Wednesday, January 29, 2014

தமிழ் நாட்டின் தசரத சக்ரவர்த்தி VS மதுரை ராமர் யார் பக்கம் நியாயம் ? -அயோத்தி மக்கள் கருத்து

ஸ்டாலின் பற்றி அழகிரி சொன்னதைக் கேட்டு என் இதயமே நின்றுவிடும் போல இருந்தது': திமுக தலைவர் கருணாநிதி உருக்கமான பேட்டி

மு.க.ஸ்டாலினை பற்றி மு.க.அழகிரி வெறுக்கத்தக்க வகையில் பேசியதைத் தன்னால் பொறுத்தக்கொள்ள முடியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக கூறினார்.


திமுகவில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடர்பாக அவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற முடிவுகளைப் பற்றி அறிவிப்பது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக செயற்குழு, பொதுக்குழு முடிவுகளை அலட்சியம் செய்தோ அல்லது விமர்சித்தோ அல்லது கட்டுப்படாமலோ கழகத்திலே உள்ள யாரும்; முக்கியமாக பொறுப்பிலே உள்ளவர்கள் நடந்து கொள்வதில்லை.ஆனால் கடந்த சில மாதங்களாக மு.க.அழகிரி, தான் கழக உறுப்பினர் என்பதை மறந்து விட்டு, இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பிலே இருப்பவர் என்பதையும் மறந்து விட்டு - பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து, அது தவறான அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமைந்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.


அண்மையில் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியைக் கண்டும், கேட்டும் இருக்கிறீர்கள். அவருக்கு தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது.


அதற்கெல்லாம் உச்ச கட்டமாக கடந்த 24 ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளை எல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார்.அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.


நியாயம் கேட்டதாக இப்போது சொல்கிறார். விடியற்காலை ஆறு அல்லது ஏழு மணிக்கா கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்க வருவது என்பதை நீங்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும்.


அவர் வெளியிலே வந்து சொல்கிற குற்றச்சாட்டு கட்சியிலே சில பேர் மீது, குறிப்பாக அவருக்கு வேண்டிய நண்பர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு என்ற குற்றச்சாட்டாகும். கட்சியிலே உள்ள மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி அவர்கள் மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.


அவர் மீது கட்சியின் சட்டதிட்டபடி பொதுச் செயலாளர் அவர்கள் கண்டனமும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அது கழகத்தின் சட்டதிட்டப்படி செய்யப்பட்ட ஒன்றாகும். அதற்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ விளக்கமளித்து பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர தனக்கு வேண்டிய பழைய நண்பர் கூட்டத்தை வைத்துக் கொண்டு சுவரொட்டிகளை ஒட்டுவதும், பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்பதும் எப்படி முறையாகும்?


என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித் தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.


இந்த இயக்கம் அண்ணா காலத்திலிருந்து இதுவரையில் எத்தனையோ இது போன்ற சோதனைகளையெல்லாம் சந்தித்து விட்டு, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இயக்கமாகும். தமிழ் மக்கள் வளத்தோடும், வலிமையோடும் வாழ வேண்டுமென்பதற்காக என்னுடைய 14வது வயது முதல் இந்த 91வது வயது வரையில் பல தியாகங்களைச் செய்து அடக்கு முறைகளை ஏற்று, பெரியாரும், அண்ணாவும் உருவாக்கித் தந்த இந்த இயக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறவன் என்ற முறையில் இந்த உண்மை நிலவரத்தை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதற்காகவே பத்திரிகையாளர்களாகிய உங்கள் மூலமாக இந்தச் செய்திகளையெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.


அழகிரி மன்னிப்பு கோரினால் தற்காலிக நடவடிக்கை ரத்து செய்யப்படுமா?


இந்தக் கேள்வியை நீங்கள் அவரைப் பார்த்துக் கேட்க வேண்டும்.


அழகிரி ஏதோ முறைகேடுகள் நடந்ததைப் பற்றி குறிப்பிட்டு அதைக் கேட்பதற்காகத் தான் உங்களைச் சந்தித்ததாகச் சொல்கிறாரே?


எந்த முறைகேடு பற்றியும் எனக்குத் தெரியாது.


காங்கிரஸ் கட்சி உங்களிடம் கூட்டணி வைக்க முன் வந்தால் உங்கள் கருத்து என்ன?காங்கிரஸ் கட்சி எங்களைத் தேடி வருவதாக நான் ஜம்பம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஒருவரை யொருவர் அரவணைத்து அணி சேருவது அந்தந்த கட்சிகளுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் நடைபெற வேண்டிய விஷயங்களாகும்.


தே.மு.தி.க.வோடு தி.மு.க. கூட்டணி சேருவது பற்றி?


நாங்கள் முதலிலே அதைப் பற்றிச் சொல்லி விட்டோம். அதற்கு மேல் தொடர வேண்டியவர்கள் அவர்களே தவிர நாங்கள் அல்ல.


 • mu.saravanakumar தெய்வம் நீயென்றுணர்
  "கண்கள் பனித்தது, இதயம் இனித்தது".....சீஸன் 2 சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
  about 22 hours ago ·   (62) ·   (11) ·  reply (0)
  Subramanyam · ponnambalam Srinivasan · hhj · Raja Mani · Sivasankaran · Santhappan Santhappan  Up Voted mu.saravanakumar 's comment
  alfo · Devaraj · nsathasivan  Down Voted mu.saravanakumar 's comment
  •  ram from Chennai
   திரு .கருணாநிதி அவர்கள் எடுத்த நடவடிக்கை சரியானதே . கட்சியில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதை தலைவருக்கு எழுத்துமூலம் தகவல் தெரிவித்திருக்கவேண்டும் அல்லது பொதுகுழ்கூட்டப்பட்டபொது கூட்டத்தில் பேசிருக்கவேண்டும். அதைவிடுத்து பொதுக்குழு கூடத்திற்கு போகாமல் தனியார் தொலைக்காட்சிக்கும் , நாளிதழ்ழுக்கும் சட்டாம்பிள்ளையாக அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள் .
   about 21 hours ago ·   (23) ·   (5) ·  reply (0)
   Devaraj  Down Voted ram 's comment
   •  Devaraj 
    அய்யா மஞ்ச துண்டாரே ! உங்களுடைய குடும்ப நிகழ்வுகளை அம்பல படுத்தி கட்சியும் குடும்பமும் ஒன்று என்பதை நிரூபித்து விடீர்கள். வசதிக்கு ஏற்ப வார்த்தை ஜாலம் செய்ய கூடியவர் நீர் என்பதை உலகம் அறியும். அழகிரி மீதான நடவடிக்கை எடுக்க பட்ட விதம் அனைவர் மனத்திலும் பல ஐயபாடுகளை எழுப்பி உள்ளது. ஒன்று விஜயகாந்த் யை வலை போட்டு இழுக்க, ரெண்டு கட்சியில் வயதான நீர் தான் கட்டு பாட்டில் வைதூலீர் என்பதை நிலை நாட்ட, மூன்று கட்சியின் பொருளாதரத்தை உம்முடைய குடும்பத்தின் கட்டுபாட்டில் கொண்டு வர நீர் செய்யும் சாணக்கிய தனம் என்பது. சில காலங்கள் கழித்து, கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, என்று கூறி கொண்டு பொது மக்களை நீங்கள் ஏமாற்றும் கலையை நாங்கள் மறக்க மாட்டோம். மீண்டும் ஒரு குடும்ப விழாவில் பட்டு பீதாம்பரம் கட்டி கொண்டு எல்லோருடைய காதில் பூ வைக்கும் நாள் ரொம்ப தூரம் இல்லை.
    about 21 hours ago ·   (43) ·   (11) ·  reply (0)
    Raja Mani  Up Voted Devaraj 's comment
    •  A.SESHAGIRI from Mumbai
     பகுத்தறிவுவாதிகள் (!)ஆருடம் கணிப்பதைப்பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படவேண்டும்?
     about 21 hours ago ·   (11) ·   (3) ·  reply (0)
     Subramanyam  Up Voted A.SESHAGIRI 's comment
     • முத்தமிழ் வித்தகர் ???? (மூணாம் கிளாஸ் பாஸ்??) வினை வைத்தவன் வினை அறுப்பான் பழமொழி தெரியாதா?
      about 21 hours ago ·   (5) ·   (5) ·  reply (0)
      Devaraj  Up Voted NS RAMAN's comment
      nsathasivan · nsathasivan  Down Voted NS RAMAN's comment
      • இது மக்கள் தி மு க பக்கம் (திசை ) திரும்ப செய்யும் நிகழ்ச்சியா? (பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து, அது தவறான அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமைந்து வருவதை மு க அவர்களே உணர்வீர்கள். ) மறுபக்கம் ஏன் என்றால் மக்கள் திசை திரும்ப செய்யும் நிகழ்ச்சியாக தே மு தி க, இப்போது செய்யும் பம்மாத்து,தேர்தல் முடிவு வேறு மாதிரி வந்தால் விஜயகாந்த் சாயம் வெளுதுவீடும்....................மக்கள் பார்த்து கொண்டுதன் இருகிறார்கள்
       about 21 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
       •  Mmuthu Kumar from Coimbatore
        அண்ணன் என்னட தம்பி என்னடா அவசராமன் ulagathile
        about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
        •  Mmuthu Kumar from Coimbatore
         அதனை சோதனையும் நீங்க தங்கறீங்க என்ன மனம் uruthi
         about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
         • கலைஞர் கூறுகிறார்:தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி அழகிரிக்காக ஏற்படுத்தப் பட்டது என்கிறார்.தனது குடும்ப உறுப்பினர்களுக்காக கட்சியில் பதவிகளை உருவாக்குவது எந்த விதத்தில் நியாயம்.?தயாநிதி அரசியலிலும் கலாநிதி தொழில் துறையிலும் இருப்பதைப் போன்றுதன் குடும்பத்திலும் கலைஞர் ஸ்டாலினுக்கு அரசியலையும் ,கல்விக்கூடங்களை கனிமொழிக்கும் கொடுத்து அழகிரிக்கு தொழிற்கூடங்கள்,வாகன விற்பனை நிலையங்களையும் வாரி வழங்கி குடும்பத்தில் சிக்கல் வராமல் பார்த்திருக்க வேண்டும்.எல்லோரும் அரசியலுக்கு வந்தால் குடுமிப்பிடி சண்டைதான்.
          about 20 hours ago ·   (3) ·   (2) ·  reply (0)
          abu  Down Voted Sheik Sindha Mahabooth Subukani's comment
          •  Mohan Ramachandran at I am doing my own business
           ஓட்டப்பம் வோட்டை சுடும் தன் வினை தன்னை சுடும் .பட்டினத்தாரின் பொன் மொழி காலத்தால் அழியாதது
           about 20 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
           Mathu  Up Voted Mohan Ramachandran's comment
           •  Vignesh from Jeddah
            அதுசெரி 5 நாள் கழித்தா அறிக்கை விடுறது ??????????
            about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
            • இந்திய தண்டனை சட்டத்தின் படி தணடிக்கபட வேண்டிய ஒரு குற்றம் ந்டக்க போவதாக அறிகுறி இருப்பது போல ஒரு சூழ்நிலை உருவாகிறதோ என்று ஐயம் ஏற்படுகிற வகையில் அல்லவா இருக்கிறது கலைஞரின் ஓபன் ஸ்டேட்மெண்ட்....இது இரு தரப்பிரன்ரிடமும் பெரும் கலவ்ரத்தை அல்லவா ஏற்படுத்தும்.. . இது தி.மு.க விற்கே கெடுதலாச்சே..கலைஞர் அவசரபட்டுவிட்டார்.. ..கே.தியாகராஜன், சீர்காழி.
             about 19 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
             •  Conjivaram from Chennai
              தமிழ் அறிஞர் கலைஞருக்கு தெரியாதா? பாடு பட்டு பணத்தை தேடி பணத்தை புதைத்துவிட்டு கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் .. கூடு விட்டு இங்கு ஆவி தான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்த பணம் .. சிறுவனாக பள்ளியில் நான் படித்த வரிகள் .. கலைஞர் குடும்பத்தை பணப்பேய் பிடித்து ஆட்டு கிறது .. நேர்வழியில் வந்த பணம் நிலைக்கும் .. குறுக்கு வழியில் வந்தபணம் குடும்பத்தை அழிக்கும் .. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் .. வாழ்கையில் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இது .. நேர்மையை கடைபிடியுங்கள் .. வாழ்வாங்கு நிம்மதியான வாழ்க்கை அமையும் ..
              about 19 hours ago ·   (6) ·   (1) ·  reply (0)
              Sivasankaran  Up Voted Conjivaram 's comment
              •  M. from Coimbatore
               இன்று தன் மகனை பற்றி இன்னொரு மகன் சொன்னதை கருணாநிதியால் தாங்கி கொள்ள முடியவில்லையே.. அன்று.. எம்.ஜி.ஆர். உடல் நல குறைவால் அமெரிக்காவில் இருந்தபோது, இதே தி.மு.க வினர் என்னவெல்லாம் பேசினார்கள்.. "எம்.ஜி.ஆர். இறந்து விட்டார், உடல் ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறது.." என்றல்லாம் தமிழக மக்களின் வயிறு எரிய தேர்தல் பிரச்சாரம் செய்தார்களே .. அப்போது கண்கள் கலங்கவில்லையே.. இந்த கருணாநிதியை முதல்வர் ஆக்கினவர் எம்.ஜி.ஆர். தி.மு.க என்ற கட்சியை அரச பீடம் ஏற்றியவர் அவர். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்..
               about 19 hours ago ·   (10) ·   (1) ·  reply (1)
               •  s 
                அப்படி எம் ஜி ஆர் இறந்து விட்டார் என்று தி மு க வினர் சொல்லவில்லை. ஜெயலலிதாதான் எம் ஜி ஆர் செயல்படமுடியாமல் இருக்கிறார். எனவே முதல்வர் பதவியை தனக்கு பெற்றுத்தரும்படி துரோகத்தனமாக ராஜீவ் காந்திக்கு ரகசியமாக கடிதம் எழுதினாரே?.
                about 13 hours ago ·   (4) ·   (2) ·  reply (0)
               •  knvijayan Kn proprietor at S D Worksfrom Bangalore
                1969-இல் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இந்திரா சஞ்சீவ ரெட்டியை தோற்கடித்தபோது இந்திராவை ஆதரித்த கருணாநிதி இன்று தன்னுடைய கட்சியில் ஒழுங்கு வேண்டும் என்று சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல்தான்.
                about 19 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
                • மக்கள் ஆட்சி!!
                 about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                 •  SAMPATH, from Chennai
                  கட்சியில் யாரைப் பார்த்தாலும் ஸ்டாலின் அச்ச உணர்வோடு பார்க்கிறார் 30 வருடங்களுக்கு மேலாக தந்தையின் நிழலில் அரசியல் செய்துகொண்டிருக்கும் ஸ்டாலின் தனியாக ஒரு முழுமையான பத்திரிகையாளர் ச்ந்திப்பைக்கூட ந்டத்தமுடியாதவராக உள்ளார். அவரை நம்பி கட்சியை நடத்தமுடியாது என்பதை கருணாநிதி உணரவேண்டும். முதலில் ஸ்டாலினுக்குள்ள அதிகாரத்தைக் குறைக்கவேண்டும். ஸ்டாலின் முதலில் தன தந்தையிடமிருந்து ஓரளவிற்காவது அரசியலைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
                  about 18 hours ago ·   (1) ·   (2) ·  reply (0)
                  mu.saravanakumar  Down Voted SAMPATH, 's comment
                  •  ARUNKUMAR, from Chennai
                   ஸ்டாலினால் தி.மு.க கட்சி வளர்சசிபெற்றதைவிட வைகோவிலிருந்து, பல்வேறு தலைவர்களை இழந்ததுதான் மிச்சம்போல தெரிகிறது. ஸ்டாலின் தன்னை எதிர்ப்பவர்களைப் பழிவாங்குவதில்தான் குறியாக இருக்கிறாரே தவிர, கட்சி வளர்ச்சியில் உண்மையான அக்கறைகொண்டு செயல்படுவதாக தெரியவில்லை. கட்சிக்குள் தனக்கு வேண்டியவர்கள் என்று சிலரை வைத்துக்கொண்டு, கருனாநிதியிடத்திலும், பொதுக்குழுவிலும் என்று அவர்கள் மூலமாக தனக்கு வேண்டாதவர்களைப பழிவாங்கி வருகிறார்.
                   about 18 hours ago ·   (2) ·   (0) ·  reply (1)
                   •  s 
                    சுத்த அபத்தம்
                    about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                   •  esspeepathi from Madurai
                    விஜய்காந்தின் வரவுக்காக நடத்தப்படும் நாடகம் என்றே நினைக்கத்தோன்றும். என்றுமே கட்சி தலைவர் என்பதை விட தகப்பன் என்ற கோத்த இவருக்கு அதிகம். விஜயகாந்த் வருவார் தேர்தலுக்குப்பின் அவருக்கு கிடைக்கும் அர்ச்சனையை (இருக்கவே இருக்கார் திருமா, வீரமணி) எண்ணிபார்க்கவேண்டும். கதை வசனம் நடிப்பு எல்லாமே தலைவர் சிறந்தவர்.
                    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                    • கண்கள் பனித்தது இதயம் இணைத்தது என்ற வாக்கியம் வெகு விரைவில் வரவும்
                     about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                     •  rajesh from Suri
                      அன்று வைகோ இன்று அழகிரி. பதவிக்காக தன் மகனின் முகத்திலும் சானிப்பூச தயங்கவில்லை இந்த வாழும் வள்ளுவர். ஒரு குறள் உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. இதற்கு ஒப்புவாக “இழிவுடை மூப்பு உரகதத்தின் துவ்வாது (39).” என்று முதுமொழிக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.
                      about 16 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
                      •  m.sankaralingam from Irvine
                       ஈ.வெ.கி. சம்பத், கண்ணதாசன்,பண்ருட்டி ராமசந்திரன்,எம்.ஜி.ஆர், வை.கோ .தா.கிருஷ்ணன், இவர்களை எல்லாம் ஓரம் கட்டி அண்ணா ஆரம்பித்த கழகத்தை தன் குடும்பக் கட்சியாக மாற்றிய பாவம் இப்பொழுது வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.
                       about 15 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
                       sai  Up Voted m.sankaralingam 's comment
                       • நடிப்பு அருமையிலும் அருமை!!!!அன்று,ஈழப் போரின்போது ப சி உடன் சேர்ந்து நடத்திய நாடகத்தைவிட இந்த நாடகம் மிகவும் அருமை!!அன்று தமிழ் இனத்தைக் கேவலபடுத்தி காட்டிக் கொடுத்தீர்! இன்று, இழந்த செல்வாக்கைப் பிடிக்கவும்,கட்சிதனைப் பிடித்திடவும் மகன்களை வைத்து நாடகம் போடுகிறீர்!தன்னலத்திற்காக நீங்கள் எதையும் செய்வீர்கள்.எனவே உங்களை எவருமே நம்பமாட்டார்கள்!
                        about 14 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
                        Sivasankaran  Up Voted வேந்தன்,புதுக்கோட்டை. 's comment
                        •  Senthil 
                         நான் நீ என்றல் உதடுகள் ஒட்டாது..... நாம் என்றல் தன உதடுகள் ஓட்டும்... கலைஞர்
                         about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                         •  Kulasekar Erk Former Indian Bank Branch Manager. at IndianBankfrom Sunnyvale
                          தனது 14 வயது முதல் 91 வயது வரை எத்தனையோ தியாகங்களைச் செய் ததாகக் கூறுகிறாரே, உங்களுக்கு ஏதாவது அவரது தியாகங்கள் குறித்து தகவல் தெரியுமா? சுயதம்பட்டம், நாட்டினையும் மக்களையும் வஞ்சிப்பது, தமிழ்நாட்டின் நான்கு தலைமுறையினருக்கு மது என்னும் அரக்கனை அறிமுகப் படுத்தி தமிழகத்தினை நன்கு சுரண்டியது 2ஜி தொலைதொடர்பு ஊழலை இந்தியாவிற்கு பரிசாக அளித்தது ஆகியவைதான் தியாகம் என்று நினைக்கிறாரா?. இல்லை இந்தியாவையே விலைக்கு வாங்க வசதியும் வாய்ப்பும் அமைந்தும் போகட்டும் போ என்று விட்டு விட்டதை தியாகம் என்கிறாரோ? காலை ஏழு மணிக்கு பேசியதையும் அடாவடி அரசியல் செய்துவரும் மகனைக் குறித்தும் எது சொன்னாலும் தகும், மக்கள் மனம் உருகப் பேச வசனங்களைத் தயார்படுத்திக்கொண்டு வந்தது போல் தான் உள்ளது. .
                          about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                          •  s 
                           கட்சியின் கட்டுப்பாட்டைக் காப்பாற்ற கலைஞர் அழகிரி மிது எடுத்த நடவடிக்கை சரியானதே. இதில் தந்தை மகன் என்ற பேச்சுக்கே இடமில்லை தன மகனையே தேர்க்காலில் இட்டு கொன்று மனுநீதிச்சோழன் நீதியை நிலை நாட்டியதும் திருவாரூரில்தான். அதைப்போல்தான் கலைஞரும் செயல்பட்டிருக்கிறார். இதில் மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் குற்றம் காண்பதில் அர்த்தமேயில்லை அம்மா நித்தம் ஒரு அமைச்சர் மாற்றம் செய்கிறார். கட்சி நிர்வாகிகளை சகட்டுமேனிக்கு பந்தாடுகிறார் ஏன் தன உ பி ச வையும் பரிவாரங்களையும் கூண்டோடு வெளியேற்றினார் பிறகு சேர்த்துக்கொண்டார். ஏன் எதற்கு யாருக்காவது தெரியுமா? தி மு க வில் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது. மற்றும் எல்லா நடவடிக்கைகளும் மக்களுக்கும் மீடியாக்களுக்கும் வெளிப்படையாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க சர்வாதிகாரமே மேலோங்கிய கட்சியினர் தி மு க வை விமர்சனம் செய்ய யோக்யதை வேண்டும் அல்லவா?
                           about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                           • இந்த நாடகத்தின் மூலம் ஸ்டாலின்-ஆ..அழகிரியா- என்ற சர்ச்சையை துவக்கி இறுதியில் தன் குடும்பத்தில் இருந்து ஒருத்தரே தனக்கு பின் திமுக தலைமை ஏற்பார் என்பதை கருணாநிதி உறுதி படுத்தியிருக்கிறார்....இந்த வெட்கங்கெட்ட தனத்துக்கு அரசியல் இராஜதந்திரம் என்ற பெருமை வேறு..
                            about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                            • This is a Mr.M.Karunanithi a another poltical and family drama .
                             about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                             •  vijayan Vijayan from Bangalore
                              கட்சியை கலைஞர் ஜனயகபூர்வமுரையில் நடத்தவில்லை என்பதே இப்பிரச்சனைகளுக்கு காரணமாகும் கட்சியில் பலர் ஸ்டாலினைவிட திறன்படைத்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதை மறைத்துவிடுவதில் சாமர்தியாசாலி மன்னர் காலத்தை போற்றுவர் கலைஞர் மன்னர் ஆட்ச்யில்வாரிசுபோட்டி இருந்தது அழிவும் இருந்தது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது
                              about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                              •  thiru from Suri
                               வாரிசுரிமைப் போரின் நியாங்களை கருணாநிதி அறிவித்துள்ளார். 14 வயது முதல் 91 வரை அவர் தியாகம் செய்து வளர்த்த இயக்கம் என்ற உருக்கமான வார்த்தைகள் எல்லாம் தி.மு.க.வில் தனது மகன்களின் தலைமையை நிலைநாட்டுவதே. ஜனநாயகத்துக்கு அவமானம்.

                              தலைவர் சொல்வது அபாண்டம்!- கருணாநிதி பேட்டி குறித்து மு.க.அழகிரி கருத்து
                              தலைவர் என் மீது இப்படியொரு அபாண்டத்தைச் சுமத்துவார் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று மு.க.அழகிரி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.                              தி.மு.க. தலைவரின் பேட்டி ஒளிபரப்பானபோது விருதுநகர் மாவட்டத்தில் இருந்த மு.க.அழகிரி, அவர் சொன்ன தகவல்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். மதுரை திரும்பிய அவர், தன் வீடு முன்பு உள்ள அலுவலகத்தில் அமர்ந்து கருணாநிதியின் அந்தப் பேட்டியை டி.வி.யில் பார்த்தார். பின்னர் கோபம், வேதனை கலந்த முகத்தோடு வீட்டுக்குள் எழுந்து சென்றார் மு.க.அழகிரி.


                              கருணாநிதியின் பேட்டிக்கு அவரது எதிர்விளைவு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக பகல் 1.30 மணியளவில் பத்திரிகையாளர்கள் அவரது வீட்டு முன் திரண்டனர். ஆனால், அழகிரி வீட்டில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை.


                              பின்னர் மாலை 5 மணிக்கு அழகிரி பேட்டியளிக்க இருப்பதாக அனைத்து நிருபர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த முறை மீடியாக்காரர்கள் மைக் வைப்பதற்கு இரு டேபிள்கள் போட்டு, நிருபர்கள் அமர சேர்கள் போடப்பட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


                              மாலை 6 மணி அளவில் பத்திரிகையாளர்கள் முன் வந்தமர்ந்த மு.க.அழகிரி, கவலை தோய்ந்த முகத்தோடு பேச ஆரம்பித்தார். அவர் பேசியதாவது:


                              “உங்களுடைய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லமாட்டேன். நான் என்ன சொல்லப் போகிறேனோ அதை மட்டும்தான் நீங்கள் எழுதிக்கொள்ள வேண்டும். ஆரம்பிக்கலாமா? என்று கேட்டுவிட்டு மளமளவென பேச ஆரம்பித்தார். அவரது பேட்டி.


                              இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வெளியான தலைவரின் பேட்டியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். என் மீது இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்துவார் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. ஆனால் அதை அவர் எனக்கு வழங்கிய பிறந்தநாள் வாழ்த்தாக நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன் என்றால் பழியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது குற்றச்சாட்டை பிறந்தநாள் வாழ்த்து சொன்னதாக ஏற்றுக்கொள்கிறேன்.


                              சஸ்பெண்ட்தான் பரிசு


                              ஜன. 24-ம் தேதி காலையில் நான் தலைவரைச் சந்தித்து பல நியாயங்களை எடுத்துச் சொன்னேன். தொண்டர்களுடைய குற்றச்சாட்டுகளையும், ஒன்றிய செயலாளர்களுடைய குற்றச் சாட்டுகளையும் எடுத்துக்கொண்டு தலைவரிடத்தில் காட்டினேன். அதற்குக் கிடைத்த பரிசுதான் என்னைக் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. நியாயத் துக்காக, தொண்டர் களுக்காகப் போராடியதற்காக இப்படிப்பட்ட பரிசு கிடைத்துள்ளது.


                              பேக்ஸ் மூலம் தகவல்கள்


                              ஆனால், அன்றைய தினம் என்னை கட்சியில் இருந்து விலக்கியபோது பொதுச் செயலாளர் அவர்கள், என்னை விலக்கியதற்கான காரணங்களை எல்லாம் சொல்லியிருந்தார். அவர் சொன்ன காரணங்கள் எதிலும், தற்போது தலைவர் சொன்ன குற்றச்சாட்டுகள் இல்லை. இப்போதுகூட பொதுச் செயலாளர் என்னிடம், ‘ஏன் இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் கட்சிக்குச் சொல்லாமல், நேரடியாக தலைவரிடம் சொன்னீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.


                               உள்கட்சித் தேர்தலில் நடைபெற்ற குளறுபடிகள் மதுரையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. பல மாவட்டச் செயலாளர்கள் இதுகுறித்து என்னிடம் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக தொண்டர்களுடைய, ஒன்றியச் செயலாளர்களுடைய குற்றச்சாட்டுகள் எல்லாம் அறிவாலயத்துக்கு பேக்ஸ் செய்யப்படுகின்றன. ஆனால், அவை எல்லாம் மறைக்கப் படுகிறது. தலைவர், பொதுச் செயலாளர் பார்வைக்கே போய்ச்சேருவதில்லை. அதனால் தான் அறிவாலயத்தில் போய் சொல்வதைவிட, நேரடியாகத் தலைவரிடம் சொல்லலாம் என்றுதான் நான் வீட்டுக்கே சென்று தலைவரிடம் சொன்னேன்.


                              பரிசீலனை தேவை


                              நான் மீடியாக்களிடம் பேசு வதையும் ஒரு குற்றச்சாட்டாகக் கூறியுள்ளார்கள். ஆனால், என்னை சஸ்பெண்ட் செய்த பிறகுதான் மீடியாக்களிடம் பேசவே ஆரம்பித்தேன்.


                              மதுரை வருவதற்கு முன்பு 26-ம் தேதி துரைமுருகனையும் அவரது இல்லத்தில் சந்தித்து, அவரிடமும் இந்தப் புகார்கள் குறித்து விளக்கி நியாயம் கேட்டேன். இதை எல்லாம் பரிசீலிக்குமாறு கூறினேன்.


                              இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். (அழகிரியின் கண்கள் கலங்கின. கண்ணீர் திரண்டது) நான் என்றைக்குமே தொண்டர்கள் பக்கம்தான் இருப்பேன். அவர்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். தலைவர் நல்லா இருக்கணும், நல்லா வாழணும். (இவ்வாறு அவர் கூறிக் கொண்டிருக்கும்போது, வீட்டுக்குள் இருந்து அழகிரியின் பேட்டியை லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த துரை தயாநிதி, வேகமாக வெளியே வந்து பி.எம்.மன்னன் உள்ளிட்ட நிர்வாகிகளின் காதில் ஏதோ சொன்னார். (உடனே, அவர்கள் அழகிரியைத் தொட்டு பேட்டியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தார்கள்)


                              100 ஆண்டுக்கு மேல் வாழணும்


                              தலைவர் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழணும். அவருக்கு முன்னால் நாங்கள் இறந்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.


                              இதைத்தான் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினேன். அவருடைய கண்ணீர் என்னுடைய பிணத்தின் மீது விழவேண்டும் என்பதுதான் என் ஆசை என்று சொல்லி முடிக்கிறேன்” என்று கூறிய அழகிரி விருட்டென எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதனால், தலா 10 கேள்விகளுடன் வந்திருந்த அனைத்து நிருபர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.


                              காரியாபட்டியில் ஆலோசனை


                              முன்னதாக விருதுநகர் மாவட்டம், காரியாபட்டிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அழகிரி,. மாவட்ட துணைச் செயலர் எஸ்.எம்.போஸ் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.


                              அதன் பின்னர், வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, “எஸ்.எம்.போஸ் அண்ணன் மகன் திருமண விழாவுக்கு வர முடியாததால் இப்போது வந்தேன். தொண்டர்கள் எழுச்சியாக உள்ளதை நீங்களே பார்க்கிறீர்கள். தென்மாவட்டங்களில் தொண்டர் களின் எழுச்சிக்கு என்னுடைய நடவடிக்கைகளே காரணம்" என்றார்.
                              • நல்ல நாடகம் பாஸ் எல்லாரும் நம்பிட்டாங்க
                               about 17 hours ago ·   (9) ·   (0) ·  reply (0)
                               •  Kulasekar Erk Former Indian Bank Branch Manager. at IndianBankfrom Sunnyvale
                                உங்கள் தலைவரையும் அவரது நாடகங்களையும் நன்கு அறிவீர்கள்! ஐந்து நாட்கள் கழித்து பேட்டி கொடுப்பது கூட விஜயகாந்தின் விருப்பம் ஸ்டாலின் வழியாக வந்ததன் விழாவாகக் கூட இருக்கலாம். அவசரம் வேண்டாம். அவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்பதை மக்களுக்கு நீங்கள் புரிய வைப்பதில்தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவேண்டும். உங்கள் குருவும் தந்தையாருமான தலைவரது கடந்த 40 ஆண்டு பேட்டிகளைப் போட்டுப் பார்த்து தொழிலைக் கற்றுக்கொள்ளுங்கள். அரசியல் ஆற்று நீர் போல யார் வேண்டுமானாலும் குடிக்கலாம் (தேக்கக்கூடாது) துதிபாடிகளை மட்டும் தள்ளி வைத்தால் உங்களுக்கும் அரசியல் எதிர்காலம் உண்டு. இப்பவே முன்னுக்குப் பின் மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
                                about 12 hours ago ·   (4) ·   (1) ·  reply (0)
                                •  mano.k k from Bangalore
                                 மதுரை மன்னனே. அஞ்சா நெஞ்சனே.. பொருத்தது போதும் . பொங்கி எழுங்கள் அண்ணனே.. அரம்பியுங்கள் போட்டி தி. மு. க ? உடையட்டும் கட்சி. வாழட்டும் தமிழக மக்கள்..
                                 about 11 hours ago ·   (7) ·   (0) ·  reply (0)
                                 •  Vaidhyanathan Sankar from Chennai
                                  கடமை,கண்ணியம் ,கட்டுப்பாடு என்று முழங்கும் இவர்களின் வீட்டு விவகாரங்கள் வீதிக்கு வந்தது வியப்பிலும் வியப்பே.
                                  about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                  • இன்னுமா தமிழகம் ஒங்கள நம்புது !
                                   about 5 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                   •  shanmugam.k from Chennai
                                    ஹா,ஹா,ஹா,,,,ஹி,ஹி,ஹி ,,,இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை எப்போது பிரிச்சு நாட்டுக்கு ஒப்படைக்கபோகிறீங்க
                                    about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                    •  ram from Chennai
                                     தாய் நாலடி பாய்ந்தால் ... குட்டி 14 அடி பாயும் .கலைஞர் வாரிசாட்சே சும்மாவா ! மெகா தொடர் போய்கிட்டிருக்கு . மக்களுக்கும் செய்தி ஊடகங்களுக்கும் நல்ல விறுவிறுப்பான பொழுதுபோக்குதான் ,a

                                    நன்றி - த தமிழ் இந்து

                                    0 comments: