Friday, January 24, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 24 1 2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

 

நேர் எதிர்-கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரி யேஷன்ஸ் வழங்கும் நேர் எதிர்

thanu presents ner ethir
ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் நேர் எதிர்.


கலைப்புலி எஸ். தாணு வின் வி கிரியேஷன்ஸ் வழங்கும் தி மூவி ஹவுஸ் எண்டர்
டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


கேயாரிடம் 12 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கற்ற எம். ஜெயபிரதீப் இயக்கியுள்ளார்.


ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுட ன் பார்த்தி
அறிமுகமாகிறார்.


நேர் எதிர் ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர். முழுக்க முழுக்க இதன் கதை
இரவிலேயே நடக்கிறது. ஒரு காட்சி கூட பகலில் எடுக்கப் படவில்லை.


அது என்ன நேர் எதிர்? வழக்கமான நாயகன் வில்லன் மோதலா என்றால், மறுக்கிறார்

இயக்குநர்.


உலகில் எல்லா விலங்குகளும் அதனதன் சுபாவத்தில் சரியாகவே இருக்கின்றன. சிங்கம்
புல் தின்னாது; வேட்டையாடவே செய்யும். நாய் முனகாது; குரைக்கவே செய்யும். பூனை
குரைக்காது; மியாவ் என்றே கத்தும். பாம்பு கொஞ்சாது; சீறவே செய்யும். ஆனால்
மனிதன் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.ஒரு மனிதன் எப்போது புலி போல பதுங்குவான்,எப்போது சிங்கம் போல வேட்டையாடுவான்
என்று யாருக்கும் தெரியாது. எப்போது நரித்தனம் செய்வான், எப்போது பாம்பு போல
விஷத்தைக் கக்குவான் என்று யாருக்குமே தெரியாது. எல்லா விலங்குகளின்
குணத்தையும் தன்னுள்ளே கொண்டவனாக இருக்கிறான்.ஒருவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு நேர்
எதிர் ஆக அவன் இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு
சுவாரஸ்யப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் நேர் எதிர்.படத்தில் வரும் 5 பாத்திரங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று புரியாதபடி
காலம் நடத்தும் ஆட்டம்தான் திரைக்கதை.இன்றைய யதார்த்த உலகில் நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளும்
போக்குகளுமே கதைப் பின்னணி.


இப்படத்துக்காக ஏவி எம் ஸ்டுடியோவில் ஒரு பெரிய செட் போடப்பட்டு பெரும்பாலான


காட்சிகள் அதில் படமாகியுள்ளன. மூன்று மாடிகள் கொண்ட இந்த செட் 75 லட்ச ரூபாய்

செலவில் போடப் பட்டுள்ளது.


தற்காலச் சூழலில் தவறு எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை படம்
பிடித்துக்காட்டும் கதை. காதல், நட்பு எல்லாம் இணைந்த சஸ்பென்ஸ். அடுத்தது

என்ன என்று ஊகிக்க, நம்ப முடியாத திருப்பங்களுடன் கதை பயணிக்கும்" என்கிற
இயக்குநர் ஜெயபிரதீப், இது ஆபாசம் அருவருப்பில்லாத படமாக இருக்கும் என்று
உத்திர வாதம் தருகிறார்.நேர் எதிர் ஒரு நகரம் சார்ந்த கதை. ஏவி.எம். செட் தவிர சென்னையில் முக்கிய
சாலைகள், ஹோட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களிலும் படமாகீயுள்ளது.


படத்தில் 5 பாடல்கள். இசை சதீஷ் நாராயணன். இவர் ஏ.ஆர். ரஹ்மானின்
மாணவர்.ஏற்கெனவே கனிமொழி லீலை இசைய மைத்தவர். இப்படத்தின் பின்னணி இசையும்
பேசப்படும்
அறிவுமதி, அறிமுக கவிஞர் கமலக்கண்ணன் ஆகியோருடன் ஜெயபிரதீப்பும் பாடல்
எழுதியுள்ளார். ஸ்ரேயா கோஷல், நீத்தி மோகன், பிரபல பாப் சிங்கர் லண்டன் ஹர்ஷி
போன்றவர்கள் பாடியுள்ளனர்.ஒளிப்பதிவு ராசாமதி. இவர் கவிஞர் அறிவுமதியின். மகன். சித்து+2.போன்ற
படங்களில் பணியாற்றியவர். கலை அறிமுகம் மாயாபாண்டி எடிட்டிங் கோபி கிருஷ்ணா.
இவர் ஏற்கெனவே வழக்கு எண் 18/9 குட்டிப்புலி மனங்கொத்திப் பறவை
படங்களில் பணியாற்றியவர்.நேர் எதிர்படத்தை தி மூவி ஹவுஸ் எண்டர்டெய்ன் மெண்ட் நிறுவனம்
தயாரித்துள்ளது.படத்தைப் பார்த்த கலைப்புலி எஸ். தாணு, அதன் நிறமும், தரமும்
பிடித்துப் போகவே தன் வி கிரியேஷன்ஸ் சார்பில் வாங்கி வெளியிடுகிறார். வி
கிரி யேஷன்ஸ் சம்பந்தப் பட்டதுமே படத்துக்கு வெளிச்சம் அதிகரித்துவிட்டது.


பிரமாண்டம் கூடி விட்டது.
ராத்திரி நேர சென்னையை படத்தில் பிழிந்திருக்கிறார்கள். முழுப்படமும் சென்னையில்தான். அதிலும் ராத்திரிவேளையில். எல்லோரும் தூங்குகிற நேரம். என்றாலும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று பிரமாண்ட அரங்கு ஒன்றை நிர்மாணித்து முக்கிய காட்சிகளை அதில் எடுத்திருக்கிறார்கள்.

FILE

ராசாமதியின் ஒளிப்பதிவு படத்தின் வலது கை என்றால் ரஹ்மானின் முன்னாள் உதவியாளர் சதீஷ் சக்ரவர்த்தியின் இசை இடது கை. ரத்தமும் சதையுமான படம் போலிருக்கிறது.  வெளியாகும் மூன்று படங்களில் இதற்கு மட்டும்தான் யுஏ சான்றிதழ்.
ஈரோட்டில்  தேவி அபிராமியில்  ரிலீஸ் 

 
2.மாலினி 22 பாளையங்கோட்டை 22 பீமேல் கோட்டயம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம். இயக்கியவர் ஆஷிக் அபு. ஆண்களால் திட்டமிட்டு சூறையாடப்படும் பெண் அவர்களை பழிவாங்குவதுதான் படத்தின் நாட். பூ ஒன்று புயலானது விஜயசாந்தி கதைதான். ஆனால் ஆஷிக் அதனை கையாண்டவிதம் ரொம்ப மாடர்ன்.
FILE

முக்கிய குற்றவாளியான ஃபகத் ஃபாசிலுக்கு பாதிக்கப்பட்ட பெண் ரிமா கல்லிங்கல் தரும் தண்டனை சவுதி அரேபியா பாணி. அங்கு திருடினால் கையை வெட்டுவார்களாம். இங்கே ஃபகத்தின் அதை நறுக்குகிறார் ரிமா.

இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிராக... 
நடக்கும் குற்றங்களால் ஏற்பட்ட அறச்சீற்றம்தான் இந்தப் படத்தை ரிமேக் செய்ய காரணம் என்று சீறுகிறார் படத்தை ரிமேக் செய்திருக்கும் ஸ்ரீப்ரியா. ஒருகாலத்தில் இவர் காட்டிய கவர்ச்சியை இப்போது மறந்துவிட்டார் போலும். ஸ்ரீப்ரியாவின் கணவர்தான் தயாரிப்பு.
FILE

சம்பிரதாயங்களை சைலண்டாக நொறுக்குவதுதான் ஆஷிக் அபுவின் ஸ்டைல். இதற்காக மரபை காலி செய்கிறார் என்று ஒவ்வொரு நாளும் ஒரு கண்டெய்னர் விமர்சனங்களை எதிர்கொள்ளவும் செய்கிறார். தண்ணி அடிப்பது, ஃப்ரி செக்ஸ், பழிவாங்குவதற்காக உதவி செய்கிற பொpய மனிதனுடன் படுப்பது என்று சகல சினிமா இலக்கணங்களையும் இதில் மீறியிருந்தார். தமிழில் அதனை எந்தளவு ஸ்ரீப்ரியா கொண்டு வந்திருக்கிறார் என்பது கேள்வி.

இந்தப் படத்தின் போதுதான் ஆஷிக் அபுவும், ரிமா கல்லிங்கலும் நெருக்கமாகி திருமணம் செய்து கொண்டனர். மாலினி 22 பாளையங்கோட்டையில் ரிமா கல்லிங்கல் நடித்த வேடத்தில் நித்யா மேனன். அரவிந்த சங்கர் இசையமைத்துள்ளார். இரண்டு மணி பத்து நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. 
ஈரோட்டில் சண்டிகா , அண்ணா வில்  ரிலிஸ் \\\\
 
கோலிசோடா

கோயம்பேட்டில் உருவான கோலிசோடா

Kolisoda in Koyampedu

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை டைரக்ட் செய்த ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் 6 வருடங்களுக்கு பிறகு தற்போது டைரக்ட் செய்துள்ள படம் கோலிசோடா. 
படம் டைரக்ட் செய்ய யாருமே வாய்ப்பு கொடுக்காததால் தானே இந்தப் படத்தை சொந்தமாக தயாரித்தார். படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த டைரக்டர் லிங்குசாமிக்கு படம் பிடித்துப்போக இப்போது திருப்பதி பிரதர்ஸ் படத்தை வாங்கிவிட்டது. படத்தை நல்ல விலைக்கு விற்று விட்டதால் சந்தோஷத்தில் இருக்கும் வி.மில்டன் தனது கேமரா அசிஸ்டெண்டுகள் 4 பேருக்கும், உதவி இயக்குனர்கள் 4 பேருக்கும் தங்க சங்கிலியை பரிசாக வழங்கி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

படத்தை பற்றி அவர் கூறியதாவது: கோலி சோடாவுக்குள் ஒரு விஷயம் இருக்கு. அமைதியா வச்சிருந்தீங்கன்னா தாகம் தீர்க்க உதவும். அதையே ரொம்ப பிரஷர் கொடுத்தீங்கன்னா வெடிச்சு சிதறிடும். படத்துல வர்ற நான்கு பசங்களும் அப்படித்தான். கோயம்பேடு மார்க்கெட்டுல கிடைகிற வேலை செஞ்சு வாழுற பசங்க, அவுங்கள போயி டார்ச்சர் பண்ணினா என்னாகும்றதுதான் கதை.

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு அடையாளம் வேணும். கோயம்பேடு மார்க்கெட்டு எனக்கு தெரிஞ்சு ஒரு 5 ஆயிரம் பேராவது எந்த அடையாளமும் இல்லாம இருக்காங்க. வேலை செய்றது, சாப்புடுறது, தூங்குறது இதை தவிர அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதிலேருந்து நான்கு பசங்கள எடுத்து கதை சொல்றேன்.

கோயம்பேடு மார்க்கெட்டுல பல மாசம் தங்கியிருந்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அங்கேயே படபிடிப்பு நடந்துச்சு. நாலஞ்சு கேமராவை ஆங்காங்கே மறைத்து வச்சு. ஷ¨ட்டிங் நடத்தினேன். சினிமா ஷ¨ட்டிங் நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது. நீங்க அடிக்கடி கோயம்பேடு மார்க்கெட் போறவங்களா இருந்தா இந்தப் படத்துல நீங்களும் வரலாம்.

ரொம்ப யதார்த்தமான ஆர்ட் படமும் கிடையாது, ஒரு குத்து சாங், ஒரு பார் சாங். கொஞ்சம் லவ்வுன்னு கமர்ஷியல் படமும் கிடையாது. இதை தாண்டி மூன்றாவது வகையா இந்தப் படத்தை எடுத்திருக்கேன். இதுக்கு பிறகு எனக்கு நல்ல இயக்குனர்ங்ற அடையாளம் கிடைக்கும்னு நம்புறேன். என்கிறார் விஜய் மில்டன்.
சினிமாவில் நீங்கள் இயக்குனராக இல்லாமல் வேறு எதுவாக இருந்தாலும் அது இரண்டாம்பட்சம்தான். இயக்குனர்தான் கேப்டன் ஆஃப் தி ஷிப். இருமுறை அந்த தொப்பியை அணிந்தவர்களால் அதனை கழற்றுவது கடினம்.
FILE

2006 ல் அந்த தொப்பியை முதல்முறையாக போட்டார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். முதல்முறை என்பதால் கட்டுப்பாட்டில் நிற்காமல் கப்பல் கவிழ்ந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு கோலி சோடாவின் மூலம் மீண்டும் கேப்டனாகியிருக்கிறார்.
 

அடையாளப் பிரச்சனைதான் இந்தப் படத்தின் கதை. அடையாளமே இல்லாத ஒரு குரூப்பின் அடையாள சிக்கல்களை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன் என்கிறார் விஜய் மில்டன். மீண்டும் 2006 ரிப்பீட் ஆகுமோ என்று அவரது பேச்சு பயமுறுத்தினாலும் டீஸர் வேறு மாதிரி உள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் வேலை பார்க்கும் சிறுவர்களும் அல்லாத டீன்ஏஜும் அல்லாத இரண்டுங்கெட்டான் வயதுக்காரர்களின் கதையிது. பாண்டிராஜின் பசங்க படத்தில் நடித்தவர்கள்தான் முக்கிய நட்சத்திரங்கள்.ஆள்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் நான்கு கேமராக்களை மறைத்து வைத்து கொரில்லா பாணியில் படமாக்கினார்களாம்.

அருணகிரி பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தயாரிப்பு பாரதி சீனி. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை விநியோகிக்கிறது.  இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்று வழங்கியுள்ளது.ஈரோட்டில்  ஆனூர் , ஸ்ரீநிவாசாவில்  ரிலீஸ்

 

4   JAI HO
As soon as the Jai Ho
நாட்டில் நடக்கும் ஊழல், அநீதியை எதிர்த்து, சாதாரண மனிதன் எடுக்கும்
விஸ்வரூப போராட்டம் தான், இந்த படத்தின் ஒன்லைன். சிரஞ்சீவி நடித்து, நம்ம ஊர் முருகதாஸ் இயக்கி, 'ஸ்டாலின்' என்ற பெயரில், 2006ல் வெளியான, தெலுங்கு திரைப்படம் தான், இந்த படத்தின் மையக் கருத்து. இதில், அநீதியை கண்டு பொங்கி எழும் நபராக, வாழ்ந்து காட்டியுள்ளார், சல்மான் பாய். அவருக்கு உதவும் முக்கிய வேடத்தில், வெளுத்து கட்டியுள்ளார், தபு. 
இவர்களுடன், சுனில் ஷெட்டி, சனா கான் ஆகியோரும் உள்ளனர். சொகைல் கான் இயக்கியுள்ளார். 'அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையை மையமாக வைத்து, இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது' என, யாரோ பீதியை கிளப்பி விட்டதால், பாலிவுட் திரையுலகம் பரபரத்து போய் கிடக்கிறது.
ஈரோட்டில் ஸ்ரீ கிருஷ்ணா வில்  ரிலீஸ் 
 A


47  RONIN  -கடந்த மாதம் உலகம் முழுவதும் ரிலீசாகி வசூலை குவித்த படம் 47 ரோனின். யுனிவர்செல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்ல எரிக் ரின்ஞ்ச் டைரக்ட் செய்திருந்தார். கேனு ரீவாஸ், ஹிரோயோகி சந்தா, கோ சைபாக்ஷி நடித்திருக்கிறார்கள். ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ரிலீசானது. இந்தப் படம் இப்போது 47 சாகச வீரர்கள் என்ற டைட்டிலுடன் தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற 24ந் தேதி ரிலீசாகிறது


ஈரோட்டில்  வி எஸ் பி  யில்  ரிலீஸ் 
நன்றி  - தினமலர், மாலைமலர், ஆல் சினிமா நெட் 

0 comments: