Tuesday, February 13, 2018

பொண்டாட்டியை சமாதானப்படுத்தனும்னா இனி அரளிப்பூ

மக்கள் துயரப்படும் போது எம்எல்ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியம் எனக்கு வேண்டாம் - டிடிவி.தினகரன் #"தளபதிக்கு தர்மசங்கடமான சூழ்நிலை

===============


2 ஜூலிக்கு காதல் தொல்லை கொடுத்தவன் கைது - செய்தி

# இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு.Ju"lie" stunt==============


3 பஸ் கட்டண உயர்வை மனநிறைவுடன் அரசு அமல்படுத்தவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் "கூட வயிறெரிஞ்சுதான் டிக்கெட் எடுக்கறாங்க.அவங்க விடற சாபத்தை காது கொடுத்துக்கேட்க முடியல


=================


4 மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்குவதற்காக பஸ் கட்டண உயர்வு: உதயகுமார் சம்பளம் இரு மடங்கு உயர்வு ,தொலைபேசி படி 50% உயர்வு இதெல்லாம் உங்க ஊர்ல மக்கள் நலத்திட்டமா?


==============


5 தமிழக மக்கள் ரஜினி- கமல் அரசியலை ஏற்க மாட்டார்கள்: ராமராஜன் #20 ரூபா டோக்கன் தந்தா யார வேணா ஏத்துக்குவாங்க


==============


6 ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 20 பேர் தகுதி நீக்கம்! நம்ம தமிழ்நாடுன்னா 20 தொகுதில இடைத்தேர்தல் ஜாக்பாட்னு ஜனங்க கொண்டாடி"இருப்பாங்க


===============


7 ஆம்னி பேருந்து கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான் பேருந்து கட்டணம்... ஓபிஎஸ் விளக்கம் ?விமானக்கட்டணத்தை விட 10 மடங்கு கம்மி னு சொல்லலாமில்ல?


================


8 கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம்.

-ராமானுஜர் ஜீயர்

சாகும் வரைன்னா "ஏற்கனவே செத்துட்டாரா?உயிர்த்தெழுந்து செத்து செத்து விீளையாடற பார்ட்டியா?

==============


9 அதிமுக கொடியில் அண்ணா

படம் இல்லை என்றால்
அண்ணா இருந்தார் என்ற
அடையாளமே இருந்திருக்காது
- அமைச்சர் செல்லூர் ராஜூ
படம் காண்பிக்காதீங்க,ஜனங்க ஜோக்னு நினச்சு சிரிச்சுடப்போறாங்க================


10 தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை வரவேற்கிறேன் - பொன்.ராதா # இவங்களே பாம் வைப்பாங்களாம்,இவங்களே"ஆள் விட்டு எடுப்பாங்களாம் மொமெண்ட்,எதுனா உளற வேண்டியது,அப்புறம் அது கட்சியோட கருத்தில்லை,அவரோட தனிப்பட்ட கருத்துனு சமாளிக்க வேண்டியது


===============


11 கமல், ரஜினி கட்சி தொடங்கினால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆபத்து இல்லை: டி.ராஜா
வார்டுக்கு பத்து ஓட்டு.அதுக்கு எப்படி வரும் ஆ"பத்து"?


================


12 நடிகர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது, நான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் - நடிகர் விஷால். நாமே சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்துக்கொள்ளும் திட்டமா?


=================


13 வீடு தேடிச் சென்று மது வழங்கும் திட்டத்தை டாஸ்மாக் அறிமுகம் செய்கிறது:செய்தி - ட்ரங்க்கன் டிரைவிங்க் னு அபராதம் தீட்ட முடியாது டிராபிக் போலீசால.பிரமாதமான திட்டம்.அப்டியே அந்த சைடு டிஷ்சும் சப்ளை பண்ணிட்டா குடிகாரன் கொண்டாடுவான்


================


14 திமுகவிற்கு தற்போது

பேஸ்மட்டமும், பில்டிங்கும்
பலவீனமாக உள்ளது:
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி # அது தேவல.நமக்கு பேஸ்மட்டம் ,பில்டிங் எதுவுமே இல்லையே?===============


15 பிரதமர் மோடி ஒரு

திராவிடர் −பரத நாட்டியக்
கலைஞர் பத்மா சுப்ரமணியம்
# அப்போ ரஜினியை யாரும்"இனி"திராவிட அரசியலுக்கு எதிரானவர்னு சொல்ல முடியாதில்ல?==================


16 மல்லிகைப்பூ கிலோ 6000 ரூபாய் வரை விலை உயர்வு - செய்தி # பொண்டாட்டியை சமாதானப்படுத்தனும்னா இனி அரளிப்பூ தான் வாங்க முடியும்"போல


=================


17 அதிமுக என்பது நங்கூரம் பாய்ச்சிய கப்பல். மக்களை கரை சேர்க்காமல் ஓயாது: விஜயபாஸ்கர்

நங்கூரம் பாய்ச்சிய கப்பல்" ஆழமான கடல் பிரதேசத்துலதானே இருக்கும்ஸஆபத்தாச்சே?============18 தமிழகத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும் உருப்பட முடியாது- சு் சுவாமி # காலம்"காலமா"ஊழல்"பண்ணிட்டு இருக்கற"அரசியல்வாதிங்க இனி உருப்பட முடியாது"என திருத்தி"படிக்கவும்


=================19 சாமானிய மக்கள் இலவசங்கள் கேட்பதில்லை: மோடி அரசியல்வாதிதான் இலவசம்னு ஏமாத்தறான்


=================


20 உதயநிதி என்னங்க.... எந்த 'நிதி' வந்தாலும் சமாளிப்போம்... அமைச்சர் ஜெயக்குமார்# கலைஞர்"நிதி,யையே சமாளிச்ச நீங்க தினகரன்"நிதியை,மட்டும் ஏன்"சமாளிக்க"முடியல?


================

0 comments: