Saturday, January 25, 2014

தாவணி தினம்

1.காங்கிரசில் எல்லோரும் குரல் எழுப்பினால் அது தமிழகம் முழுக்க எதிரொலிக்கும்! - ஞானதேசிகன் # மேடம்.தமிழகம் இருண்ட குகைனு குத்திக்காட்றார்.================


2 மக்களின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்தேன்! - நடிகை விஜயசாந்தி # சொத்துல பாதியை ஏழைகளுக்கு எழுதி வைங்க பார்ப்போம்


=============3 கம்யூனிஸ்ட் ADMKவுடன் சேர்ந்தற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - மு க # நம்ம முகாம் ல சேர்ந்தா வாழ்த்து.எதிர் முகாம் ல சேர்ந்தா தூற்று!=================4 100 கோடி கொடுத்தாலும் இனி பெரிய ஹீரோக்கள் பக்கம் போகமாட்டேன் - விக்ரமன் #,உங்க மெகா ஹிட்சே விஜய்.( பூவே உனக்காக)கேப்டன் ( வானத்தைப்போல)


==============5 யுவன் சங்கர் ராஜா இசையில் நான் பாடல் எழுதுவது காலத்தின் விருப்பம் - வைரமுத்து # ஓஹோ.அப்போ உங்களுக்கு விருப்பம் இல்ல?வேண்டா வெறுப்பா ?=================


6 தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஜில்லா #,ஹீரோ மகேஷ் பாபுவா? தானிக்கு தீனி டிட் பார் டாட்


===============


7 87 மணி நேரம் டி.வி., பார்த்து மூவர் கின்னஸ் சாதனை # நம்ம ஊர் லேடீசை விட்டா விடிய விடிய முடிய முடிய முழு மாசமும் பாப்பாங்களே?================8 தேர்தல் கூட்டணி வியூகம் அமைக்க தமிழக காங்கிரஸ் தலைவராகிறார் ஜி.கே.வாசன் # எக்ஸ்பயரி டேட் முடிஞ்ச டேப்லெட்டை பிரிட்ஜில் வெச்சு என்ன பயன்?்


=================


9 2005 க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூ் நோட்டுக்கள் செல்லாது: ரிசர்வ் வங்கி # இனிகொள்ளைஅடிப்பவங்க புது நோட்டானு செக் பண்ணி அடிச்சுக்குங்கப்பா===============


10 "பைத்தியக்கார முதல்வர்' கேஜரிவால்: சுஷில்குமார் ஷிண்டே கடும் தாக்கு: # ஊர்ல எல்லாரும் ஊழல்வாதிகளா இருக்கும்போது ஊழலை எதிர்த்தா அப்டிதான்==============11 ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி மீது மருமகள் வரதட்சணை புகார்: # நீதிக்கு போதாத காலம்னு சொல்லும் காலம் போய் நீதிபதிகளுக்கு கண்டம்னு ஆகிடுச்


==============12 ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்: கெஜ்ரிவாலுக்கு சிதம்பரம் அறிவுரை # மேரேஜ் ஆன அடுத்த வாரமே டைவர்ஸ் பண்ணச்சொன்னா எப்டீங்க்ணா?


===============13 குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் இன்றைய பெண்கள்...-ஆய்வில் தகவல் # அது தேவலை.புருசனையே திண்ணைக்கு அனுப்பிடறாங்க்ளே?===============14 சோனியாகாந்தியுடன் கனிமொழி சந்திப்பு: # மணிமேகலை யை சந்திக்க இவராப்போனாரா? தலைவர் சாணக்கியத்தனமா ஏதாவது ஐடியா பண்ணாரா?

================15  DMKவிடம் விழுந்து விடாதீர்கள்: விஜயகாந்துக்கு தமிழருவி மணியன் ் # டோன்ட் ஒர்ரி.கேப்டன் புல் மப்ல இருந்தாலும் கீழே விழுந்து பழக்கம் இல்ல.===============16  பாஜகவுடன் தொகுதி உடன்பாட்டுக்கு 5 பேர் குழு அமைத்த வைகோ #,அடேங்கப்பா.உயர் மட்டக்குழுவே.5,பேர்னா தொண்டர்கள் எத்தனை பேர் இருப்பாங்க்?


==============


17  கோ–ஆப்டெக்சின் அடுத்த அதிரடி தாவணி தினம்: ..# ஏய் தாவணி போட்ட சிட்டு நீ லாலா கடை லட்டு ரிங்க் டோனா வெச்சுக்கலாம்=================18 ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தியே பிரதமர்-சிதம்பரம் # பக்கத்து இலைக்குப்பாயாசம் கேட்கும் பார்த்திபன் மாதிரியே பேசறாரே?


==============


19 ஆட்சியாளருக்கு 60 ஆண்டுகள் கொடுத்த நீங்கள், சேவகனுக்கு 60 மாதங்கள் கொடுங்கள்: மோடி: # புரட்சியாளர் கேஜ்ரிவால் வேற குறுக்கே வந்துட்டாரே?==================20  காங்கிரஸ் எம்.பிக்கள் என்னை பிரதமராக தேர்வு செய்தால் ஏற்றுக் கொள்வேன்: ராகுல் காந்தி # 30 எம் பி ங்க பத்தாதே மன்னா?


===================

0 comments: