசித்தமே, 9 கார்கில் ஊடுருவலுக்கு கூட காங்கிரஸ் கட்சியின் சதி இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது....ஏனெனில் அன்றைய பா.ஜ ஆட்சியை வீழ்த்த இவர்கள் பல சதி செய்தனர்...அதில் ஒன்று தான் கார்கில் ஊடுருவல் மற்றும் சவப்பெட்டி ஊழல் என்று இல்லாத ஒன்றை பெரிதுபடுத்தினார்கள் என்ற சந்தேகம் அப்போதிலிருந்து இருக்கிறது.....பார்ப்போம் காலம் பதில் சொல்லும்...10 கமல் படம் மாதிரி புரியாம பேசி குழப்பாதீங்க... நேற்று கணவனுக்கு ISI உளவாளி நிருபருடன் தொடர்பு இருக்கிறது என்று சொன்னவர்... மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்... அதை அதிகமான மாத்திரையை உண்டதால் வந்த மரணம் என்று மருத்துவ பரிசோதனை சொல்கிறது.... சந்தேகங்கள் சற்றும் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கத்தான் செய்கிறது.... சுனந்தா எதோ சொல்ல வருவதற்குள் இறந்திருக்கிறார்...அது தன கணவனை பற்றியா... இல்ல அந்த பெண் நிருபரை பற்றியா... இல்லை நாட்டிற்கு ஏதாவது பெரும் ஆபத்து வரப்போகிறதா.....


  சுனந்தா புஷ்கர் மரணமடைந்தது தொடர்பாக மத்திய அமைச்சர் சசி தரூரிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் சசி தரூரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் எனவும் கூறப்படுகிறது.


புதுடில்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா உடல் இன்று மாலையில் லோதி ரோட்டில் உள்ள இடு காட்டில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் அஞ்சலி செலுத்த வருவதாக இருந்தது. ஆனால் அவர் தனது நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

மத்திய அமைச்சர் மனைவி சுனந்தா நேற்று மர்ம முறையில் மரணமடைந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நட்சத்திர ஓட்டலில் இறந்த நிலையில் கிடந்த சுனந்தா உடல் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சசிதரூரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

சுனந்தா பயன்படுத்திய மொபைல் போன், மற்றும ஐ.பேடு ஆகியன கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் அமைச்சர் சசி தரூரிடம் டில்லி போலீசார் வாக்குமூலம் பெற்று வாங்குவர் என கூறப்படுகிறது.

சுனந்தாவின் இறுதி போன் பேச்சு: சுனந்தா இறப்புக்கு முன் தனது நெருங்கிய நண்பரும மூத்த பத்திரிகையாளருமான நளினிசிங் என்பவரிடம் போனில் பேசியிருக்கிறார். இது குறித்து நளினி கூறியதாவது: சுனந்தா வெள்ளிக்கிழமை இரவு என்னிடம் 10 நிமிடம் போனில் பேசிக்கொண்டிருந்தார். பாக்., பெண் நிருபர் குறித்து தான் அதிகம் பேசினார். இவரது பேச்சின்போது மிகவும மனம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பல முறை அழுத படியே பேசினார். இது குறித்து நான் போலீசாரிடம் முழுமையாக தெரிவிப்பேன். சுனந்தா போன்ற ஒரு பெண்ணை நான் பார்த்தில்லை. மிகவும் நல்ல பெண். இவ்வாறு நளினி கூறினார்.

பிரதமர் அஞ்சலி தவிர்ப்பு : மறைந்த சசி தரூர் மனைவி உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் சர்ச்சைகள் வரக்கூடும் என்ற காரணத்தினால் பிரதமர் இதனை கடைசி நேரத்தில் தவிர்த்து விட்டார். 

thanx - dinamalar

0 comments: