Thursday, January 30, 2014

இங்க என்ன சொல்லுது - சினிமா விமர்சனம்

 

வாழ்க்கைல எந்த  குறிக்கோளும்  ,கொள்கையும் இல்லாத ஒரு பேராசைக்காரன்  கம் சூதாடி வாழ்வில் சந்திக்கும் தோல்விகள் தான்  கதை. அதை  எந்த அளவு சுத்தி வளைச்சுக்கதை சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு  சுமார் திரைக்கதையில் சொல்லி  இருக்காங்க . 

ஹீரோ சிங்கப்பூர்ல  ஒரு பொண்ணைப்பார்க்கறார். பார்த்ததும் காதல் ஆகி மேரேஜ் பண்ணிக்கலாமா?ன்னு கேக்கறப்ப அந்தப்பொண்னு தான் ஒரு கால் கேர்ள்-னு சொல்ல இருந்தாலும் பரவாயில்லை, நமக்கு லட்சியம் தான் முக்கியம்னு லிவ்விங்க்  டுகெதரா வாழ்றாரு. அந்தப்பொண்ணோட புருஷன் திருந்தி வந்ததும் எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு கிளம்பி வர்றாரு.


 அடுத்து அவர்  தன் நண்பரோட  இன்னொரு பெண்ணை சந்திக்கறாரு. அந்தப்பொண்ணு மேல  ஒரு இது . ( எந்தப்பொண்ணை நாம விட்டு வெச்சிருக்கோம் ? ) காதலைச்சொல்ல அவ பர்த் டே தான் சரியான சான்ஸ் -னு நண்பரோட பர்த் டே பார்ட்டிக்கு வெறும் கையை வீசிட்டுப்போறாரு , சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது , வெறும் கையோட  போனா பொண்ணு மடியாது என்ற கொல்லி மலை சித்தர் வாக்குக்கு ஏற்ப அவர் பரிசு ஏதும் கொண்டுபோகாததால கவர் பண்ண முடியலை . 


 ஆனா கூடப்போன அவர் நண்பர்  பிளாட்டினம்  ரிங்க் கிஃப்டா கொடுத்து அசத்திடறாரு. அதனால அந்தப்பொண்ணு   தன்னை மேரேஜ் பண்ணிக்குங்கன்னு கேக்குது. உடனே பதறிய நண்பர்  எஸ் ஆகறாரு. ஏன்னா அவர்க்கு ஆல்ரெடி ஒரு ஆள் இருக்கு, நிச்சயமும் ஆகி இருக்கு. 

 செம கடுப்பான பொண்ணு  ஹீரோ மேல போலீஸ் ல புகார் கொடுக்கறார். மேரேஜ் பண்ணிக்கறேன்னு சொல்லி ஏமாத்திட்டதா..  வேற வழி  இல்லாம மேரேஜ் பண்ணிக்கறார். 


6 மாசம் ஒழுங்கா லைஃப் போகுது .  அதுக்குப்பின் சினிமா எடுக்கறேன்னு மனைவி பேர்ல இருக்கும் வீட்டை அடமானம் வெச்சு அல்லல் படறார். பின் குதிரை ரேஸ் ல  லட்ச ரூபா இழக்கிறார்.  மனைவி தற்கொலை முயற்சி வரை போகுது . 


 எப்படி அவர் திருந்தறார் என்பதுதான் கதை  கணேஷ்  தான்  ஹீரோ கம் தயாரி[ப்பு , கதை , திரைக்கதை எல்லாம் . அவரோட  குரல்  ஒரு பிளஸ்  தான் , ஆனா படம்  முழுக்க அவரையே பார்க்கும் அளவு  ஒர்த் இல்லை . மிக பலவீனமான  திரைக்கதை . 


 முன் பாதி இடைவேளை வரும் வரை காட்சிகள் வந்து வந்து போகுதே ஒழிய கதைக்கு வர்வே  இல்லை . 

 மீரா ஜாஸ்மின்  தான்  ஹீரோயின் . மாண்டலின் ராஜேஷ் பார்த்தா நொந்துடுவாரு . எப்படி இருந்த  பொண்ணு இப்படி ஆகிடுச்சே ? 


சிம்பு ஹீரோவுக்கு நண்பரா  ஒரு கெஸ்ட்  ரோல் . ஒரு பாட்டு  இருக்கு . சும்மா 4 சீன்  வர்றார் அவ்வளவு  தான் . ( அவர் ) தொட்டுக்க ஊறுகாயா ஆண்ட்ரியா 2 சீன் ல வர்றாங்க 


மயில் சாமி , கே எஸ்  ரவிக்குமார்   கெஸ்ட்  ரோல் . வந்த வரை  ஓக்கே

மொழி படத்தில் அழகு தேவதையா வந்த ஸ்வர்ண மால்யா 2 திருவாரூர் தேர் மாதிரி நமீதாவுக்கே அக்கா மாதிரி வர்றார். அகவுரவத்தோற்றம். 
இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  பொண்ணுங்களை இதை விட கேவலப்படுத்திட  முடியாது . மீராஜாஸ்மின் சிம்புவை லவ்வறாரு. அவர் ஓக்கே சொல்லலை, ஜஸ்ட் அடுத்த செகண்டே கணேஷ் நீ தான் என்னை கட்டிக்கனும்கறாரு. இதுக்குப்பேர் தான் தெய்வீகக்காதலா? 2 ஹீரோ கைல  பொண்டாட்டியோட  வீட்டு டாக்குமெண்ட்  இருக்கு , நேரா நேஷனலைஸ்டு பேங்க் போலாமே? 65 காசு தானே வட்டி ? எதுக்கு சேட்டு கிட்டே போறாரு ? வெத்து பாண்ட் பேப்பர் ல சைன் வாங்கி  செக் வாங்கி கடன் தந்து 5 % வட்டிக்குத்தானே சேட்டு , கந்து வட்டி  எல்லாம் ? நம்ம கிட்டேதான் பக்கா டாக்குமெண்ட்  இருக்கே? 3  மனைவி நகையை  அதே போல்  சேட்டு கிட்டே அடமானம் வைக்கறார். 8 லட்சம்  ரூபா மதிப்புக்கு பணம்  தர தயாரா  இருந்தும் 2 லட்சம் போதும்கறார்.எதுக்கு நகை பாக்சில்  இருக்கும் எல்லா நகையையும் அவன் கிட்டே தரனும் ? எந்த அளவு பணம்  வேணுமோ அந்த அளவு நகை மட்டும் அடமானம்  வைக்கலாமே? அதுவும் பேங்க்கில் வைக்கலாம் , ஏன் சேட்டு ? சப்போஸ்  ரேஸில் லாஸ் ஆனா ஆல்ட்டர் நேட்டிவ் அரேஞ்ச்மெண்ட் இல்லாமல் எப்படி  தைரியமா செலவு பண்றார் ? 


4  புருஷன் காரன்  சூதாடின்னு தெரிஞ்சுக்கிட்டா மாசமா  இருக்கும் சம்சாரம் டக்னு  தனியா  பிரிஞ்சு தான் வாழ்வா . எதுக்கு தற்கொலை  முயற்சி .  படு நாடகத்தனம்.

5   கே  எஸ்  ரவிக்குமார்க்கு அட்வான்ஸா  3  கோடி  குடுக்கனும்னு  ஒரு இடத்துல டயலாக் வருது . ஆனா அவர் ரிட்டர்ன் தரும்போது உங்க கிட்டே வாங்குன 1 1/2  கோடி  இந்தாங்கங்கறார். மீதி காக்கா தூக்கிட்டுப்போய்டுச்சா?
 படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. தியேட்டர் வாசலில் எட்டாங்கிளாஸ் தமிழ் வாத்தியார் - டேய்.நீ இன்னும் உருப்படாமதான் இருக்கியா? ங்கறார் # ஷே ம் ஷேம் பப்பி ஷெம்2 சந்தானத்துக்கு ஓப்பனிங் சாங் .நான் தாண்டா அப்பா டக்கரு # இங்க என்ன சொல்லுது


3 படம் போட்டு 45 நிமிசம் ஆச்சு.இன்னும் கதை என்ன னு தெரில.பயங்கர சஸ்பென்ஸ் படமோ? #சன் பிக்சர்ஸ்டா ;-))4 டைமிங் சாங் பை யங் சூப்பர் ஸ்டார் - அ அறிவில்லையா? அறிவில்லையா? கொஞ்சம் கூட உனக்கு அறிவில்லையா?5 உலக சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக இடைவேளை வரை கதையே சொல்லாம மொக்கை போட்ட முதல் படம் # இங்க என்ன சொல்லுது.ஊ ஊ ஊ வடக்குப்பட்டி ராமசாமி


6  சந்தானம் கெஸ்ட் ரோல் தான் . படம் பூரா வர்ற மாதிரி போஸ்டர் ஒட்டி ஊரை ஏமாத்துறாங்க மக்களே # இ எ சொ


7 ஆன்ட்ரியா கண்ணுக்கு எதிர்ல வர்றவர் எல்லாம் அனிரூத் தான் # அநியாய அந்நியோன்யம்


8 ஸார்.உங்க படத்துக்கு குடும்பப்பெண்கள் கூட்டம் குவியபோகுது. நிஜமா வா? 


