Wednesday, February 28, 2018

மிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்

காதல், திருமணமாக மாறுவது போல் தோழமை கூட்டணியாக மாறும்- துரைமுருகன் #
# ஆனா நம்ம கிட்ட மாட்றதெல்லாம் டைவர்ஸ் கேஸ் தான்


=============


2 ஜெ.தீபா வீட்டுல் நுழைந்த போலி வருமானவரிதுறை அதிகாரி தப்பியோட்டம் - செய்தி
குறட்டை சத்தம் கேட்டு மிரண்டிருப்பானோ?


===============3 திமுகவும் காங்கிரஸும் கணவன் - மனைவி போல இருக்கிறோம் - திருநாவுக்கரசர் # டெய்லி அடிச்சுக்குவாங்க,ஆனா வெளில,யாருக்கும் தெரியாது?


==============4 பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி # "பிகினி"ங்க் ஸ்டேஜ் தானேனு சமாளிச்சு இருப்பாரோ?


===============5 நாட்டுக்காக என் குடும்பத்தை இழந்தேன் - மோடி.
# மொத்தத்துல உங்களுக்கும் லாஸ் ,ஜனங்களுக்கும் லாஸ் ,நிம்மதி இல்ல


============6 ஏப்ரல் 27 உலகமெங்கும் காலா ரிலீஸ் ஆகிறது - லைக்கா
// 27/4/2018 = 2+7+4+2+0+1+8=24=2+4=6 = ரஜினிகாந்த்=சூப்பர் ஹிட் = எல்லாம் 6 எழுத்து


===============7 சிஸ்டம் சரியில்லை என்று சொல்ல ரஜினி என்ன பொறியியல் பட்டாதாரியா?

-அமைச்சர் ஜெயக்குமார்
# ஒரு சாமான்யன் கூட அதை சொல்லலாம்,சொல்லக்கூடாதுனு சட்டம் இருக்கா?===============8 தினகரனை ஒரு போட்டியாகவே பார்க்கவில்லை- தமிழிசை # எப்டி பார்ப்பீங்க? நீங்க லாஸ்ட் ரேங்க்,அவரு பர்ஸ்ட் ரேங்க்.


==============9 More
ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது: துரைமுருகன் # அது மட்டுமா?ரஜினி ,கமல் கூடத்தான் அரசியலுக்கு வர்றதா தில்லா முடிவு எடுத்திருக்க மாட்டாங்க


============10 பெண்களும் பீர் குடிக்கிறார்கள்: மனோகர் பாரிக்கர் கவலை # ஆணுக்குப்பெண் சமம் னு தனி டாஸ்மாக் கேக்காம இருக்காங்களே ,பரவால்ல


============


11 தமிழ் இலக்கியம் மீது கொண்ட ஆர்வத்தால் அண்ணாவின் இயக்கத்திற்கு வந்தேன் - வைகோ # ஸ்டாலின் மீது கொண்ட பொறாமையால் திமுக வை விட்டு வெளியேறினேன்,பின் எல்லா இடமும் சுத்திட்டு வேற வழியில்லாம மீண்டும் திமுக வுக்கே வந்தேன் அதையும் சொல்லிடுங்க


============12 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேனியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம்- தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் # திமுக வுக்கு ஒரு ஆ ராசா மாதிரி

==============


13 கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி கவலைப்பட தேவையில்லை-அருண்ஜெட்லி.# உங்களுக்குக்கவலை இல்லை,பெட்ரோல்"டீசல்,விலை ஏத்துனா பாதிக்கப்படப்போறது"பொது"ஜனங்கதானே?


================


14 ரஜினிகாந்த் காவிக்கொள்கையை மாற்றாவிட்டால் கூட்டணிக்கு வாய்ப்பில்லை : கமல் # 2 பேரும் தனித்தனியா மோதுங்க.யாருக்கு எத்தனை % வாக்கு,வங்கினு தெரிஞ்சுக்குங்க முதல்ல,அடுத்த"தேர்தல்ல"கூட்டணி


=============


15 நான் சைவம் அல்ல. நான் மாட்டிறைச்சியை உண்ணமாட்டேன்; உண்ணக்கூடாது எனவும் சொல்ல மாட்டேன் - கமல்
# இது உங்க அடுத்த படத்துல வர்ற டயலாக்கா?நாளை"நமதே"பிரச்சாரத்துல"பேசப்போற உரையா?


===============16 "கர்நாடகாவில் பாஜக வென்றால் காவிரியை நான் பெற்றுத் தருவேன்" - தமிழிசை
மிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்


===============


17 நாட்டை ஆண்டவர் என்ற முறையில் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கலாம் - தமிழிசை # முத தப்பு தமிழ் நாடு ஒரு மாநிலம்.மாநிலத்தை ஆண்டார் என்பதே சரி
2 வது தப்பு 4 வருச தண்டனை பெற்ற குற்றவாளி க்கு சப்போர்ட் செய்வது


==================


18 சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி விற்பனை..!
# கஸ்டமர் = நான் கேட்டதைத்தானே பார்சல் பண்ணி இருக்கீங்க?
கடைக்காரர் = ஆமா,CAT டதைத்தான் தந்தோம்


==============19 மோடி எழுதிய புத்தகத்தை மாணவரிடம் எடுத்து செல்ல வேண்டும் - தமிழிசை # மணியனின் பயணக்கட்டுரைகள் ,தமிழ்வாணன் வெளிநாட்டு பயண அனுபவங்கள் னு எல்லாம் படிச்ட்டாங்களாம்


=================


20 தமிழக சட்டப்பேரவைக்கு
6 மாதத்திற்குள்
தேர்தல் வரும் - ஸ்டாலின்
# பகுத்தறிவு பாடத்துல ஜோசியமும் ஒரு சிலபஸ் போல


===============

0 comments: