Friday, January 03, 2014

என் ஆசை மச்சான் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வெச்சான்

1. டில்லி தமிழர்களிடம் வரவேற்பில்லை-சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்# என் ஆசை மச்சான் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வெச்சான்==================2 நடிப்பது எப்படி?: ஜி.வி. பிரகாஷுக்கு டிப்ஸ் கொடுத்த விஜய். # முதல் கட்டமா ஹீரோ ஓப்பனிங் சீன் ல இந்த BGM மை உங்களுக்கு வழங்குப்வர்.,


=================3 பாலியல் தொந்திரவுக்கு ஆளான பெண்களை பேட்டிகண்டு வெளியிட்டால் 2 வருஷம் தண்டனை # அய்யய்யோ.நல்ல வேளை தப்பிச்சேன்================


4 நயன் பண்ணுறதெல்லாம் ரொம்ப ஓவர் சிம்பு சீறல் # அவர் பாட்டுக்கு தேவனே( சிவனே) ன்னு அவர் வழில போனாரு.சொந்தப்படத்துல புக் பண்ணது யாரு?


===============5 கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது: புளியங்குடி யில் # குத்தாதே.குத்துனா கத்துவேன்.கத்தாதே.கத்துனா குத்துவேன்==================


6 ஆர்யா, ஷ்ருதி இணையும் புதிய படம் ‘வாடி வாசல்’ # வாசல்ல எப்டி? வாடிஉள்ளே னு வெச்சிருக்கலாம்==================


7 அண்ணனுடன் காதல்: அமலா பாலை தேடி வந்துள்ள சர்ச்சை கதை.. நடிப்பாரா? # மாமனாருடன் கில்மா வை ஏத்துக்கிட்ட ஜனங்க இதை ஏத்துக்க மாட்டாங்க===================8 சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.! # டைட்டில் காட்டு மன்னார் கோவில் சிற்பம்?
================9  பாஹுபாலி இந்திய சினிமாக்கு பெஞ்ச் மார்க்காக இருக்கும் - அனுஷ்கா !# மேடம்.புரொடியூசர் வீட்டு பெஞ்ச் வரை விக்காம இருந்தா சரி


=================


10 தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு இடைக்கால ஜாமீன்! # அதுல கூட இடை இருக்கு னு யாரும் கண்டனம் தெரிவிக்கலையா?==================11 தன் வீட்டை எழுதிகொடுத்து, தனுஷ் கால்ஷீடையும் கொடுத்து அடுத்தபட பாதி சம்பளமும் நஷ்ட்டயிடாக கொடுத்தார் செல்வராகவன்.# பாவம் யா :-((=================12 சிவாஜி சிலையை எல்லோருக்கும் தெரியும்படியான இடத்தில் வைக்கலாம் - ராதாரவி # வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோல வெச்சுடலாமா?


=============13 பாட்டாளி கட்சி மூலம் நம்பிக்கை வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள் -ராமதாஸ் # தம்பி! நம்பி யும் வராது கையும் வராது.தாமரை தான் வரும்


==================14  டெல்லியில் தே.மு.தி.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: விஜயகாந்த் # அணையப்போகும் விளக்கு கூட பிரகாசமாத்தான் எரியும்


=================15  இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி.யால் பரபரப்பு # சன் டி வி ல இன்னைக்கு நைட் போட்டா பார்த்து கருத்து சொல்றோம்"===================
16 தில்லியில் 11 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு: விஜயகாந்த் # எந்தக்கட்சிக்குன்னு சொல்லவே இல்லயே?====================17 தர்மம் தழைத்தது, உண்மை வென்றது” ஜெயேந்திரர் # சுவாமி! உங்க பேருல முத எழுத்துல இருக்கறவங்களால உங்க தலைஎழுத்தே மாறப்போகுது பாருங்க"


===================


  18  ராகுலை பிரதமராக்கவே ஆந்திராவை பிரிக்கிறார் சோனியா: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு # பிரி"வினை" முயற்சி யால் அவங்களுக்கே வினை தான்===================19 நாட்டின் தலைநகரான டெல்லியில் சாலைகள் தரமாக இல்லை- விஜயகாந்த். பிரச்சாரம் # கேப்பிடல் பற்றி கேப்டன் மதிப்பிடல் அடடே! .=================20  வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க தயாரா?: ராமதாஸ் # ஜாதியைப்பத்தியே பேசமாட்டேன்.னு சொல்ல நீங்க தயாரா?
=================21 கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை: சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி # பாவிகளை அவர் ரட்சிப்பார் !!!!===================
0 comments: