Friday, August 31, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (31. 8..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.tamil.cinebuzzz.com/img_articles/323b.jpg 

1.முகமூடி - மிஷ்கினின் கே‌ரிய‌ரில் முகமூடி முக்கியமான படம். முதல் மெகா பட்ஜெட், முதல் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். கொஞ்சம் ஸ்லிப்பானால் சூப்பர் ஹீரோ சி‌ரிப்பு ஹீரோவாகவும் வாய்ப்புண்டு. முகமூடியின் இன்னொரு பெயர் ‌ரிஸ்க்.

ீவா சூப்பர் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் - சூப்பர் ஹீரோவுக்கான - காஸ்ட்யூம் மிக அருமை என்று படத்தை தயா‌ரிக்கும் யு டிவி-யின் நிர்வாகி தனஞ்செயன் கூறியிருக்கிறார். ஆள் பாதி ஆடை பாதி என்றால் சூப்பர் ஹீரோ விஷயத்தில் ஆள் கால், ஆடை முக்கால். 



அடுத்து சண்டைக் காட்சிகள். இங்கு மிஷ்கின் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார். அவ‌ரின் சூப்பர் ஹீரோ மசில் பவரைவிட மைண்ட் பவரை அதிகம் சார்ந்திருப்பவன். அதை வைத்தே அனைத்தையும் சாதிப்பதாக மிஷ்கின் கூறுகிறார். அதற்காக சண்டைக் காட்சிகள் இல்லாமலில்லை. அதுவும் தாரளமாகவே உள்ளது.


முகமூடிக்கு கே இசையமைக்கிறார்.


சென்டிமெண்ட் சிக்கலில் தமிழ் சினிமா சிக்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண சிக்கல் இல்லை இடியாப்ப சிக்கல்.


முகமூடி 31 ஆம் தேதி வெளியாகிறது. ‌‌‌ீவாவால் தாங்க முடியாத பட்ஜெட். விளம்பரத்தை முடிந்த மட்டும் முடிக்கிவிட்டு முதல் வாரத்தில் கலெக் ஷன் பார்த்தால் தப்பிக்கலாம். இந்த நிலையில் யுடிவி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தனஞ்செயன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதாவது முகமூடி நூறாவது படமாம். 




இந்த வருடத்தில் 99 படங்கள் வெளியாகியிருக்கின்றனவாம். நூறாவதாக வெளியாகப் போவது முகமூடியாம். இது எதேச்சையாக நடந்தது. இதை ஒரு அதிர்ஷ்மாக நினைக்கிறோ‌ம் என்றெல்லாம் புல்ல‌ரித்திருக்கிறார்.ஈரோடு அபிராமி, சண்டிகாவில் ,அன்னபூரணியில் ரிலீஸ் 

முகமூடி -சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_3296.html

 
 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ec/New_Joker_movie_poster.jpg/220px-New_Joker_movie_poster.jpg

2. JOKER - (HINDI) ரவுடி ரத்தோர் படத்துக்கு பின், அக்ஷய் குமார்-சோனாக்ஷி சின்கா, மீண்டும் ஜோடி சேரும் படம், ஜோக்கர். இது, அக்ஷய் குமாரின் 100வது படமும் கூட. 40 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுரவ் டகோன்கர், இசை அமைக்கின்றனர். அக்ஷய் குமாரின் அதிரடியான சண்டை காட்சிகளும், கிளு கிளுப்பான காதல் காட்சிகளும் நிறைந்திருப்பதாக கூறப்படுவதால், இந்த படம், பாலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்.

 


3.LAWLess - காட்ஃபாதர், நாயகன், பில்லா  டைப் கேங்க்ஸ்டர் படம் தான். அண்ணன், தம்பிங்க 3 பேர் சாராயம் பல்க் பிஸ்னெஸ் பண்றாங்க.டாக்டர் ராம்தாஸ் மாதிரி மது எதிர்பாளர்களால், மது விலக்கு அமுலில் இருப்பதால் சட்ட அதிகாரிகளால் வரும் பிரச்சனைகள் தான் கதை.. வேறு சிலர் இதே கேவலமான தொழிலை செய்வதால் குரூப் ஸ்டடி மாதிரி க்ரூம் மோதல்,. அடிதடி, வெட்டு , கொலை நடக்குது.. கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்.   நினைவு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.. பயங்கர வன் முறைக்காட்சிகள் கொண்ட படம், பெண்கள் தவிர்க்க வேண்டிய படம் . ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 



4.  வாலிபன் சுற்றும் உலகம் -எம்.ஜி.ஆர் பெயரை கெடுக்கும் போலி எம்.ஜி.ஆர் படம்

A new movie discouraging MGRs filmதமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர்தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர்தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமாக இருப்பவர்.



அவரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிகர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத்தோடு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்து விட்டதைகூட நம்பாத முதியவர்கள் இப்போதும் உண்டு.


 அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரும், அவரது வாழ்க்கை ஸ்டைலும் இன்றைக்கு பலபேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் புகழ்பாடுவதாக நினைத்துக் கொண்டு அவரையே கேலிக்கூத்தாக்குகிற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் தயாராகி உள்ள படம்.


 சினிமாவில் அதிக தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.  இன்றைக்கு வெளிவரும் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்களுக்கு அதுதான் பிள்ளையார் சுழி போட்ட படம். இப்போதும் தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் போட்டாலும் ஒருவாரம் கலெக்ஷனை அள்ளிக் கொடுக்கிற படம்.


 அந்தப் படம் எத்தனை இடையூறுகளை சந்தித்து வெளிவந்தது.  அது எத்தனை பெரிய வெற்றி பெற்றது என்பது அந்தக் காலத்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ஜனரஞ்சக சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதனை பாடமாகவே வைக்கலாம். அப்படிப்பட்ட அற்புதமான படத்தை உல்டா செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.  எம்.ஜி.ஆர் சிவா என்பவர் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கிறார். தாடி வைத்தவன் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? மொட்டை அடித்து கண்ணாடி போட்டவன் எல்லாம் காந்தி ஆகிவிட முடியுமா?



தொப்பி வைத்து கூலிங் கிளாஸ் போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. அப்படித்தான் முயற்சித்திருக்கிறார் சிவா.  எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடையில் ஆடட்டும் பாடட்டும், அதனால் சிறு வருமானம் கிடைத்து பிழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவரையே கேலிப்பொருளாக்கி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதை எப்படி சகித்துக் கொள்வான் எம்.ஜி.ஆர் ரசிகன். வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் சிவா எம்.ஜி.ஆர் போலவே நடக்கிறர்.


 அவர் பல படங்களில் செய்த ஸ்டைலை இவர் ஒரே படத்தில் செய்கிறார். டூயட்டில் எம்.ஜி.ஆர் போலவே ஆடுகிறார். எம்.ஜி-.ஆரின் ஒவ்வொரு அசைவும் ஒரு ஸ்டைல் அதைப் பார்த்து பார்த்து ரசித்து வாழ்ந்தவன் அவரது ரசிகன். ஆனால் இந்தப் படத்தில் அதையே ஒரு வரைமுறையின்றி செய்து எம்.ஜி.ஆரின் ஸ்டைல், மேனரிசங்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். கதையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் உல்டாதான்.



 தொற்று நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார் ஒருவர். வில்லன் கூட்டம் அந்த மருந்தின் ரகசியத்தை அழிக்க நினைக்கிறது. இதனால் வில்லன்கள் நடத்தும் தாக்குதலில் குடும்பம் பிரிகிறது. ஒரு மகன் தாயுடனும், இன்னொரு மகன் வேலைக்காரனுடனும், மகள் தந்தையுடனும் செல்கிறார்கள். பிற்காலத்தில் மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை. ஈரோடு ஆனூரில் ரிலீஸ்


http://www.allbestwallpapers.com/wallpaper/movie/image/king_kong,_2005,_naomi_watts,_jack_black,_adrien_brody.jpg

 5. KING KONG - ஒரு கொரில்லாவுக்கும், ஒரு ஃபிகருக்கும் ஏற்படும் அன்பு தான் கதை. 1933ல தான் முதல் கிங்க் காங்க் ரிலீஸ் ஆச்சு.. செம ஹிட்,அப்புறம் 1976, 2005, 2011 என போட்டு துவைச்சு எடுத்டுட்டாங்க, ரீமேக் வரிசையில் இது சாதனை.. இப்போ வந்திருக்கும் தமிழ் வெர்ஷன் அநேகமா 2005ல் வந்த படம்னு நினைக்கறேன்.  ஈரோட்டில் ஸ்டாரில் ரிலீஸ்.

3 comments:

Unknown said...

முகமூடி இவ்வளவு மொக்கையாக இருக்குமென்று நான் நினைக்கவேயில்ல. முதல் பாதியாவது பரவாயில்லை ரெண்டாவது பாதி செம மொக்கை. படம் கொஞ்சம் கூட மனசுல ஒட்டவேயில்லை.

Yoga.S. said...

செங்கோவி 'முகமூடி' படம் பாத்து விமர்சனமும் போட்டாச்சு!உங்க எதிர் பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்!

Jesse said...

webulagam la pottu irundha mugamoodi mattera appadiyey inga copy panniteengaley...