Monday, January 06, 2014

CAPTAIN PHILLIPS - சினிமா விமர்சனம் ( சினிமா எக்ஸ்பிரஸ்)

 

'

கேப்டன் பிலிப்ஸ் (CAPTAIN PHILLIPS)

உண்மையில் நடந்த சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் "கேப்டன்ஸ் டியூட்டி: சோமாலி பைரேட்ஸ், நேவி சீல்ஸ் அண்ட் டேன்ஜரஸ் டேஸ் அட் ஸீ'.  அமெரிக்காவைச் சேர்ந்த எம்.வி.மார்ஸ்க் அலபாமா என்ற சரக்கு கப்பல் ஒன்று 2009ஆம் ஆண்டு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்படுகிறது. இருநூறு ஆண்டு கால சரித்திரத்தில் ஆமெரிக்க சரக்குக் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்படுவது இதுவே முதல் முறை. 
 
 
 
 உலகமயமாக்கல் காரணமாக பாதிக்கப்படும் பொருளாதார சீர்குலைவின் பின்னணியில் சோமாலிய கடற்கொள்ளைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தப் படம்.  ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற டாம் ஹான்ஸ் கப்பல் கேப்டன் வேடத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். ஏற்கெனவே இவர் நடித்த "கேஸ்ட் அவே' "ஃராரஸ்ட் கம்ப்', "சேவிங் பிரைவேட் ரயான்', "தி டாவின்ஸி கோட்' ஆகிய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்படுகிறது. 
 
 
 
 டாம் ஹான்ஸ் பாத்திரத்துக்கு ஈடு கொடுத்து முசி என்ற பெயருடைய சோமாலியா கடற்கொள்ளையர்களின் தலைவன் வேடத்தில் நடித்திருப்பவர் பர்கத் அப்ரி.  கப்பல் கேப்டனுக்கும் கடற்கொள்ளையர்களின் தலைவனுக்கும் இடையே ஏற்படும் உணர்வு பூர்வமான போராட்டத்தில் மனித மனதின் இயல்புகளும் வெளிப்படுகின்றன.  "போர்னி' தொடர்கள் மூலம் புகழ் பெற்ற பால் கிரீன்கிராஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.  ஹென்ரி ஜாக்மேனின் இசையும், பேரி அக்ராயிடின் ஒளிப்பதிவும் படத்துக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்திருக்கின்றன.
 
 
 
 
  இவற்றுடன் படத்தின் விறுவிறுப்புக்கு வெகுவாகத் துணை நிற்பது பில்லி ரே எழுதிய திரைக்கதைதான். சோமாலிய கடற்கொள்ளைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை இதுவரை ஊடகங்களில் அதிகமாக வெளிச்சமிட்டுக் காட்டப்படவில்லை என்பதால் இந்தப் படம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.  சோனி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் தமிழகமெங்கும் திரையிடப்படவிருக்கிறது.
 
 
thanx- cinema express

0 comments: