Tuesday, January 28, 2014

ஹை ஹீல்ஸ் செப்பல் போடும் பிகர்களே! ஒரு சொல் கேளீர்

1. காதலைச்சொல்ல நீ ரோஜாப்பூவை நீட்டும்போது காதலி திரும்பிக்கொண்டால் கூந்தலில் வைத்து விடு என்ற குறிப்பால் உணர்த்தலாகவும் இருக்கலாம்=====================2 தலைக்குக்குளித்தால் நரை முடிகள் வெளியே தெரிவது மாதிரி நீ பார்க்கும்போது எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் வெளியே குதித்து குதூகலிக்கிறது========================3 பசியும் ,அவமானமும் ஒரு ஏழைக்கு பழகி விடுவது போல் உன் அலட்சியமும் ,நிராகரிப்பும் எனக்குப்பழகி விட்டது.=====================


4 கோலம் போடும் முன் பூமியைக்குளிர்விக்க தண்ணீர் தெளிப்பது போல என்னிடம் பேசும் முன் உன் விழி ஒளிக்கதிரை என் மேல் தெறிக்கவிடுகிறாய்======================


5 கடிதத்தில் ஏதாவது எழுதும் முன் முகவரியை முதலில் எழுதுவது மாதிரி உன்னுடன் பேச ஆரம்பிக்கும் முன் உன் விழிகளை ஆசையுடன் பார்த்துக்கொள்கிறேன்========================


6 நான்கு நாவல் பழங்களை சாப்பிட்டால் தற்காலிகமாக நாக்கு மரத்து விடுவது போலே உன் அலட்சியங்கள் என் மனதை நிரந்தரமாக மரத்துப்போகச்செய்து விட்டது==========================


7 பீர்க்கங்காய் மேல் தோலை சுரண்டினால் வரும் சுருள் சுருள் பூ போல உன் கூந்தலின் முன் சுருள் குழல் காற்றில் அசைகிறது


=====================8 சாரி சொன்னா எனக்குப்பிடிக்காதுன்னுபொண்ணு சொன்னா உடனே யோசிக்காம " சாரி.இனி உனக்குப்பிடிக்காத சாரி யை கேட்க மாட்டேன்.சாரி " என்பான் தமிழன்


=======================


9 பத்மபூசன் விருது விஜய் ,அஜித் இருவரில் யாருக்கு முதலில் கிடைக்கும் ? #,அடுத்த சண்டை ;-))


======================10 DPல தன் சொந்த முகத்தை 5 நிமிசத்துல காமிச்ட்டு மாத்தும் பெண் ட்வீட்டர்கள் இருந்தா் தமிழன் 1 நிமிசத்துல காப்பி பண்ணி வெச்சுக்குவான்======================11 ஒரு சாதா படத்தை அசாதா படமா காட்டுவதில் சன் டிவி யின் மார்க்கெட்டிங் டெக்னிக் கோலோச்சுகிறது # இங்கே என்ன சொல்லுது


====================12 ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கத்தில் ,சாயலில் உருவான படம் தான் ஜெய் ஹோ படம்னு சொல்றாங்க # பாத்துடுவோம்====================13 ATM மில் பாஸ்வோர்டு் அடித்தபின் பணம் எடுக்க முடியாமல் மிஷின் ரிப்பேர் எனக்காட்டினால் அப்டியே வராமல் மீண்டும் சில நெம்பரை தட்டி குழப்பவும்=====================


14 விஜய் கெட்டப் மாத்த மாட்டார்.விஜய் ரசிகைகள் டி பி அடிக்கடி மாத்துவாங்க #,அவதானிப்பு=====================15 படத்தை போட்டுட்டு தான் டிக்கெட் கவுன்ட்டரையே திறக்கறாங்க.இதுல என்ன தொழில் ரகசியம்? # ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா - ஜெய் ஹோ


==================


16 ஒரு வழிப்பாதையில் வேணி நடந்து சென்றால் "ஒன் வே நீ" னு சொல்லலாம்


==========================


17 பெரும்பாலான பெண்கள் காலைல 7 மணிக்கு மேல் தான் எந்திரிக்கறாங்க.குடும்பத்துல 7 1/2 அதனால தான் ஸ்டார்ட் ஆகுது

============================


18 ஹை ஹீல்ஸ் செப்பல் போடும் பிகரைப்பார்த்தா எப்போ தடுக்கி ( நம்ம மேல) விழுந்துடுமோனு பயமா இருக்கு==========================


19  ட்விட்டர்ல ஃபாலோயர்ஸா இருக்கும் 11000 பேரும் ஆளுக்கு 10000 ரூபா குடுத்தா வேலைக்கே போகத்தேவை இல்லை.# சாரு நிவேதிதா சிந்தனைகள்=======================


20  கல்யாணம் ஆகாத லேடி மேஸ்திரியா த்ரிஷா நடிச்சா மேஸ்திரிஷா னு சொல்லலாமா?

0 comments: