Thursday, August 11, 2011

வெளியான ரகசிய ஆடியோ டேப் , காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் நடுக்கம் , மடம் கப் சிப்

ஆடியோ சர்ச்சையில் ஜெயேந்திரர்?

அது யார் குரல்?

ங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சர்ச்சைக்குள்ளான  காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மீது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது.  ஜெயேந்திரர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கைக்கு முதலில் இந்த ஆடியோ கிடைத்துள்ளது. அவர் இதை  முதல்வரின் தனிப் பிரிவு, டி.ஜி.பி., உயர் நீதிமன்றக் கண்காணிப்புப் பிரிவு பதிவாளர், விழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். இது தொடர்பாக ஒரு புகாரையும் துரைசாமி அத்து டன் அளித்துள்ளார். அந்த ஆடியோ, நமக்கும் கிடைத்தது.

இரண்டு பாகங்களாக இருக்கும் அந்தப் பதிவில் ஒரு முதியவர், நடுத்தர வயதுக்காரர் மற்றும் ஒரு பெண் மூவரும் கான்ஃபெரன்ஸ் வசதியில் உரையாடுகிறார்கள்.

முதியவர்: ''சௌக்கியமா இருக்கீங்களா..?''

நடுத்தர வயதுக்காரர்: ''ம்...  நல்லா இருக்கேன். நமஸ் காரம்...''

முதியவர்: ''ஒரு வாரத்தில், பாக்கி எல்லாத்தையும் முடிச்சிடுறேன். மொத்தமா முடிச்சிடலாம்... அக்கவுன்ட்ல கொடுக்க முடியலை. பணத்தை எடுத்து மாத்தி, ஒரு வாரம், பத்து நாளில் அனுப்பிடுறேன். கடன் எடுத்துத்தான் கொடுத்திருக்கோம். மொத்தத்தையும் நானே கொடுத்து அனுப்பிடுறேன். அதுவரைக்கும் சிரமம் பாக்காதீங்க. கவலைப்படாதீங்க... ஃபுல்லா வந்துரும். கொஞ்சம் பொறுமையா இருங்க...''

நடுத்தர வயதுக்காரர்: ''அதான் எனக்கும் ஈஸியா இருக்கும்...''

முதியவர் பேச முயல, குறுக்கிட்ட பெண்: ''சார், பெரியவா சொல்லிட்டா. இப்ப இவர் உங்ககிட்ட சொல்றார். இப்பத்தான் என்கிட்ட பேசினார். 'வேர்டு ஹானர்’ (உறுதிமொழி) பண்ணுங்க. பணம் கொடுக்கிறேனு சொல்லுங்க, இல்லே... இல்லைனு சொல்லுங்க...’ன்னார் பெரியவா. இதை கீப்அப் பண்ணிக்குவோம் சார்.''

(இதன் பிறகு, முதியவரும் பெண்ணும் தனியாக...)

முதியவர்: ''அவர்கிட்ட சொல்லிட்டேன்... அக்க வுன்ட்ல பணம் இருக்கு. மாத்தி ஒரு வாரம், பத்து நாளில் கொடுத்துடறேன்னு சொல்லிட்டேன்.''

குறுக்கிட்ட பெண்: ''இல்லை... பெரியவா என்னைத்தான் கேட்டுண்டு இருக்கா... அதான்...''

முதியவர்: ''நீ சொல்லிடு... பெரியவா சொல்லிட்டாங்க. ஒரு வாரத்தில் வந்துடும்னு...''

பெண்: ''ஓகே பெரியவா... வெச்சிடட்டா பெரி யவா..?'' - இப்படியாகப் போய் கட் ஆகிறது அந்த உரையாடல்.

பரபரப்பைக் கிளப்பிய இந்த விவகாரம் தொடர்பாக, தகவல் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டுள்ள வழக் கறிஞர் துரைசாமியிடம் பேசினோம்.

''மூன்று பேர் பேசும் உரையாடலை, யாரோ ஒருவர் என்னுடைய செல்போனுக்கு அனுப்பி இருக்கிறார். அந்த மூன்று குரல்களைக்கொண்டவர்கள் யார் என்று நான் விசாரித்தேன். காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், அவருக்கு அறிமுகமான கௌரி என்ற பெண் ஆகியோரின் குரல்கள் என்று கூறப்படுகிறது.

இன்னொரு குரல் யாருடையது என்பதை போலீஸாருக்கு கொடுத்த மனுவில் தெளிவுபடுத்தி உள்ளேன். ஏதோ பணம் கொடுக்கல் வாங்கல் பற்றியதாக அது இருக்கிறது. இதுபற்றிய உண்மைகளை விசாரித்துத் தரவேண்டும் என்றுதான் நான் கேட்டி ருக்கிறேன்.

என்னுடைய கேள்விகள் இதுதான்.

1. அந்தக் குரல்கள், குறிப்பிட்ட அந்த மூவருடையதுதானா?

2. பணம் கொடுப்பதாகப் பேசுவது எந்த விஷயத்துக்காக?

3. இந்த உரையாடலை நிகழ்த்தியது அந்த மூவர்தான் என்றால், பணப் பரிமாற்றம் தொடர்பாக என்ன விதமான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது?

4. அந்த உரையாடலின்படி இதுவரை பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதா?

5. அந்த உரையாடலில் மறைந்திருக்கும் உண்மை களை ஊருக்குச் சொல்ல வேண்டும்... என வரிசை யாகக் கேட்டு இருக்கிறேன். அரசு மற்றும் நீதித் துறையின் பதில்களுக்காகக் காத்திருக்கிறேன்...''

என்றார் துரைசாமி.
ஜெயேந்திரரின் கருத்தை அறிய காஞ்சிபுரம் மடத்தில் ஆஜரானோம். மடத்தின் அலுவலர்களின் அனுமதியுடன், தியான மண்டபத்துக்கு அருகில் தனி அறையில் பக்தர்களுக்கு ஆசி தந்துகொண்டு இருந்த ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்து நம் விசிட்டிங் கார்டைக் கொடுத்தோம். சட்டென முகம் சிவந்து நம்மை வெளியே போகுமாறு  சைகையால் சொன்னார்.

உடனே, அவரின் உதவியாளரிடம் விஷயத்தைக் கூற... மடத்தின் நிர்வாகி ஸ்ரீராமசர்மாவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அவரைச் சந்தித்தோம்.  
''ஏதோ புதுக் கதை மாதிரி சொல்றீங்க. இது பழைய கதை. ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கே. மடத்தின் கருத்தை நீங்க கேட்க வேண்டாம். சட்டமும் நீதிமன்றமும் அதைப் பார்த்துக்கும். நீங்க உங்க வேலையைப் பார்த்தா போதும். மடத்தைப் பத்தியும் பெரியவாளைப்பத்தியும் பக்தர்களுக்குத் தெரியும்.

இப்போதான், மடம் பழைய நிலைக்குத் திரும்பி சந்தோஷமா இருக்கோம். அது பொறுக்காமக் கிளம்பி வந்துட்டீங்களா? தயவுசெஞ்சு, வெளியே போங்க'' என்ற ஸ்ரீராமசர்மா, என்ன நினைத்தாரோ...  மறுபடியும் நம்மை அழைத்து,
''பெரியவா... அதுபோல யாரிடமும் எந்தக் காலத் திலும் பேசியது இல்லைனு வேணும்னா மடத்தோட கருத்தாப் போட்டுக்குங்க!'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

 நன்றி - விகடன்

16 comments:

Mathuran said...

என்னென்னமோ நடக்குது

இராஜராஜேஸ்வரி said...

ஏதோ புரியாத பகிர்வு.

உலக சினிமா ரசிகன் said...

ஆஹா...அம்மா மடத்துக்கும் ஆப்பு வைக்க கிளம்பிட்டாங்களா!

Unknown said...

அவர் எந்த சந்தோசத்தை சொன்னாரு தெரியலியே!

MANO நாஞ்சில் மனோ said...

மறுபடியும் முதல்லே இருந்தா.....???

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அம்மா விட்டாலும் நீ விடமாட்டியோ...??

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சி மைனஸ் ஓட்டு போட்டுருக்கானுகடா ஹி ஹி....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னவாகும் பொருத்திருந்து பார்ப்போம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆஹா.. மைனஸ் ஓட்டு ஆரம்பிச்சு்ட்டதா...

Unknown said...

ஈத்த களிமண்ணு வேகாது
இந்த மாதிரி ஆளுகளும் மாற மட்டங்க போல

சசிகுமார் said...

அப்ப ஐயாவுக்கு ஆப்பு ரெடியாகிடுச்சா

'பரிவை' சே.குமார் said...

அட... என்ன ஆகப்போகுது... எப்பவும் போலதான்...
வீடியோவுல வந்துட்டே குண்டலினி நடத்துறான்... நாம அவனுக்கு முன்னால போயி ஆடிக்கிட்டு இருக்கோம்... இதெல்லாம் ஷூசூபி....

T.V.ராதாகிருஷ்ணன் said...

அட்ரா சக்க :))

ராஜ நடராஜன் said...

தேறாத கேஸ் என்றே எனக்குப் படுகிறது.இதில் ஜெயேந்திரர் குரலாகவே இருந்தாலும் திசை திருப்ப ஆயிரம் காரணங்களும்,வழிகளும் இருக்கின்றன.ஜெ ஆட்சியில் மீண்டும் பழைய பைல்களை தூசு தட்டுவதே நல்லது.

Anonymous said...

மீண்டும் ஆரம்பம் போல

காட்டான் said...

மாப்பிள வீடியோ வந்த சாமிக்கே ஒன்ணுமாகல ஆடியோவ வைச்சு என்னையா செய்வாங்க... மெரினா பீச்சில தூக்கி போட்டுட்டு வேலைய பாருங்கையா...

காட்டான் குழ போட்டான்...