Thursday, January 30, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (31.1.2014 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

இன்னைக்கு வியாழக்கிழமை தான். ஆனா இன்னைக்கு 2 படங்கள் ரிலீஸ் ஆவதால் சினிமா ரசிகனுக்கு இன்னைக்கு வெள்ளி

1. இங்க என்ன சொல்லுது -ஒரு நாள் நைட்டு விடிவி கணேஷ், கார்ல வந்துட்டிக்கார். போதையில இருந்த நாலஞ்சு பேர், பைக்ல அவர் காரை விரட்டிட்டு வந்திருக்காங்க. இவருக்கு பயம். போதையில வேற இருக்காங்க. ஏதாவது பண்ணிருவாங்களோன்னு வேகமா வண்டியை ஓட்டியிருக்கார். அவங்களும் விடாம தொடர்ந்திருக்காங்க. அப்புறம் ஒரு கட்டத்துல காரை நிறுத்திடலாம்னு ஸ்லோ பண்ணும்போது கார் கண்ணாடியை தட்டியிருக்காங்க,அதுல ரெண்டு பேர். இவர் திறந்ததும், சட்டையை கழட்டி காண்பிச்சுட்டு ‘இங்க என்ன சொல்லுதுதெர்தா?’ன்னு சிரிச்சுட்டே வேகமா போயிட்டாங்களாம். இந்த பஞ்ச் இவ்வளவு ரீச்சாயிருக்கான்னு அவருக்கு ஆச்சரியம். மறுநாளே அதை டைட்டிலா பதிவு பண்ணிட்டு வந்துட்டார்...’’ என்கிறார் சன் பிக்சர்ஸின் ‘இங்க என்ன சொல்லுது’ பட இயக்குநர் வின்சென்ட் செல்வா. இந்த படத்துக்காக, தனது பெயரை வி.செல்வா என்று மாற்றியிருக்கிறார்.‘‘பெயரை நான் மாற்றலை. விடிவி கணேஷ்தான் இப்படி இருந்தா சரியா இருக்கும்னு மாற்றி வச்சுட்டார் என்கிறார் வி.செல்வா.

சரி, காதல் கதைன்னு சொல்றாங்களே?

காதல் இல்லாம சினிமா இல்லை. ஒரு நாற்பது வயசு யூத்துக்கு வர்ற காதல், கல்யாணம், பிரச்னைகள், மகிழ்ச்சி, சோகம்னு கதை எல்லா பக்கமும் போகும். அதாவது, இந்தியில ராஜ்கபூர் படங்கள் பார்த்தீங்கன்னா, எல்லாருமே கிண்டலா அவரை பேசுவாங்க. முட்டாள்ங்கற மாதிரி அவர் கேரக்டரை நினைப்பாங்க. கடைசியில எல்லாத்தையும் அடிச்சுட்டு தூக்கிட்டு இவர் போயிட்டிருப்பார். ரொம்ப ஆச்சரியமா அவரை பார்க்கிற மாதிரி கேரக்டர் இருக்கும். அதே மாதிரியான கதைதான்
இதுவும்.

விடிவி கணேஷோட கதை, வசனம் எப்படியிருக்கு?

எல்லா மனுஷங்களுக்கும் வாழ்க்கை நிறைய அனுபவங்களை கற்றுக்கொடுத்திருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான மனிதர்களை சந்திருக்கிறோம். வேற வேறயான சூழல் இருக்கு. வேற வேறயான நிகழ்வுகளை எதிர்கொள்கிறோம். இப்படியான அனுபவங்களை கதையாக்கினாலே சுவாரஸ்யம் அதிகமா இருக்கும். அப்படி விடிவி கணேஷ் கேள்விப்பட்ட, அவரோட நண்பர்களுக்கு நடந்த, அனுபவப்பட்ட சம்பவங்களை வச்சு கதை பண்ணியிருக்கார். ஒவ்வொரு கேரக்டரும் அப்படி பண்ணினதுதான். யதார்த்தமான கதையா இருக்கும்.

நீங்க எப்படி இந்தப் படத்துக்கு இயக்குநரானீங்க?

எனக்கும் கணேஷுக்கும் 15 வருட நட்பு இருக்கு. முதன் முதலா அவர் படம் தயாரிக்க நினைச்சதும் என்னைதான் இயக்குநரா முடிவு பண்ணியிருந்தார். அப்புறம் அது தள்ளி தள்ளி போச்சு. நானும் சில படங்களை டைரக்ட் பண்ணிட்டேன். இப்பதான் அதுக்கான நேரம் வந்து அவர் படத்தை இயக்கற வாய்ப்புக் கொடுத்திருக்கார். இந்தக் கதையை நான் கேட்டப்ப அவ்வளவு ஆச்சரியமா இருந்தது. இதுல இவர் மட்டும்தான் நடிக்க முடியும். வேற யாருக்கும் இது செட் ஆகாது. அப்படியொரு கதை இது. அவர் கதையா இருந்தாலும் அதை அழகா நாங்க படமாக்கியிருக்கோம்னு நினைக்கிறேன்.

இதுல நடிக்கும்போது சிம்புவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காதல்னு சொன்னாங்களே?

அப்படி எதுவுமே இல்லை. சிம்புவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் தனித் தனியா தான் காட்சிகள் உண்டு. ஒரு காட்சியில மட்டும்தான் ரெண்டு பேரும் ஒண்ணா வருவாங்க. அதனால அவங்களுக்குள்ள காதல்னு சொல்றதெல்லாம் சும்மா. சிம்புவும் சந்தானமும் படத்துக்கு பெரிய பலம். அவங்க வர்ற ஒவ்வொரு காட்சியும் கிளாப்ஸ் அள்ளும்.

மீரா ஜாஸ்மின் ஷூட்டிங்ல தொந்தரவு பண்ணுவார்னு சொல்வாங்களே?

இல்லை. அவங்களால எந்த தொந்தரவும் இல்லை. ஒரு குழந்தை மாதிரி படப் பிடிப்புல நடந்துக்கிட்டாங்க. கேரளாவுல அவர் வீட்டுல போய் கதை சொன்னோம். உடனே ஓகே சொன்னாங்க. பிறகு அவங்க வீட்டுலயே போட்டோசெஷன் நடத்திட்டு வந்தோம். ஷூட்டிங் நேரத்துல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்ட்ட, ‘என்னை ரொம்ப அழகா காண்பிச்சிருக்கீங்க’ன்னு சொல்லிட்டே இருப்பார். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு ஒரு அரைநாள் தேவைபட்டது. கேட்டதும், ‘அரை நாள் என்ன, எவ்வளவு நாள் வேணாலும் எடுத்துக்குங்க’ன்னு ரெண்டு நாள் வந்து நடிச்சுக் குடுத்துட்டுப் போனாங்க. அவங்க கேரக்டர் லண்டன்ல நடக்கிற மாதிரி இருக்கும். அப்புறம் சிங்கப்பூர்ல சில காட்சிகள் நடக்கும். மீராவோட ஒத்துழைப்பு அவ்வளவு அருமையா இருந்தது.


ஈரோடு சண்டிகா , வி எஸ் பி யில்  ரிலீஸ் 


2. நினைத்தது யாரோ?-அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், ஜி.இமானு வேல் இணைந்து தயாரிக்கும் படம் நினைத்தது யாரோ. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி விக்ரமன் இயக்குகிறார்.

இவர் புது வசந்தம், நான்பேச நினைப்பதெல்லாம், வானத்தைப் போல, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், சூரியவம்சம், பிரியமான தோழி உள்ளிட்ட பல ஹிட் படங்களை டைரக்டு செய்தவர்.

இதில் நாயகன், நாயகி உள்ளிட்ட பலரும் புது முகங்களாக நடிக்கின்றனர். அதற்கான தேர்வு நடக்கிறது. படம் பற்றி விக்ரமன் சொல்கிறார். இது என்னுடைய பதினேழாவது படம். இதுவரை நான் எடுத்த படங்கள் அனைத்துமே காதல், குடும்ப சென்டிமென்ட், காமெடி என கலவையான கதையம்சம் உள்ள படங்களாக இருந்தன.

நினைத்தது யாரோ படத்தில் முழுக்க காதலை மட்டுமே பிரதானப்படுத்துகிறேன். வழக்கமாக எனது முந்தைய படங்களில் பாட்டுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும். நினைத்தது யாரோ படத்திலும் அவை இருக்கும்.


ஈரொடு ஸ்ரீ கிருஷ்ணாவில்  ரிலிஸ்


ரம்மி -ஸ்ரீவள்ளி ஸ்டுடியோ சார்பில் கே.குருநாதன், பி.ஏலப்பன், பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ரம்மி. இதில் நாயகர்களாக விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் நடிக்கின்றனர். நாயகிகளாக ஐஸ்வர்யா, காயத்ரி நடிக்கின்றனர். ஆடுகளம் ஜெயபாலன், சுஜாதா, சென்ட் ராஜன், சிவகுமார், பேபி, காதல் சரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சஞ்சய் முக்கிய வேடத்தில் வருகிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி பாலகிருஷ்ணன் கே. இயக்குகிறார். இவர் லிங்குசாமி படங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றியவர் அவர் படம் பற்றி அவர் சொல்கிறார்.

காதலும், சீட்டாட்டமும் ஒன்றுதான். மூன்று இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ஒன்றாக பழகுகின்றனர். அவர்களின் காதல், நட்பு, குடும்ப செண்டிமென்ட், போராட்டங்களே படத்தின் கதை. இப்படம் தனியார் கல்லூரிகள் உருவாகாத 80-ம் ஆண்டு நடக்கிற கதை.

புதுக்கோட்டை, சிவகங் கை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. ஒளிப்பதிவு: சி.பிரேம்குமார், இசை: டி.இமான், எடிட்டிங்: ராஜா முகமது , வசனம்: மோகன பழனிச்சாமி.


ஈரோடு அபிராமியில்  ரிலீஸ் 


எதிர் வீச்சு -மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் ஷாகுல், எஸ். ராஷிக் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம். எதிர் வீச்சு.

இதில் நாயகனாக இர்பான், நாயகியாக ரஸ்னா நடிக்கின்றனர். சின்னி ஜெயந்த், நளினி, சிங்கமுத்து, வையாபுரி, ராஷிக், மலேசியாவை சேர்ந்த உதயரதி, நிர்மலா, கிளிமாஞ்சாரோ, துஷாரா, விநிஷா, சலீம், நஸீரா இப்ராகிம், ஷைபுதின், இத்ரீஸ், ஷாகுல் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு, கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி கே.குணா இயக்குகிறார். இவர் மௌனம் சம்மதம், ஏர் போர்ட், படிச்ச புள்ள படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியவர். படம் பற்றி தயாரிப்பாளர் எஸ்.ராஷிக் சொல்கிறார்.

கபடி, கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. முதல் தடவையாக இண்டர் நேஷனல் கேம்புட்சால் என்ற இண்டோர் புட்பால் விளையாட்டை வைத்து இப்படம் தயாராகிறது.

இண்டோர் புட்பால் என்பது சிறிய அரங்குக்குள் குறைவானவர்களை வைத்து நடத்தும் கால்பந்து விளையாட்டு ஆகும். இரு விளையாட்டு குழுவினருக்கு நடக்கும் போட்டியை கருவாக வைத்து தயாராகிறது. காதல், ஆக்ஷன், பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும். மலேசியாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஒளிப்பதிவு: பிர்லா போஸ், இசை: ராஜாமணி, எடிட்டிங்: ஜேம்ஸ், ரமேஷ் லால். 
 

நினைவில்  நின்றவள் -  எஸ் வி சேகர்  மகன் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படம்


B A PASS - இது  கில்மாப்படம் மாதிரி சாயலில்  இருந்தாலும் அவார்டு படம் 

இரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – சிறுகதை

பி.ஏ. பாஸ் இந்திப் படத்தின் மூலக்கதையான ஆங்கிலச் சிறுகதை. 'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.

 
7 HEART ATTACKThe satellite rights of Nithin's upcoming release Heart Attack have been sold out for a whopping by a leading regional entertainment channel. Sources say that this is he biggest price for a Nithin's film.
Nithin is pairing up with Adah Sharma, who is marking her debut in Tollywood with the film. Heart Attack is being produced on Puri Jagannadh Touring Talkies by Puri Jagannadh, who is also the director of the movie.

Cinematography is by Amol Rathod and musical scores for the film are by Anup Rubens. The film's audio got good response. Stay glued to way2movies for updates of Heart Attack Telugu film set for January 31st release


ஈரோடு அண்ணா வில் ரிலிஸ் 

1 comments:

Anonymous said...

ரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி- மோகன் சிக்கா (பி.ஏ.பாஸ்) கதையைத் தமிழில் படிக்க நான் செய்த மொழிபெயர்ப்பு

http://madurai-malli.blogspot.in/2013/08/blog-post.html

இந்த லிங்கைத் தரலாமே-வாசகர்களுக்குப் பயன் படும்.

நன்றி.

சரவணன்