ஆமா.டி வி ஸீரியல் கணக்கா இருக்கு 
 நச் டயலாக்ஸ் 


1.  மேரேஜ் ஆகி  15 வருசம் ஆகிடுச்சு \\\


 தேவலையே . ரெண்டு ஏழரையைத்தாண்டிட்டே.இன்னும்  ஒரு ஏழரை பாக்கி இருக்கு 


2 ஏம்மா அங்கே சரக்கு ஊத்தின பார் கேர்ள் தானெ? நீ ? இங்கே வாசக்கூட்டிட்டு இருக்கே? ஓ முறை வாசலா நீ? 


3  அந்தப்பொண்ணு இடுப்புல விழுந்ததே 2 டயர் , அதுல போறீங்களா? இல்ல ஃபோர் வீலர் கார் ல வர்ரீங்களா? 


4  என்ன ? உங்க பேர் ஏழு முகமா? 
\
\
 ஆறு முகம்னு வெக்கலாம், 7 முகம்  கூடாதா? 5  ஏன் சார்  , மாடு கன்னு போட்ட மாதிரி ஏன் குனிஞ்சு போஸ்  குடும்க்கறீங்க ? 

 ஈஸ்வரா  , கும்பிடறேன் 


 ஈஸ்ட் பக்கம் பாக்க ஈஸ்வரர் என்ன ஈ சி ஆர்  ரோடா? 6  அஸ் பர் வாஸ்து கார் டிக்கிதான்  குபேர மூலை , அது ல உக்காந்து வர்றீங்களா?


7   கீழே  போக எவ்ளவ்  நேரம் ஆகும் ?  கார்ல போனா  7 மணி  நேரம் ஆகும் . உச்சில இருந்து  குதிச்சா   உடனே போய்டலாம் 

 

8 நான் வெஜ் சாப்பிடறவன் எப்பவும் குதர்க்கமாவே பேசுவான் 
\
\
 பல்லாயிரம் பேரைக்கொன்ன ஹிட்லர் ஒரு சாம்பார் சாதம் , புரியல ? சைவம் 


9  டீ யைக்கண்டு  பிடிச்சதே சைனாக்காரன் தான் ., அவனுக்கே  டீயா? 


10  சுருக்கமா சொல்லனும்னா ஆல்ரெடி எஃப் சி ஆன வண்டியை  நீ க்ளீன் பண்ணி சர்வீஸ் பண்ணி ஓட்டிட்டு வந்திருக்கே , காரோட ஓனர் வந்ததும் காரைக்கொடுத்துட்டு  , ஒப்படைச்ட்டு வந்துட்டே , அதானே ? 11  சரக்குத்தானே வேணும் ? நான் வாங்கித்தர்ரேன் 


 ஒருத்தர் கைலயே ஓ சி ல சாப்ட்டா உடம்புல ஒட்டாது 12  எங்க பரம்பரைலயே யார்க்கும் பத்திரம்  கிடையாது 


13  ஒவ்வொரு  புருஷனும் செய்யற அட்டூழியம் , அநியாயம் எல்லாத்துக்கும்  பொண்டாட்டி செய்யும்  பூஜை  , புனஸ்காரம்  தான் பாதுகாப்பு வளையம் 


14   அவங்கவங்க பிரச்சனைக்கு தற்கொலை தான்  தீர்வுன்னா ஊர்ல ஒரு பய  உயிரோட  இருக்க  முடியாது 

சி பி கமெண்ட் -  முன் பாதி திரைக்கதை திக்குத்தெரியாத காடு , பின் பாதியில் நாடகத்தனமான காட்சிகள் மைனஸ்,சந்தானம்  கானல்  நீர் , சன் பிக்சர்ஸ்க்கு தேவை இல்லாத வேலை


விகடன் மார்க் - 39 ,


ரேட்டிங்- 2.25 / 5 


ஈரோடு சண்டிகா வில் படம் பார்த்தேன்0 comments: