Showing posts with label BLOGGER MEETING. Show all posts
Showing posts with label BLOGGER MEETING. Show all posts

Monday, December 24, 2012

திருப்பூர் பதிவர், ட்விட்டர்,ஃபேஸ்புக் சந்திப்பு - 30.12.2012

பதிவர் சந்திப்பு இதுவரை நடந்தவற்றில் பிரமாண்டமான வெற்றி பெற்றவை 


1. நம்ம உணவு உலகம் ஆஃபீசர் நடத்திய நெல்லை சந்திப்பு , அனைவரையும் அழைத்து பிரமாதபப்டுத்தினார் , 


2. அடுத்து மதுமதி யின் சென்னை பதிவர் சந்திப்பு . கலக்கு கலக்குன்னு கலக்கிட்டார் ,


 3. 3 வதா  கோவைல  சின்ன வீடு சுரேஷ் , சித்தார் சங்கவி ( அந்த தொட்டபெட்டா முட்டை புரோட்டா சங்கவி அல்ல)  ரக்சியமா நடத்தினது. அது எந்த அள்வு ஹிட் ஆச்சுன்னு சரியா தெரியல .( அதை ஏன் ரகசியமா நடத்தினாங்கன்னு ஒரு பதிவு போடலாம்னா 2 பேரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு “ விடுய்யா விடுய்யா நமக்குள்ளே என்ன?  அப்டினு பூசி மெழுகிட்டாங்க ;-)


4.  நாலாவதா  இப்போ நடக்கப்போகும் திருப்பூர் பதிவர் சந்திப்பு


வழக்கம் போல் அவங்க போட்ட பதிவோட காபி பேஸ்ட் பதிவு . நாம டைப் பண்ணி போடும் பதிவு காதலித்து கைப்பிடிக்கும் பெண் போல , ரொம்ப உழைக்கனும், காபி பேஸ்ட்  பதிவு மாமா பொண்ணு , அத்தை பொண்ணு மாதிரி, நமக்கு சொந்தமில்லை , ஆனாலும் ஜாலி ஹி ஹி

வாருங்கள் இணையத்தால் இணைவோம்

இதுவரை இணையம் மூலம் மட்டுமே பழகிய சொந்தங்கள் நேரில் காண ஒரு வாய்ப்பு .

 நாமும் வளர்ந்து நம்முடன் சமுதாயத்தையும் வளர்க்க ஒரு வாய்ப்பு.

தாய்  தமிழ் பள்ளி மாணவர்களின் அருமையான கலை நிகழ்ச்சிகள் காண ஒரு வாய்ப்பு ..

அந்த மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ ஒரு வாய்ப்பு .

தமிழ்நாட்டை கலக்கிய ஒரு அருமையான ஆட்சிபணி அதிகாரியை சந்திக்க நல்ல வாய்ப்பு


வலைதளங்கள் இனி என்ன செய்ய வேண்டும் , வருங்காலம் எப்படி இருக்கும் என மற்றவர்களுடன் விவாதிக்க ஒரு வாய்ப்பு .

நமது தளம் மேலும் வளர , நாமும் பல புது விஷயங்கள் கற்று கொள்ள ஒரு வாய்ப்பு ..

இந்த அனைத்து வாய்ப்புகளும் வேண்டுமா ????

இங்கே  வாருங்கள் :

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 

நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 

இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஸ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
                 திருப்பூர்.
 
 
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
  நம்மில் ஒன்றுமை நீங்கில்
  அனைவருக்கும் தாழ்வு " 

          இன்று நாம் காணப்போகும் இவ்விழாவானது  "தமிழ் உறவோடு உறவாடுவோம்"    என்னும்  புது சிந்தனையின் அறிமுகத்திற்கான துவக்க விழா ஆகும்.
மக்கள் சந்தை.காம் இணையத்தின் தொழிற்களம் மின் இதழ்  மற்றும் தமிழ் மீட்சி இயக்கம் இணைந்து திருப்பூர் மாநகரில் " உறவோடு உறவாடுவோம் " என்ற தலைப்பில் தமிழ் உறவுகளை ஒரு களத்தில் குவிக்க இவ்விழாவை எதிர்கொள்கின்றது.
நோக்கம் ஒன்றாகியதால் இவ்விழாவை ஒரு நல்ல கருத்தரங்க மேடையாக உருவாக்கி வருகின்றோம். 
பல அமைப்புகளை சார்ந்த நண்பர்களும் இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்து, தங்கள் ஆற்றல்களையும் உடன் அளித்து வருகின்றனர்.
இவ்விழாவின் முக்கிய நோக்கம் : 

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."

       இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.நிகழ்ச்சி நிரல் : 

சரியாக மதியம் 2.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது

2.30  -   :   தமிழ்த்தாய் வாழ்த்து
            :  வரவேற்புரை
2.45  -   :   துவக்கவுரை ( விழாவின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து)

3.00  -   : கருத்தரங்கம் 
         
தலைப்புகள் :

குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பார்வைகள்:

1. தனி மனித ஒழுக்கம்,
2. இலஞ்சம், ஊழல், சாதி, மத வேறுபாடுகளைக் களையெடுத்தல்
3. தமிழன் என்ற அடையாளத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்
4. சிறந்த தொழில்முனைவோனாக உருவாக தகுதிகளை வளர்க்கும் விதம்
5. தொழில்நுட்பத்தின் உதவியை சரியாக பயன்படுத்துதல் உடன் இயற்கையை நேசித்தல்


என்ற தலைப்புகளின் கீழ் விபரங்களை தொகுத்து ஒரு சுவையான கருத்தரங்கம் உங்களுடனும், உடன் "தாய் தமிழ் பள்ளியை" சேர்ந்த மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சியையும் அரங்கேற்ற உள்ளோம்.

அதைத்தொடர்ந்து இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்
திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் 
மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியாளர்

தன் கரங்களால் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவ செல்வங்களை பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.
 தொழிற்களம் டிசம்பர் விழா அழைப்பிதழ்

பதிவுலகை சார்ந்த நண்பர்களுக்கென்றே இந்த அழைப்பிதழ் பதியப்பட்டுள்ளது.  


அனைத்து பதிவர்களையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்.
தொழிற்களம் விழாவில், நிறைவின் சிறப்பு பகுதியாக பதிவர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...!!


தலைப்பு :


நாளைய வலையுலகம்..?

நன்றி - தொழிற்களம் 
Thursday, August 30, 2012

சென்னை பதிவர் சந்திப்பு கொண்டாட்டம் பாகம் 2

சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பலரும் பல பதிவுகள் போட்டுட்டு வர்றாங்க. நான் படிச்ச 16 பதிவுகள்ல  4 பேர் மட்டும் விழாவில் பதிவர்கள் அறிமுகம் பகுதில நானும் , கேபிள் சங்கரும்  மற்றவர்களை ஓவராய் கலாய்த்ததாகவும், அது பெண்களுக்கு பிடிக்காது எனவும், தனிப்பட்ட முறையில் பதிவர்களை கலாய்ப்பது  தவறு எனவும் சொல்லி இருக்காங்க..  அவங்களை நினைச்சு சிரிப்புதான் வருது,. நரசிம்ம ராவ் மாதிரியோ, மண் மோகன் மாதிரியோ அறிக்கையை பார்த்து படிச்சா தூக்கம் வந்துடும். இதெல்லாம் ஜாலிக்கு.  தருமன் கண்ணுக்கு எல்லாமே நல்லதா தெரியும்.. துரியோதணன் கண்ணுக்கு எல்லாமே கெட்டதா தெரியும். அதுக்கு மனசை பக்குவப்படுத்திக்கனும்.. 

  மேடையில் இருந்தவாறே நாங்க 2 பேரும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை கவனிச்சுட்டுதான் இருந்தோம்.. அப்படி யாரும் ரசிக்காம இருந்த மாதிரி தெரியல.. பெண்கள் அதை ரசிச்சிருக்க மாட்டாங்க என்பதும் கற்பனையே? ஏன்னா  4 பதிவர்களிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்ட போது அப்படி எல்லாம் ஏதும் இல்லை என்றே சொன்னார்கள். மேடையில் அமர்ந்த படி எஸ் எம் எஸ் மூலம் அவ்வப்போது நான் கருத்து கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.. அவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஃபாலோ பண்ணிட்டுதான் இருந்தேன்..


 இதுல இன்னொரு விஷயமும் சொல்லிக்கறேன். 150 பதிவர்கள் தங்களை அறிமுகம் பண்ணிக்கிட்டாங்க.. அதுல நான் கலாட்டா செஞ்சது மொத்தம் 16 பேரை மட்டுமே. தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்கள் பழக்கம்.. அதே போல் அப்படி கிண்டல் அடிக்க எனக்கு உரிமை உள்ளது. அதே போல் கேபிள் சங்கர் கலாட்டா செய்தது மொத்தம் 7 பேரை மட்டுமே.டி வி சீரியல்கள் பார்த்து பார்த்து தமிழர்கள் பலர் உம்மணாம்மூஞ்சிகளாக மாறி வருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கு.. அவர்கள் மன நலம் அடைந்து சிரிச்ச முகமாக மாற இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.குறை சொல்லி எழுதிய மற்ற பதிவர்கள் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை.. ஆனா ஜாலி டைப்பான பலா பட்டறை சங்கர் கூட  அது போல் ஒரு கருத்தை சொன்னது ஆச்சரியமா இருக்கு


இதை விட காமெடி இன்னொரு அதி புத்திசாலி பதிவர்  12 பக்கம் ஏ 4 ல வர்ற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கார்.. அதனோட சாராம்சம் பதிவர் அறிமுக நிகழ்ச்சி தேவை அற்றது . 2 மணி நேரம் வீண் என்றார். பதிவரை பற்றித்தான் நமக்கே தெரியுமே? டெயிலி பதிவு வாசிக்கிறோமே என்றார்.


அவருக்கு என் பதில் இணைய  தளங்கள் 1000க்கும்  மேல் இருக்கு. அதில் நாம் ரெகுலரா பார்ப்பது ஒவ்வொருவரும் குறிப்பிட்ட 20 பதிவுகள் தான். எத்தனையோ பதிவுகள் விடுபட்டிருக்கும். தெரியாமல் இருக்கும். 2 வருடங்கள் வலை உலகில் இருக்கும் எனக்கே இதுவரை சென்னை பதிவர் சந்திப்பில் வந்த பதிவர்கள் பாதிப்பேர் தெரியாது. ( இந்த லைனில் எனக்கே என்ற வார்த்தையில் தலைக்கனம் இல்லை ) அப்படி இருக்க புது ஆட்களுக்கு யாரை தெரியும்.. இந்த சந்திப்பின் மூலம் பலரும் பலரை அறிய வாய்ப்பு.. அவ்ளவ் தான்.


புதிய தலைமுறை வார இதழில் இருந்து  ஒரு மேடம் வந்திருந்தாங்க. அவங்க சொன்ன அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதா இருந்தது. அதாவது ஆனந்த விகடன் இதழ்ல என் விகடன் புக்ல வாரா வாரம் வலை ஓசை பகுதியில் ஒரு பதிவரை அறிமுகம் செய்வது போல் புதிய தலைமுறை வார இதழில் அனைத்து பதிவர்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார்கள்.

அதற்காக துறை வாரியாக அதாவது இலக்கியம், சமையல்
, சமூகம், கவிதை, சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனம் இப்படி இயங்குபவர்கள்  அந்தந்த பிரிவை குறிப்பிட்டு மெயில் ஐ டி வலைத்தள முகவரியை ஒருங்கிணைத்து தரச்சொன்னார்கள்

இது நல்ல வாய்ப்பு, அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்
 1.30 மணிக்கு லஞ்ச்..  அறிவிச்ச பின்னும் பாதிப்பேர் சாப்பிடப்போகாம வந்த பதிவர்களுடன் அளவளாவிப்பேசிக்கொண்டிருந்தது அவங்க ஆர்வத்தை காட்டுச்சு.


 சைவ விருந்து , வெஜிடபிள் சூப், மைசூர் பாக், கோக், இட்லி, தோசை ,பூரி . இதுதான் மெனு. எல்லாரும் ஒரு வெட்டு வெட்டிட்டு மீண்டும் மேடைக்கு வந்தோம்.. ஷாக் சர்ப்பரைஸ் என்னன்னா பி கே பி சத்தமே இல்லாம மேடைல அமர்ந்திருந்தார்.. வழக்கமா வி ஐ பி ங்க வந்தா உடனே மேடைல உக்கார வைக்க மாட்டாங்க.. மைக்ல பில்டப் கொடுத்து அப்புறமா தான் உக்கார வைப்பாங்க.. ஆனா இவர் சோ சிம்ப்பிள்.. மேன்.. கவியரங்கம் நடந்தது.. இதுல பிரபல ட்விட்டரும், பாடல் ஆசிரியருமான சுரேகாவின்  ஆளுமை வெளிப்பட்டது.. அருமையான பேச்சு. அழகான மொழி நடை.. அங்கதம் என மேடையில் கலக்கினார்.. அவரது பேச்சும், அறிமுகமும், கவிஞர்கள் கவிதையும்  டைப் பண்ண 3 மணி நேரம் ஆகும் என்பதால் அது அடுத்த பாகத்தில். 


 அடுத்து பி கே பி பேச வந்தார்


அவர் நல்ல மேக்கப்பில் இருந்தார்.. மிக இயல்பாக பேசினார்..

வலைப்பதிவர்களின் விழா சென்னையில் இவ்வளவு பெரிய முறையில் நடப்பது இதுவே முதல் முறை. பெண்கள் இவ்வளவு பெரிய அளவில் கலந்து கொண்டதும் அதுவும் நாள் முழுதும் அமர்ந்து கேட்டதும் விழாவின் வெற்றி என  நினைக்கிறேன்

Photo


விழாவுக்கு என்னை அழைத்த போது மின்னல் வரிகள் கணேஷ், “  நீங்கள் பேசும் நேரம் இருந்தால் போதும், பிறகு  நீங்கள் கிளம்பிக்கலாம்என்று தான் சொன்னார். ஆனால் அது சபை நாகரிகம் அல்ல; அந்த பகுதி முழுமைக்கும் நான் இருப்பதே நல்லது; நானும் ஒரு வலைப்பதிவர் தான். அதனால் முழுதும் இருக்க விரும்பினேன். அனைத்தையும் சந்தோஷமாக நீங்கள் பேசுவதை ரிசீவ் செய்து கொண்டிருந்தேன்.
தென்றல் சசிகலாவின் கவிதை புத்தகத்தை நான் வெளியிட்டேன். அது பற்றி சிறிதேனும் பேசுவது தான் முறை என சில நல்ல கவிதைகளை குறிப்பிட்டு இப்பகுதியில் பேசினார்

லஞ்சம் பலூன் விற்பவன்
பிறக்கப் போகும் தன் குழந்தைக்கு ..
வாங்கிய சட்டையின் விலை இருபது
பிறந்த குழந்தை
ஆணா பெண்ணா என
தெரிந்து கொள்ள கொடுத்த விலை ஐநூறு .


கோபம் வரத்தான் செய்கிறது

குடுமி பிடித்து
மண்ணில் உருண்டு புரண்டு
சண்டையிடும்
மழலைகளை காணும் போதெல்லாம்
கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது .
என்னோடு சண்டையே ..
போட்டிராத அக்காவின் மேல் .


என் அன்பைப்போல !

எவர் தடுப்பினும்
நடுவழியிலேயே
நின்றுவிடப்போவதில்லை மழை
உன் மீதான என் அன்பைப்போல !தென்றல் கவிதை புத்தகம் வெளீயிடுபவர்  பி கே பி , பெறுபவர் சேட்டைக்காரன் அண்ணன், அருகில் கவிதாயினி சசிகலாமுதலில் கையெழுத்து பத்திரிக்கை என்ற ஒன்று இருந்தது. அதன் நீட்சியாக தான் இன்றைய வலைப்பூவை பார்க்கிறேன்

நாங்கள் எழுதிய போது பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு எப்போது பிரசுரம் ஆகும் என காத்திருக்க வேண்டும். ஆறு மாதம் கழித்து " உங்கள் படைப்பை பிரசுரம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம் " என கடிதம் வரும். ஆனால் நீங்கள் காத்திருக்க தேவையின்றி உங்கள் படைப்புகளை வெளியிடுகிறீர்கள். ஆயிரக்கணக்கானோர் உடன் வாசித்து கருத்துக்கள் சொல்கிறார்கள்

விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்துள்ளது ! எலக்ரானிக் யுகத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் ! அந்த காலத்தில் போன் பேசவே டிரன்க் கால் புக் செய்து பேசணும் ! அதுக்கு எட்டு பேர் காத்திருப்பாங்க. இப்போ எந்த அளவு வளர்ந்துட்டோம் !வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !
\
கேபிள்சங்கர், வீடு திரும்பல் மோகன், சி பி


இப்போ வலைப்பூ என்பது தவிர்க்க முடியாத சக்தி ஆகிடுச்சு. இப்போ புதுசா ஒரு பத்திரிக்கை தொடங்குனா  அதுல கண்டிப்பா வலைப்பூ  பக்கங்கள்னு ஒதுக்கியே ஆக வேண்டிய கட்டாய சூழல் இருப்பதை நான் பார்க்கிறேன்.. உல்லாச ஊஞ்சலில் கூட கேபிள் சங்கரை எழுத வைத்தேன்.. அவரும் 17 வலைப்பூக்கள் பற்றி அறிமுகம் செய்தார்.. 


அட்ராசக்க நீண்ட நாள் வாசகரும்,ஆத்ம நண்பரும் ஆன கும்பகோணம் பேராசிரியர் உடன் ஒரு அழகிய சந்திப்பு


உங்கள் சினிமா விமர்சனங்கள் திரை உலகினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. பத்திரிக்கையில் விமர்சனம் வர தாமதம் ஆகும். உங்கள் விமர்சனம் தான் முதலில் வாசிக்கிறார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்றோரின் விமர்சனம் அனைத்து இயக்குனர்களும் வாசிக்கிறார்கள்.

சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள். கண்ணதாசன் இன்றளவும் நினைவு கூறப்படுவது அவர் எழுத்தால் தான். அவர் வாழ்க்கையில் பல்வேறு முறை தடுக்கி விழுந்தார். இன்று யாரும் அதை பற்றி பேசவில்லை.அவர் எழுத்துக்களால் நிலைத்து நிற்கிறார் !


பத்திரிக்கைகளுக்கு தணிக்கை உண்டு. எழுத்தாளர்கள் படைப்புகளை எடிட் செய்து தான் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ஆனால் ப்ளாகில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது. எனவே வெளியிடுவோர் தான் எச்சரிக்கை ஆக இருந்து தேவையற்றவற்றை தவிர்க்க வேண்டும்.


வலைப்பூவை எளிதில் எடுத்து கொள்ளாதீர்கள். அங்கு தெரிவது ஒரு மனிதனின் பெர்சனாலிட்டி. உங்கள் முகம், உங்கள் சுயம் அதில் தெரிகிறது. நீங்கள் யார் எத்தகையவர் என ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படுத்துகிறீர்கள். அதை நினைவில் கொண்டு எழுதுங்கள்.


Unparliamentary
வார்த்தைகள் , அல்லது விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !  

சினிமா விமர்சனம் முக்கியம் தான் எனினும் எல்லாரும் அதை எழுத வேண்டும் என்பது இல்லை. சினிமா பற்றிய அறிவும் ரசனையும் உள்ளவர்கள் அதை எழுதினால் நல்லது.விமர்சனத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும்.


சினிமா விமர்சனம் எழுதியே ஆகனும் என்பதற்காக யாரும் அப்படி எழுதிட்டு இருக்காதீங்க.. வேறு பல விஷயங்கள் எழுத இருக்கு..பதிவுலகின் ஒரு சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் பேச அதை ரசிப்பவர் இன்னொரு சூப்பர் ஸ்டார் கேபிள் சங்கர் 


வலைப்பூவில் படித்த ஒரு குட்டிக்கதையை இங்கே பகிர்ந்து என் பேச்சை நிறைவு செய்கிறேன்... “ஒரு டிபார்ட்மெண்ட்டர்ல்  ஸ்டோர்,, அங்கே ஒரு கஸ்டமர் வந்து அரைக்கிலோ பட்டர் வேணும்னு கேட்றார். சேல்ஸ்மேன் சொல்றார். சார், எங்க கிட்டே ஒரு கிலோ பட்டர் பாக்கெட் தான் இருக்கு.. பேக் பண்ணினது.. அதை பிரிக்க முடியாது, அது பேக் பண்ணி இருக்கு.

 யோவ்,.. நான் கஸ்டமர்.. நான் சொல்றதுதான் வேணும். என்னை சேட்டிஸ்ஃபை பண்றதுதான் உன் வேலை .. உன் கிட்டே என்ன பேச்சு? நான் ரெகுலரா இங்கே வந்து  அரை கிலோ தான் வாங்கிட்டு இருக்கேன். நீ மேனேஜர்ட்ட போய் கேளு


 சேல்ஸ் மேன் உடனே  மேனேஜர் கிட்டே போய்  “ சார், இங்கே ஒரு லூஸ் , மெண்டல் , சாவு கிராக்கி வந்து   பட்டர் பாக்கெட்ல லூஸ்ல கேட்குது சார்.. “

 இப்படி சொல்லிட்டு இருக்கும்போது திடீர்னு கஸ்டமர் அங்கே வந்துட்டார்.. 

 இப்போ  2 பேருக்கும் அதிர்ச்சி.. கஸ்டமரை லூஸ்னு சொல்லியாச்சு,.. என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியல.. 

 உடனே அந்த சேல்ஸ் மேன் ஸ்மார்ட்டா   ரிப்ளை பண்ணான்.. ” ஆனா இந்த ஜெண்டில்மேன் அரைக்கிலோ வாங்கிக்கறேன்னு சொல்றார் சார்.. “ என சமாளிச்சார்


 உடனே மேனேஜரும் “ அப்புறம் என்னய்யா? அவருக்கு அரைக்கிலோ பிரிச்சு குடுத்துடு” என்றார்


 கஸ்டமர் போனதும் மேனேஜர் அந்த சேல்ஸ்மேனை தனியா அழைச்சு “ வெரிகுட்யா.. நீ கஸ்டமரை நக்கல் அடிச்சே, கமெண்ட் பண்ணினே.. ஆனா கஸ்டமர் வந்ததும் டக்னு சமாளிச்சியே,  நீ எந்த ஊருப்பா? 

 மெக்சிகோ சார்.. மெக்சிகோ தெரியுமில்ல சார்? ஃபிட்பால்  மேட்சுக்கு பேர் போன  இடம்.. அது போக  பிராஸ்டிடியூட்க்கும் பேர் போன இடம் “

 உடனே மேனேஜர் செம காண்ட் ஆகி “ யோவ், என்னை நக்கல் அடிக்கறியா? என் சம்சாரம் கூட மெக்சிகோ தான் “

 உடனே சேல்ஸ் மேன் டக்னு “ஓஹோ அவங்க அந்த ஃபுட் பால் டீம்ல இருக்காங்க சார்? 


 என்றானாம்.. அதுலயும் அவன் தன்னோட ஸ்மார்ட்னெசை காண்பிச்சுட்டான்.. 

 அது மாதிரி உங்க  வலைப்பூவை எல்லாரும் வாட்ச் பண்ணிட்டுதான் இருக்காங்க என்ற உணர்வுடன் ஸ்மார்ட்டாக நடந்துக்குங்க.. வாழ்த்துகள்.. “a
“படங்கள் உதவி வீடு திரும்பல் மோகன்