Showing posts with label கேரளா. Show all posts
Showing posts with label கேரளா. Show all posts

Saturday, March 22, 2014

கேரள நாட்டிளம் பெண்களுடனே - சினிமா விமர்சனம்

கேரள நாட்டிளம் பெண்களுடனே

தினமலர் விமர்சனம்

"பூ, "களவாணி படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் தான் ""கேரள நாட்டிளம் பெண்களுடனே!

எஸ்.எஸ்.குமரன், இவரது இயக்கத்தில் முதலாவதாக வெளிவந்த ""தேனீர் விடுதி திரைப்படத்தை கருத்தில் கொள்ளாமல், இத்திரைப்படத்தை காண சென்றோமென்றால், "கேரள நாட்டிளம் பெண்களுடனேயும் குளிர்ச்சியான கேரளாவிலும், சில மணித்துளிகள் வாழ்ந்து திரும்பிய குதூகலத்தை உணரலாம்!கதைப்படி, கேரளாவில் சில வருடங்கள் வாழ்ந்த ஞான சம்பந்தத்திற்கு, திருமணம் செய்து கொண்டால் கேரளத்து இளம் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை, நிராசை ஆகிறது. அதனால் தன் மகன் அபி சரவணனை, சின்ன வயது முதல் நீ ஒரு கேரள பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று உசுப்பேற்றி கேரள கலாச்சாரம், உணவு முறைகளை ஊட்டி ஊட்டி வளர்க்கிறார்.


இதற்கு அபி சரவணனின் அம்மா ரேணுகா கடும் எதிர்ப்பு தெரிவித்து, தன் சொந்தத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை தேடிப்பிடிக்கிறார். போலீஸ் என்றதும் அலறும் அபி சரவணன், நைசாக எஸ்கேப் ஆகி, பெங்களூர் வேலைக்கு செல்வதாக சொல்லி அப்பாவின் ஐடியாபடி கேரளா சென்று, காதலிக்க நண்பர் காளி உதவியுடன் பெண் தேடுகிறார்.


மீடியாவில் வேலை பார்க்கும் காயத்ரி சிக்குகிறார். இருவரும் உருகி உருகி காதலிக்கின்றனர். இன்னொரு பக்கம் ஒரு இஸ்லாமிய பெண்ணும் அபி சரவணனை ஒரு தலையாக காதலிக்கிறார். இந்நிலையில் காயத்ரியின் அப்பா, அபியுடனானா-காயத்ரியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்றுமொருபக்கம் பெண் போலீசும் அபியை அடைய துடிக்கிறார்.


 அபி, யாருக்கு கிடைத்தார்.?! ஞானசம்பந்தம் சபதம் நிறைவேறியதா..?! காயத்ரி மெய்யாலுமே கேரள நாட்டிளம் பெண் தானா...?! என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு அழகிய கேரள பின்னணியில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது ""கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் மீதிக்கதை!அபி சரவணன், அறிமுகம் என்பதையும் தாண்டி நம்பிக்கைக்குரியவராக தெரிகிறார். காயத்ரி, பெண் போஸ் மீன்கொடி, இஸ்லாமிய பெண் மூவரில் காயத்ரிக்கே நடிக்க நிறைய "ஸ்கோப் இருக்கிறது. அதை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஞானசம்பந்தம், ரேணுகா இருவரின் ஜோடி பொருத்தம் "சூப்பர்ப், ஓரே வீட்டுக்குள் அவர்களது கலாச்சார வேறுபாடு தான் செம காமெடி. நாயகரின் நண்பராக வரும் காமெடி காளியும் கவருகிறார்.
எஸ்.எஸ்.குமரனின் எழுத்து, இசை, இயக்கம் எல்லாவற்றுக்கு மகுடம் சேர்த்திருக்கிறது, வைரமுத்துவின் வரிகளும், யுவாவின் ஒளிப்பதிவும்!

மொத்தத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும், ""கேரள நாட்டிளம் பெண்களுடனே - நம்மூர் ஆண்களுக்கு கலர்புல் கதகளி!


thanx - dinamalar


adiski - குக்கூ - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2014/03/blog-post_8524.html

Wednesday, August 29, 2012

ஓணம் பண்டிகை @ கேரளா - ஒரு பார்வை

http://www.result.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_81919062138.jpg 

ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .


கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.


ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளிது வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.

http://tamil.sudarnila.com/wp-content/uploads/2012/08/sabari-300x204.jpg

அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN7oSt3cE4RS5GjalTbD9xj7-XKxtnpxBldBYvRJT04u67tJvJJMS6hATOzUtesKQSFiGTEVsVQbOFGecVzKp06w1fFVXmiS8fn0MFiPkrlp-Xhpow3MPlmAuRXoZ9-HiSnhkFEbG9BdM/s1600/Onam_Festival_9834_medium.jpg

அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.


ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

http://moonramkonam.com/wp-content/uploads/2012/08/oanam-elephant.jpg

கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயரிக்கப்படுகிறது.


புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.


"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.
ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்க்ளைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.
ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.


http://www.vikatan.com/news/images/onam.jpg
கேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்.நாகர்கோவில்: ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட் களைகட்டியுள்ளது.


கேரள மக்கள்  திருவோணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். ஓணம் அன்று அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். இதனால் ஓணம் என்றாலே பூ விற்பனை சூடுபிடிக்கும். அதிலும் குமரி மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து பூ வாங்கிச் செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள்.ஓணம் பண்டிகை கொண்டாடவிருப்பதையடுத்து  காலை முதலே தோவாளை பூ மார்க்கெட்டில் திரும்பும் திசையெல்லாம் கேரள வியாபாரிகள் கூட்டம் தான். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது தோவாளை மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்காமல் இருக்க தர்மபுரி, சத்தியமங்கலம், ஒசூர் பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகளில் பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் நேற்று மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் இருந்தது.\

http://tamil.boldsky.com/img/2012/08/28-ela-ada-recipe-300.jpg

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது ரூ.2000க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பிச்சிப்பூவின் இன்றைய விலை ரூ.750 ஆகும்.தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் இன்றைய விலை(1 கிலோ)மல்லிகைப் பூ - ரூ.700
வாடாமல்லி - ரூ. 50
கேந்தி - ரூ.30
சம்பங்கி - ரூ.200
கோழிப்பூ - ரூ. 25ஓணம் என்றால் அத்தப்பூக்கோலம் தவிர அறுசுவை விருந்தும் உண்டு. விருந்துக்கு தேவையான காய்கறிகளை கேரள வியாபாரிகள் தமிழகத்தில் இருந்து தான் வாங்கிச் செல்கின்றனர்.ஓணம் வ்ந்தாலே நாகர்கோவில் அப்டா மார்க்கெட், வடசேரி கனக மூலம் சந்தை, பஞ்சலிங்கபுரம் சந்தை, மார்த்தாண்டம் காய்கறி சந்தை, தக்கலை வாழைத்தார் சந்தை,குலசேகரம் காய்கறி சந்தை ஆகியவற்றில் வியாபாரம் சூடுபிடித்துவிடும். நேற்று காலை முதல் இந்த சந்தைகளுக்கும் கேரள வியாபாரிகள் படையெடுத்தனர்.
http://suriyantv.com/wp-content/uploads/2012/04/4-6-2012-5-the-10-day-annual-festival-of.jpg


கதளி, ரஸ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை பழத்தார் ஒன்று ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. ஆனால் வாழை இலைக்கு தான் கடும் தட்டுப்பாடாக இருந்தது. அதனால் ஒரு வாழை இலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது. பண்டிகை அன்று வாழை இலையில் விருந்து உண்பது தான் சிறப்பு என்பதால் அதிக விலை கொடுத்து வாழை இலைகளை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.மேலும் வெள்ளரிக்காய், சேனை, பூசணிக்காய், தடியங்காய், சீனி அவரைக்காய், முள்ளங்கி, முட்டைக் கோஸ், காலி பிளவர், உருளைக்கிழங்கு போன்றவையும் இன்று அதிக விலைக்கு விற்கப்பட்டன.


நன்றி - விக்கி பீடியா, கூகுள், அமஸ் மேடம்

Sunday, July 22, 2012

கேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..

பெரம்பலூர்:கேரள மாநில சிறுமியை கற்பழித்து, கொலை செய்த வழக்கில், பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் உட்பட மூன்று பேரை, பெரம்பலூர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், 46. இவர், தன் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என, தன் நண்பரான காரை அன்பரசனிடம் தெரிவித்தார். அன்பரசன், கேரள மாநிலத்தில் உள்ள புரோக்கர் பன்னீர்செல்வம் மூலம், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், லாட்ரக் எஸ்டேட் லட்சுமி கோவில் அருகே உள்ள பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன், 49, என்பவரின் மூன்றாவது மகளான மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை, தான் சொந்த செலவில் படிக்க வைப்பதாக ஒப்புக்கொண்டார்.கதறல்:கடந்த, ஜூன் 23ம் தேதி, ராஜ்குமாரின் நெருங்கிய கூட்டாளியான ஜெய்சங்கர், கார் டிரைவர் மகேந்திரன் ஆகிய இருவரும், இன்னோவா கார் மூலம் மேகலா மற்றும் அவரது தாய் சுசிலாவை கேரளாவிலிருந்து அழைத்து வந்து, ராஜ்குமார் வீட்டில் விட்டனர். சுசிலா, மேகலாவை, ராஜ்குமார் வீட்டில் விட்டு விட்டு கேரளா சென்றார்.கடந்த, 25ம் தேதி, மேகலா, தன் தாய் சுசிலாவை போனில் தொடர்பு கொண்டு, "என்னால் இங்கு இருக்க முடியவில்லை. உடனே வந்து அழைத்து செல்' என்று கூறியுள்ளார். அதற்கு, 29ம் தேதி வந்து அழைத்து செல்வதாக சமாதானம் கூறினார். அன்றைய தினமே மேகலாவின் பெற்றோர், கேரளாவிலிருந்து பெரம்பலூருக்கு வந்து கொண்டிருக்கும் போது, ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு, மேகலா உடல் நிலை சரியில்லாமல்,


தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். மருத்துவமனையில் மேகலாவை பார்த்தபோது, அவர் சுயநினைவில்லாமல் இருந்தார். 30ம் தேதி ராஜ்குமார், ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோர் ஆகியோர், திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் மேகலாவை சேர்த்தனர். பண வசதியில்லாததால், ஜூலை 4ம் தேதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, 6ம் தேதி, காலை 11.30 மணியளவில் மேகலா இறந்தார். இதுகுறித்து மேகலாவின் தந்தை சந்திரன் கொடுத்த புகார்படி, பெரம்பலூர் போலீசார், 7ம் தேதி, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, மேகலாவின் உடலை சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

 சந்தேகம்:மேகலாவின் உடலை, கேரளாவுக்கு கொண்டு சென்று இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்த போது, மேகலாவின் உடலில் காயங்கள் இருந்ததால், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகசந்திரன், பீர்மேடு போலீசில் புகார் செய்தார். அங்கும் சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்யப்பட்டு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில், மேகலா கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் போலீசார், சந்தேக மரணம் என, பதிவு செய்த வழக்கை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை ஆகிய பிரிவின் கீழ் வழக்கை மாறுதல் செய்து, ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன், பாபு, பன்னீர்செல்வம் ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


 அன்பரசன் மற்றும் மகேந்திரனை கைது செய்தனர். இதையறிந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், பெரம்பலூர் போலீசில் சரணடைந்தார்.


ராஜ்குமார், அன்பரசன், மகேந்திரன் ஆகியோரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜெய்சங்கர், பாபு, பன்னீர்செல்வம் ஆகியோரை பிடிக்க, இன்ஸ்பெக்டர் கோபாலசந்திரன், எஸ்.ஐ., வெங்கடேஸ்வரன் உட்பட ஐந்து பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைத்து, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.நிரபராதி:ராஜ்குமார், சிறைக்குச் செல்லும் முன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு வழக்கு போடுவது போல், என்னை, சிறுமியை கற்பழித்து கொலை செய்ததாக, பொய்யான புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இந்த வழக்குக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் நிரபராதி என்று நிரூபிப்பேன். விசாரணைக்கு அழைத்ததால் இரவு 9.00 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்தேன். மேல் இடத்திலிருந்து வந்த தகவலால், இரவு முழுக்க ஸ்டேஷனிலேயே தங்க வைக்கப்பட்டு, மீண்டும் மேலிடத்திலிருந்து தகவல் வந்ததாக தெரிவித்து, என்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.


திருச்சி ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான் கூறியதாவது:சிறுமி, ராஜ்குமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மயக்கமடைந்து, பின்னர் அவர் மற்றும் அவர் கூட்டாளிகளான ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே, சிறுமியின் இறப்புக்கான காரணம் முழுமையாக தெரியவரும். மேலும், இச்சம்பவத்தில் யாரெல்லாம் காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும்.இவ்வாறு ஏ.டி.எஸ்.பி., கூறினார்.

 நன்றி - தினமலர்

'மூளைக்காய்ச்சலால் இறந்தாள்''...கேரள சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்!

கொல்லம்: கேரள சிறுமி பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது மகள் மூளைக்காய்ச்சலால் தான் இறந்தாள் என்றும் அவளை யாரும் கொலை செய்யவில்லை என்றும் அந்த சிறுமியின் தந்தை தெரிவி்த்துள்ளார்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா(15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்தார். உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார்.அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், டாஸ்மாக் ஊழியர் அன்பரசன், டிரைவர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனித்தனியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ராஜ்குமார் உட்பட 4 பேரும் ஆண்மை உள்ளவர்கள்தான் என மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4 பேரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பீர்மேடு சமூகநல அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் சத்யாவி்ன் தந்தை சந்திரன், தாய் சுசீலா ஆகியோரிடம் கேரள குழந்தைகள் நல கமிட்டியினர் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரன் கூறுகையில், எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டேன். இந்நிலையில் எனது மகள் சத்யாவை பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி படிக்க வைக்கலாம் என்று கூறி பீர்மேட்டைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம், விஜயகுமார் ஆகியோர் கூறினர்.


இதையடுத்து நானும், எனது மனைவியும் மகள் சத்யாவை அழைத்துக் கொண்டு பெரம்பலூரில் உள்ள ராஜ்குமார் வீட்டில் விடுவதற்காக சென்றோம். அங்கு வைத்து எனது மகளை அவரது மகளுடன் சேர்த்து படிக்க வைப்பதாக ராஜ்குமார் கூறினார். மேலும் ரூ.5,000 பணம் தந்தார்.


நாங்கள் ஊருக்கு திரும்பிய மறுநாளே சத்யா எங்களுக்கு போன் செய்து எனக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை, என்னை உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாள். அதற்கு மறுநாள் பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சத்யாவை அனுமதித்திருப்பதாக போன் வந்தது.


இதையடுத்து நாங்கள் அங்கு சென்றபோது டாக்டர்கள் சத்யாவுக்கு மூளை காய்ச்சல் என்று கூறினர். அவளது நிலைமை மோசமானதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு தான் சத்யா இறந்தாள். எனது மகளை யாரும் கொன்றிருப்பார்கள் என நான் நம்பவில்லை என்றார்.


இது குறித்து குழந்தைகள் நல கமிட்டியின் செரியன் கு. குரியன் கூறியதாவது, சந்திரனும், சுசீலாவும் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்கள். ராஜ்குமார் தனக்கு ரூ. 5,000 கொடுத்ததாக சந்திரன் கூறுகிறார். ஆனால் சுசீலா ரூ.3,000 கொடுத்தாகக் கூறுகிறார். இருவரது வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் மேலும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.


thanx - thats tamil

Monday, April 30, 2012

நரசிம்மன் ஐ பி எஸ் (Achante Anmakkal ) - மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4vyAdVeSudoVg4rxdKGw351LI7OZXI5STlc_0_b24iEdSkK9e3jKbKUPNiPQVdK3Z3qPe0sMT8ZTrxk7EW9v6b_oVx8F4-_cxnImT5-010Mj4zbFVtV5IkgNlbmwazHvvpN-le2EmzCw/s1600/Achante_Aanmakkal.jpg

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் கதையை படமா எடுக்க டைரக்டர் நினைச்சிருக்காரு.. ஆனா என்ன பிரச்சனை வந்ததோ டக்னு கதையை டைவர்ட் பண்ணி ஆர்டினரி கொலை கேஸ் இன்வெஸ்டிகேஷனா மாத்திட்டாரு.திரைக்கதைல அண்ணன் இன்னும் நிறைய கத்துக்கனும்..

ஒரு ஊர்ல ஒரு  மாமனார்.. அவருக்கு அமைஞ்ச 2 மாப்பிள்ளைகளும் போலீஸ் ஆஃபீசர்ஸ். மாமனாரும் ஒரு போலீஸ் ஆஃபீசர் தான்.. அவர் ஒரு லாக்கப் டெத்ல ஒரு கைதியோட மரணத்துக்குக்காரணமானதா குற்றம் சாட்டப்படறார்.. அந்த  பொய்க்கேஸ்ல இருந்து எப்படி 2 மாப்பிள்ளைகளூம் விடுவிச்சாங்க என்பதே படத்தோட ஒன் லைன்.. டைட்டில் ஓக்கேவா? அதாவது மாப்ளைங்க 2 பேரும் மாமனார்க்கு மகன்கள் போல .. 

சரத்குமார் தான் ஹீரோ.. ஓப்பனிங்க் ஷாட்லயே  ஆள் ஜம்முன்னு ப்ளூ ஜீன்ஸ் , ஒயிட் சர்ட், கூலிங்க் கிளாஸ்னு கலக்கறார்.. ஆனா அவர் ஃபைட் போட ஆரம்பிச்சா  அதை முடிக்க 20 நிமிஷம் ஆகுது.. உஷ் அப்பா முடியல.. காது வலிக்குது.. சும்மா  ஃபைட் போட்டா பரவாயில்லை.. ஹேய் ஹேய் ஏய் ஏய்னு பேக் கிரவுண்ட் மியூசிக் வேற..

நெடுமுடி வேணுதான் மாமனார் கேரக்டர்.. நல்ல அனுபவம் வாய்ந்த நடிப்பு.. ஆனா போலீஸ் யூனிஃபார்ம்ல ஏன் ஆள் பம்முறார்னு தெரியல..  என்னமோ அவர் தப்பு பண்ணுன மாதிரியே ஒரு கில்டி ஃபீலிங்க்ஸ்டோட நடிச்சிருக்கார்.. ( ஒரு வேளை கதையை மாத்திட்டாங்களோ..)

http://cdn4.supergoodmovies.com/FilesFive/narasimhan-ips-6c113f88.jpg


மேக்னா ராஜ் தான் சரத்க்கு ஜோடி..  2 டூயட் இருக்கு. 1 அழுகாச்சி சீன் இருக்கு.. வேற சீன் ஏதும் இல்லை.. யுவராணி ஹீரோவுக்கு கொழுந்தியாவா வர்றார்.. நோ யூஸ். ( அதாவது படத்தின் கதைக்கோ திரைக்கதைக்கோ அவர் நோ யூஸ்னு சொல்ல வந்தேன் ஹி ஹி )


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1.  கோவைல ஒருத்தன் தப்பு செஞ்சா அவன் ஓடி ஒளீயற முத இடம் பாலக்காடு தான்..  ( அப்போ பாலக்காட்ல ஒருத்தன் தப்பு செஞ்சா அவன் ஓடி ஒளீயற முத இடம் பா கோவையா?)


2.  ஒரே மாசத்துல அந்த குற்றவாளீகளை நான் அரெஸ்ட் பண்ணிடுவேன்

 போ போ எல்லாரும் பஸ் ஸ்டேண்ட்ல தான் வெயிட்டிங்க்.. போய் அரெஸ்ட் பண்ணிட்டு வந்துடு..


3.  என் புருஷன் மப்புல இருக்காரா? இல்லையா?ன்னு கண்டு பிடிக்க ஒரு டெஸ்ட் இருக்கு.. பேரு கொக்கு டெஸ்ட். அதாவது அவரை ஒரு காலை தூக்கி ஒரு கால்ல நிக்க சொல்லி 10 வரை எண்ணூவேன்// 8 வரை நின்னா அவர் ஒரு ஆஃப் குவாட்டர் மட்டும் தான் அடிச்சுருக்கார்னு அர்த்தம்


4.  உங்களூக்குத்தெரியாதா? ஒரு சுப்பீரியர் ஆஃபீசர் இன்சார்ஜ்ல இருக்கற கைதி இறந்துட்டா ஸ்பாட்ல அவர் இல்லைன்னாலும் அதுக்கான மாரல் ரெஸ்பான்ஸிபிலிட்டி அவருக்கு உண்டு

5.  தப்பை எப்படி செய்யனும்? அதை எப்படி மறைக்கனும்னு போலீஸ் தான் நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கும்.. அதனால இந்த கொலையை போலீஸ் தான் செஞ்சிருக்கும்..

6.  ஒரு கேஸ் துப்பறீயும் போது இன்னொரு கேஸ் துப்பு துலங்கறது ஒண்ணூம் பெரிய அதிசியம் இல்லை.. மாமூலா நடக்கறதுதான்


7.  இந்தப்பொண்ணை இதுக்கு முன்னால எங்கயாவது பார்த்திருக்கீங்களா?

 ம்.. ஆனா இவ்வளவு பக்கத்துல இல்லை..


http://moviegalleri.net/wp-content/gallery/narasimhan-ips-movie-stills/sarathkumar_meghana_raj_narasimhan_ips_movie_stills_1723.jpg


 இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ்.. , அவரிடம் சில கேல்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஒரு சீன்ல சரத் தன் சகலை கிட்டே நான் பாலக்காட்ல இருக்கேன்.. நீ கோவைல இருக்கே.. அதனால அந்த விசாரனையை நீ பார்த்துக்கோ அப்டிங்கறார்.. ஆனா அவர் ஃபோனை வெச்ச அடுத்த சீன்ல யே சகலை கூட நடந்து பேசிட்டு இருக்கற மாதிரி சீன் வருது.. எப்படி?

2.  சரத் பெரிய ஆக்‌ஷன் ஹீரோ தான் ஆனா அதுக்காக கூலிங்க் கிளாஸ் கூட கழட்டாம 24 பேரை உதைக்கறது ரொம்பவே ஓவர்.. கண்ணே தெரியாது.. எப்படி ஃபைட் போடுவாரு?

3.  லாட்டரி டிக்கெட்சை பதுக்கி போற வேனை சரத் மடக்கி பிடிக்கறார்.. அப்போ வேன்ல இருக்கற ஆளூங்க சும்மா கீழே குதிச்சா போதாதா? டாய்னு கத்திக்கிட்டே அந்த லாட்டரி டிக்கெட்ஸை எல்லாம் ஏன் வானத்துக்கு தூக்கி எறியறாங்க? மறுபடி அடுக்க சிரமம் ஆச்சே?

4. படம் ஆக்‌ஷன், த்ரில்லர், இன்வெஸ்டிகேஷன்னு ஸ்பீடா போற டைம்ல சரத் மலையாளம் கத்துக்கற போர்ஷனை காட்ட ஒரு பாட்டு, சம்சாரத்தை சமாதானப்படுத்த ஒரு பாட்டு தேவையா?


5. படத்தில் ஒரு சீன்ல மார்ச் 20 ல எலக்‌ஷன் வெச்சிருக்கறதா டயலாக் வருது.. டென்த் , பிளஸ் டூ எக்சாம் எல்லாம் முடிஞ்ச பின் எப்பவும் மே மாசம் தானே பொதுத்தேர்தல் வரும்? ( கேரளாவுல மாறி இருந்தா டப்பிங்க்ல மாத்தி இருக்கலாமே/)http://nowrunning.com/content/movie/2012/NarasimhanIPS/stills/NarasimhanIPS6.jpg
6. போலீஸ் ஒரு சீன்ல பொட்டிக்கடைல கில்மா புக்ஸ் சீஸ் பண்ணுது.. ஓக்கே ஆனா எவனாவது பப்ளீக்கா என்னமோ வெத்தலை வெச்சிருக்கற மாதிரி ஓப்பனா கடை வாசல்ல கில்மா புக் போட்டு விப்பானா? மறைவா வெச்சிருப்பான்.. அப்புறம் கஸ்டமர்ஸ் கேட்ட பின் எடுத்து தருவான்

7. லாட்டரி டிக்கெட் பிரின்ட் பண்ணுன கேஸ்ல பிரஸ் ஓனர் அண்னனிடம் விசாரிக்கறப்ப மாறூவேஷத்துல விசாரிக்கறாங்க.. பிரஸ் ஓனர் நெம்பர் வேணூம்.. நாங்க அவனோட அண்ணன்ங்க அப்டினு சொன்னதும் அவன் எப்படி ஏமாறுவான்? ஏன்னா அதுக்கு முந்தின நாள் தான் போலீஸ் வந்து விசாரிச்சப்போ எனக்குத்தெரியாதுன்னு சொன்னான்.. அப்பொ அவன் என்ன சொல்லனும்? எனக்கு தெரியலை. உங்க ஃபோன் நெம்பர் குடுங்கனு வாங்கி வெச்சிருந்து அனுப்பி இருக்கனும்.. 

8. பெரிய இடத்துப்பெண்ணை அந்த பொடியன் லவ் பண்றதா ஒரு கிளைக்கதை வருது.. அந்த கோடீஸ்வர ஃபிகரு கழுத்துல 10 ரூபா பாசி, 35 ரூபா தாவணி போட்டுட்டு பரிதாபமா வருது.. ( ஆன ஃபிகர் சூப்பர் தான் பணக்காரக்களை இல்லீங்கொவ்)


9. மம்முட்டி நடிச்ச சி பி ஐ டைரி குறிப்பு படம் மாதிரி எடுக்கனும்னு நினைச்சு வேணும்னே தேவை இல்லாம ஃபிளாஸ் பேக் சீன்ஸ் மட்டும் 18 தடவை வருது... ஆர்டினரி ஆடியன்ஸ் குழம்பிட மாட்டாங்க?

10.  ஒரு இன்வெஸ்டிகேஷன் கதைல தேவை இல்லாம எதுக்கு செண்டிமெண்ட், அழுகை காட்சிகள்.. அதுவும் கதைக்கு சம்பந்தம் இல்லாம சர்த் மனைவி தன் அப்பா பற்றி அழுவது?

http://thebollywoodgallery.com/wp-content/uploads/2012/02/Meghana-Raj-Hot-In-Narasimhan-IPS-10.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஆடை வடிவமைப்பு அருமை.. அதுவும் குறிப்பா சரத்க்கு ஜோர்.. அவர் அன்யூனிஃபார்மில் வரும் அனைத்துக்காட்சிகளும் கம்பீரம்..


2. பட போஸ்டர், விளம்பரம், புரோமோட் வேலைகளீல் இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போல் பார்த்துக்கொண்ட சாமார்த்தியம் அழகு.. டப்பிங்க் படம்னு நிறைய பேருக்கு தெரில..


3. இடைவே:ளை வரை கொஞ்சம் இழுத்தாலும் அதுக்குப்பின் திரைக்கதை ஸ்பீடா போவது பிளஸ்

4. படத்தின் கதை வாய்ப்பு கொடுத்தும் கவர்ச்சி ஏதும் காட்டாமல் அனைவரையும் கண்ணியமாக காட்டியது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhksttrsgFqdZdesa8-1N3HrBA-etqJoDeZLQAHclUIoYmjJ8X-6mxA10J2JxCUVnkhlShsB_asI2ghfvLtr72VrBEIE6rZOLTHzWjQgBXmRFmmvq3qlp_OP4p-U1r7fFBqvKNKfPx8800/s1600/Megna_Raj_Hot_Stills_11.jpg


சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பட விரும்பிகள், இன்வெஸ்டிகேஷன் டைப் படங்களை ரசிக்கும் பெண்கள் பார்க்கலாம்..


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41 ( ஆனா டப்பிங்க் படத்துக்கு விகடன் நோ விமர்சனம்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்.

நரசிம்மன் ஐ பி எஸ் ஆன் லைனில் ஓ சி யில் பார்க்க 

டிஸ்கி  -தமழ் திரட்டியில் தொடர்ந்து இணைந்து வரும் பதிவர்களுக்கு நன்றி. தொடர்ந்து http://www.hotlinksin.com

 இணையதளத்தில் நீங்கள் பதிவுகளை இணைத்து வந்தால் விரைவில் உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு நிச்சயம் உயரும். எனவே பதிவு எழுதியதும் முதல் வேலையாக பதிவுகளை http://www.hotlinksin.com
 திரட்டியில் இணைத்து விடுங்கள்

http://cinemabucket.blogspot.in/2012/03/achante-aanmakkal-new-malayalam-full.html


http://moviegalleri.net/wp-content/gallery/meghana-raj-hot-wet-in-jakkamma/meghana_raj_hot_wet_pics_stills_jakkamma_0050.jpg

Tuesday, December 13, 2011

முல்லை பெரியாறு பிரச்சனை - கோர்ட் வெச்ச ஆப்பு, கேரளா திகைப்பு , தமிழகம் களிப்பு


 கேரளாவில் கலவரம் கிளப்பும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. தமிழ் நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்த மலையாளிகளின் எண்ணிக்கை  30 லட்சம் பேர்.. அவர்களுக்குத்தேவையான தண்ணீரைக்கொடுப்பதாக நினைத்துக்கொண்டாலே போதும்..

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களீல் கார்மெண்ட்ஸ் பணீக்கு இருக்கும் டெய்லர்கள் பெரும்பாலும்  கேரளாவை சேர்ந்த பெண்களே.. இப்போது முல்லை பெரியாறு பிரச்சனைக்காக  தமிழர்களை தாக்குபவர்கள் அதே போல் தமிழ்நாட்டில் இருக்கும் கேரள மக்கள் நலன் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் நர்ஸ்களீல் 68 % பேர் கேரளா பெண்களே..

 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரும் கேரள அரசின் மனுவை,  உச்ச நீதிமன்ற 'அரசியல் சாசன பெஞ்ச்' இன்று தள்ளுபடி செய்தது.

அதேவேளையில்,  முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.
ஆனால், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இரு தரப்புக்கும் அறிவுரை...

இதில் குறிப்பிடத்தக்க அமசமாக, முல்லைப் பெரியாறு விவகாரத்தில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் கருத்துகளை வெளியிடாமல், மக்களிடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க, பொறுப்புடன் செயல்படுமாறு,  தமிழக, கேரள தரப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை கேரள அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய நீர் மட்டமான 136 அடியை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, அம்மாநில பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கேரளாவில் நடந்த போராட்டங்களின்போது அணையை உடைக்க முயற்சிகள் நடந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில்,  உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

அதேபோல், கேரள அரசு சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அப்போதுதான் நில நடுக்கங்களில் இருந்து அணையை பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திமுக சார்பில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான தமிழகம் மற்றும் கேரள அரசின் மனுக்கள், நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் ஆர்.எம்.லோக்தா, தீபக்வர்மா, அனில்தவே, சந்திரமவுலி பிரசாத் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட 'அரசியல் சாசன பெஞ்ச்' முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  


கேரள அரசுக்குக் கண்டிப்பு..


அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய கேரள அரசைக் கண்டித்த அரசியல் சாசன பெஞ்ச், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

ஏ.எஸ். ஆனந்த் அறிக்கையின்படிதான், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, அணையின் நீர்மட்டம் குறைப்பது தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்..

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

இதுதொடர்பான விசாரணை நாளை மறுதினம் நடைபெறும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்தது.

ஜெயலலிதாவுக்கு கண்டிப்பு...

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அத்துடன், முல்லைப் பெரியாறு தொடர்பாக பத்திரிகைகளில் ஒருபக்கம் விளம்பரம் வெளியிட்டதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு, விசாரணையில் இருக்கும்போது, அதுபற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’  என்பதுபோல, 'அணை பலமிழந்து உள்ளது. அதை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும்’ என்று இத்தனைக் காலமாக புளுகி வந்த கேரளாவின் குட்டு, அந்த மாநில உயர் நீதிமன்றத்திலேயே உடைபட்டு விட்டது. இதனால் பிரச்னையை திசை திருப்புவதற்காக, அரசாங்கத்தின் ஆசிகளோடு வன்முறைகளில் இறங்கிவிட்டனர் கேரள சகோதரர்கள்!


இதுதொடர்பாக தமிழகப் பொதுப்பணித் துறை முன்னாள் பொறியாளர் விஜயகுமார் ''முல்லை-பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்காக 999 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதை காலி செய்யவும், இடுக்கி அணைக்கு மொத்த தண்ணீரையும் கொண்டு செல்வதன் மூலம், கேரளத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கவும்தான் 'அணை பலமாக இல்லை' என்கிற வதந்தியை கேரளா தொடர்ந்து கிளப்பி வருகிறது. இதற்கு ஆதரவாக சினிமா மூலமாகவும் பீதியைக் கிளப்புகிறது.


அணை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதே உண்மை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவான நீர்க்கசிவுதான் இருக்கிறது. இதையெல்லாம் விளக்கி, அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்த தொழில்நுட்ப விளக்கங்களுடன் 'பெரியாறு அணையின் உண்மை நிலை’ என்கிற குறும்படத்தை தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ளோம். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய பிரதமரை சந்தித்து இந்த குறும்பட சி.டி-யைக் கொடுத்துள்ளதுடன், ஒரு லட்சம் குறுந்தகடுகளைத் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளார்.


நாம் சொல்வதுதான் உண்மை என்பது... தற்போது கேரள மாநில உயர் நீதிமன்றத்தில், கேரள அரசின் வாக்குமூலத்திலேயே உறுதிப்பட்டுவிட்டது. 'அணை உடைந்தால், கேரளாவில் உள்ள ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இறந்து போவார்கள்' என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லி வந்தது கேரளா.


'ஒருவேளை அணை உடைந்தால், மக்கள் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.?’ என கேரள உயர் நீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்ப... 'அணை உடைந்தால் பாதிக்கப்படப் போவது 500 பேர்கள் மட்டுமே. அத்துடன் அணை உடைந்தால், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்’ என அம்மாநில அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நீதிமன்றத்திலேயே உண்மையை உடைத்து விட்டார். இதனால், கேரளத்தின் பொய் முகம்... உலகுக்கே உரித்து வைக்கப்பட்டுவிட்டது''


''தற்போது அட்வகேட் ஜெனரலை உண்டு இல்லை என்று மிரட்டி வரும் கேரளத்தவர்கள், தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எதிராக மிகமோசமாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு உள்ளனர். இந்த நிலையில் தமிழக விவசாயிகள் மற்றும் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கை... 'மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது கேரளாவுடன் இணைக்கப்பட்ட தேவிக்குளம், பீர்மேடு ஆகிய தமிழகப் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்’ என்பதுதான். மக்கள் எழுச்சியின் மூலமாக இதை சாத்தியமாக்கும் முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் இறங்கி விட்டன'' என்றும் சொன்னார்.


மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்!

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த வன்முறைவாதிகள் அணைப்பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதால்... அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக  முல்லை-பெரியாறு மீட்புக்குழுவின் செயலாளர் தன்ராசு, ''வன்முறை மூலமாக அணையை உடைத்து, தனது திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது கேரளா. டிசம்பர் 3-ம் தேதி கேரள இளைஞர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் வரும் மதகுப் பகுதியில் நுழைந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். அடுத்த நாள், கேரள பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் பெரியாறு அணைப்பகுதியில் நுழைந்து பேபி அணையை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. இதுபோன்ற முயற்சிகள் காரணமாக எப்போது வேண்டுமானாலும், அணை உடைக்கப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக முதல்வரும் மற்ற அரசியல்தலைவர்களும் கேட்டுக் கொண்டபடி உடனடியாக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் பெரியாறு அணை ஒப்படைக்கப்பட வேண்டும். இதையும் மீறி அணைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால்... உடைபடுவது அணை மட்டுமல்ல... இந்திய ஒருமைப்பாடும்தான்'' என்று எச்சரிக்கைக் குரலில் சொன்னார்.

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் 70 எம்.எல்.ஏ-க்களையும், எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் 69 எம்.எல்.ஏ-க்களையும் வைத்துள்ளன. தற்போது, பெரியாறு பாசனப் பகுதியில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவம் தொகுதியில்  இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றால்... ஆட்சியே பறிபோய்விடும். அதனால்,   இந்தப் பிரச்னையை ஊதி பெரிதாக்கி வெற்றி பெற நினைக்கிறது காங்கிரஸ் என்றொரு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
'கூடன்குளம் பிரச்னைதான் தென்னக மீடியாக்களில் பிரதான பிரச்னையாக உருவெடுத்து உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. இதை திசை திருப்புவதற்காகவே, கேரளாவை ஆளும் காங்கிரஸ் அரசின் உதவியோடு, முல்லை-பெரியாறு பிரச்னையை பெரிதாக ஊதிவிட்டிருக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு'' என்று குற்றம் சாட்டியுள்ளனர் கூடன்குளம் அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்திவரும் போராட்டக் குழுவினர்

Tuesday, July 05, 2011

ரதிநிர்வேதம் - சினிமா விமர்சனம்

http://sites.google.com/site/chithravishesham/posters/2011/20110616-Rathinirvedam.jpg

மஜாவான படம் பார்க்கறதுன்னா மக்களுக்கு எப்பவும் மட்டற்ற மகிழ்ச்சி தான்,(படத்துல சீன் இல்லைன்னா பிட்டற்ற வருத்தம்)அதுவும் மலையாளமா இருந்துட்டா கேட்கவே வேணாம். அதென்ன மலையாளத்துல மட்டும் அப்படி ஒரு ஸ்பெஷல்?னு கேட்கறவங்க ஒன் ஸ்டெப் பேக் மேன். இந்தியாவுலயே அதிகம் பேர் கல்வி அறிவு கொண்டவங்க கேரளாக்காரங்க தான். கல்வி அறிவு மட்டுமா?ஹி ஹி

கில்மா படத்துக்கே காட் ஃபாதர் 1978 இல் வெளி வந்த இந்த ரதிநிர்வேதம் படம் தான். பல வருடங்களூக்குப்பிறகு ரீ மேக் ஆகி வந்திருக்கு.. இதுல என்ன வரலாற்று சிறப்பு மிக்க கதைன்னா. பெரும்பாலான ஆண்களின் வாழ்வில் வரும் முதல் அனுபவம் தான் கதை.

அதாவது  உயிருக்குயிரா ஒரு ஃபிகரை லவ் பண்றவன்,ஒன் சைடு லவ் பண்ற ஆள்,எந்த சைடும் லவ்வே பண்ணாதவன் இப்படி பல கேட்டகிரில ஆண்கள் இருந்தாலும் எல்லா ஆண்களுக்கும் பெரும்பாலும் முதல் கில்மா ஒரு ஆண்ட்டி கூட அதாவது அவனை விட வயது அதிகமான ஒரு பெண்ணுடன் தான் நடந்திருக்கும். இது இயற்கையின் நியதி. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனா பெரும்பான்மை அதான். அந்த பேசிக் கான்செப்டை இந்தப்படமும் எடுத்துக்கிட்டதாலதான் காலங்கள் தாண்டியும் பேசப்படுது.


http://oldmalayalamcinema.files.wordpress.com/2011/02/rathinirvedam-2011.jpg?w=535&h=400


ஹீரோவுக்கு 17 வயசு. ஹீரோயின் 30 வயசான ஸ்வேதா மேணன். கேரளாவுல இயற்கை அழகுகள் கொஞ்சி மகிழும் ஒரு கிராமத்துல பக்கத்து பக்கத்து வீடு.

ஹீரோ அடிக்கடி ஹீரோயின் வீட்டுக்கு போறப்ப எல்லாம் பாப்பா தையல் மிஷின் ல உட்கார்ந்து தெச்சுட்டு இருக்குது. கிணற்றுல தண்ணி சேர்ந்திட்டு இருக்கு,வீடு கூட்டிட்டு இருக்கு ( அதுவும் அபாயகரமா குனிஞ்சு),ஜன்னலை திறந்து வெச்சுக்கிட்டு டிரஸ் மாத்துது.

ஹீரோ மனசுல  ஆ ராசா கைல படிஞ்ச மாதிரி கறை . எப்படியாவது தனது உயர்ந்த உள்ளத்தை அவளுக்கு ஓப்பன் பண்ணி புரிய வெச்சுடனும்னு. ஆனா அவ என்னடான்னா நீரா ராடியா கணக்கா செம அப்பாவியா இருக்கா. கடைசில பொறுத்து பொறுத்துப்பார்த்து பொங்கி எழுந்து  பேக்ல கை வெச்சுடறான். 

கண்ணகி பரம்பரையா இருக்கறவ என்ன பண்னனும்?பளார்னு நாலு அறை விட்டு துரத்தனுமா இல்லையா? இவ என்னடான்னா . தம்பி, இதெல்லாம் தப்புன்னு அட்வைஸ் பண்றா.

இப்போ ஹீரோயினை பொண்ணு பார்க்க மாப்ளை வீட்டுக்குக்காரங்க வர்றாங்க.. இவன் போய் அப்பாவியா மாப்ளை கூட கல்யாணம் ஆனா என்னை விட்டுட்டு போயிடுவீங்களா?ன்னு கேட்கறான்.. அவ ஆமாங்கறா ம்ஹூம் போகக்கூடாது.. அப்படி போற மாதிரி இருந்தா நீங்க கல்யாணமே பண்ணிக்கக்கூடாதுங்கறான்..http://www.cinespot.net/gallery/d/538192-1/Rathinirvedam+Remake+Movie+photos.jpg

அப்பவும் இவன் வாயில இருந்து நான் உங்களைக்கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வார்த்தை வருதா?ம்ஹூம்.. அண்ணன் ஓ சி லயே பிரசாதம் சாப்பிட ஆசைப்படறான்.

அப்புறம் ஒரு தடவை பாப்பா வீட்ல உக்காந்து தையல் மிஷின்ல துணி தெச்சுட்டு இருக்கு.. பாவாடை தொடை வரை ஏறிக்கிடக்கு.. இவன் வீட்டுக்கு வந்து 27 நிமிஷமா அவ தொடையை பார்க்கறான்.. பாவம் பாப்பா ரொம்ப அப்பாவி இல்லையா? அவன் பார்க்கறதே தெரியாம வெள்ளந்தியா இருக்கறா.. (எவண்டி உன்னைப்பெத்தான் அவன் மட்டும் கைல கிடைச்சா செத்தான் செத்தான்  )

இந்த மாதிரி பல சம்பவங்கள் நடக்குது.. பொறுத்துப்பொறுத்துப்பார்த்த ஹீரோ ஒரு லொக்கேஷன் சொல்லி அங்கே நீ வந்தே ஆகனும்கறான்.. சீவக சிந்தாமணி, யோக்கிய சிகாமணி என்ன பண்ணி இருக்கனும்? வீட்லயே இருக்க வேண்டியது தானே?இல்லை.. அவன் சொன்ன இடத்துக்கு போறா..

அவன் டக்னு கட்டிப்பிடிக்கிறான்.. இவ அதிர்ச்சி ஆகிடறா.. பின்னே தேவாரம், திருவாசகம் சொல்லித்தரவா வர ச்சொல்லுவான்..?ஆரம்பத்துல பதறுனாலும் அப்புறம் பாப்பா ஓக்கே சொல்லிடறா/.. திடீர்னு மழை வருது.. 2 பேருக்கும் சவுகர்யமா போயிடுது..

இப்போத்தான் க்ளைமாக்ஸ்.. பாப்பாவை பாம்பு கொத்திடுது..  இவன் மேட்டர் முடிச்சதும் கிளம்பிடறான்.. பாப்பா செத்துப்போயிடுது.. அவளை பாடைல போட்டு எடுத்து வர்றப்ப இவனை பஸ் ஏற்றி வெளியூர் அனுப்பிடறாங்க..

இவன் சும்மா லைட்டா அவ பாடியைப்பார்த்து கதர்ற மாதிரி ஆக்ட் குடுக்கறான்.. அவ்வளவு தான் கதை..


http://4.bp.blogspot.com/-nKfAcge6nOE/TftKvL0oYqI/AAAAAAAAB2o/dhvUN5EedbU/s640/Rathinirvedam+2+Remake+Malayalam+Movie.jpg
 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பட ஓப்பனிங்க்ல  இருந்து முதல் 3 ரீல்கள் வரை கேரளாவின் இயற்கை வனப்பை, நீர் நிலைகளை அழகா படம் பிடிச்சது,

2. நாட்டு வழியில் பாட்டு ,செண்பகப்பூ காட்டிலே என 2 மெலோடி ஹிட் சாங்க்ஸ் ரெடி பண்ணுனதும்,அதை படமாக்கிய விதமும்..

3. பெண்களும் பார்க்கும்படியாக கதையை டீசண்ட்டாக,ஆபாசம் இல்லாமல் எடுத்தது..

4. விக்கோ,சவுரியோ,ஒரிஜினலோ ஹீரோயின் கூந்தல் செம நீளம் + அடர்த்தி 

http://searchandhra.com/english/wp-content/uploads/2011/04/Swetha-Menon-Photo-Gallery-9.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. வீட்டுக்குள்ளே எந்நேரமும் புடவையுடன் இருக்கும் ஹீரோயின் வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் கிணற்றில் தண்ணீர் சேர்ந்தும்போது மட்டும் வெறும் பாவாடை,ஜாக்கெட்டுடன் அலைவது ஏன்?

2. ஹீரோயின் 13 சீன்களில் துணி மாற்றுகிறாள்.. ஒரு தடவை கூட பெட்ரூம் ஜன்னலை சாத்தவே இல்லை.. அது கூட பரவால்லை.. விட்டது விட்ட மாதிரியே பார்த்துட்டு இருக்கானே ஹீரோ, அவனை கண்டு கொள்ளவே இல்லை.. உள்ளுணர்வு என்பதே பெண்ணுக்கு கிடையாதா?

3 . வழி தவறிய ஹீரோயினுக்கு தண்டனையாக அவளுக்கு மரணம் பரிசு ஓக்கே,அப்போ ஹீரோவுக்கு என்ன தண்டனை?

4. உடலுக்கோ,உள்ளத்துக்கோ ஆசைப்பட்டவள் மரணம் அடைந்தாள் என்பது தெரிந்தும் ஹீரோ ஏன் அவள் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை?என்னதான் சொந்த பந்தங்கள் தடுத்தாலும் அவன் போகாமல் இருப்பானா?

ஈரோடு ஸ்டார் தியேட்டரில் இந்தப்படம் பார்த்தேன்.. படத்துல சீன் இருக்கா? இல்லையா? என கேட்பவர்களூக்கு.. இருக்கு.. ஆனா இல்லை.. ஹி ஹி