Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Wednesday, January 06, 2016

மாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அட்டர்ஃபிளாப்பா?த ஹிந்து அலசல்

பெற்றோரின் விருப்பத்துக்காக விருப்பமில்லாத திருமண உறவில் சிக்கிக்கொள்கிறார் மனோஜா (வாமிகா). இவரது கணவன் பிரபு (பாலகிருஷ்ணா) கூச்ச சுபாவம் கொண்டவர். நாகரிகம், நாசூக்கு அறி யாதவர். ஆனால் தன் மனைவி மீது உயிராக இருக்கிறார். மனோஜாவோ பிரபுவை வெறுத்து ஒதுக்குகிறார். இவர் களது திருமணம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முறிந்துபோகிறது. பிரிந் தவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.


கீதாஞ்சலி செல்வராகவனின் இயக் கத்தில் வந்திருக்கும் இப்படம், அம்மா வும் மகளும் பேசிக்கொள்வதை இயல் பாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்கு கிறது. பிறகு, திருமண முறிவின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிடிக்காத திருமண உறவினுள் போலி யான இல்லறத்தை சிருஷ்டிக்க முற் படுவதில் உருவாகும் முரண்பாடு களும், மெல்ல முகிழ்க்கும் காதல் அத் தியாயமும் தமிழ் சினிமா பலமுறை கண்ட கதை. ஏற்கெனவே கையாண்ட கதையை மீண்டும் கையாளும்போது அதில் இருக்கவேண்டிய புதுமையோ, புதிய பார்வையோகூட சொல் லிக்கொள்ளும் அளவில் இல்லை.பாத்திர வார்ப்புகள், வசனங்களில் கதாசிரியர் செல்வராகவன் வித்தியாசம் காட்டியிருந்தாலும் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் பெரிய வித் தியாசம் இல்லை. நாயகனை நிராகரிக் கும் நாயகி ஆதிக்க உணர்வுடன் நடந்துகொள்வதை வேண்டுமானால் வித்தியாசம் என்று சொல்லலாம்.


நாயகியின் மனம் இளகும்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவத்துக் கான பின்புலம் நன்கு கட்டமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த சம்பவம் சித்தரிக்கப்பட்ட விதம் அபத்தம். கதையின் போக்கை திசைமாற்றக்கூடிய இக்காட்சியை ஏற்றுக்கொள்ளும் வித மாகச் சித்தரித்திருந்தால் கதையின் போக்குக்கு அது வலு சேர்த்திருக்கும். கிளைமாக்ஸ் திருப்பமும் வழக்க மான சினிமாத்தனம். போதாக் குறைக்கு, நாயகன், நாயகி இருவரும் தங்கள் தரப்பை நியாயப்படுத்த தலா ஆளுக்கொரு காட்சியில் நீளமாக வச னம் பேசி கொடுமைப்படுத்துகிறார்கள்.


தன் ஆண் நண்பர்களுடன் மனோஜா வுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நவநாகரிகப் போக்கு கொண்டவராக இருந்தும் சுயமரியாதையும் சுய கட்டுப்பாடும் கொண்டவராக இருக்கும் மனோஜாவின் ஆளுமை ஆகியவை நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், திருமணத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் அவர் அவதிப்படுவது, தன் மனைவிக்கு ஏற்ப நடந்துகொள்ளத் தெரியாத பிரபுவின் அவஸ்தைகள் இருவரையும் இணைத்துவைக்க நண்பர்கள் செய்யும் முயற்சி ஆகியவற்றை சித்தரித்த விதம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாவுக்காகத் திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண், திருமண உறவுக் குள் தான் மோசமாக நடந்துகொண்டால் அதுவும் அம்மாவை பாதிக்கும் என்பதை யோசிக்க மாட்டாளா? பிடிக்கவே பிடிக்காத திருமணத்தில் எதற்காக 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்? ஒரு தவறும் செய்யாத கணவனை தான் வதைப்பது பற்றிய உணர்வே அந்த பெண்ணுக்கு ஏற்படாதா?டேட்டிங் என்ற சாக்கில் பெண் களைக் காம நுகர்வுக்குப் பயன் படுத்திக்கொள்ளும் நண்பனை அதற் காகவே பிரிகிறார் நாயகி. பின்னாளில் அதே நண்பனோடு டேட்டிங் செல்ல ஒப்புக்கொள்ளும்போது நாயகியின் கதாபாத்திரம் சரிகிறது. யாருமே ஊடுருவ முடியாத இரும்புக் கோட்டை போலத் தன்னை ஆக்கிக்கொண்டுள்ள ஒரு பெண் மனம் மாறும் காட்சியில் எந்த அளவுக்கு வலு இருக்க வேண்டும்? படத்தில் அந்த இடம் சப்பென்று இருக்கிறது.நகர்ப்புற இளைஞர்களிடம் ஊறி யிருக்கும் டேட்டிங் கலாச்சாரத்தை இயல்பாகச் சித்தரிக்கிறார் இயக்குநர். ஆனால் மாநகர இளைஞர்களும் யுவதிகளும் டிஸ்கொத்தே, மது, டேட்டிங் தவிர வேறு சிந்தனைகளே இல்லாதவர்கள் போன்ற சித்தரிப்பு உறுத்துகிறது.


பொருந்தாத திருமணத்தின் தொடக்க நாட்களைச் சித்தரிக்கும் சில காட்சிகள் இயல்பாக உள்ளன. காட்சிகளைக் கையாளும் விதத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் நேர்த்தியாக வெளிப் படுகிறார். செல்வராகவனின் வசனங்கள் இயல்பாக உள்ளன. மனோஜாவின் நண்பன், பிரபுவுக்கு ஆலோசனை வழங்கும் காட்சி இதற்கு உதாரணம்.படமாக்கப்பட்ட விதம், உரையாடல் கள் ஆகியவற்றில் இருக்கும் நேர்த்தி, சம்பவங்களைக் கோத்த விதத்தில் இல்லை. பெரும்பாலான காட்சிகள் ஊகிக்கக்கூடியவையாக, பார்த்து சலித்தவையாக இருக்கின்றன. ஒவ் வொரு காட்சியையும் மிக நிதான மாக நகரவிடும் படத்தொகுப்பு திரைக்கதையை மந்தமாக்குகிறது.


வாமிகா, ராமகிருஷ்ணா இருவரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெறும் அளவுக்கு ராமகிருஷ்ணா தன் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். உறுதியான ஆளுமையை வெளிப் படுத்துவதில் வாமிகாவின் கண்கள், முக பாவனைகள் நன்கு ஒத்துழைக்கின்றன. மனோஜாவின் அம்மாவாக வரும் கல்யாணி, பிரபுவின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள் ஆகியோரும் பொருத்தமான தேர்வுகள்.


அறிமுக இசையமைப்பாளர் அம்ரித் தின் இசையும், தரின் ஒளிப்பதிவும் கதையுடன் இணைந்து பயணிக்கின்றன. பாடல்கள் நினைவில் தங்கவில்லை என்றாலும் பின்னணி இசை பல இடங்களில் வசீகரிக்கிறது.


ஏற்கெனவே எடுத்தாளப்பட்ட கதையை புது தலைமுறை கதா பாத்திரங்களுடன் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஆனால் காட்சியின் அதிர்ச் சிக்காக, கதாபாத்திரங்களின் அடிப்படை குணாதிசயங்களில் செயற்கையான சிதைவுகளை திணித்திருப்பது கதையின் அஸ்திவாரத்தை வலுவிழக்கச் செய்கிறது. காட்சிகளின் இயல்புத் தன்மையும் சீராக இல்லை.


கலாபூர்வமான சில படங்கள் மெதுவாக நகரலாம். அதற்காக, மெதுவாக நகரும் படமெல்லாம் கலாபூர்வமான படமாகிவிடாது.

நன்றி - த இந்து

Wednesday, December 30, 2015

பூலோகம்-திரை விமர்சனம்:

குத்துச்சண்டையில் யாரையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் கொண்ட உக்கிரமான வீரனால் வணிகச் சூழலின் சூழ்ச்சிகளை எதிர்த்து வெல்ல முடிகிறதா என்பதே ‘பூலோகம்’.


வட சென்னையில் ஒரு காலத்தில் இடியாப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்று பல குத்துச்சண்டை குழுக்கள் இருந்தன. அத்தகைய இரண்டு ‘பரம்பரை’களுக்குள் இருக்கும் ஜென்மப் பகையின் தற்கால அத்தியாயம்தான் படத்தின் கரு.எதிர் பரம்பரை வீரரிடம் தோற்ற அவமானத்தால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிறார் ஜெயம் ரவியின் அப்பா. அந்த பரம்பரையின் இன்றைய வாரிசை வென்று பழிதீர்க்கத் துடிக்கிறார் ரவி. அதற்காக வெறித்தனமாகப் பயிற்சி செய்கிறார். எதிராளி ஆறுமுகமும் (ராஜேஷ்) இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முடிவோடு தயாராகிறார்.


பகைமையின் இந்த வெறியைப் பணமாக மாற்ற விளையாட்டு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் பிரகாஷ் ராஜ் திட்டமிடுகிறார். அவர் நடத்தும் பெரிய அளவிலான போட்டியில், ரவியின் அடி தாங்காமல் கோமாவில் படுத்துவிடுகிறார் ராஜேஷ். இதனால், ரவிக்கு வெறி மறைந்து குற்ற உணர்வு தலைதூக்குகிறது. குத்துச்சண்டையே வேண்டாம் என ஒதுங்கி சாமியார்போல வாழ்கிறார்.


ரவியின் குத்துச்சண்டை வெறியை வைத்து பல திட்டங்கள் போட்டிருந்த பிரகாஷ் ராஜ், அவரை மீண்டும் சண்டையில் இறக்க முடிவு செய்கிறார். பிரகாஷ் ராஜின் சதி வலையில் விழும் ரவி, அவரது சதிகளை புரிந்துகொண்டு, அதே விளையாட்டில் அவரை தோற்கடிக்க முடிவுசெய்கிறார். தன்னைவிட பல மடங்கு பலம் பொருந்திய அமெரிக்க குத்துச்சண்டை வீரரோடு இதற்காக மோதவேண்டி இருக்கிறது. அந்த போட்டியையும் பிரகாஷ் ராஜின் வியூகங்களையும் ரவி எப்படி எதிர்கொள்கிறார் என்பது ‘பூலோகம்’ கதை.


குத்துச்சண்டையின் ஆக்ரோஷத்தையும் வட சென்னையின் பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாக பதிவுசெய்துள்ளார் இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன். சண்டைக்குத் தயாராகும் காட்சிகள், சண்டைக்கு முன்பு அம்மன் கோயிலில் ரவி மேற்கொள்ளும் சடங்கு, சாவின்போது பாடப்படும் கானா பாடல் காட்சி, சாமியாராக வாழும் ரவியை மீண்டும் சண்டையில் இறக்குவது ஆகியவை நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான நாயக அடையாளங்கள் அதிகம் இல்லாமல் ஆத்திரமும் வேகமும் கொண்ட சராசரி மனிதராக ரவியைச் சித்தரித்துள்ளது பாராட்டுக்குரியது. எதையும் பணமாக்கத் துடிக்கும் வணிக மோசடியையும் ஊடகங்களின் விரும்பத்தகாத போக்கையும் கதையில் பொருத்தியிருக்கிறார்.சண்டைகளைக் காட்சிப்படுத்திய விதம் ஆர்வ மூட்டக்கூடியதாக இருக்கிறது. மிகவும் அபாயகரமான ஜார்ஜோடு நடக்கும் குத்துச்சண்டையைவிட, போட்டிக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் காட்சியில் ரவி - பிரகாஷ் ராஜ் இடையே நடக்கும் சொல் யுத்தம் விறுவிறுப்பு.எல்லாம் சரிதான், சிக்கலான வணிக மோசடிகளை ரவி எப்படித் தெரிந்துகொண்டார் என்பது சொல்லப்படவே இல்லை. ஒப்பந்தம் போடும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்குப் பிறகு ரவி பேசும் அரசியல் ஆகியவை வசனகர்த்தா எஸ்.பி.ஜனநாதனின் குரலாகவே ஒலிக்கிறது.அமெரிக்க குத்துச்சண்டை வீரரை பெண் வேடத்தில் அலையவிடுவது, ரவியின் திருமணத்துக்கு அவர் வந்து சவால் விடுவது போன்ற காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. அமெரிக்க குத்துச்சண்டை வீரரை அழைத்துவந்து மோதவிடுவது, வெவ்வேறு எடைப் பிரிவில் இருப்பவர்கள் பரஸ்பரம் மோதுவது போன்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.


பழிவாங்கும் வெறியோடு கூடிய குத்துச்சண்டை வீரரின் கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டிருக்கிறார் ஜெயம் ரவி. அவரது உடல்மொழி, முகபாவனைகள் பாத்திரத்தின் தேவைக்கேற்ப உள்ளன. வசன உச்சரிப்பில் அவர் இன்னும் மெனக்கெட வேண்டும். படம் முழுவதும் வரும் த்ரிஷாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த வேலையும் இல்லை. எல்லோரையும் தனது வணிக விளையாட்டின் பகடைக்காய்களாக மாற்றும் வில்லன் வேடத்தில் பிரகாஷ் ராஜ் கச்சிதம். பயிற்சியாளர்களாக வரும் பொன்வண்ணன், ஷண்முகராஜா மனதில் நிற்கிறார்கள்


. நாதன் ஜோன்ஸின் தோற்றம் பிரமிக்கவைத்தாலும், நடிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.


தன் சீடர் இயக்கியுள்ள படத்துக்கு எஸ்.பி.ஜன நாதன் வசனம் எழுதியிருக்கிறார். வழக்கம்போல, படத்துக்கு அது பெரிய பலம். வசனங்களில் தெறிக்கும் அரசியல், கூர்மையும் காரமும் கொண்டுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத் தொகுப்பு நேர்த்தியாக இல்லை. நம்பகத்தன்மை விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் வணிக அரசியலைப் பேசும் நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாக அமைந்திருக்கும்.


the hindu

Wednesday, October 14, 2015

எந்நு நிண்டெ மொய்தீன்- திரை விமர்சனம்,-மலையாளப் படம்,

தேவதாஸ்-பார்வதி காவியக் காதலைப் போல் கேரளத்தில் பரவலாக அறியப்பட்ட நவீன காலக் காவியக் காதல், காஞ்சனமால-மொய்தீனுடையது. 1950களில் வடகேரளத்தின் சிறு நகரமான முஹ்கத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘எந்நு நிண்டே மொய்தீன்’ என்னும் பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
2006-ல் ‘ஜலம் கொண்டு முறிவுற்றவள்’ என்னும் ஆவணப் படம் மூலம் காஞ்சனமாலா-மொய்தீன் காதலைக் கவித்துவமான விவரிப்புகளுடன் தொகுத்திருந்தார் இயக்குநர் ஆர்.எஸ்.விமல். இந்த ஆவணப் படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது. இந்த வெற்றி தந்த உற்சாகத்தால், செல்போன், இணையம் போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் தீண்டிடாத காலகட்டத்திய காதலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்கு எடுத்து வந்திருக்கிறார் அவர்.
காஞ்சனாவும் மொய்தீனும் பள்ளி சிநேகிதர்கள். காஞ்சனாவின் தந்தையும் மொய்தீனும் தந்தையும் அந்த ஊரின் பெரும் நிலக்கிழார்கள்; காங்கிரஸ் அனுதாபிகள். மொய்தீனின் தந்தை அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராகவும் இருக்கிறார். இரு குடும்பத்துக்கும் அந்நியோன்யமான உறவும் உண்டு. மேற்படிப்புக்காக இருவரும் கோழிக்கோட்டில் வெவ்வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். தொடர்பே இல்லாமல் போய்விடுகிறது. திடீரென ஒரு பேருந்துப் பயணத்தில் ஓட்டுநர் கண்ணாடியின் வழியாக, இரு பழுப்பு நிறக் கண்கள் தன்னை நோக்குவதைக் கவனிர்க்கிறாள் காஞ்சனா. அந்த முகத்தில் விரியும் புன்னகை அவளுக்கு யாரையோ ஞாபகப்படுத்துகிறது. திரும்பிப் பார்க்கிறாள், மொய்தீன். அந்தக் கணத்தில்தான் மொய்தீன் மீதான காதலை அவள் உணர்கிறாள்.
கடிதம் வழியாகக் காதல் வளர்கிறது. கடிதம் மூலமாகவே காதல் விவகாரம் அவளது வீட்டுக்கும் தெரியவருகிறது. அவளது கல்லூரிப் படிப்பு முடிவுக்கு வருகிறது. வீட்டுக்குள் சிறைவைக்கப்படுகிறாள். இரு குடும்பத்திலும் எதிர்ப்பு வலுக்கிறது. ஆனால் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். காஞ்சனாவின் போர்க் குணத்தை முன்பே சில காட்சிகள் மூலம் இயக்குநர் சித்திரித்துவிடுகிறார். தன் தந்தைக்கு எதிராகப் போராடும்போது மொய்தீன் ஒரு திடமான கம்யூனிஸ்ட் சோஸலிஸ்ட் என்பதையும் சொல்லிவிடுகிறார்.
காண வழியில்லாத நிலையில் கடித வரிகள் மூலம் கூடுதல் நெருக்கம் கொள்கிறார்கள். மீண்டும் கடிதம் பிடிபடுகிறது. இருவரும் மலையாள எழுத்துகள் கொண்டு புதுமொழியை உருவாக்குகிறார்கள். கவிதைப் புத்தகங்களில் அடிக்கோடிட்டுப் பாஷைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். தனது தங்கைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காகக் காஞ்சனா வலிகளுடன் காத்திருக்கிறாள். அவளுக்காக மொய்தீனும் காத்திருக்கிறான்.
அவர்கள் நேரில் பார்த்துக்கொள்ளாமல் பத்தாண்டுகள் கடந்துபோகின்றன. தங்கைகள் எல்லோரும் திருமணமாகிப் போகிறார்கள். அவனுக்கு நரை அரும்பத் தொடங்கிவிடுகிறது. வீட்டைவிட்டு வெளியேறத் தீர்மானிக்கிறார்கள். அதற்கிடையில் தந்தையால் கத்தியால் குத்தப்பட்டு படுத்த படுக்கையாகிறான் மொய்தீன். பிறகு அவனது தந்தையும் இறக்கிறார். இவற்றிலிருந்து மீண்டு வந்து இவளை அழைத்துச் செல்ல காருடன் காத்திருக்கும்போது அவளது அண்ணன் இறந்த செய்தி வருகிறது. எல்லாவற்றுக்குமாக அவள் கதறி அழுகிறாள்.
பரஸ்பர காதல் இருந்தும், அவளது வீட்டு மதிற் சுவர்கள் தாண்டிவிடும் உயரத்திலிருந்தும் மத வேறுபாடு, சமூகப் பழக்கங்கள், உறவு முரண்கள் மட்டுமல்லாமல் சூழ்நிலைகளும் அவர்களைப் பிரித்துக்கொண்டே இருக்கிறது.
பரவலாக அறியப்பட்ட ஒரு காதல் கதையை, திறமையான திரைக்கதை மூலம் சுவாரசியமான சித்திரமாக மாற்றியிருக்கிறார் விமல். மொய்தீனாக பிருத்விராஜ் சுகுமாரனும் காஞ்சனமாலயாக பார்வதியும் நடித்திருக்கிறார்கள். லெனாவும் சாய்குமாரும் மொய்ந்தீனின் பெற்றோராகத் தேர்ந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். இன்றும் மொய்தீன் பெயரில் சமூகப் பணிகளாற்றிவரும் 75 வயதான காஞ்சனா இந்தப் பட உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்.
‘எண்டே காஞ்சனக் குட்டிக்கு’ எனத் தொடங்கும் கடித வரிகள் காதலின் ஆழத்தை உணர்த்துகின்றன. டி. ஜானின் ஒளிப்பதிவு எப்போதும் மழை பெய்யும் நிலத்தின் காட்சிகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. 1950 கால கட்டத்திய வடகேரளத்தின் பயன்படு பொருள்களைக் கவனத்துடன் கையாண்டிருக்கிறார் கலை இயக்குநர் கோகுல்தாஸ்.
25 ஆண்டுக் கால மூப்புடைய காதலைச் சொல்லும் விமல் காதலுக்கு வெளியே, கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவது, நக்சலைட்டுகள் உருவாவது, நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் குறைவது போன்ற சமூக மாற்றங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் இதைத் தொடக்ககாலச் சுதந்திர இந்தியாவில் நடந்த ஒரு கம்யூனிஸ்டுகாரனின் காதல் கதை என்றும்கூடச் சொல்லலாம்.
1982 ஜூலை 15-ல் இருவழிஞ்சிப்புழயில் நடந்த படகு விபத்து இறுதிக் காட்சியில் பத்திரிகைச் செய்தியாக வருகிறது. அன்றைக்கு வெறும் செய்தியாக இருந்த அந்தச் சம்பவத்துக்குக் கால் நூற்றாண்டுத் துயரத்தைச் சேர்த்திருக்கிறது இந்தப் படம்.

நன்றி-தஹிந்து

Wednesday, July 08, 2015

பாலக்காட்டு மாதவன் -திரை விமர்சனம்:

கதாநாயகனுடன் இணைந்து நகைச் சுவை; கதையுடன் ஒட்டாத டிராக் நகைச்சுவை என இரண்டில் எதைச் செய்தாலும் அதில் செய்தி சொல்ல விரும்புகிறவர் விவேக். இந்தப் படத்தில் தனக்குப் பொருந்தக்கூடிய நகைச்சுவை நாயகன் பாத்திரம் ஏற்றிருக்கிறார். தவிர தனது பாணியுடன் அம்மா பாசத்தையும் கலந்து கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
மனைவி சோனியா அகர்வாலுடன் ஒரே அலுவலகத்தில் வேலைசெய்யும் விவேக்குக்கு இரு பெண் குழந்தை கள். நடுத்தரக் குடும்பத்தின் தலை வனான அவருக்கு தன்னைவிட மனைவி அதிக சம்பளம் வாங்குவது குறித்து மன உளைச்சல். “உன்னைவிட அதிக மாக சம்பாதித்துக் காட்டுகிறேன் பார்” என்று வீர வசனம் பேசிவிட்டு வேலையை விடுகிறார்.
ஆனால் வேலை கிடைக்காமல் அல்லாடும் அவர், மாதா மாதம் கணிசமான தொகை கைக்குக் கிடைக்கிறது என்பதற்காக முதியோர் இல்லத்திலிருந்து 60 வயது பெண்மணியை (செம்மீன் ஷீலா) அம்மாவாகத் தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். விவேக்கின் பிள்ளைகள் புதிய பாட்டியுடன் பழக வீட்டில் பாசமழை பொழிகிறது. ஆனால் விவேக்கின் நிலை மோசமாகிறது.
தத்தெடுத்த அம்மாவுக்குச் செல வாகும் தொகை அவருக்கு வரும் மாத வருமானத்தை விட அதிகமாக எகிற, வலியப்போய் வலையில் சிக்கிவிட்ட தாக நினைக்கிறார் விவேக். தத்து அம்மாவுக்கு விடை கொடுத்து அனுப்ப முடிவுசெய்கிறார். அவரால் அது முடிந்ததா என்பதுதான் மீதிக் கதை.
விவேக் வீராவேசமாக வேலையை விட்ட பிறகு அமைச்சரின் நேரடி உதவியாளர், எம்.எல்.எம் வணிகம் என்று பணத்துக்காகப் பல வழிகளில் இறங்கிப் படாதபாடு படுகிறார். போலித் தொழிலதிபர் சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி கூட்டணியுடன் இணைந்து அடிக்கும் எம்.எல்.எம். வணிக லூட்டி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை ஒரு வழி பண்ணுவது, செல்முருகனுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு செய்யும் மெசேஜ் நகைச்சுவை என்று விவேக்கின் முத்திரை நகைச்சுவை தொடர்கிறது.
ஆனால் மெதுவாகப் பயணிக்கும் முதல் பாதி திரைக்கதையும், பல படங் களில் பார்த்துச் சலித்த பல நகைச் சுவைக் காட்சிகளையும் கருணையே இல்லாமல் களைந்திருக்க வேண்டும்.
கொஞ்சமும் சுவாரஸ்யமில்லாத பாடல்கள் படத்துக்கு உதவவில்லை. ஆனால் நகைச்சுவை உணர்வைப் பிரதிபலிக்கும் பின்னணி இசையைக் கொடுத்துத் தப்பித்துக்கொள்கிறார் காந்த் தேவா. தனது முத்திரையைத் தொலைத்து விடாத விவேக், நகைச் சுவையோடு தரமான குணச்சித்திரமாக வும் மாற முடியும் என்பதைப் படத்தின் இறுதியில் நிரூபிக்கிறார்.
சோனியா அகர்வால் பொறுப்புள்ள குடும்பத் தலைவி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக் கிறார். மூன்றாவது முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித் திருக்கும் ‘செம்மீன்’ ஷீலாவின் நடிப்பு படத்துக்கு பெரும் பலம். முதியோர் இல்லத்திலிருந்து விவேக் வீட்டுக்கு வந்த பிறகு கண்டிப்பான மாமியாராகவும் பாசமான பாட்டியாகவும் மாறி இவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் வண்ணம் இருக்கின்றன.
முதியோரை நடத்தும் விதம் பற்றி சமூகத்துக்குச் செய்தி சொல்ல வேண் டும் என்று முனைப்புள்ள ஒரு கதையை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் சந்திர மோகன்.
திரைக்கதையில் கோர்வை இல்லாமல் பல காட்சிகள் உதிரிகளாக உள்ளன. காட்சிகளில் சுவாரஸ் யம், திரைக்கதையின் கட்டமைப்பு, லாஜிக் முதலான அம்சங்களில் கவனம் செலுத்தியிருந்தால் ‘பாலக்காட்டு மாத வன்’ பார்வையாளர்களுக்கு இன்னமும் நெருக்கமாக இருந்திருப்பான்.


thanx - the hindu

Sunday, May 03, 2015

உத்தம வில்லனை கழுவி ஊற்றிய பத்திரிக்கை -கமல் ரசிகர்கள் அதிர்ச்சி

மரணத்தைக் கண்ணில் பார்த்துவிட்ட ஒரு நடிகன், சாகாவரம் பெற்ற கலைஞனாக நடிக்கிறான். இந்த முரண்பாட்டில் மையம் கொண்டிருக்கும் உத்தம வில்லன், மரணத்தை எதிர்நோக்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளைப் பற்றிப் பேசுகிறது.
தமிழ் சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டார் மனோரஞ்சன் (கமல்ஹாசன்). ஒரு டீன் ஏஜ் பையனின் தந்தையான மனோரஞ்சனுக்கு ரகசியக் காதலியும் உண்டு (ஆண்ட்ரியா). வாழ்க்கையின் உச்சகட்ட வெற்றியைச் சுவைத்துக்கொண் டிருக்கும் தருணத்தில் கொடிய நோய் தாக்க, செய்யத் தவறிய பரிகாரங்கள், கடமைகளை வேகமாக நிறைவேற்ற முடிவுசெய்கிறான். ஒரு கலைஞனாக மக்கள் மனதில் இறவா இடம் பிடிப்பதற்காகத் தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்குநர் மார்க்கதரிசியிடம் (கே. பாலசந்தர்) சென்று ஒரு சினிமா எடுக்கவும் வேண்டுகிறான்.
மனோரஞ்சனின் தனிப்பட்ட வாழ்க்கையும் மார்க்கதரிசியின் இயக்கத்தில் நடிக்கும் சினிமாக் கதையும் அடுத்தடுத்துச் சொல்லப்படுகின்றன. ஒரு நடிகனின் தனிப்பட்ட வாழ்க்கை, புகழும் செல்வமும் தரும் சங்கடங்கள், அவனுக்கு நேரும் பெண் உறவுகள், அதனால் எழும் சிக்கல்கள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள சம்பவங்களால் சித்தரிக்கப்படுகின்றன.
ஐம்பது வயதுக்கு மேல் ஆன பிறகும் டூயட் பாடி ஆடும் கிளீஷேவை நாயகனின் மகனே விமர்சிக்கும் காட்சியுடன் படம் தொடங்கினாலும் இந்தப் படமும் கிளீஷேக்களில் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிறது.
கதாநாயகனின் கடைசி ஆசையான, உத்தமன் என்ற சினிமாக் கதை நடக்கும் காலம் எட்டாம் நூற்றாண்டு. எல்லாருமே மேடை நாடகம் போலச் சுத்தத் தமிழில் கதைப்பது ஒரு கட்டத்தில் நெளிய வைக்கிறது. அரண்மனை, பழைய கட்டிடங்கள் அனைத்தும் கிராபிக்ஸாகக் கண் முன் இளிக் கின்றன. நாசர், ஞானசம்பந்தம், சண்முக ராஜா செய்யும் சேட்டைகளும் பரிதாபமானவை. தெய்யம் எனும் பாரம்பரியக் கலையையும் அந்தக் கால கட்டத்தையும் விரிவாகச் சொல்வதாக நினைத்துக் கொண்டு பொறுமையைச் சோதிக்கின்றன இந்தக் காட்சிகள்.
நடிப்புத் திறனுக்கு வாய்ப்புள்ள கதையை ஆண்ட்ரியா, கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், பூ பார்வதி அருமை யாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜெயராமை முழுமையாகப் பயன்படுத்தவில்லை.
சில தருணங்கள் அபாரமாக அமைந்துள்ளன. கமல் அருகில் உட்கார்ந்து பேசும்போது பார்வதியின் உடல் மொழி அவரை விஸ்வரூபமாகக் காட்டுகிறது. கடிதத்தைப் படிக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். அப்போது கமல் தன் முகத்தில் உள்ள ஒப்பனையைக் கலைக்கிறார். நடிகனின் ஒப்பனைக்குப் பின் உள்ள நிஜ முகம் வெளிப்படும் நேரத்தில் அவன் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதியும் வெளிப்படும் தருணம் அழகாக உள்ளது.
கமல் தன் மகனை ஆற்றுப்படுத்தும் காட்சி கலங்க வைக்கிறது. தன் மகனும் தன் முன்னாள் காதலியின் மகளும் சகோதர உணர்வைப் பரிமாறிக்கொள்ளும்போது அந்த இடத்தை விட்டு வெளியேறிக் கண்ணாடிச் சன்னலின் வழியாக அவர்களைப் பார்க்கும்போது கமல் எனும் படைப்பாளி நிமிர்ந்து நிற்கிறார். எம்.எஸ். பாஸ்கர் தன் துயரத்தை வெளிப்படுத்தும் இடமும் தன் தவறை ஒப்புக் கொண்டு குமுறும் இடமும் மனதைத் தொடுகின்றன.
கமல் என்னும் நடிகனைப் பற்றிப் புதிதாக என்ன சொல்ல? பெரும் துயரத்தைச் சுமந்த வாழ்வை அடங்கிய தொனியில் சித்தரிக்கிறார். தெய்யம் நடனத்தில் அவரது உழைப்பு பளிச்சிடுகிறது.
தன் காதலையும், துக்கத்தையும் கடைசிவரை வெளிப்படுத்த முடியாத கதாபாத்திரத்தில் நுட்பமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவும் கமலும் பகிர்ந்துகொள்ளும் காட்சிகளும் கமலுக்கும் அவரது நெருங்கியவர்களுக்கும் இடையே நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களும் படத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
பூஜா குமார் அழகாக இருக்கிறார். படத்துக்கு வசீகரம் கூட்டுகிறார். ஆனால் 8-ம் நூற்றாண்டு இளவரசி வேடத்தில் அவரது நடிப்பும் தோற்றமும் மிகவும் அன்னியமாக உள்ளன. கே. பாலசந்தரைப் பயன்படுத்தியிருக்கும் விதம் அந்தச் சாதனையாளருக்குப் பொருத்தமான காணிக்கை. ஜிப்ரானின் இசை நன்றாக அமைந்துள்ளது. குறிப்பாகப் பின்னணி இசை பல இடங்களில் உருக்குகிறது.
உத்தம வில்லன் கதையை அல்ல, கதைகளைச் சொல்கிறது. இறப்புக்கும், இருப்புக்கும் இடையேயான மோதலை சொல்ல எத்தனிக்கிறது. மனிதன் இறக்கலாம்; கலைஞன் இறக்க மாட்டான் என்பதுதான் கமல் சொல்லியிருக்கும் செய்தி. ஆனால் கதைக்குள் மற்றொரு கதையாக எடுக்கப்படும் படத்தின் தன்மையும் நீளமும் தான் உத்தம வில்லனுக்கு லேசான வில்லன். அதேசமயம், கிளைமாக்ஸில் பயன்படுத்தப் படும் காட்சி, இந்தப் படத்துடன் அழகாக இணைந்து கொள்கிறது.
கமல் என்னும் நடிகரைத் தாண்டி, கமல் என்னும் எழுத்தாளர் வலுவாக வெளிப்பட்டுள்ளார்.


 • கமல் கமால்...
  about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     
  • Whoever wrote this review has done a perfect job. Perfect than Kamal. Pearls in an ocean. Spread randomly. But most of it is just a காலபிழை
   about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • Good பிலிம்.. ஒன்லி for kamahaasan...
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Sridhar  
     "ஆனால் 8-ம் நூற்றாண்டு இளவரசி வேடத்தில் அவரது நடிப்பும் தோற்றமும் மிகவும் அன்னியமாக உள்ளன.'" விமர்சகரே, எட்டாம் நூற்றாண்டுப் பெண்ணை நேரில் பார்த்துவிட்டுப் பிறகு காலயந்திரம் வழியாக விரைந்து வந்து இதை எழுதினீரா! :)
     about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     • கமல் முகத்தை சற்று இறுக்கமாகவும் புன்னகையுடனும் வைத்து கொண்டால் நடிப்பு என்று நினைத்து கொண்டு இருக்கிறார், பிறகு பல்லை இடுக்கி கொண்டு பேசுதல் எல்லாம் நடிப்பாம். நானும் அவர் ரசிகன்தான் ஆனால் அவர் மோகன்லால் மம்முட்டி போல பரிணமிக்க தவறி விட்டார். எப்படி மோகன்லாலை தமிழில் சமயத்தில் நடிக்க வைத்து தரம் இறக்குவார்களோ அப்படியே கமல் தமிழிலேயே தரம் தாழ்ந்து போகிறார்.
      Points
      3075
      about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • சமல் சார் .ஆறுமை ..நல்லேருக்கு..
       about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       • Excellent.
        about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • பல காட்சிகளில் படம் மிகவும் செயற்கையாக உள்ளது. அதுவே படத்தில் பலவீனமும் கூட. ஒரு சில இடங்களைத்தவிர நகைச்சுவை மிகவும் வறட்சி. ஆங்காங்கே உள்ள சில குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே ரசிக்கவைக்கின்றது.
         Points
         810
         about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
         • கமல் படம் என்றாலே பெரிய ஏதிர்பார்ப்பு அதனால் தான் இப்படி தெரிகிறது.
          about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Viji  
           Really super movie kamal sir ungalukku edu enaiye ellai neengaldan nadeppukku aasan
           about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
           • Kani  
            very nice movie
            about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Simply superb....
             about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
             • Shankar  
              நல்ல சான்ஸ் .கமல் கோட்டை விட்டு விட்டார்.பிரமாதமாக அமைய வேண்டிய படம்.எங்கோ இடிக்கிறது.உயிர் இல்லை. நடிப்பில் ஒருச் சிலரை தவிர, யாரும் சோடை போகவில்லை.கமலை பற்றி சொல்ல வேண்டாம்.ஆனால் திருப்தி இல்லையே .........ஏன் ? கமலிடம் அதிகம் எதிர்பார்க்கிறோமோ? இதே ரஜினி படம் என்றால் ஒஹொஹ் என்று புகழுவோம்.கமலிடம் இன்னும், இன்னும் எதிர்பார்க்கிறோம்.
              Points
              17445
              about 4 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
              • நிறை குறைகளைத் தெளிவாய்ப் பட்டியலிட்டு நிதானமான தொனியில் பேசும் நியாயமான, நேர்த்தியான விமர்சனம்.
               about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
               • கமல் என்னும் கலைஜனுக்காக படம் பார்க்கலாம் .
                about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • உத்தம வில்லன் தமிழ் சினிமாவின் ஒரு தனி அடையாளம். The கிரேட் tribute to KB சார் Thank You கமல் சார்.
                 about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                 • Syed Ahamed add s h at murabustan 
                  கமல்ஹாசன் எனும் மாபெரும் கலைஜநை மதிக்க வேண்டும் .நல்லபடைபுக்கு மக்களால் மரியதை கிடைக்கும்.
                  about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • காலாத்தால் அழியாத கலைஞன் ஒருவன் உண்டு என்றால் அது கமல்ஹாசன் ஒருவர் மட்டும்தான். அவரைப்போல் அவர் மட்டும்தான்.
                   Points
                   4065
                   about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                   • சூப்பர் கமல் sir
                    about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • இன்று திரையரங்கு செல்கிறேன்; கலையை ரசிக்க!
                     about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                     • கமல் தி legend

                     நன்றி -த இந்து